இந்தியப் புவியியல் PYQ – கனிம வளங்களும் ஆற்றல் வளங்களும்

← திரும்பச் செல்ல

இந்தியப் புவியியல் PYQ – கனிம வளங்களும் ஆற்றல் வளங்களும் – 23 வினாக்கள், பாடம்: புவியியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
GSASO 2020
பகல்பூர் அனல் மின் நிலையம் அமைந்துள்ள மாநிலம்

Correct Answer: D [பீகார்]

விளக்கம்:

பீகாரின் பகல்பூர் மாவட்டத்தில் கங்கைக் கரையில் உள்ள கஹல்கான் (Kahalgaon) சூப்பர் அனல் மின் நிலையம் தேசிய அனல் மின் கழகத்தால் (NTPC) இயக்கப்படுகிறது.

2.  
ARGS 2020
பின்வரும் அலுமினியத் தொழிற்சாலைகளை அவற்றின் இருப்பிடத்துடன் பொருத்துக :
(a) BALCO – 1. மேட்டூர்
(b) HINDALCO – 2. கோர்பா
(c) MALCO – 3. கோராபுட்
(d) NALCO – 4. ரேணுகூட்

Correct Answer: B [2 4 1 3]

விளக்கம்:

BALCO (பாரத் அலுமினியம் நிறுவனம்) – சத்தீஸ்கரின் கோர்பா (2); HINDALCO – உத்தரப் பிரதேசத்தின் ரேணுகூட் (4); MALCO (மெட்ராஸ் அலுமினியம் நிறுவனம்) – தமிழ்நாட்டின் மேட்டூர் (1); NALCO (தேசிய அலுமினியம் நிறுவனம்) – ஒடிசாவின் கோராபுட் மாவட்டம் (தாமன்ஜோடி) (3).

3.  
ADGS 2021
பாபா புதன் மலைகளில் சுரங்கத் தொழிலுக்குப் பிரபலமான கனிமம் எது?

Correct Answer: C [இரும்பு]

விளக்கம்:

கர்நாடகத்தின் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள பாபா புதன் மலைகள், குத்ரேமுக் பகுதிகள் இரும்புத் தாதுவுக்குப் பெயர் பெற்றவை. கர்நாடகத்தின் பெல்லாரி – ஹோஸ்பேட்டைப் பகுதியும் முக்கிய இரும்புத் தாதுப் பகுதி.

4.  
AGGS 2021
சரியானவற்றைப் பொருத்துக (தனிமம் – பணி) :
(a) மாலிப்டினம் – 1. பச்சையம்
(b) துத்தநாகம் – 2. மெத்தியோனின்
(c) மக்னீசியம் – 3. ஆக்சின்
(d) சல்பர் – 4. நைட்ரோஜினேஸ்

Correct Answer: C [4 3 1 2]

விளக்கம்:

தாவரங்களில் : மாலிப்டினம் – நைட்ரஜனை நிலைநிறுத்தும் நைட்ரோஜினேஸ் நொதியின் பகுதி (4); துத்தநாகம் – ஆக்சின் ஹார்மோன் உருவாக்கத்துக்குத் தேவை (3); மக்னீசியம் – பச்சையத்தின் (chlorophyll) மைய அணு (1); சல்பர் – மெத்தியோனின், சிஸ்டீன் போன்ற அமினோ அமிலங்களின் கூறு…

5.  
EO (HR&CE) 2022
ஒளி ஊடுருவக்கூடியதும் கடினத்தன்மையும் கொண்ட கனிமம்

Correct Answer: D [வைரம்]

விளக்கம்:

வைரம் கார்பனின் ஒரு புறவேற்றுமை வடிவம்; ஒளி ஊடுருவும் தன்மையும், இயற்கைப் பொருள்களில் மிக அதிகமான கடினத்தன்மையும் (மோஸ் அளவுகோலில் 10) கொண்டது. தங்கம், வெள்ளி, செம்பு ஒளிபுகா உலோகங்கள். இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தின் பன்னா பகுதி வைரத்துக்குப் பெயர் பெற்றது.

