Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 11-July-2019 to 11-July-2019
  • 1. ஆஜ் கா அபிமன்யு என்ற புனை பெயரில் புத்தகங்களை எழுதி வரும் சிறுவன் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?
    • A) மகாராஷ்டிரம்
    • B) உத்திரபிரதேசம்
    • C) மத்திய பிரதேசம்
    • D) மகாராஷ்டிரம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    மிரிகேந்திர ராஜ் என்ற இயற்பெயரை உடைய சிறுவன் இதுவரை 135 புத்தகங்கள் எழுதி உள்ளதாகவும் அவை அனைத்தும் 25 முதல் 100 பக்கங்களை கொண்டவை எனவும் கூறியுள்ளார். மேலும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யா நாத் உட்பட பல பிரபலங்கள் குறித்து புத்தகங்கள் எழுதி உள்ளதாகவும் அச்சிறுவன் கூறி உள்ளார்.

  • 2. ரஷ்யாவின் மிக்-29 போர் விமானங்கள் எந்த நாட்டு விமானப்படையின் விமானத்திற்கு இணையானது ?
    • A) இஸ்ரேல்
    • B) ஜப்பான்
    • C) சீனா
    • D) அமெரிக்கா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    ரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக்-29 ரக போர் விமானங்களையும், இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய ரஷ்ய ராணுவம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகான துணை இயக்குநர் விளாடிமிர் ட்ரோச்சோவ், இந்தியாவுக்கு சுகோய் போர் விமானங்களை தயாரித்து அளிப்பதில், அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றி வருவதாக தெரிவித்திருக்கிறார். இந்திய விமானப்படையிடம் இருந்து, மேம்படுத்தப்பட்டு அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும், 18 புதிய சுகோய் விமானங்களுக்கான ஒப்பந்தம் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதுதவிர 21 அதிநவீன மிக்-29 ரக போர் விமானங்களை விநியோகிப்பதற்கான ஆர்டர் கிடைத்திருப்பதாகவும் விளாடிமிர் ட்ரோச்சோவ் தெரிவித்திருக்கிறார். மேலும், 450 டீ-90 ரக பீரங்கிகளை நவீனப்படுத்துவதற்கான ஒப்பந்தமும், இந்தியாவிடமிருந்து கிடைத்திருப்பதாகவும், அவர் கூறியிருக்கிறார். இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான ஆர்.மாதவன், கடந்த பிப்ரவரி மாதம், பெங்களூருவில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது, சுகோய், மிக் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வது பற்றி, ரஷ்யாவுடன் பேசப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக, இந்தியா வங்க உள்ள 18 சுகோய் போர் விமானங்கள், 21 மிக்-29 ரக போர்

  • 3. எந்த வருடத்திற்குள் இந்தியா மக்கள் தொகையில்முதலிடம் பிடிக்கும்ஜ் என்று ஐ நா அறிவித்து உள்ளது ?
    • A) 2025
    • B) 2026
    • C) 2027
    • D) 2028
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் தற்போது இந்தியா, சீனாவுக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் எட்டே ஆண்டுகளில் அதாவது 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா, உலக மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- உலக மக்கள் தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை மேலும் 200 கோடி அதிகரித்து விடும். அதாவது 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை 970 கோடியாக அதிகரித்து விடும். அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் உலக மக்கள் தொகை ஆயிரம் கோடியை கடந்து விடும்.

  • 4. புலிக்கு தேசிய விலங்கு அந்தஸ்து அளிக்கப்பட்டது எந்த ஆண்டு ?
    • A) 2011
    • B) 2012
    • C) 2013
    • D) 2014
    Show Answer Hide Answer
    Answer A

  • 5. உர மானிய திட்டம் முதன் முதலாக விவசாயத்திற்கு எந்த ஆண்டு அறிமுகப்படுத்த பட்டு உள்ளது ?
    • A) 2014
    • B) 2015
    • C) 2016
    • D) 2017
    Show Answer Hide Answer
    Answer D

  • 6. உலக பல்கலைக்கழக விளையாட்டுகளில் டுட்டீ சந்த் எத்தனை மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார் ?
    • A) 100 மீட்டர்
    • B) 200 மீட்டர்
    • C) 300 மீட்டர்
    • D) 400 மீட்டர்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் இத்தாலியில் நடந்து வருகிறது . ஒடிசாவை சேர்ந்த 23 வயதான டுட்டீ சந்த் உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

  • 7. தற்போது காலமான செலெஸ்டின் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
    • A) கைப்பந்து
    • B) கூடைப்பந்து
    • C) கால்பந்து
    • D) எறி பந்து
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பரான செலஸ்டின் இந்திய கால்பந்து அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 8. மாற்று திறனாளிகளுக்கான எந்த விளையாட்டில் திருச்சி வீராங்கனை ஜெனித்தா தங்கப்பதக்கம் வென்றார் ?
    • A) கேரம்
    • B) செஸ்
    • C) டேபிள் டென்னிஸ்
    • D) இவற்றுள் ஏதும் இல்லை
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    இந்த போட்டியில் 12 நாடுகளை சேர்ந்த 44 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் ஜெனித்தா தங்கப்பதக்கம் வென்றார். அவர் தொடர்ந்து 6-வது முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து ஜெனித்தாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

  • 9. உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
    • A) ஜூன் 11
    • B) ஜூலை 11
    • C) ஜூன் 9
    • D) ஜூலை 9
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.

  • 10. சர்வதேச அளவிலான சர்க்கஸை முதன் முதலில் ஆரம்பித்தவர் யார் ?
    • A) ரிச்சர்டு காரியூட்
    • B) சார்லஸ் சிமோனி
    • C) ஹைய்லாலிபெர்டி
    • D) கிரிகோரி ஆல்சோன்
    Show Answer Hide Answer
    Answer C