இந்தியப் புவியியல் PYQ – வேளாண்மை
← திரும்பச் செல்ல
(i), (ii) சரியான வரையறைகள். (iii) தவறு – மலை, வனப் பகுதிப் பழங்குடியினர் பின்பற்றும் பழமையான முறை இடப்பெயர்வு வேளாண்மை. தீவிர வேளாண்மை என்பது மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில், சிறிய நிலத்தில் அதிக உழைப்பு, உரம், பாசனம் கொண்டு அதிக மகசூல் பெறும் முறை.
₹299 →
இந்தியப் புவியியல் PYQ – வேளாண்மை – 20 வினாக்கள், பாடம்: புவியியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
Group 1 2021
பின்வரும் விவசாய முறைகளில் எது சூழல் நட்பு?Correct Answer: A [கரிம வேளாண்மை]
விளக்கம்:
கரிம (இயற்கை) வேளாண்மையில் வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்குப் பதிலாகத் தொழு உரம், மண்புழு உரம், பசுந்தாள் உரம், உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு ஆகியவை பயன்படுகின்றன; மண்வளமும் சூழலும் காக்கப்படுகின்றன.
2.
Group 1 2022
'மண்வளத்தை மேம்படுத்துதல்', 'மழைநீர் சேகரிப்பைக் கட்டாயப்படுத்துதல்' – இக்கூற்றுகள் தொடர்புடையதுCorrect Answer: C [பசுமைமாறாப் புரட்சி]
விளக்கம்:
"பசுமைமாறாப் புரட்சி" (Evergreen Revolution) – சூழலுக்குத் தீங்கின்றி நீடித்து நிலைக்கும் உற்பத்திப் பெருக்கம்; இச்சொல்லை முன்வைத்தவர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன். மண்வளப் பாதுகாப்பு, நீர் சேமிப்பு இதன் அடிப்படைகள்.
3.
Group 1 2022
பின்வருவனவற்றில் எவை சரியாக இணைக்கப்பட்டுள்ளன?(i) KVK – கிசான் விஞ்ஞான் கேந்திரா
(ii) SMAE – வேளாண் விரிவாக்கத் துணை இயக்கம்
(iii) NSDA – தேசியத் திறன் மேம்பாட்டு முகமை
(iv) ATMA – வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை
Correct Answer: B [(ii), (iii), (iv)]
விளக்கம்:
KVK என்பது கிருஷி விஞ்ஞான் கேந்திரா (Krishi Vigyan Kendra – வேளாண் அறிவியல் நிலையம்); "கிசான்" அல்ல – எனவே (i) தவறு. SMAE, NSDA, ATMA விரிவாக்கங்கள் சரி.
4.
Reporter 2022
வேளாண் நடவடிக்கைகளுக்கு அதிக அளவில் நீர் தேவைப்படும் பயிர்Correct Answer: C [கரும்பு]
விளக்கம்:
கரும்பு சுமார் ஓராண்டு காலம் வயலில் நிற்கும் நீண்ட காலப் பயிர்; வெப்பமும் ஈரப்பதமும் உள்ள காலநிலையும் 75 – 100 செ.மீ. மழையும் தேவை; மழை குறைந்த பகுதிகளில் தொடர் பாசனம் தேவை. பார்லி, மக்காச்சோளம், கோதுமை ஆகியவை குறைந்த நீரில் விளையும் குறுகிய காலப் பயிர்கள்.
5.
Reporter 2022
கீழ்க்குறிப்பிட்டவற்றில் எது வேளாண் விலைக் கொள்கையின் முக்கிய நோக்கங்களில் இடம்பெறாதது?1. அதிக உற்பத்திக்குத் தொழில்நுட்பத்தை உயர்த்துவது
2. நிலப் பகிர்வுக்கு உதவுவது
3. கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தல்
4. பொதுப் பகிர்வு முறையை மேலாண்மை செய்தல்
Correct Answer: B [2 மட்டும்]
விளக்கம்:
வேளாண் விலைக் கொள்கை – குறைந்தபட்ச ஆதரவு விலை / கொள்முதல் விலை வழியே விவசாயிகளை உற்பத்தியை உயர்த்தவும் புதிய தொழில்நுட்பத்தைப் பின்பற்றவும் ஊக்குவிப்பது, இந்திய உணவுக் கழகம் வழியே கொள்முதல், பொதுப் பகிர்வு முறை வழியே நுகர்வோருக்கு நியாய விலையில் வழங்குவது.
