இந்தியப் புவியியல் PYQ – மண் வளம்
← திரும்பச் செல்ல
வட இந்தியச் சமவெளியின் வண்டல் மண் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற இமயமலை ஆறுகளால் படியவைக்கப்பட்டது (1 சரி). இரும்பு ஆக்சைடு அதிகம் இருப்பதால் சிவப்பு நிறம் பெறுவது செம்மண்; கரிசல் மண் அல்ல (2 தவறு).
₹599 →
இந்தியப் புவியியல் PYQ – மண் வளம் – 11 வினாக்கள், பாடம்: புவியியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
Group 2 2022
வண்டல் மண் ______ மூலம் வளமானதாக உள்ளது.Correct Answer: A [மட்கிய, பாஸ்பாரிக் அமிலம், சுண்ணாம்பு, கரிமப் பொருள்]
விளக்கம்:
ஆறுகள் படியவைத்த வண்டல் மண்ணில் பாஸ்பாரிக் அமிலம், சுண்ணாம்பு, கரிமப் பொருள், பொட்டாஷ் போதுமான அளவில் உள்ளன; நைட்ரஜன் குறைவு.
2.
DPGS 2022
கூற்று (A) : கரிசல் மண் அதன் மூலப்பொருள்களை வானிலைச் சிதைவுற்ற பாறைகளிலிருந்து பெறுகிறது.காரணம் (R) : கரிசல் மண்ணுக்கு அதிக நீரைத் தக்கவைக்கும் திறன் உள்ளது.
Correct Answer: B [(A), (R) இரண்டும் சரி; ஆனால் (R), (A)-ஐ விளக்கவில்லை]
விளக்கம்:
கரிசல் மண் தக்காணப் பகுதியின் எரிமலைப் பாறைகள் (பசால்ட் – தக்காணப் பொறி) வானிலைச் சிதைவுற்று உருவானது (A சரி). களிமண் அதிகம் இருப்பதால் இது நீரைத் தக்கவைக்கும் திறன் கொண்டது (R சரி). ஆனால் நீர் தக்கவைக்கும் திறன், மண் உருவான முறையை விளக்கவில்லை; எனவே (B).
3.
FA 2022
பருத்தி விளையும் கரிசல் மண்ணின் மற்றொரு பெயர்Correct Answer: C [ரெகூர்]
விளக்கம்:
கரிசல் மண் "ரெகூர்" மண் என்றும், பருத்தி சாகுபடிக்கு ஏற்றது என்பதால் "கருப்புப் பருத்தி மண்" என்றும் அழைக்கப்படுகிறது. பாங்கர் – பழைய வண்டல்; காதர் – புதிய வண்டல்; கங்கர் – பழைய வண்டலில் காணப்படும் சுண்ணாம்புக் கட்டிகள்.
4.
Jailor 2022
பன்னாட்டு அளவில் "வெப்பமண்டல செர்னோசெம்" என்று அழைக்கப்படும் ______ மண், இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய மண் குழுவைச் சார்ந்தது.Correct Answer: D [கரிசல் மண்]
விளக்கம்:
கரிசல் மண் பன்னாட்டு அளவில் "வெப்பமண்டல செர்னோசெம்" (tropical chernozem) என அழைக்கப்படுகிறது. பரப்பளவில் வண்டல் மண், செம்மண் ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரிய மண் குழு கரிசல் மண்.
5.
AJ 2023
அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறன் கொண்ட மண்Correct Answer: B [ரெகூர் மண்]
விளக்கம்:
நுண்ணிய களிமண் துகள்கள் நிறைந்த ரெகூர் (கரிசல்) மண் நீண்ட நாள் ஈரத்தைத் தக்கவைக்கிறது. ஈரமானால் ஒட்டும் தன்மை பெறுகிறது; காய்ந்தால் ஆழமான வெடிப்புகள் உண்டாகின்றன ("தானே உழுதுகொள்ளும் மண்"). இதனால் மானாவாரிப் பருத்தி சாகுபடிக்கு ஏற்றது.
6.
Group 1 2024
சரளை மண் (laterite) பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?(i) இந்தச் சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்தது.
(ii) இம்மண்ணில் இரும்பு, அலுமினியம் அதிகமாக உள்ளன.
(iii) இதில் நைட்ரஜன், பொட்டாசியம், சுண்ணாம்பு குறைவாக உள்ளன.
Correct Answer: C [(ii), (iii) மட்டும்]
விளக்கம்:
"லேட்டரைட்" என்ற சொல் "செங்கல்" எனப் பொருள்படும் "லேட்டர்" (later) என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது; கிரேக்கம் அல்ல (i தவறு).
7.
