Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 10-June-2018 to 10-June-2018
  • 1. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - வட கொரியா கிம் முக்கிய பேச்சுவார்த்தை எந்த நாட்டில் நடக்க உள்ளது ?
    • A) சிங்கப்பூர்
    • B) ரஷ்யா
    • C) தென் கொரியா
    • D) அமெரிக்கா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    65 ஆண்டுகளாக பகை முகாம்களாக இருந்து வந்த அமெரிக்கா வடகொரியா நாடுகளின் அதிபர்கள் செவ்வாயன்று சிங்கப்பூரில் நேரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனா் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பில் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்துவது மற்றும் கொரிய தீபகற்பத்தை அமைதி மண்டலமாக மாற்றுவது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன. 1950-53களில் நடந்த கொரிய போருக்கு பின்னர், அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே எந்த பேச்சுவார்த்தையும் இருந்ததில்லை.

  • 2. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு எந்த நாட்டில் நடைபெறுகிறது?
    • A) பாகிஸ்தான்
    • B) கஜகஸ்தான்
    • C) சீனா
    • D) இந்தியா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    ஜூன் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். இந்த மாநாட்டுக்குச் சென்றுள்ள மோடியிடம் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்த தனது விருப்பத்தை ஷி ஜின்பிங்க் வெளிப்படுத்தியுள்ளார்.

  • 3. ஜி 7 உச்சி மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது ?
    • A) ஜெர்மனி
    • B) அமெரிக்கா
    • C) ஜப்பான்
    • D) கனடா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி 7 உச்சி மாநாடு கனடா நாட்டில் நடைபெறுகிறது

  • 4. இந்தியாவில் இருந்து பாசுமதி அல்லாத அரிசி ரக ஏற்றுமதி, பிரம்மபுத்திரா ஆறு தொடர்பான ஒப்பந்தங்கள் எந்த நாட்டுடன் இந்தியா மேற்கொண்டது ?
    • A) சீனா
    • B) நேபாளம்
    • C) பூட்டான்
    • D) பங்களாதேஷ்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    ஷாங்காய் நகரில் நடைபெற்ற ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் இந்தியா சீனா இடையே இரண்டு ஒப்பந்தங்கள் (இந்தியாவில் இருந்து பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை ஏற்றுமதி, பிரம்மபுத்திரா ஆற்றின் நீர் இருப்பு மற்றும் நீர் அழுத்தம்) கையெழுத்தாகியுள்ளது.

  • 5. சர்வதேச சமூகத்துக்கு மிகச் சிறந்த உதாரணமாக எந்த நாடு திகழ்வதாக ஐ.நா. சபை தலைவர் ஆண்டனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.?
    • A) நார்வே
    • B) இந்தியா
    • C) அமெரிக்கா
    • D) ஸ்பெயின்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    சர்வதேச சமூகத்துக்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தியா திகழ்வதாக ஐ.நா. சபை தலைவர் ஆண்டனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

  • 6. பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார் ?
    • A) மரியா ஷரபோவா
    • B) வீனஸ் வில்லியம்ஸ்
    • C) சிமோனா ஹாலெப்
    • D) மார்டினா ஹிங்கிஸ்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமெனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

  • 7. கனடாவில் நடைபெற உள்ள விழாவில், தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையான ‘இயல் விருது’ யாருக்கு வழங்கப்பட உள்ளது.?
    • A) சிற்பி பாலசுப்ரமணியம்
    • B) வண்ணதாசன்
    • C) வைரமுத்து
    • D) காமராசன்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    கனடாவில் நடைபெற உள்ள தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழாவில், எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையான ‘இயல் விருது’ வழங்கப்பட உள்ளது.

  • 8. பதஞ்சலி நிறுவனத்துக்கு 455 ஏக்கர் நிலத்தை எந்த மாநில அரசு ஒதுக்கியுள்ளது?
    • A) உத்தரப் பிரதேசம்
    • B) உத்தரகான்டு
    • C) பஞ்சாப்
    • D) மத்திய பிரதேசம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    பதஞ்சலி நிறுவனத்துக்கு 455 ஏக்கர் நிலத்தை உத்தரப் பிரதேச அரசு ஒதுக்கியுள்ளது. வேகமாக விற்பனையாகும் நுகர் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவரும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் மிகப் பெரிய உணவு மற்றும் மூலிகைப் பூங்கா அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

  • 9. மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் யார் ?
    • A) பிரகாஷ் ஜவடேகர்
    • B) சுரேஷ் பிரபு
    • C) நிர்மலா சீதாராமன்
    • D) நிதின் கட்காரி
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    அமெரிக்காவுடனான வர்த்தகச் சிக்கல்களுக்கு உரியத் தீர்வு எட்டப்படும் என்று ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளிநாட்டுப் பொருட்களுக்கு அண்மைக் காலமாக இறக்குமதி வரி விதிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். இந்த நடவடிக்கையால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஒரு வர்த்தகப் போரே மூண்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில உருக்குப் பொருட்களுக்கும் இறக்குமதி வரி விதிக்கப்பட்டதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உலக வர்த்தக கவுன்சிலிடம் இந்தியா புகார் அளித்துள்ளது.

  • 10. ஆயுதங்களில் பயன்படுத்துவதற்கான செயற்கை நுண்ணறிவைக் உருவாக்க மாட்டோம் கூறிய நிறுவனம் எது ?
    • A) மைக்ரோசாப்ட்
    • B) கூகுள்
    • C) இன்போசிஸ்
    • D) ஆப்பிள்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    ஆயுதங்களில் பயன்படுத்துவதற்கான செயற்கை நுண்ணறிவைக் கூகுள் உருவாக்காது என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பென்டகனின் தொழில்நுட்பத்தில் கூகுள் நிறுவனம் பங்காற்றுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.