Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 23-June-2018 to 23-June-2018
  • 1. காவேரி ஒழுங்காற்று குழுவின் தலைமையகம் எங்கு அமையவுள்ளது. ?
    • A) பெங்களுர்
    • B) கொல்கத்தா
    • C) புது டெல்லி
    • D) குஜராத்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவின் படி, காவிரி மேலாண்மை ஆணையம்; மற்றும் காவேரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைத்து மத்திய அரசு 22.06.18 ல் ஆணை பிறப்பித்தது. காவேரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் – புது டெல்லியில் அமையவுள்ளது. தலைவர்- மசூத் உசைன். காவேரி ஒழுங்காற்று குழுவின் தலைமையகம் பெங்களுரில் அமையவுள்ளது. இதன் தலைவராக- நவீன் குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • 2. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக மகாராஷ்டிரா மாநிலம் எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ?
    • A) அமெரிக்கா
    • B) கனடா
    • C) சிங்கப்பூர்
    • D) மலேசியா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக மகாராஷ்டிரா மாநிலமும் கனடாவும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது

  • 3. தேசிய பழங்குடியின அருங்காட்சியகத்தை எந்த இடத்தில் அமைக்க உள்ளது ?
    • A) புது டெல்லி
    • B) பெங்களூர்
    • C) பாட்னா
    • D) ஷில்லாங்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    பழங்குடியின விவகார அமைச்சகம் தேசிய பழங்குடியின அருங்காட்சியகத்தை புதுடெல்லியில் தேசிய அளவிலான பழங்குடி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அமைக்க உள்ளது.

  • 4. முழுவதும் காகிதபயன்பாடு அற்ற டிஜிட்டல் முறையில் செயல்படும் மத்திய வர்த்தகம்
    என்னவாக அழைக்கப்படுகிறது ?
    • A) வாணிஜ்ய பவன்
    • B) புனித் பவன்
    • C) ஸத்ய பவன்
    • D) மறுத்ஜ்ய பவன்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    முழுவதும் காகிதபயன்பாடு அற்ற டிஜிட்டல் முறையில் செயல்படும் மத்திய வர்த்தக அமைச்சகத்துக்கான வாணிஜ்ய பவன் என்னும் கட்டிடம் புதுடெல்லியில் அமையவுள்ளது.

  • 5. எந்த மாநிலத்தில் ஜுன் 23 2018 முதல் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது.
    • A) கர்நாடகா
    • B) கேரளா
    • C) மகாராஷ்டிரா
    • D) தமிழ்நாடு
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜுன் 23 2018 முதல் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது.

  • 6. Selfless Service என்ற விருது ஜ.நா.வால் யாருக்கு வழங்கப்பட்டது.?
    • A) காலாட் படை
    • B) சேனை படை
    • C) விமான படை
    • D) கப்பற் படை
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    தெற்கு சூடானில் கலவரத்தை அடக்கும் ஜ.நாவின் அமைதித் திட்டத்தில் பங்கேற்ற இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கார்வால் ரைபிள் காலாட் படைக்கு (Garhwal Rifles Infantry Battalion Group) Selfless Service என்ற விருது ஜ.நா.வால் வழங்கப்பட்டது.

  • 7. ஜப்பானில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டி மும்முறை தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த யார் தங்கப்பதக்கம் வென்றார்?.
    • A) கார்த்திக் ராஜ்
    • B) கமல் ராஜ்
    • C) சுரேஷ் கோபி
    • D) மனோஜ் குமார்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    ஜப்பானில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டி மும்முறை தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கமல்ராஜ் என்பவர் 15.5 மீ தாண்டி தங்கப்பதக்ம் வென்றார்.

  • 8. எந்த நாட்டின் ஆராய்ச்சியாளா்கள் , “Michigan Micro Mote” என்ற உலகின் மிகச் சிறிய
    கணினியை உருவாக்கியுள்ளனா் ?
    • A) அமெரிக்கா
    • B) ஜெர்மனி
    • C) சீனா
    • D) ஜப்பான்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் “Michigan Micro Mote” என்று உலகின் மிகச்சிறிய கணினியை உருவாக்கிஉள்ளனர் . இந்தக் கணினியின் அளவு 0.3*0.3 mm ஆகும் .

  • 9. விவசாயிகளுக்காக ‘சூாியசக்தி விவசாயி திட்டத்தை ’ தொடங்கியுள்ள மாநில அரசு எது?
    • A) குஜராத்
    • B) ராஜஸ்தான்
    • C) உத்திரபிரதேசம்
    • D) கர்நாடகா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    ரூ.870 கோடி மதிப்பிலான ‘சூாியசக்தி விவசாயி’ (Suryashakti Kisan Yojana (SKY)) என்ற முன்னோடி திட்டத்தை குஜராத் முதல்வா் விஜய் ரூபாணி தொடங்கிவைத்துள்ளார் இதன் மூலம் சூாிய ஆற்றலை பயன்படுத்தி விவசாயிகள் மின்னுற்பத்தி மேற்கொள்ளலாம் மற்றும் உபாி மின்சாரத்தை மின்கட்டயமப்புக்கு விற்கவும் செய்யலாம் .

  • 10. எந்தத் தேதியில் , சா்வதேச கைம்பெண்கள் தினம் அனுசாிக்கப்படுகிறது?
    • A) ஜூன் 21
    • B) ஜூன் 22
    • C) ஜூன் 23
    • D) ஜூன் 24
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    உலகம் முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் கைம்பெண்களின் நிலை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் ஜூன் 23-ம் தேதியில் சர்வதேச கைம்பெண்கள் தினம் என ஐ.நா. அவை அறிவித்துள்ளது.