Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 26-June-2018 to 26-June-2018
  • 1. காவரி மேலாண்மை முதலாவது கூட்டம் ஆணையத்தின் தலைவர் யார் ?
    • A) ரபீக் பாஷா
    • B) மல்லிக் அர்ஜுன்
    • C) மசூத் உசைன்
    • D) மனோகர்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    காவரி மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம் ஆணையத்தின் தலைவர் மசூத் உசைன் தலைமையில் தில்லியில் ஜீலை 2-ம் தேதி நடைபெற உள்ளது.

  • 2. ‘சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்” தமிழகத்தில் எங்கு
    நிறுவப்பட உள்ளது?
    • A) விழுப்புரம்
    • B) வேலூர்
    • C) தாம்பரம்
    • D) செங்கல்பட்டு
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த ‘சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்” செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்வி வளாகத்தில் நிறுவப்பட உள்ளது

  • 3. இரயில் விபத்துகளை தடுத்து நிறுத்த உதவும் “ஆர்டிமிஸ்” எனும் ரோபோட்டை எந்த ஐ.ஐ.டி. மாணவர்கள் கண்பிடித்து சாதனை புரிந்துள்ளனர்.?
    • A) கொல்கத்தா
    • B) பெங்களூர்
    • C) பாட்னா
    • D) சென்னை
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    இரயில் தண்டவாளங்களில் உள்ள விரிசலைக் கண்டறிந்து தகவல் தெரிவிப்பதன் மூலம் இரயில் விபத்துகளை தடுத்து நிறுத்த உதவும் “ஆர்டிமிஸ்” எனும் ரோபோட்டை சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் கண்பிடித்து சாதனை புரிந்துள்ளனர். இந்த ரோபோ Ultra sonic Infrared’ சென்சார்கள் மூலம் தகவலை சேகரிக்கும்

  • 4. ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) 3- வது வருடந்திர கூட்டம் எந்த நகரில் நடைபெற்றது ?
    • A) சென்னை
    • B) மும்பை
    • C) குஜராத்
    • D) பனாஜி
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) 3- வது வருடந்திர கூட்டம் மும்பையில் நடைபெற்றது. 2018 ஆண்டின் நோக்கம். கட்டமைப்புக்கு நிதி திட்டுதல் கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்பு AIIB – Asian Infrastructure Investment Bank சீனாவில் உள்ள பெய்ஜிங்கை தலைமையகமாக கொண்டு இந்த வங்கி செயல்படுகிறது.

  • 5. இந்திய தேசிய இணைய நூலகத்தை (National Digital Library of India) எங்கு தொடங்கி உள்ளது.?
    • A) டெல்லி
    • B) பாண்டிச்சேரி
    • C) லக்னோ
    • D) பீகார்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    மத்திய மனித வளத்துறை அமைச்சகம் டெல்லியில் இந்திய தேசிய இணைய நூலகத்தை (National Digital Library of India) தொடங்கி உள்ளது.

  • 6. நிகழாண்டின் ICC பெண்கள் உலக T20 உலகக் கோப்பை நடத்தவுள்ள நாடு எது?
    • A) இங்கிலாந்து
    • B) நியூசிலாந்து
    • C) மேற்கிந்திய தீவுகள்
    • D) தென்னாபிரிக்கா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    10 நாடுகள் கோதுே் பெண் கள் உலகக் கோப்பை T20 போட்டிகள் மேற்கிந்திய தீவுகளின் 3 நகரங்களில் வரும் நவம்பர் 9 முதல் 24 ம் தேதி வரை நடைபெறுகிறது . வரும் நவம்பர் 9 இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.

  • 7. 2019-ம் ஆண்டில் நான்காவது உலககோப்பை கபடி போட்டி எங்கு நடைபெற உள்ளது. .?
    • A) இந்தியா
    • B) சிங்கப்பூர்
    • C) துபாய்
    • D) மலேசியா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    2019-ம் ஆண்டில் நான்காவது உலககோப்பை கபடி போட்டி துபாயில் நடைபெற உள்ளது. முதல் 3 உலககோப்பை கபடி போட்டி இந்தியாவல் நடைபெற்றது.

  • 8. துருக்கி அதிபர் தேர்தலில் யாரை அதிபராக தேர்வு செய்துள்ளனர் ?
    • A) ராபர்ட் கேக்டேசியே
    • B) ரிசப் தய்பீப் எர்டோகன்
    • C) ஜார்ஜ் பார்லோவ்
    • D) ஜெரோம் பீட்டர்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    துருக்கி அதிபர் தேர்தலில் ரிசப் தய்பீப் எர்டோகன் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • 9. உலக போதை மருந்து எதிர்பு சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினம் எப்போது ?
    • A) ஜுன் 25
    • B) ஜுன் 22
    • C) ஜுன் 24
    • D) ஜுன் 26
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    ஜுன் 26 உலக போதை மருந்து எதிர்பு சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினம் (World Day against Drug abuse and illicit Trafficking)

  • 10. இந்தியாவின் முதல் ‘பழங்குடி ராணி’ என மகுடம் சூட்ட பெற்றவா் யார் ?
    • A) மோனிஷா மஜி
    • B) பஞ்சமி ஷமி
    • C) துளசி முண்டா
    • D) பல்லவி துருவா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    ஒடிசா மாநில அரசு,மாநில சுற்றுலாத் துறை மற்றும் SC/ST துறையினரின் ஆதரவுடன் ஒடிசா மாநிலம் உத்கல் மந்தப் நகாில் ‘ஆதி ராணி கலிங்கா பழங்குடியின ராணி போட்டி ’ என்ற பெயரில் பழங்குடியின பெண்களுக்கான அழகி போட்டி முதல்முறையாக இந்தியாவில் இன்று நடத்தப்பட்டது .