6.
Group 3A 2023
வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை எது?Correct Answer: A [சர்க்கரை ஆலை]
விளக்கம்:
வேளாண் விளைபொருள்களை மூலப்பொருளாகக் கொள்ளும் தொழில்கள் வேளாண் சார்ந்த தொழில்கள் : சர்க்கரை (கரும்பு), பருத்தி நூற்பு, சணல், தாவர எண்ணெய். சிமெண்ட், எஃகு ஆகியவை கனிமம் சார்ந்த தொழில்கள்; சுரங்கம் முதன்மைத் தொழில்.
7.
Geology Service 2023 · Group 1 2024
'ஆப்பரேஷன் ஃப்ளட்' எனும் வார்த்தை தொடர்புடையதுCorrect Answer: B [வெண்மைப் புரட்சி]
விளக்கம்:
1970-இல் தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) தொடங்கிய "ஆப்பரேஷன் ஃப்ளட்" திட்டம் பால் உற்பத்தியைப் பெருக்கியது; இதுவே வெண்மைப் புரட்சி. இதன் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியன். இதன் விளைவாக இந்தியா உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடானது.
8.
Research Asst. (Animal Husbandry) 2023
ஏர் (கலப்பை) இல்லாத விவசாயத்தின் பழமையான வடிவம் எது?Correct Answer: A [மண்வெட்டி விவசாயம்]
விளக்கம்:
கலப்பையும் கால்நடைகளும் இன்றி, மண்வெட்டி, தோண்டுகோல் போன்ற எளிய கருவிகளால் நிலத்தைக் கிளறிப் பயிரிடும் பழமையான முறை மண்வெட்டி விவசாயம் (Hoe farming). உலர் விவசாயம் – குறைந்த மழைப் பகுதி வேளாண்மை; ஈர விவசாயம் – அதிக மழை / பாசனப் பகுதி வேளாண்மை.
9.
Mass Interviewer 2023
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR), காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனை இந்திய வேளாண்மைக்கு வழங்குவதற்காக ஆய்வு, தொழில்நுட்பச் செயல்விளக்கம் வாயிலாக மேற்கொள்ளும் தொடர் திட்டம்Correct Answer: C [NICRA]
விளக்கம்:
NICRA – National Innovations in Climate Resilient Agriculture (காலநிலை தாங்கும் வேளாண்மைக்கான தேசியப் புத்தாக்கங்கள்); ICAR 2011-இல் தொடங்கியது.
10.
Combined Engineering Service 2024
இந்தியாவின் வாழ்வாதாரம் வேளாண்மையை முன்னிட்டே உள்ளது; அத்தகைய வேளாண்மையின் இருப்பு அதிகமாகச் சார்ந்திருப்பதுCorrect Answer: A [தென்மேற்குப் பருவமழை]
விளக்கம்:
இந்தியாவின் ஆண்டு மழையில் பெரும்பகுதி (சுமார் 75%) ஜூன் – செப்டம்பர் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பெய்கிறது; காரீஃப் பயிர்களும் நீர்த்தேக்கங்களும் இதையே சார்ந்துள்ளன. (தமிழ்நாடு மட்டும் வடகிழக்குப் பருவமழையில் அதிக மழை பெறுகிறது.)
11.
Combined Engineering Service 2024
ICRISAT ________ உடன் தொடர்புடையது.Correct Answer: B [வறண்ட நில விவசாயம்]
விளக்கம்:
ICRISAT – International Crops Research Institute for the Semi-Arid Tropics (பன்னாட்டு அரை வறள் வெப்பமண்டலப் பயிர் ஆராய்ச்சி நிறுவனம்); தலைமையகம் ஹைதராபாத் அருகே பதான்செரு (தெலங்கானா).
