இந்திய வரலாறு PYQ – முகலாயப் பேரரசு – பகுதி 1 (வினா 1–32)
← திரும்பச் செல்ல
அக்பர் சமஸ்கிருத நூல்களைப் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப் பெரிய மொழிபெயர்ப்புத் துறையை அமைத்தார். பாகவத புராணத்தை மொழிபெயர்த்தவர் தோடர்மால் ; பதௌனி இராமாயணத்தை (மகாபாரதத்தின் ஒரு பகுதியையும்) மொழிபெயர்த்தார் – எனவே (ii) தவறு.
₹299 →
இந்திய வரலாறு PYQ – முகலாயப் பேரரசு – பகுதி 1 (வினா 1–32) – 32 வினாக்கள், பாடம்: வரலாறு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
ARGS – 2020
பின்வரும் நிகழ்வுகளில் அக்பரது ஆட்சியின் சரியான வரிசை எது?
I. மாளவ வெற்றி
II. யாத்ரிகர்களின் வரியை ஒழித்தல்
III. தீன்-இ-இலாஹியைப் பிரகடனப்படுத்துதல்
IV. பதேபூர் சிக்ரியில் இபாதத் கானாவை நிறுவுதல்
Correct Answer: A [I, II, IV, III]
விளக்கம்:
மாளவம் பாஜ்பகதூரிடமிருந்து 1561 – 62-இல் கைப்பற்றப்பட்டது; புனிதப் பயண வரி 1563-இல் நீக்கப்பட்டது; இபாதத் கானா 1575-இல் பதேபூர் சிக்ரியில் நிறுவப்பட்டது; தீன்-இ-இலாஹி (தௌஹித்-இ-இலாஹி) 1582-இல் அறிவிக்கப்பட்டது. எனவே சரியான வரிசை I, II, IV, III .
2.
CEGS – 2022 · ARGS – 2020
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி, தனது முதல் தொழிற்சாலையைச் சூரத்தில் எந்த முகலாயப் பேரரசருடைய அனுமதியின் பேரில் தொடங்கியது?
Correct Answer: B [ஜஹாங்கீர்]
விளக்கம்:
ஜஹாங்கீர் ஆட்சியில் ஆங்கிலக் கம்பெனி சூரத்தில் தன் முதல் வணிக நிறுவனத்தை (பண்டகசாலை) அமைத்தது – தமிழ்நாடு பாடநூலின்படி 1612; ஜஹாங்கீரின் அனுமதி ஆணை (ஃபார்மான்) 1613. அக்பர் காலத்தில் அனுமதி பெறப்படவில்லை; ஷாஜகான், ஹுமாயூன் பொருந்தார்.
3.
ADGS – 2021
பாபர் படையெடுப்புகளில் தவறான இணை எது?
- காபூல் படையெடுப்பு – 1504
- காந்தகார் படையெடுப்பு – 1522
- கான்வா போர் – 1528
- பானிப்பட் போர் – 1526
Correct Answer: D [1, 2, 4 சரியான இணைகள்; 3 மட்டும் தவறு]
விளக்கம்:
கான்வா போர் 1527-இல் (ராணா சங்காவுக்கு எதிராக) நடந்தது; 1528 அல்ல. 1528-இல் நடந்தது சந்தேரிப் போர் (மேதினி ராய்க்கு எதிராக). மற்ற மூன்றும் சரி.
4.
PTGS – 2021
"அயின்-இ-அக்பரி" என்ற நூலை எழுதியவர் யார்?
Correct Answer: C [அபுல் ஃபசல்]
விளக்கம்:
அபுல் ஃபசல் அக்பரின் வரலாற்றை அக்பர் நாமா வில் தொகுத்தார்; அதன் மூன்றாம் பகுதியான அயின்-இ-அக்பரி யில் முகலாய நிருவாகம், புள்ளிவிவரம், புவியியல், பண்பாடு பற்றி விவரித்தார்.
5.
CBT – 2022 · GROUP 1 – 2021
ஆலம்கீர் நாமாவை எழுதியது யார்?
Correct Answer: A [முன்ஷி மிர்சா முகமது காசிம்]
விளக்கம்:
ஔரங்கசீப்பின் முதல் பத்தாண்டு கால ஆட்சி பற்றிய ஆலம்கீர் நாமா வை எழுதியவர் மிர்சா முகமது காசிம் . காஃபி கான் முந்தகப்-உல்-லுபாப் எழுதினார்; பீம்சென் நுஸ்கா-இ-தில்குஷா எழுதினார்; தான்சேன் அக்பரின் அவை இசைக் கலைஞர் – நூலாசிரியர் அல்ல.
