வினாடி வினா

← திரும்பச் செல்ல
1.  
[VAS-AHGS-2020] கீழ்வருவனவற்றுள் தெற்கு ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரம் என அழைக்கப்படும் ஒன்று எது?

Correct Answer: C [அருள்மிகு அரங்கநாதர் கோயில் கோபுரம்]

Notes:

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலின் இராஜகோபுரம் (சுமார் 73 மீ., 13 நிலைகள்) தெற்கு ஆசியாவின் மிக உயரமான கோபுரம்.

2.  
[VAS-AHGS-2020] கீழ்வரும் அவைகளில் சங்க கால மன்னர்களுக்கு உதவியவைகள் யாவை?

Correct Answer: B [ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம்]

Notes:

சங்க கால மன்னர்களுக்கு ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் ஆட்சியில் உதவின. சபா–சமிதி வேத காலம்; அஷ்டதிக்கஜங்கள் விஜயநகரம்; அஷ்டப்பிரதான் மராட்டியர்.

3.  
[ARGS-2020] முகமது பின் துக்ளக் காலத்தில் தமிழகத்தின் நிலையைப் பற்றி எழுதிய மூரிஷ் பயணி ________ ஆவார்.

Correct Answer: A [இபன் பதூதா]

Notes:

மொராக்கோவைச் சேர்ந்த இபன் பதூதா முகமது பின் துக்ளக் காலத்தில் இந்தியா வந்து, மதுரை சுல்தானகம் பற்றியும் எழுதினார்.

4.  
[ARGS-2020] தமிழகத்தில் பாண்டியர்களின் ஆட்சி குறித்த தகவல்களை எழுதியுள்ள ரோமானியர் யார்?

Correct Answer: B [ஸ்டிராபோ]

Notes:

ஸ்டிராபோ, பாண்டிய மன்னன் அகஸ்டஸ் சீசரிடம் தூதுக்குழு அனுப்பியதைக் குறிப்பிடுகிறார். (TNPSC விடைக்குறிப்பின்படி)

5.  
[PTGS-2021] சங்ககால மக்களின் மணமுறைகளைக் குறிப்பிடும் நூல் எது?

Correct Answer: C [அகநானூறு]

Notes:

அகநானூறு அகத்திணை (காதல், இல்வாழ்க்கை) பாடல்களின் தொகுப்பு. அதில் சங்ககாலத் திருமண முறைகள் விவரிக்கப்படுகின்றன.

6.  
[AHGS-2021] தமிழ் மரபில் நிலம் ஐந்து பெரும் பிரிவுகளாக வழங்கப்படுகிறது. பொருத்துக:
(a) குறிஞ்சி – 1. வளமான பகுதி
(b) முல்லை – 2. காட்டுப் பகுதி
(c) மருதம் – 3. கடல் பகுதி
(d) நெய்தல் – 4. மலைப் பகுதி

Correct Answer: D [4 2 1 3]

Notes:

குறிஞ்சி – மலை, முல்லை – காடு, மருதம் – வயல் (வளமான நிலம்), நெய்தல் – கடற்கரை. ஐந்தாவது பாலை – வறண்ட நிலம்.

7.  
[ADGS-2021] பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
A: எட்டாவது உலகத் தமிழ் மாநாடு 1995-ல் தஞ்சாவூரில் நடைபெற்றது.
B: இந்த மாநாடு உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.

Correct Answer: C [A சரி, B தவறு]

Notes:

8-வது உலகத் தமிழ் மாநாடு 1995-ல் தஞ்சாவூரில் நடந்தது. உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு 2010-ல் கோயம்புத்தூரில் நடந்தது.

8.  
[PSHY-2022] சங்க காலத்தில் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் இறந்த உடன் அவனுடைய மனைவி கோப்பெருந்தேவி உடனடியாக இறந்த சம்பவத்தை ________ என அழைத்தனர்.

Correct Answer: D [அறக் கற்பு]

Notes:

கணவன் இறந்தவுடன் உயிர் துறந்த கோப்பெருந்தேவியின் நிகழ்வு அறக் கற்பு என்று போற்றப்படுகிறது (சிலப்பதிகாரம்). (TNPSC விடைக்குறிப்பின்படி)

9.  
[VCGS-2022] சங்க காலத்தில் தங்கத்தினை மதிப்பிடுகிற அளவாக இருந்தது ________ ஆகும்.

Correct Answer: B [கழஞ்சு]

Notes:

கழஞ்சு – பொன் நிறுக்கும் அளவு. வேலி – நில அளவு; மரக்கால் – தானிய அளவு.

10.  
[VCGS-2022] சங்க காலத்தில் நாள் ஒன்றுக்கு ________ நாழிகைகள் இருந்தன.

Correct Answer: D [அறுபது]

Notes:

ஒரு நாள் = 60 நாழிகைகள்; ஒரு நாழிகை = 24 நிமிடங்கள்.

11.  
[VCGS-2022] சங்க கால சமூகத்தின் வீரமிக்க பொழுதுபோக்காக ________ஐக் கருதினர்.

Correct Answer: A [ஏறுதழுவுதல்]

Notes:

ஏறுதழுவுதல் (இன்றைய ஜல்லிக்கட்டு) முல்லை நில வீர விளையாட்டு; கலித்தொகையின் முல்லைக்கலியில் விவரிக்கப்படுகிறது.

12.  
[VCGS-2022] இடைக்காலத் தென்னிந்தியாவில் கிராமத்தின் கைவினைஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

Correct Answer: A [ஆயகாரர்]

Notes:

ஆயகாரர்கள் – கிராமப் பணியாளர்கள், கைவினைஞர்கள் (விஜயநகர காலம்). மிராசிதார், சமீன்தார் – நில உடைமையாளர்கள்.

13.  
[TNPSC-2022] கீழ்க்கண்டவற்றுள் பெண்களின் பருவநிலைகளை வரிசைப்படுத்துக:
1. மங்கை 2. அரிவை 3. மடந்தை 4. தெரிவை

Correct Answer: B [1 3 2 4]

Notes:

பெண்களின் ஏழு பருவங்கள்: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண். எனவே மங்கை → மடந்தை → அரிவை → தெரிவை.

14.  
[Surveyor/Draftsman-2022] உழவுத் தொழிலுக்கு அடுத்தபடியாக பழங்கால தமிழர்கள் ________ தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

Correct Answer: B [வாணிபம்]

Notes:

உழவுக்கு அடுத்து வாணிபம் முக்கியத் தொழில்; முசிறி, தொண்டி, கொற்கை, பூம்புகார் துறைமுகங்கள் வழியே வெளிநாட்டு வாணிபம் நடந்தது. (TNPSC விடைக்குறிப்பின்படி)

15.  
[Surveyor/Draftsman-2022] முசிறியை "இந்தியாவின் முதல் பேரங்காடி" என்று கூறும் வெளிநாட்டு நூல் ________ ஆகும்.

Correct Answer: A [இயற்கை வரலாறு]

Notes:

பிளினியின் 'இயற்கை வரலாறு' (Natural History) முசிறியை 'இந்தியாவின் முதல் பேரங்காடி' (primum emporium Indiae) என்று குறிப்பிடுகிறது.

மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0