12.
Combined Engineering Service 2024
"வேளாண்மையின் வணிகமயம்" என எதனால் அழைக்கப்படுகிறது?Correct Answer: C [சந்தையில் விற்பனை]
விளக்கம்:
குடும்பத் தேவைக்காக அல்லாமல், சந்தையில் விற்பனை செய்வதற்காகப் பயிரிடுவதே வேளாண்மையின் வணிகமயம். குடும்ப நுகர்வுக்காகப் பயிரிடுவது தன்னிறைவு (வாழ்வாதார) வேளாண்மை.
13.
Hostel Supdt. cum PT 2024
சிவப்புப் புரட்சியுடன் தொடர்புடையவை1. ஆப்பிள்
2. இறைச்சி
3. தக்காளி
4. இறால்
Correct Answer: C [2, 3 மட்டும்]
விளக்கம்:
சிவப்புப் புரட்சி – இறைச்சி, தக்காளி உற்பத்திப் பெருக்கம். ஆப்பிள், இறால் சிவப்புப் புரட்சியுடன் தொடர்புடையவை அல்ல; மீன் உற்பத்தி நீலப் புரட்சியுடன் தொடர்புடையது.
14.
Hostel Supdt. cum PT 2024
இந்தியாவின் முக்கிய வேளாண் புரட்சிகளை உற்பத்திகளுடன் பொருத்துக :(a) தங்க நூலிழைப் புரட்சி – 1. உரங்கள்
(b) வெள்ளி இழைப் புரட்சி – 2. மீன்கள் உற்பத்தி
(c) சாம்பல் புரட்சி – 3. சணல் உற்பத்தி
(d) நீலப் புரட்சி – 4. பருத்தி உற்பத்தி
Correct Answer: D [3 4 1 2]
விளக்கம்:
தங்க இழை – சணல் (3); வெள்ளி இழை – பருத்தி (4); சாம்பல் புரட்சி – உரங்கள் (1); நீலப் புரட்சி – மீன் (2). எனவே 3 4 1 2.
15.
Group 4 2024
இந்தியா 2018-ஆம் ஆண்டை எந்தப் பயிரின் தேசிய ஆண்டாகக் கடைப்பிடித்தது?Correct Answer: A [சிறுதானியங்கள் (தினை வகைகள்)]
விளக்கம்:
இந்திய அரசு 2018-ஐ "தேசியச் சிறுதானிய ஆண்டு" ஆக அறிவித்தது. இந்தியாவின் முன்மொழிவின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை 2023-ஐ "சர்வதேசச் சிறுதானிய ஆண்டு" ஆக அறிவித்தது. சிறுதானியங்கள் "ஸ்ரீ அன்னா" என்றும் அழைக்கப்படுகின்றன.
16.
CTS (ITI Posts) 2024
சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடு :(i) இந்தியாவில் கம்பு உற்பத்தியில் இராஜஸ்தான் முதன்மை மாநிலமாக உள்ளது.
(ii) சணல் பயிரிடுவதிலும் உற்பத்தியிலும் மேற்கு வங்காளம் முதலிடம் வகிக்கிறது.
(iii) இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
Correct Answer: C [(i), (ii) மட்டும்]
விளக்கம்:
(i) சரி – கம்பு (Bajra) உற்பத்தியில் ராஜஸ்தான் முதலிடம். (ii) சரி – சணல் பரப்பிலும் உற்பத்தியிலும் மேற்கு வங்கம் முதலிடம்.
17.