6.
GROUP 1 – 2021
கீழ்க்கண்டவற்றைக் காலவரிசைப்படுத்துக.
- ஹுமாயூனின் இறப்பு
- இரண்டாம் பானிப்பட் போர்
- பதேபூர் சிக்ரி கட்டப்படுதல்
- தீன் இலாஹி மதம் அறிவிப்பு
Correct Answer: B [1 – 2 – 3 – 4]
விளக்கம்:
ஹுமாயூன் ஜனவரி 1556-இல் இறந்தார்; அதே ஆண்டு நவம்பரில் இரண்டாம் பானிப்பட் போரில் அக்பர் ஹெமுவைத் தோற்கடித்தார். பதேபூர் சிக்ரி நகரம் 1570-களின் தொடக்கத்தில் கட்டப்பட்டது; தீன்-இ-இலாஹி 1582-இல் அறிவிக்கப்பட்டது.
7.
GROUP 1 – 2021
முகலாய அரசவையில் பிரிட்டிஷ் தூதுவராகப் பணியாற்றியவர் யார்?
Correct Answer: C [தாமஸ் ரோ]
விளக்கம்:
இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் அனுப்பிய முறையான தூதர் சர் தாமஸ் ரோ (1615 – 1619), ஜஹாங்கீர் அவையில் இருந்தார்.
8.
GROUP 1 – 2022
அக்பர் காலத்தில் இங்கிலாந்தை ஆட்சி செய்தவர்
Correct Answer: B [முதலாம் இராணி எலிசபெத்]
விளக்கம்:
அக்பர் 1556 – 1605 ; முதலாம் எலிசபெத் 1558 – 1603 – இருவரும் சமகாலத்தவர். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எலிசபெத் 1600-இல் பட்டயம் வழங்கினார்.
9.
GROUP 1 – 2022
கீழ்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
Correct Answer: D [முகமது கான் – குலாசத்-உத்-தவாரிக்]
விளக்கம்:
குலாசத்-உத்-தவாரிக் நூலை ஔரங்கசீப் காலத்தில் எழுதியவர் சுஜான் ராய் பண்டாரி ; முகமது கான் அல்ல. மற்ற மூன்றும் அக்பர் கால வரலாற்று நூல்கள்; அவற்றின் ஆசிரியர்கள் சரியாக இணைக்கப்பட்டுள்ளனர்.
10.
GROUP 1 – 2022
சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்யவும்.
- கிசர் கான் – ஒரிசா
- துர்காவதி – கோண்ட்வானா
- ராணா உதய்சிங் – மேவார்
- குன்வர் மான்சிங் – அஜ்மீர்
Correct Answer: B [2 மற்றும் 3 சரி]
விளக்கம்:
அக்பர் 1564-இல் கோண்ட்வானாவை ராணி துர்காவதி யிடமிருந்து கைப்பற்றினார்; மேவார் அரசர் ராணா உதய்சிங் சித்தூரை (1568) இழப்பதற்கு முன் கடுமையாகப் போரிட்டார். மான்சிங் ஆம்பர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் (ராஜா பகவன்தாஸின் மகன்); அஜ்மீர் அல்ல.
11.
EO – 2022
1764 பக்சார் போரில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியால் தோற்கடிக்கப்பட்ட முகலாய மன்னரின் பெயரைக் குறிப்பிடுக.
Correct Answer: C [இரண்டாம் ஷா ஆலம்]
விளக்கம்:
பக்சார் போரில் (1764) ஹெக்டர் மன்றோ தலைமையிலான கம்பெனிப் படை முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலம், வங்காள நவாப் மீர் காசிம், அவத் நவாப் ஷுஜா-உத்-தௌலா ஆகியோரின் கூட்டுப் படையைத் தோற்கடித்தது.
12.
CAGS – 2022
ஹுமாயூன் ஆட்சியின் போது, பீகாரை ஆண்டவர் யார்?
Correct Answer: D [ஷெர் கான்]
விளக்கம்:
ஹுமாயூன் காலத்தில் பீகார், உத்தரப் பிரதேசப் பகுதிகளில் ஷெர் கான் (பின்னர் ஷெர்ஷா) தலைமையில் ஆப்கானியர் வலிமை பெற்றனர். அவர் ஹுமாயூனை சௌசா (1539), கன்னோசி (1540) போர்களில் தோற்கடித்து சூர் வம்சத்தை நிறுவினார். பகதூர் ஷா குஜராத் அரசர்; பாஜ் பகதூர் மாளவ அரசர்.
13.