CTS (Non-Interview Posts) 2024
மின் கடத்துத்திறன் (Electrical conductivity) என்பது மண்ணின் ______ அளவீடு.Correct Answer: B [உப்புத்தன்மை]
விளக்கம்:
மண்ணில் கரைந்துள்ள உப்புகள் அயனிகளாகப் பிரிந்து மின்சாரத்தைக் கடத்துகின்றன. எனவே மண் கரைசலின் மின் கடத்துத்திறன் (EC – deciSiemens/மீட்டர்) மண்ணின் உப்புத்தன்மையை அளக்கும் முறை. அமிலத்தன்மை / காரத்தன்மை pH மூலம் அளக்கப்படுகிறது.
8.
CTS (Interview Posts-II) 2024
பரப்பின் அடிப்படையில் இந்திய மண் பரவல் இறங்குவரிசையில் தொகுக்கப்பட்ட சரியான விடையைக் காண்க.Correct Answer: A [வண்டல் மண், செம்மண், கரிசல் மண், பாலைவன மண்]
விளக்கம்:
பரப்பளவில் இந்தியாவின் மண் வகைகள் : வண்டல் மண் (முதலிடம்) → செம்மண் → கரிசல் மண் → பாலைவன மண். கரிசல் மண் மூன்றாவது பெரிய மண் குழு என்பதையும் நினைவில் கொள்க.
9.
CTS (ITI Posts – Level II) 2025
கீழ்க்கண்ட மண் வகைகளில் எது இந்தியாவின் பெரும்பரப்பைக் கொண்டுள்ளது?Correct Answer: D [வண்டல் மண்]
விளக்கம்:
சிந்து – கங்கை – பிரம்மபுத்திரா சமவெளிகளிலும், கடற்கரை டெல்டாக்களிலும் பரவியுள்ள வண்டல் மண் இந்தியாவின் மிகப் பெரிய பரப்பைக் கொண்ட மண் வகை. இது மிகவும் வளமானது; நாட்டின் முக்கிய வேளாண் பகுதிகள் இம்மண்ணில் அமைந்துள்ளன.
10.
CTS (Interview Posts) 2026
தேசிய வேளாண் அறிவியல் அகாடமி (NAAS) அறிக்கையின்படி, ______ மாநிலம் அதிக அமிலத்தன்மை கொண்ட மண்ணைக் கொண்டுள்ளது.Correct Answer: C [கேரளம்]
விளக்கம்:
மிக அதிக மழையால் மண்ணின் கால்சியம், மக்னீசியம் போன்ற காரச் சத்துகள் கசிந்து வெளியேறுவதால், கேரளத்தின் சரளை (laterite) மண் பெருமளவில் அமிலத்தன்மை கொண்டது. குஜராத், ஹரியானா போன்ற வறண்ட – அரைவறண்ட பகுதிகளில் உவர் / கார மண் சிக்கலே அதிகம்.
11.
Group 2/2A 2025
மண் பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடு :(1) வட இந்தியச் சமவெளியின் மண் பெரும்பாலும் இமயமலை ஆறுகளால் படியவைக்கப்படுகிறது.
(2) கரிசல் மண் என்று பிரபலமாக அறியப்படும் மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகம் உள்ளது.
(3) தக்காணப் பொறிப் பாறைகளிலிருந்து (Deccan trap) உருவாகும் மண் வளமானது; அதிக ஈரப்பதத்தைத் தாங்கும் திறனுடையது.
Correct Answer: B [(1), (3) சரி]
விளக்கம்:
வட இந்தியச் சமவெளியின் வண்டல் மண் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற இமயமலை ஆறுகளால் படியவைக்கப்பட்டது (1 சரி). இரும்பு ஆக்சைடு அதிகம் இருப்பதால் சிவப்பு நிறம் பெறுவது செம்மண்; கரிசல் மண் அல்ல (2 தவறு).
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் புவியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-geography-pyq
📘 TNPSC பொது அறிவு அலகு II — இந்தியாவின் புவியியல் (Geography of India) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு II இந்தியப் புவியியல் முழுவதும் · 14 அத்தியாயங்கள் · 340 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் (100 வினாக்கள்) · வரைபடங்கள், 14 மனவரைபடங்கள் · ஒவ்வோர் அத்தியாயத்திலும் தமிழ்நாடு பார்வை
புத்தகத்தைப் பெற – ₹299 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் புவியியல் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் புவியியல் PYQ – பசுமை ஆற்றல்
› இந்தியப் புவியியல் PYQ – காலநிலை மாற்றம்
› இந்தியப் புவியியல் PYQ – சுற்றுச்சூழல் மாசுபாடு
› இந்தியப் புவியியல் PYQ – இயற்கைப் பேரிடர்களும் பேரிடர் மேலாண்மையும்
› இந்தியப் புவியியல் PYQ – பழங்குடியினர்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
