Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 21-June-2018 to 21-June-2018
 • 1. ஜுன் 21,2018 ஆம் தேதி 4-வது சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது.
  இந்த வருடம் எந்த மாநிலத்தில் நடைபெறுகிறது?
  • A) கேரளா
  • B) குஜராத்
  • C) பஞ்சாப்
  • D) டேராடூன்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  சர்வதேச யோகா தினம்- ஜுன்-21 ஆண்டுதோறும் ஜுன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக 2015 ஆம் ஆண்டு ஜுன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. ஜுன் 21,2018 ஆம் தேதி 4-வது சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் உத்தரகாண்டு மாநிலம் டேராடூன் இல் நடைபெறுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள்: அமைதிக்கான யோகா.

 • 2. மாநிலம் முழுமைக்கும் பசுமை பரப்பை அதிகாிக்க ‘i–Hariyali’ என் ற திறன் பேசி செயலினை அறிமுகம் செய்ய்துள்ள மாநில அரசு எது?
  • A) பஞ்சாப்
  • B) ராஜஸ்தான்
  • C) கர்நாடகா
  • D) கேரளா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  மாநிலம் முழுமைக்கும் பசுமை பரப்பை அதிகாிக்க ‘i–Hariyali’ என் ற திறன் பேசி செயலினை அறிமுகம் செய்ய்துள்ள மாநிலம் பஞ்சாப் .இது மாசு கட்டுப்பாட்டிலிருந்து சுற்றுச்சூழலை காப்பாற்றுவதற்காக அதிகளவிலான மரக்கன்றுகல் நடபொது மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது .‘Tandarust Punjab’ திட் டத்தின் ஒரு பகுதியான இந்த ‘i–Hariyali’ செயலினை கூகுளின் play ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

 • 3. 7வது இந்திய கனிமங்கள் மற்றும் உலோகங்கள் மாநாட்டை நடத்திய நகரம் எது?
  • A) ஹைட்ரபாத்
  • B) புதுடெல்லி
  • C) பாட்னா
  • D) சென்னை
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  7வது இந்திய கனிமங்கள் மற்றும் உலோகங்கள் மாநாட்டை நடத்திய நகரம் புதுடெல்லி ஆகும் .மாறிவரும் உலகளாவிய சூழ்நிலையில் இந்த பிரிவை முன்னேற்றுவதற்கான தீர்வுகளை காண இம்மாநாடு முற்பட்டது .

 • 4. நிகழாண்டின் போரில் பாலியல் வன்முறையை ஒழித்தற்கான சா்வதேச தினத்தின்
  கருப்பொருள் என்ன?
  • A) The Plight and Rights of Children Born of War
  • B) Leave No One Behind: Support Rights of Children
  • C) Prevent Sexual Violence Crimes through Justice
  • D) End Violence Against Women and Girls
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  நிகழாண்டின் போரில் பாலியல் வன்முறையை ஒழித்தற்கான சா்வதேச தினத்தின் கருப்பொருள் The Plight and Rights of Children Born of War

 • 5. 2018-ஆண்டிற்கான அவ்வையார் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
  • A) ருக்குமணியம்மாள்
  • B) திலகவதி
  • C) சொர்ணாம்பாள்
  • D) சின்னப்பிள்ளை
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  கிரமப்புற பெண்களின் வாழ்வாதாரத்துக்காக சேவை புரிந்த மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு 2018-ஆண்டிற்கான அவ்வையார் விருது வழங்கப்பட்டுள்ளது பெண்கள் மேம்பாடு, சமூக சீர்த்திருத்தம் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றும் பெண்களுக்கு அவ்வையார் விருது கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

 • 6. தமிழகத்தில் நவீன எய்மஸ் மருத்துவமனை எங்கு அமையவுள்ளது?
  • A) மதுரை
  • B) தேனீ
  • C) நெல்லை
  • D) தஞ்சாவூர்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  மதுரை அருகேயுள்ள தோப்பூரில் 1600 கோடி மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன எய்மஸ் மருத்துவமனை அமையவுள்ளது. இம்மருத்துவமனையானது (Pradhan Mantri Swasthya Suraksha Yojana – PMSSY) என்ற திட்டத்தின் கீழ் அமையவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 20 அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள்.(All India Institute for Medical Sciences – AIIMS) அமைக்கப்பட உள்ளது.

 • 7. .சுற்றுச் சூழலை மேம்படுத்தும் நோக்கில் மரம் நடும் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ 50 ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது.?
  • A) மேகாலயா
  • B) திரிபுரா
  • C) கேரளா
  • D) ஹரியானா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  சுற்றுச் சூழலை மேம்படுத்தும் நோக்கில் மரம் நடும் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ 50 ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை ஹரியானா மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 • 8. இந்தியாவின் 100 வது பொலிவுறுநகரமாக (Smart City)எந்த நகரை தேர்ந்தெடுத்துள்ளனர் ?
  • A) திருச்சி
  • B) பெங்களூரு
  • C) கொல்கத்தா
  • D) ஷில்லாங்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  மேகாலயா மாநிலத்தின் தலைநகர் சில்லாங் நகரமானது இந்தியாவின் 100 வது பொலிவுறுநகரமாக (Smart City) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 • 9. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேறுவதாக எந்த நாடு அறிவித்துள்ளது?
  • A) அமெரிக்கா
  • B) சீனா
  • C) ரஸ்யா
  • D) எகிப்து
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  .ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. United Nations Human Rights Council 2006-ல் உருவாக்கப்பட்டது இதன் தலைமையகம் ஜெனிவாவில் (சுவிட்சர்லாந்து) உள்ளது.

 • 10. 2018 ல் புதிய திட்டங்களை செயல்படுத்தியதற்கான “நகர விருது (City Award) எந்த நகருக்கு வழங்கப்பட்டது.?
  • A) சூரத்
  • B) ஷில்லாங்
  • C) பெங்களூரு
  • D) மும்பை
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  இந்திய பொலிவுறு நகரங்களுக்கான விருது 2018 ல் புதிய திட்டங்களை செயல்படுத்தியதற்கான “நகர விருது (City Award) குஜராத் மாநிலத்தின் சூரத் நகருக்கு வழங்கப்பட்டது.