DPGS – 2022
பானிப்பட் போரில் பாபரின் இராணுவத்தில் இருந்த தலைசிறந்த பீரங்கி வீரர்
Correct Answer: A [உஸ்தாத் அலி]
விளக்கம்:
முதலாம் பானிப்பட் போரில் (1526) பாபரின் பீரங்கிப் படைக்கு உஸ்தாத் அலி (குலி), முஸ்தஃபா தலைமை தாங்கினர். திறமையான போர் வியூகமும் பீரங்கிப் படையை (Artillery) திறம்படப் பயன்படுத்தியதும் பாபரின் வெற்றிக்குக் காரணம். ஹுமாயூன், ஹிண்டால் இருவரும் பாபரின் மகன்கள்.
14.
DPGS – 2022
சிவந்த மணற்கற்களால் கட்டப்பட்ட 'லால் கிலா' எனப்படும் கோட்டையைக் கட்டியவர்
Correct Answer: B [ஷாஜகான்]
விளக்கம்:
தில்லியின் செங்கோட்டை (லால் கிலா) ஷாஜகான் தமது புதிய தலைநகரான ஷாஜகானாபாத்தில் (1639 – 1648) சிவப்பு மணற்கற்களால் கட்டியது. அதனுள் திவான்-இ-ஆம், திவான்-இ-காஸ் உள்ளன.
15.
PSY – 2022
தவறான இணை எது?
Correct Answer: A [ஷாஜகான் நாமா – ஷாஜகான்]
விளக்கம்:
ஷாஜகான் நாமாவை எழுதியவர் இனாயத் கான் ; ஷாஜகான் தாமே சுயசரிதை எழுதவில்லை. ஷாஜகான் பற்றிய பாதுஷா நாமா வை அப்துல் ஹமீது லகோரி எழுதினார். பாபர் (துசுக்-இ-பாபுரி), ஜஹாங்கீர் (துசுக்-இ-ஜஹாங்கீரி) ஆகிய இருவர் மட்டுமே சுயசரிதை எழுதிய முகலாயப் பேரரசர்கள்.
16.
EO GRADE IV (HR&CE) – 2022
இஸ்லாம், இந்து சமயம் உள்ளிட்ட பல்வேறு சமயங்களைச் சார்ந்த கூறுகள் தன் கல்லறையில் இடம்பெற வேண்டுமென வலியுறுத்தியவர்
Correct Answer: B [அக்பர்]
விளக்கம்:
சிக்கந்திராவில் (ஆக்ரா அருகே) உள்ள அக்பரின் கல்லறை யின் கட்டுமானத்தை அக்பரே தொடங்கினார்; ஜஹாங்கீர் 1613-இல் நிறைவு செய்தார்.
17.
CBT – 2022
போர்த்துக்கீசியப் பாதிரியாரால் ஐரோப்பிய ஓவியங்கள் எந்த முகலாய மன்னரின் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டன?
Correct Answer: B [அக்பர்]
விளக்கம்:
ஐரோப்பிய ஓவியங்கள் போர்த்துக்கீசியப் பாதிரிமார்களால் அக்பரின் அவையில் அறிமுகம் செய்யப்பட்டன. அக்பர் அவையின் முக்கிய ஓவியர்கள் தஷ்வந்த், பசவன் . ஹுமாயூனுடன் வந்த அப்துல் சமத், மீர் சையத் அலி இந்திய ஓவியர்களுக்கு ஊக்கமளித்தனர்.
18.
CBT – 2022
யாருடைய ஆட்சிக் காலத்தில் முதல் முறையாக ஃபிரோஸ் ஷாவினுடைய யமுனா கால்வாய் பழுதுபார்க்கப்பட்டது?
Correct Answer: B [அக்பர்]
விளக்கம்:
ஃபிரோஸ் ஷா துக்ளக் வெட்டிய மேற்கு யமுனா கால்வாய் பின்னர் தூர்ந்து போனது. அக்பர் காலத்தில் அது முதன்முறையாகச் சீரமைக்கப்பட்டது. பின்னர் ஷாஜகான் காலத்தில் அலி மர்தான் கான் அதை நீட்டித்துத் தில்லிக்கு (ஷாஜகானாபாத்) நீர் கொண்டுவந்தார்.
19.
VCGS – 2022
கீழ்க்கண்ட கூற்றுகளில் மெகருன்னிசாவைப் பற்றியதில் எது சரியான கூற்று?
