Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 09-June-2018 to 09-June-2018
  • 1. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு?
    • A) இந்தியா
    • B) ஆஸ்திரேலியா
    • C) சீனா
    • D) சிரியா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாக உள்ள நாடுகள் பட்டியலில் சிரியா முதலிடத்தில் உள்ளது.

  • 2. அரசாங்க பணிகளுக்கு இனி எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்த முடிவு செய்துள்ள மாநிலம் ?
    • A) ஹரியானா
    • B) மத்திய பிரதேசம்
    • C) ராஜஸ்தான்
    • D) டெல்லி
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    மத்திய பிரதேச அரசு, அம்மாநிலத்தில் அரசாங்க பணிகளுக்கு இனி எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

  • 3. 100 ஆண்டுகளுக்கு, அரை வாழ்வு கொண்ட நிக்கல்-63 கதிரியக்க ஐசோடோப்பை பயன்படுத்தி அணு பேட்டரியை கண்டுபிடித்துள்ள நாடு ?
    • A) ரஷ்யா
    • B) அமெரிக்கா
    • C) இந்தியா
    • D) ஈரான்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    100 ஆண்டுகளுக்கு, அரை வாழ்வு கொண்ட நிக்கல்-63 கதிரியக்க ஐசோடோப்பை பயன்படுத்தி அணு பேட்டரியை ரஷ்ய விஞ்ஞானிகன் கண்டுபிடித்துள்ளனர்.

  • 4. இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட டாமி தாமஸ் எந்த நாட்டில் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்?
    • A) இந்தோனேஷியா
    • B) சிங்கப்பூர்
    • C) மலேசியா
    • D) ஆஸ்திரேலியா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    மலேசியாவில் முதல் முறையாக இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட டாமி தாமஸ் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • 5. கஞ்சா சட்டத்துக்கு அனுமதி தந்துள்ள நாடு ?
    • A) பிரான்ஸ்
    • B) கனடா
    • C) இந்தியா
    • D) அமெரிக்கா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    கனடா நாட்டில் கஞ்சா சட்டத்துக்கு செனட் அனுமதி தந்துள்ளதால், அங்குள்ள 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் தங்களது பயன்பாட்டுக்காக 30 கிராம் அளவுள்ள கஞ்சாவை வாங்குவது சட்டபூர்வமாக்கப்படவுள்ளது.

  • 6. பலூன்கள் உதவியுடன் வைஃபை ஹாட் ஸ்பாட் மூலம் கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதியை வழங்க உள்ள மாநிலம் ?
    • A) அருணாச்சலப்பிரதேசம்
    • B) ராஜஸ்தான்
    • C) உத்தரகாண்ட்
    • D) தெலுங்கானா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    பலூன்கள் உதவியுடன் வைஃபை ஹாட் ஸ்பாட் மூலம் கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதியை வழங்க உத்தரகாண்ட் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

  • 7. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18வது மாநாடு எங்கு நடைபெறுகிறது?
    • A) சீனா
    • B) கஜகஸ்தான்
    • C) கிர்கிஸ்தான்
    • D) தஜிகிஸ்தான்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18வது மாநாடு இன்றும் நாளையும் சீனாவின் கிங்டாவ் நகரில் நடைபெறுகிறது. இதில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு இந்த அமைப்பில் உறுப்பினரான இணைந்த இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் முறையாக இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றன. இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

  • 8. உலகிலேயே அதிக அளவில்நிலத்தடி நீர் உறிச்சப்படும் நாடு ?
    • A) சீனா
    • B) பாகிஸ்தான்
    • C) இந்தியா
    • D) வங்கதேசம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவில்நிலத்தடி நீர் உறிச்சப்படுவதாக அதிர்ச்சிகர புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது . நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் குறைந்துவரும் மாநில‌ங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளின் சராசரியில் தமிழகத்தில் 86.6 சதவிகித அளவுக்கு நிலத்தடி நீர் சரிந்துள்ளது.

  • 9. 105 கோடி ரூபாய் மதிப்பிலான சூரிய மின்சக்தி ஆலை எங்கு திறக்கப்பட்டது ?
    • A) கிண்டி
    • B) வண்டலூர்
    • C) ஆவடி
    • D) தாம்பரம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    சென்னை ஆவடியில் 105 கோடி ரூபாய் மதிப்பிலான சூரிய மின்சக்தி ஆலையை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

  • 10. வீட்டில் வசிக்கும் தனி நபர் மீது குடியிருப்பு வரி விதித்த நாடு ?
    • A) அமெரிக்கா
    • B) சவுதி அரேபியா
    • C) கத்தார்
    • D) எமிரேட்ஸ்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    வீட்டில் வசிக்கும் தனி நபர் மீது குடியிருப்பு வரி விதிக்கப்படும் என்ற சவுதி அரேபியாவின் அறிவிப்பை அடுத்து, அங்கு வசிக்கும் இந்தியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை தாயகம் அனுப்பி வருகின்றனர்.