CTS (ITI Posts) 2024
பொருத்துக :(a) குமிழ்த்தண்டு – 1. மஞ்சள்
(b) தரையடிக் கிழங்கு (கார்ம்) – 2. உருளைக்கிழங்கு
(c) மட்டநிலத் தண்டு – 3. வெங்காயம்
(d) கிழங்கு – 4. சேப்பங்கிழங்கு
Correct Answer: A [3 4 1 2]
விளக்கம்:
தரைக்கீழ் மாற்றுருத் தண்டுகள் : குமிழ்த்தண்டு (Bulb) – வெங்காயம் (3); கார்ம் (Corm) – சேப்பங்கிழங்கு (Colocasia) (4); மட்டநிலத் தண்டு (Rhizome) – மஞ்சள், இஞ்சி (1); கிழங்கு (Tuber) – உருளைக்கிழங்கு (2). எனவே 3 4 1 2.
18.
Special Competitive Exam 2025
இந்தியாவில் உள்ள இடப்பெயர்வு வேளாண்மையின் பல்வேறு பெயர்களைச் சரியாகப் பொருத்துக :(a) ஜூம் – 1. அசாம்
(b) புனம் கிருஷி – 2. கேரளா
(c) போடு – 3. ஆந்திரப் பிரதேசம்
(d) பீவார் – 4. மத்தியப் பிரதேசம்
Correct Answer: A [1 2 3 4]
விளக்கம்:
ஜூம் (Jhumming) – அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் (1); பொனம் / புனம் – கேரளம் (2); போடு – ஆந்திரப் பிரதேசம், ஒடிசா (3); பீவார் (Bewar) – மத்தியப் பிரதேசம் (4). எனவே 1 2 3 4.
19.
Group 4 2025
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக (இடப்பெயர்வு வேளாண்மை – பகுதி) :(a) லடாங் – 1. மலேசியா
(b) மில்பா – 2. வியட்நாம்
(c) ரோக்கா – 3. பிரேசில்
(d) ரே – 4. மெக்சிகோ
Correct Answer: A [1 4 3 2]
விளக்கம்:
லடாங் – மலேசியா, இந்தோனேசியா (1); மில்பா – மெக்சிகோ, மத்திய அமெரிக்கா (4); ரோக்கா – பிரேசில் (3); ரே – வியட்நாம் (2). எனவே 1 4 3 2. இந்தியாவின் வடகிழக்கில் இது "ஜூம்" எனப்படுகிறது.
20.
CTS (ITI Posts – Level II) 2025
கீழ்க்காண்பவற்றுள் விவசாய முறைகள் பற்றிய சரியான கூற்றுகள் எவை?(i) தன்னிறைவு (வாழ்வாதார) விவசாயத்தில் விவசாயிகள் தங்கள் குடும்பங்களுக்குத் தேவையான வேளாண் பொருள்களை முதன்மையாக உற்பத்தி செய்து கொள்வர்.
(ii) வணிக விவசாயத்தில் விவசாயிகள் வேளாண் பொருள்களை முதன்மையாகப் பண்ணைக்கு வெளியே விற்பனை செய்வதற்காக உற்பத்தி செய்கின்றனர்.
(iii) தீவிர வேளாண்மை என்பது மலை, வனப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் பின்பற்றும் மிகவும் பழமையான விவசாய முறை.
Correct Answer: C [(i), (ii) மட்டும் சரி]
விளக்கம்:
(i), (ii) சரியான வரையறைகள். (iii) தவறு – மலை, வனப் பகுதிப் பழங்குடியினர் பின்பற்றும் பழமையான முறை இடப்பெயர்வு வேளாண்மை. தீவிர வேளாண்மை என்பது மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில், சிறிய நிலத்தில் அதிக உழைப்பு, உரம், பாசனம் கொண்டு அதிக மகசூல் பெறும் முறை.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் புவியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-geography-pyq
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் புவியியல் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் புவியியல் PYQ – பசுமை ஆற்றல்
› இந்தியப் புவியியல் PYQ – காலநிலை மாற்றம்
› இந்தியப் புவியியல் PYQ – சுற்றுச்சூழல் மாசுபாடு
› இந்தியப் புவியியல் PYQ – இயற்கைப் பேரிடர்களும் பேரிடர் மேலாண்மையும்
› இந்தியப் புவியியல் PYQ – பழங்குடியினர்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
