நாடு தழுவிய முதல் ஒருங்கிணைந்த சாரஸ் கொக்கு கணக்கெடுப்பு (BNHS)
12-10-2026 · தமிழ்
பாடப் பகுதிகள்: சுற்றுச்சூழல் · 12 அக்டோபர் 2026 நடப்பு நிகழ்வுகள் (TNPSC குரூப் 1, 2, 4 / UPSC / SSC / RRB)
செய்தி
மும்பை இயற்கை வரலாற்றுச் சங்கம் (BNHS) இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த (synchronised) நாடு தழுவிய சாரஸ் கொக்கு கணக்கெடுப்பை அக். 10–11, 2026 அன்று நடத்தியது (அக். 10 – உலகப் புலம்பெயர் பறவைகள் தினம்). BNHS-ன் மத்திய ஆசியப் பறப்புப் பாதைத் திட்டத்தின் கீழ், இயக்குநர் கிஷோர் ரித்தே, துணை இயக்குநர் டாக்டர் பி. சத்தியசெல்வம் தலைமையில், மாநில வனத்துறைகள், விவசாயிகள், கல்லூரிகள், குடிமக்கள் அறிவியலாளர்கள் பங்கேற்றனர். அடிப்படை எண்ணிக்கை, இனப்பெருக்கத் தலங்கள், உயிரிழப்பை ஏற்படுத்தும் மின்கம்பிகள் ஆகியவற்றைக் கண்டறிவது நோக்கம்.
முக்கியத் தகவல்கள்
| நடத்தியது | மும்பை இயற்கை வரலாற்றுச் சங்கம் (BNHS) – குடிமக்கள் அறிவியல் முறை |
| நாள் | 10–11 அக். 2026 |
| முந்தைய மதிப்பீடு | சர்வதேசக் கொக்கு அறக்கட்டளை (2026): இந்தியாவில் சுமார் 23,255; உத்தரப் பிரதேசம் 19,918 |
| சாரஸ் | உலகின் மிக உயரமான பறக்கும் பறவை (சுமார் 1.5 மீ); Antigone antigone |
| பாதுகாப்பு நிலை | IUCN – பாதிக்கப்படக்கூடியது (Vulnerable); வனஉயிர்ச் சட்டம் அட்டவணை I; CITES பின்னிணைப்பு II |
பின்னணி
- சாரஸ் கொக்கு: இந்தியாவில் நிரந்தரமாக இனப்பெருக்கம் செய்யும் ஒரே கொக்கு இனம்; வாழ்நாள் முழுவதும் இணை பிரியாமல் வாழ்வதால் 'தாம்பத்திய விசுவாசத்தின்' சின்னம்; உத்தரப் பிரதேசத்தின் மாநிலப் பறவை.
- பரவல்: உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா. அச்சுறுத்தல்கள் – ஈரநில இழப்பு, பூச்சிக்கொல்லி, மின்கம்பி மோதல், முட்டைத் திருட்டு.
- BNHS: 1883-ல் மும்பையில் நிறுவப்பட்ட அரசு சாரா ஆய்வு அமைப்பு; 'இந்தியாவின் பறவை மனிதர்' டாக்டர் சலீம் அலி இதனுடன் தொடர்புடையவர்.
- குறிப்பு: இது அரசின் அதிகாரப்பூர்வ 'கணக்கெடுப்பு' (census) அல்ல; BNHS நடத்தும் குடிமக்கள் பங்கேற்புக் 'கணக்காய்வு' (survey). முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
தமிழ்நாடு தொடர்பு: சாரஸ் கொக்கு தமிழ்நாட்டில் இயல்பாகக் காணப்படுவதில்லை. BNHS-ன் 'பறவை வலசை ஆய்வு மையம்' நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் (பாயிண்ட் காலிமர்) உள்ளது. வேடந்தாங்கல் – இந்தியாவின் பழமையான பறவைகள் சரணாலயம்.
ஆதாரம்: டவுன் டு எர்த், டெக்கான் ஹெரால்டு, தி பிரிண்ட், அக். 2026; சர்வதேசக் கொக்கு அறக்கட்டளை (2026)
TNPSC வகுப்பறை / ஆன்லைன் பயிற்சியில் சேர: கோவையில் TNPSC பயிற்சி · கட்டண விவரம் · அழைக்க 99941 46662.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
TET Achievers
-
KANAGA RATHINAM
TNTET TNTET
