Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 28-June-2018 to 28-June-2018
  • 1. துப்புரவுத் தொழிலாளிகள் அதிகமுள்ள மாநிலம் ?
    • A) தமிழ்நாடு
    • B) பீகார்
    • C) உத்தரப் பிரதேசம்
    • D) மேற்கு வங்கம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    உத்தரப் பிரதேசத்தில் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளிகள் இருக்கின்றனர் எனச் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • 2. கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணைத் துறையில் இந்தியா எந்த நாட்டோடு ஒப்பந்தம் செய்துள்ளது ?
    • A) ஆஸ்திரேலியா
    • B) மலேஷியா
    • C) நியூஸிலாந்து
    • D) டென்மார்க்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணைத் துறையில் இந்தியா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் இணைந்து செயல்பட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பால் பண்ணைத் தொழில், மாட்டுத் தீவன மேலாண்மை, கால்நடை இனப்பெருக்கம், கால்நடை ஆரோக்கியம் ஆகிய துறைகளில் அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 3. அதிகமானவர்கள் பேசும் மொழிகளின் பட்டியலில் இந்தியைத் தொடர்ந்து எந்த மொழி உள்ளது ?
    • A) வங்காளம்
    • B) மராத்தி
    • C) தெலுங்கு
    • D) தமிழ்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 41.03 சதவிகிதமாக இருந்த இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 2011ஆம் ஆண்டில் 43.63 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மிக அதிகமானவர்கள் பேசும் மொழிகளின் பட்டியலில் இந்தியைத் தொடர்ந்து வங்காளம் 2ஆவது இடத்திலும், மராத்தி 3ஆவது இடத்திலும், தெலுங்கு 4ஆவது இடத்திலும், தமிழ் 5ஆவது இடத்திலும் (5.89%), உருது 6ஆவது இடத்திலும், குஜராத்தி 7ஆவது இடத்திலும் உள்ளது. மிகக் குறைவானவர்களால் பேசப்படும் மொழியாக சமஸ்கிருதம் உள்ளது.

  • 4. உலகிலேயே செலவு மிகுந்த நகரமாக எது முதலிடத்தைப் பிடித்துள்ளது?
    • A) சென்னை
    • B) ஹாங்காங்
    • C) டோக்கியோ
    • D) மும்பை
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர்க்கு, பெங்களூரு போன்ற நகரங்களை விடச் சென்னையில் செலவினங்கள் உயர்வாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உலகிலேயே செலவு மிகுந்த நகரமாக ஹாங்காங் முதலிடத்தைப் பிடித்துள்ளது. டோக்கியோ, ஜூரிச், சிங்கப்பூர், சியோல், ஷாங்காய், பீஜிங், பெர்ன் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன. இந்தியாவிலேயே செலவுகள் மிகுந்த நகரமாக மும்பை (55) இடம்பிடித்துள்ளது. இப்பட்டியலில் டெல்லி 103வது இடத்திலும், பெங்களூரு 170வது இடத்திலும் உள்ளன.

  • 5. புள்ளியியல் தினத்தையொட்டி, எந்த நாணயத்தைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு (ஜூன் 29) வெளியிடவுள்ளார்?
    • A) ரூ.25
    • B) ரூ.100
    • C) ரூ.150
    • D) ரூ.125
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    புள்ளியியல் தினத்தையொட்டி, ரூ.125 நாணயத்தைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நாளை (ஜூன் 29) வெளியிடவுள்ளார். இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் நிறுவன தலைவரும், இந்தியாவில் திட்டமிட்ட வளர்ச்சி, சமூக கட்டமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்களை அளவீடு செய்வதற்காக புதிய, புதிய மாதிரி சர்வேக்களை, வடிவமைத்தவருமான பிரசந்த சந்திர மகிலனாபிஸ் பிறந்த தினத்தையே இந்திய அரசு,2007 ஆம் ஆண்டு முதல் புள்ளியியல் தினமாக அறிவித்துக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு 'அரசு புள்ளிவிவரங்களின் தர உத்தரவாதம்' என்பதை மையப்பொருளாக வைத்து புள்ளியியல் தினம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

  • 6. தமிழ்வளர் மையம் எங்கு தொடங்கப்படவுள்ளது?
    • A) மதுரை
    • B) சென்னை
    • C) தஞ்சாவூர்
    • D) கோவை
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    உலக அளவில் தமிழ் மொழியை பரவலாக கொண்டு செல்வதற்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழகத்தில் தமிழ்வளர் மையம் ஜீலை மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. உலக அளவில் தமிழ்மொழி – 16 வது இடத்தில் உள்ளது.

  • 7. வின்வெளியில் உள்ள உடைந்த செயற்கை கோள்கள், விமான பாகங்கள் போன்ற குப்பைகளை அகற்ற எந்த செயற்கைகோளை அனுப்பியுள்ளனர் ?
    • A) பிளாஷ் டேவிஸ்
    • B) ரிமூவ் டெப்ரீஸ்
    • C) தேவ் டெப்ரீஸ்
    • D) கிளீன் டேவிஸ்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    உலகில் முதன்முறையாக வின்வெளியில் உள்ள உடைந்த செயற்கை கோள்கள், விமான பாகங்கள் போன்ற குப்பைகளை அகற்ற ரிமூவ் டெப்ரீஸ் (Remove Debris) எனும் செயற்கைகோளை விண்வெளி நிலையத்தில் இங்கிலாந்து விண்ணில் செலுத்திவுள்ளது.

  • 8. .உத்யம் சங்கம் – எனும் தேசிய அளவிலான MSME மாநாடு எங்கு தொடங்கியுள்ளது ?
    • A) பாட்னா
    • B) புதுடெல்லி
    • C) கொல்கத்தா
    • D) மும்பை
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    உத்யம் சங்கம் – எனும் தேசிய அளவிலான MSME மாநாடு புதுடெல்லியில் குடியரசு தலைவர் இராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். இதில் கைத்தொழில் கலைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்க (Solar Charkha Mission) தொடங்கி உள்ளார்.

  • 9. இந்தியா உள்ளிட்ட 27 நாடுகள் கலந்து கொள்ளும் பிரமாண்ட கடற்படை போர் பயிற்சி எங்கு தொடங்கியது ?
    • A) ஸ்ரீலங்கா
    • B) மாலத்தீவு
    • C) அந்தமான் தீவு
    • D) ஹாவாய் தீவு
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    இந்தியா உள்ளிட்ட 27 நாடுகள் கலந்து கொள்ளும் பிரமாண்ட கடற்படை போர் பயிற்சி (Rim of the Pacific -RIMPAC) ஹாவாய் தீவில் உள்ள பியர்ஸ் துறைமுகத்தில் ஜுன் 27 ல் தொடங்கியது. இதில் இந்தியா சார்பாக கேப்டன் சாந்தனு ஜா தலைமையில் இந்தியா கடற்படையின் நவீன போர்க்கப்பலான ஐ.என்.எஸ் சஹ்யாத்ரி கலந்து கொண்டுள்ளது.

  • 10. உலக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது ?
    • A) ஜீன் – 26
    • B) ஜீன் – 25
    • C) ஜீன் – 27
    • D) ஜீன் – 28
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    ஜீன் – 27 உலக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தினம் (World Micro Small and Medium Enterprise day)