6.  
PSY 2022
ஆந்த்ரசைட் என்பது ஒரு ______ நிலக்கரி.

Correct Answer: A [உயர் தர]

விளக்கம்:

கார்பன் அளவின் அடிப்படையில் நிலக்கரி வகைகள் : ஆந்த்ரசைட் (80 – 95% கார்பன் – மிக உயர் தரம்) → பிட்டுமினஸ் (60 – 80%) → லிக்னைட் (40 – 55%, பழுப்பு நிலக்கரி) → பீட் (40%க்கும் குறைவு – மிகக் குறைந்த தரம்).

7.  
EO Gr. IV (HR&CE) 2022
இந்தியாவில் தாமிரத் தாது இருப்பு அதிகமுள்ள மாநிலம் எது?

Correct Answer: A [ராஜஸ்தான்]

விளக்கம்:

இந்திய சுரங்கப் பணியகத்தின் (IBM) கணக்கின்படி நாட்டின் தாமிரத் தாது வளத்தில் பெரும்பங்கு ராஜஸ்தானில் உள்ளது; ஜுன்ஜுனு மாவட்டத்தின் கேத்ரி – கோலிஹான் பகுதி முக்கியமானது. மத்தியப் பிரதேசத்தின் மலாஞ்ச்கண்ட், ஜார்க்கண்டின் சிங்பூம் பிற முக்கியப் பகுதிகள்.

8.  
CBT 2022
புவிவெப்ப ஆற்றல் உற்பத்தி செய்யப்படும் இடம்

Correct Answer: C [புகா பள்ளத்தாக்கு]

விளக்கம்:

லடாக்கின் புகா பள்ளத்தாக்கு இந்தியாவின் முக்கியப் புவிவெப்ப ஆற்றல் பகுதி; இங்கு புவிவெப்ப ஆற்றல் சோதனைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் மணிகரண் வெந்நீர் ஊற்றுப் பகுதியும் புவிவெப்ப ஆற்றலுக்குப் பெயர் பெற்றது.

9.  
CBT 2022
இந்தியாவில் பித்தளைப் பொருள்களுக்கு உலகப் புகழ்பெற்ற இடம்

Correct Answer: C [மொராதாபாத்]

விளக்கம்:

உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் பித்தளைக் கைவினைப் பொருள்களுக்கும் ஏற்றுமதிக்கும் உலகப் புகழ் பெற்றது; இதனால் "பித்தளை நகரம்" (Pital Nagari) என அழைக்கப்படுகிறது.

10.  
Junior Rehabilitation Officer 2022
கிராமங்கள், நகரங்களின் வணிகம் சாராத ஆற்றல் வளங்களில் இடம்பெறாதது எது?

Correct Answer: C [நீர் ஆற்றல் (நீர்மின்சாரம்)]

விளக்கம்:

விறகு, வேளாண் கழிவுகள், சாணம் போன்றவை பெரும்பாலும் சந்தையில் வாங்கப்படாமல் கிராமங்களில் நேரடியாகப் பயன்படுத்தப்படுவதால் வணிகம் சாராத (non-commercial) ஆற்றல் வளங்கள்.

11.  
Library Service 2023
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புவி வெப்பமயமாதலைத் தடுக்கக்கூடிய ஆற்றல் ஆதாரம் எது?

Correct Answer: D [புவிவெப்ப ஆற்றல்]

விளக்கம்:

பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவாயு ஆகிய புதைபடிவ எரிபொருள்கள் எரியும்போது கார்பன் டை ஆக்சைடு வெளியாகிப் புவி வெப்பமயமாதலை அதிகரிக்கின்றன. புவியின் உள்வெப்பத்திலிருந்து பெறப்படும் புவிவெப்ப ஆற்றல் புதுப்பிக்கத்தக்கது; பசுமை இல்ல வாயு வெளியேற்றம் மிகக் குறைவு.

12.  
AJ 2023
சோட்டா நாக்பூர் பீடபூமி இந்தியாவின் "தொழில்துறை இதயம்" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அது

Correct Answer: C [கனிமங்களும் ஆற்றல் எரிபொருள்களும் நிறைந்துள்ளது]

விளக்கம்:

சோட்டா நாக்பூர் பீடபூமி நிலக்கரி (ஜாரியா, பொகாரோ, ராணிகஞ்ச்), இரும்புத் தாது, மைக்கா, பாக்சைட், செம்பு, மாங்கனீசு போன்ற கனிமங்களால் நிறைந்துள்ளது.

