'இணைய ஒப்புதல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு முறைமை' உதவி மையம் – அமைச்சர் ராஜீவ் திறந்து வைத்தார்
09-10-2026 · தமிழ்
பாடப் பகுதிகள்: தமிழ்நாடு · 9 அக்டோபர் 2026 நடப்பு நிகழ்வுகள் (TNPSC குரூப் 1, 2, 4 / UPSC / SSC / RRB)
செய்தி
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (TNPCB) 'இணைய ஒப்புதல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு முறைமை' (OCMMS) உதவி மையத்தைச் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர் வே.க. ராஜீவ் அக். 9, 2026 அன்று சென்னை கிண்டி, அண்ணா சாலை எண் 76-ல் உள்ள வாரியத் தலைமை அலுவலகத்தில் திறந்து வைத்தார். தொழிற்சாலைகள், தொழில்முனைவோர் ஒப்புதல் (Consent), அங்கீகாரம் / 'விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு' (EPR) விண்ணப்பங்களை இணையத்தில் நிரப்ப, ஆவணங்களைப் பதிவேற்ற இம்மையம் வழிகாட்டும்.
முக்கியத் தகவல்கள்
| முறைமை | இணைய ஒப்புதல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு முறைமை (OCMMS) |
| அமைப்பு | தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) |
| அமைச்சர் | டாக்டர் வே.க. ராஜீவ் – சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் |
| இடம் | TNPCB தலைமை அலுவலகம், 3-ஆவது தளம், அண்ணா சாலை, கிண்டி, சென்னை |
| தொடர்பு | 044-43722000; helpdesk@tnpcb.gov.in; வேலை நாள்களில் காலை 10 – மாலை 5.45; நேரில் – வெள்ளிக்கிழமைகளில் |
| நோக்கம் | தாமதம், நேரில் வருகையைக் குறைத்தல்; நடைமுறைகளை எளிதாக்குதல் |
பின்னணி
- மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள்: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) 1974-ல் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் அமைந்தது; TNPCB 1982-ல் அமைந்தது. காற்றுச் சட்டம் 1981; சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986 (போபால் விஷவாயு விபத்துக்குப் பின்).
- ஒப்புதல் வகைகள்: 'நிறுவுவதற்கான ஒப்புதல்' (CTE) – தொழிற்சாலை கட்டுவதற்கு முன்; 'இயக்குவதற்கான ஒப்புதல்' (CTO) – உற்பத்தி தொடங்குவதற்கு முன். CPCB வகைப்பாடு: சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, வெள்ளை – வெள்ளை வகைத் தொழில்களுக்கு ஒப்புதல் தேவையில்லை.
- EPR (விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு): பொருளை உற்பத்தி / இறக்குமதி செய்பவரே அதன் கழிவைச் சேகரித்து மறுசுழற்சி செய்யும் பொறுப்பு – நெகிழிக் கழிவு மேலாண்மை விதிகள், மின்னணுக் கழிவு விதிகள் 2022, மின்கலக் கழிவு விதிகள் 2022.
- அரசியலமைப்பு: உறுப்பு 48A – சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசின் வழிகாட்டு நெறி; உறுப்பு 51A(g) – குடிமக்களின் அடிப்படைக் கடமை (42-ஆவது திருத்தம், 1976). நீர்ச் சட்டம் உறுப்பு 252-ன் கீழ் மாநிலங்களின் ஒப்புதலுடன் இயற்றப்பட்டது.
- தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (NGT, 2010) – சுற்றுச்சூழல் வழக்குகளுக்கு; தென் மண்டல அமர்வு சென்னையில் உள்ளது.
தமிழ்நாடு தொடர்பு: TNPCB தலைமையகம் சென்னை கிண்டியில்; NGT தென் மண்டல அமர்வும் சென்னையில். தமிழ்நாடு 'மஞ்சப்பை' இயக்கம் (2021) மூலம் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிக்கு மாற்றை ஊக்குவிக்கிறது.
ஆதாரம்: தினத்தந்தி (அரசுச் செய்திக் குறிப்பு), அக். 9, 2026
TNPSC வகுப்பறை / ஆன்லைன் பயிற்சியில் சேர: கோவையில் TNPSC பயிற்சி · கட்டண விவரம் · அழைக்க 99941 46662.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
BANK Achievers
-
N. NARMADHA
BANK BANK
