Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 11-June-2018 to 11-June-2018
 • 1. பசுமை வழிச் சாலைகள் எந்த பகுதிகளுக்கு செயல்படுத்த உள்ளது ?
  • A) சென்னை-சேலம்
  • B) திருச்சி - சென்னை
  • C) கரூர் - சென்னை
  • D) சென்னை-மதுரை
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  சென்னை-சேலம் பசுமை வழிச் சாலைகள் திட்டத்தை செயல்படுத்துவது அவசியமாகும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசியுள்ளார்.

 • 2. சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் யார் ?
  • A) தேவே கவுடா
  • B) வாஜ்பாய்
  • C) மன்மோகன் சிங்
  • D) யாருமில்லை
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவ பரிசோதனைக்காக இன்று டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அறிவுரைப்படி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று (ஜூன் 11) டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது வழக்கமாக நடைபெறும் மருத்துவப் பரிசோதனை என்றும், சோதனை முடிந்த பிறகு அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 • 3. எந்த நாடு மசூதிகளை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ?
  • A) அமெரிக்கா
  • B) ஆஸ்திரியா
  • C) வியட்நாம்
  • D) கனடா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  வெளிநாட்டிலிருந்து நிதியுதவி பெறும் இமாம்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரிய அரசு, அங்குள்ள 7 மசூதிகளையும் மூடத் திட்டமிட்டுள்ளது. அண்டைநாடான துருக்கி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவித்து வருவதாகக் குற்றம்சாட்டப்படும் நிலையில், இந்த நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொண்டுள்ளது.

 • 4. வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் 31ஆவது ஆண்டு விழா அமெரிக்காவின் எந்த மாகாணத்தில் ஜூன் 29ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. ?
  • A) டெக்சாஸ்
  • B) அரிசோனா
  • C) நியூ ஜெர்சி
  • D) கலிபோர்னியா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் 31ஆவது ஆண்டு விழா அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஜூன் 29ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.

 • 5. 2017ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து அதிகப்படியான பணத்தை பெற்ற நாடு எது ?
  • A) ஆஸ்திரேலியா
  • B) இந்தியா
  • C) சிங்கப்பூர்
  • D) சீனா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  வெளிநாடுகளிலிருந்து பணம் குவியும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து அதிகப்படியான பணத்தை பெற்ற நாடாக இந்தியா உள்ளது. 2016ஆம் ஆண்டில் பெறப்பட்ட நிதியை விட 2017ஆம் ஆண்டில் 10 விழுக்காடு கூடுதல் நிதியை இந்தியா பெற்றுள்ளது.

 • 6. சமீபத்தில் மரணமடைந்த சௌபா எந்த துறையுடன் தொடர்புடையவர் ?
  • A) சினிமா
  • B) தொல்லியல்
  • C) இலக்கியம்
  • D) பத்திரிகை
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  ஜூனியர் விகடன் பத்திரிகையில் மாணவப் பத்திரிகையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் சௌந்தர பாண்டியன் என்கிற சௌபா. மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெண் சிசுக் கொலை நடந்தது குறித்து முதன்முதலாகப் பத்திரிகையில் எழுதியவர்.பிரபல பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளரான சௌபா, நேற்று (ஜூன் 10) நள்ளிரவு மதுரை அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார்

 • 7. பிரிட்டிஷ் படை அணிவகுப்பில் தலைப்பாகையுடன் பங்கேற்ற சீக்கிய வீரர் யார் ?
  • A) ராம் மோகன் சிங்
  • B) சரண் பிரீத் சிங் லால்
  • C) அம்ரிந்தர் சிங்
  • D) நரிந்தார்நாத் சிங்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் பக்கிங்காம் அரண்மனை வளாகத்தில் பிரிட்டிஷ் படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அந்த நாட்டு ராணுவத்தின் ‘கோல்ட்ஸ்டிரீம் கார்ட்ஸ்’ படைப் பிரிவைச் சேர்ந்த சீக்கிய வீரர் சரண்பிரீத் சிங் லால் (22) தலைப்பாகையுடன் பங்கேற்றார்.

 • 8. ஆசிய ஜூனியர் தடகளப் போட்டி எந்த நாட்டில் நடந்தது ?
  • A) இங்கிலாந்து
  • B) ஜப்பான்
  • C) போலந்து
  • D) ஆஸ்திரேலியா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  ஜப்பானில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் தடகளப் போட்டியில் இந்தியா மொத்தம் 17 பதக்கங்களை வென்றது. கடைசி நாளில் மட்டும் 2 தங்கம் உள்பட 4 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது.

 • 9. யார் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தற்காலிக தலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்?
  • A) அர்விந்த் சக்சேனா
  • B) சுதா ஜெயின்
  • C) கீர்த்தி குமார்
  • D) ஒமி அகர்வால்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  ஜூன் 20 முதல் அவர் தலைவராக செயல்படுவார்.

 • 10. இந்தியாவின் முதல் தேசிய போலீஸ் அருங்காட்சியகம் எந்த நகரத்தில் நிறுவப்படும்?
  • A) சென்னை
  • B) கொல்கத்தா
  • C) தில்லி
  • D) நாக்பூர்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  இந்தியாவின் முதல் தேசிய போலீஸ் அருங்காட்சியகம் டெல்லியில் நிறுவப்பட உள்ளது .