நடப்பு நிகழ்வுகள்

இந்தியாவின் முதல் 'சூழலமைப்புச் சிவப்புப் பட்டியல்' மதிப்பீடு – கேரளா

14 அக்டோபர் 2026 · தமிழ் சுற்றுச்சூழல்

⬇ இந்தச் செய்தி – இலவச PDF பதிவிறக்கம்

இந்தியாவின் முதல் 'சூழலமைப்புச் சிவப்புப் பட்டியல்' மதிப்பீடு – கேரளா

பாடப் பகுதிகள்: சுற்றுச்சூழல் · 14 அக்டோபர் 2026 நடப்பு நிகழ்வுகள் (TNPSC குரூப் 1, 2, 4 / UPSC / SSC / RRB)

செய்தி

IUCN சூழலமைப்புகளின் சிவப்புப் பட்டியல் (RLE) கட்டமைப்பின்படி, மாநில அளவிலான இந்தியாவின் முதல் சூழலமைப்பு அபாய மதிப்பீட்டைக் கேரள மாநிலப் பல்லுயிர் வாரியம் (KSBB) அக். 14, 2026 அன்று கொல்லத்தில் தொடங்கியது. கேரள வன ஆராய்ச்சி நிறுவனம் (KFRI, பீச்சி) உள்ளிட்டவை செயல்படுத்தும் இந்த ஆய்வில், சோலா–புல்வெளிகள், ஆற்றோர பசுமைமாறாக் காடுகள், மிரிஸ்டிகா சதுப்புநிலங்கள், கடலோர அலையாத்திக் காடுகள், ஆறுகள் உள்ளிட்டவை மதிப்பிடப்படும். தென் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆற்றோர பசுமைமாறாக் காடுகள் சுமார் 100 ஆண்டுகளில் 83% பரப்பை இழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியத் தகவல்கள்

தொடக்கம்14 அக். 2026, கொல்லம் – கேரள மாநிலப் பல்லுயிர் வாரியம் (KSBB)
செயலாக்கம்கேரள வன ஆராய்ச்சி நிறுவனம் (KFRI), பீச்சி; MES அஸ்மாபி கல்லூரி ஆய்வு மையம்
சூழலமைப்புகள்சோலா–புல்வெளி, ஆற்றோர பசுமைமாறாக் காடு, மிரிஸ்டிகா சதுப்பு, அலையாத்திக் காடு, கழிமுகம், ஆறுகள்
வெளியீடுகள்அபாயப் பதிவேடு, சூழலமைப்பு வகைப்பாட்டு வரைபடம், மறுசீரமைப்பு முன்னுரிமை வரைபடங்கள்
RLE வகைகள் (8)அழிந்தது (CO), மிக அருகிய (CR), அருகிய (EN), பாதிக்கப்படக்கூடிய (VU), அச்சுறுத்தலுக்கு அருகில் (NT), குறைந்த கவலை (LC), தரவு போதாது (DD), மதிப்பிடப்படவில்லை (NE)

பின்னணி

  • IUCN – பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்: 5 அக். 1948, ஃபாண்டெய்ன்ப்ளோ (பிரான்ஸ்); தலைமையகம் கிளாண்ட் (சுவிட்சர்லாந்து). உயிரினங்களின் சிவப்புப் பட்டியல் – 1964; சூழலமைப்புகளின் சிவப்புப் பட்டியல் – 2014-ல் IUCN ஏற்பு.
  • RLE அளவுகோல்கள் A–E: A – பரப்பு குறைவு; B – குறுகிய பரவல்; C – உயிரற்ற சூழல் சீரழிவு; D – உயிரியல் செயல்பாட்டுச் சீர்குலைவு; E – அளவு சார் அபாயப் பகுப்பாய்வு. உயிரினப் பட்டியலில் இல்லாத 'அழிந்தது (Collapsed)' என்ற வகை RLE-க்கு மட்டுமானது.
  • மிரிஸ்டிகா சதுப்புநிலங்கள் – மேற்குத் தொடர்ச்சி மலையின் மிகப் பழமையான, அரிய நன்னீர்ச் சதுப்புக் காடுகள்; 'உயிருள்ள புதைபடிவங்கள்' எனப்படுகின்றன.

தமிழ்நாடு தொடர்பு: தமிழ்நாட்டிலும் இதே வகைச் சூழலமைப்புகள் உள்ளன – நீலகிரி, ஆனைமலை, பழனி மலைகளின் சோலா–புல்வெளிகள்; பிச்சாவரம் (கடலூர் மாவட்டம்), முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) அலையாத்திக் காடுகள். நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் (1986, இந்தியாவின் முதல்) – தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா.

ஆதாரம்: IUCN; விக்கிப்பீடியா

TNPSC வகுப்பறை / ஆன்லைன் பயிற்சியில் சேர: கோவையில் TNPSC பயிற்சி · கட்டண விவரம் · அழைக்க 99941 46662.

இந்தச் செய்தியை இலவச PDF-ஆகப் பதிவிறக்கலாம் – Shanmugam IAS Academy முத்திரையுடன்
⬇ இந்தச் செய்தி – இலவச PDF பதிவிறக்கம்
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
இதே நாளின் பிற செய்திகள்
› சென்னையில் ₹3,108 கோடி சுற்றுக்குழாய்த் திட்டம்: முதல்வர் அடிக்கல் › பள்ளிக் கண்காணிப்புக்கான 'பள்ளிப் பார்வை 3.0' செயலி அறிமுகம் › பள்ளிக்கரணை: இடைக்காலத் தாக்க மண்டலம் 316.76 ஏக்கராகக் குறைப்பு › உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் TNAU-வின் 4 பேராசிரியர்கள் › 1,000 ஆண்டுப் பழமையான தோகைமலைக் கோயில் முருகன் சிலை மீட்பு › தேசிய சமூக உதவித் திட்டம் இனி 'பிரதமர் சமாஜிக் சஹாயதா யோஜனா' › கடலோரக் காவல்படைக் கப்பல் ICGS அஜித் சேவையில் இணைப்பு – ஓகா › சோயாபீன் ரகங்கள் NRC 268, NRC 270: மோசமான வானிலையிலும் நல்ல மகசூல் இந்த நாளின் அனைத்துச் செய்திகளும் → அனைத்து நடப்பு நிகழ்வுகள் →

TNPSC Achievers

  • இந்தியாவின் முதல் 'சூழலமைப்புச் சிவப்புப் பட்டியல்'… | Shanmugam IAS

    M. AJIMUNISHA

    TNPSC TNPSC