13.  
AJ 2023
சரியான விடையைத் தேர்ந்தெடு : பின்வரும் இடங்களில் எந்த இடத்தில் அனல் மின் நிலையம் இல்லை?

Correct Answer: C [ராணிப்பேட்டை]

விளக்கம்:

தமிழ்நாட்டின் முக்கிய அனல் மின் நிலையங்கள் : தூத்துக்குடி, எண்ணூர், மேட்டூர், வடசென்னை, நெய்வேலி (பழுப்பு நிலக்கரி). ராணிப்பேட்டை தோல் பதனிடுதல், வேதித் தொழில்களுக்குப் பெயர் பெற்ற தொழில் நகரம்; அங்கு அனல் மின் நிலையம் இல்லை.

14.  
JSO 2023
இந்தியாவில் சத்தீஸ்கரும் அதன் பஸ்தர் பகுதியும் ______ உள்ள முக்கியப் புலங்களாகும்.

Correct Answer: A [இரும்புத் தாது]

விளக்கம்:

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் உள்ள தந்தேவாடா மாவட்டத்தின் பைலாடிலா மலைகள் உயர்தர ஹேமடைட் இரும்புத் தாதுவுக்குப் பெயர் பெற்றவை. இங்கிருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக இரும்புத் தாது ஏற்றுமதியாகிறது.

15.  
Combined Research Assistant 2023
மரபுசார்ந்த ஆற்றல் வளத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு

Correct Answer: D [நிலக்கரி ஆற்றல்]

விளக்கம்:

நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, (பெரிய) நீர்மின்சாரம் ஆகியவை நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படும் மரபுசார் (conventional) ஆற்றல் வளங்கள்.

16.  
Research Asst. (Animal Husbandry) 2023
மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டம் எந்தக் கனிமத்துக்குப் பெயர் பெற்றது?

Correct Answer: A [வைரம்]

விளக்கம்:

மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டம் இந்தியாவின் முக்கிய வைரச் சுரங்கப் பகுதி. இங்குள்ள மஜ்கவான் சுரங்கத்தைத் தேசியக் கனிம மேம்பாட்டுக் கழகம் (NMDC) இயக்குகிறது. பன்னா புலிகள் காப்பகமும் இம்மாவட்டத்தில் உள்ளது.

17.  
Combined Accountant (Treasury) 2024
ஹேமடைட் தாதுவின் நிறம் என்ன?

Correct Answer: D [சிவப்பு]

விளக்கம்:

ஹேமடைட் (Fe 2 O 3 ) சிவப்பு / செம்பழுப்பு நிறமுடைய இரும்பு ஆக்சைடு தாது ("இரத்தம்" எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெயர்); இந்தியாவின் மிக முக்கியமான தொழில்துறை இரும்புத் தாது. மேக்னடைட் கருப்பு நிறம்; லிமோனைட் மஞ்சள் – பழுப்பு நிறம்.

18.  
Group 2/2A 2024
பின்வருவனவற்றில் எவை சரியாக இணைக்கப்பட்டுள்ளன?
(i) ஹேமடைட் தாது – இரும்பின் ஆக்சைடு
(ii) மேக்னடைட் தாது – கருப்புத் தாது
(iii) லிமோனைட் – டோலமைட்
(iv) சிடரைட் – இரும்பு கார்பனேட்

Correct Answer: C [(i), (ii), (iv) மட்டும்]

விளக்கம்:

ஹேமடைட் – இரும்பு ஆக்சைடு (Fe 2 O 3 ); மேக்னடைட் – கருப்பு நிறக் காந்தத் தாது (Fe 3 O 4 ), இரும்புச் சத்து மிக அதிகம் (சுமார் 70%); சிடரைட் – இரும்பு கார்பனேட் (FeCO 3 ).

19.  
Asst. Public Prosecutor Gr. II 2025
தவறான விடையைக் கண்டறிக :
(1) CEEW – நீர், ஆற்றல், சுற்றுச்சூழலுக்கான குழு
(2) NRDC – தேசிய வள வளர்ச்சிக் குழு
(3) SCGJ – அரசுப் பணிகளுக்கான திறன் குழு
(4) MNRE – புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான அமைச்சகம்

Correct Answer: C [(2), (3) மட்டும் தவறு]

விளக்கம்:

CEEW – Council on Energy, Environment and Water (சரி); MNRE – Ministry of New and Renewable Energy (சரி).

20.  
CTS (ITI Posts) 2025
கனிம வளங்களை அவை கிடைக்கும் மாவட்டங்களுடன் பொருத்துக :
(a) புதைபடிவச் சுண்ணாம்புக்கல் – 1. நீலகிரி, பழனி மலைகள்
(b) மேக்னசைட் – 2. அரியலூர், பெரம்பலூர்
(c) கிராபைட் – 3. சேலம்
(d) பாக்சைட் – 4. சிவகங்கை

Correct Answer: C [2 3 4 1]

விளக்கம்:

தமிழ்நாட்டில் : புதைபடிவச் சுண்ணாம்புக்கல் – அரியலூர், பெரம்பலூர் (சிமெண்ட் தொழில்) (2); மேக்னசைட் – சேலம் (3); கிராபைட் – சிவகங்கை (4); பாக்சைட் – நீலகிரி, பழனி மலைகள் (சேர்வராயன் மலைகளிலும் உண்டு) (1). எனவே 2 3 4 1.

21.  
Asst. Public Prosecutor Gr. II 2026
பின்வருவனவற்றில் எவை சரியாக இணைக்கப்பட்டுள்ளன?
(1) OPEC – பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பு
(2) CNG – கலப்பு நைட்ரஜன் வாயு
(3) IREDA – இந்தியப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சி முகமை
(4) ONGC – எண்ணெய் மற்றும் நைட்ரஜன் வாயு நிறுவனம்

Correct Answer: A [(1), (3) சரி]

விளக்கம்:

OPEC – Organization of the Petroleum Exporting Countries (சரி); IREDA – Indian Renewable Energy Development Agency (சரி).

22.  
Group 2A Mains (Re-exam) 2026
தமிழ்நாட்டின் மாவட்டங்களில் 482 மில்லியன் டன் குறைந்த தர இரும்புத் தாது இருப்பைக் கொண்ட மாவட்டம் எது?

Correct Answer: A [சேலம்]

விளக்கம்:

தமிழ்நாட்டின் இரும்புத் தாது வளம் பெரும்பாலும் சேலம் மாவட்டத்தின் கஞ்சமலை, கோதுமலை பகுதிகளில் பட்டைக் காந்தத் தாதுவாக (banded magnetite) உள்ளது; இது குறைந்த தரத் தாது. விடைத் தேர்வுகளில் உள்ள பிற மாவட்டங்கள் இரும்புத் தாதுவுக்குப் பெயர் பெற்றவை அல்ல.

23.  
Group 2A Mains (Revoked) 2026
இரும்புத் தாது பரவல் பற்றிய தவறான கூற்றைக் கண்டுபிடி :
(i) சேலத்தில் உள்ள கஞ்சமலை, கோதுமலைகளில் இரும்புத் தாது பட்டைக் காந்தத் தாதுவாகக் கிடைக்கிறது.
(ii) திருவண்ணாமலையிலுள்ள கவுத்தி, வேடியப்பன் மலைகளில் பட்டைக் காந்தத் தாது ஹேமடைட், குவார்ட்சைட்டுடன் அமைந்துள்ளது.
(iii) TAMIN நிறுவனம் வெர்மிகுலைட்டைத் திருப்பூர் மாவட்டத்தில் வெட்டி எடுக்கிறது.

Correct Answer: D [(iii) மட்டும்]

விளக்கம்:

சேலத்தின் கஞ்சமலை, கோதுமலை (i), திருவண்ணாமலையின் கவுத்திமலை, வேடியப்பன்மலை (ii) ஆகியவை தமிழ்நாட்டின் இரும்புத் தாதுப் பகுதிகள்.

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் புவியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-geography-pyq

📘 TNPSC பொது அறிவு அலகு II — இந்தியாவின் புவியியல் (Geography of India) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு II இந்தியப் புவியியல் முழுவதும் · 14 அத்தியாயங்கள் · 340 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் (100 வினாக்கள்) · வரைபடங்கள், 14 மனவரைபடங்கள் · ஒவ்வோர் அத்தியாயத்திலும் தமிழ்நாடு பார்வை
புத்தகத்தைப் பெற – ₹299 ₹599 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0