- மெகருன்னிசாவின் தந்தை மிர்சா கியாஸ் பெக்; இவர் ஒரு ஆப்கானியர்
- மெகருன்னிசா 1577-இல் பிறந்தார்
- இவர் அலி குலி பெக் இஸ்தாஜ்லு என்பவரை மணந்தார்
- இவருக்கு நூர்ஜகான் என்ற பட்டம் முதலிலும் பின்பு நூர் மஹால் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டன
Correct Answer: B [2, 3 சரி; 1, 4 தவறு]
விளக்கம்:
மெகருன்னிசாவின் தந்தை மிர்சா கியாஸ் பெக் ஒரு பாரசீகர் (பின்னர் இதிமத்-உத்-தௌலா) – ஆப்கானியர் அல்ல; எனவே 1 தவறு. அவர் 1577-இல் பிறந்தார் ; முதலில் அலி குலி பெக் இஸ்தாஜ்லுவை (ஷெர் ஆப்கன்) மணந்தார் – 2, 3 சரி.
20.
REPORTER – 2022
அக்பரின் ஆசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட பாரசீக அறிஞரின் பெயர்
Correct Answer: A [அப்துல் லத்தீப்]
விளக்கம்:
பாரசீக அறிஞர் மீர் அப்துல் லத்தீப் அக்பருக்கு ஆசிரியராக இருந்தார்; அவரே அக்பருக்கு சுல்-இ-குல் (அனைவருக்கும் அமைதி) என்ற கொள்கையைப் போதித்தார். அப்துல் சமது ஹுமாயூனுடன் வந்த ஓவியர்; அப்துல் ரஹீம் பைராம் கானின் மகன் (கான்-இ-கானான்).
21.
VETERINARY ASSISTANT – 2023
ஷாஜகான் டெல்லியில் ஜும்மா மசூதியினைக் கட்டப் பயன்படுத்திய அடிப்படைக் கட்டுமானப் பொருள் எது?
Correct Answer: B [சிவப்பு மணற்கல்]
விளக்கம்:
தில்லி ஜும்மா மசூதி (1650 – 1656) சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்டு, வெள்ளைப் பளிங்குக் கல் லால் அழகூட்டப்பட்டது.
22.
VETERINARY ASSISTANT – 2023
பின்வரும் கூற்றுகளில் எது சரியான கூற்று / கூற்றுகள் என்பதை எடுத்து எழுதுக.
(i) அமீர் குஸ்ரு, அபுல் ஃபசல், ஜியாவுதீன் பரணி ஆகியோர் இடைக்காலப் பாரசீக வரலாற்று ஆசிரியர்கள்.
(ii) துக்ளக் நாமா, அக்பர் நாமா, தாரிக்-இ-ஃபிரோஸ் ஷாஹி ஆகிய நூல்கள் இவர்களால் முறையே எழுதப்பட்டவை ஆகும்.
Correct Answer: C [(i) மற்றும் (ii) சரி]
விளக்கம்:
மூவரும் பாரசீக மொழியில் வரலாற்று நூல்களைப் படைத்தவர்கள். அமீர் குஸ்ரு – துக்ளக் நாமா (கியாசுதீன் துக்ளக்கின் எழுச்சி பற்றியது); அபுல் ஃபசல் – அக்பர் நாமா ; ஜியாவுதீன் பரணி – தாரிக்-இ-ஃபிரோஸ் ஷாஹி . இணைகள் "முறையே" சரியாக உள்ளதால் இரண்டு கூற்றுகளும் சரி.
23.
BURSAR – 2023
தீன்-இலாஹியை ஏற்றுக்கொண்ட அக்பரின் அவையில் இருந்த ஒரே இந்து அரசவையினர்
Correct Answer: B [ராஜா பீர்பால்]
விளக்கம்:
அக்பரின் தீன்-இ-இலாஹி (தௌஹித்-இ-இலாஹி) நெறியை ஏற்ற ஒரே இந்து அவையினர் ராஜா பீர்பால் . ராஜா மான்சிங், தோடர்மால் போன்றோர் அதை ஏற்கவில்லை. இது புதிய மதம் அல்ல; சூஃபி மரபின் ஒரு வகைமுறை; அக்பர் அதன் பீர் (குரு) ; அக்பருக்குப் பின் அது மறைந்தது.
24.
HEALTH OFFICER – 2023
பின்வருவனவற்றில் தவறான பொருத்தத்தைக் குறிப்பிடுக (பேரரசர்கள் – பிரபுக்கள்).
Correct Answer: C [ஜஹாங்கீர் – சவாய் ஜெய் சிங்]
விளக்கம்:
சவாய் ஜெய் சிங் (ஆம்பர் / ஜெய்ப்பூர்) ஔரங்கசீப்பின் இறுதிக் காலம் முதல் முகமது ஷா காலம் வரை (பிற்கால முகலாயர்) இருந்தவர்; ஜெய்ப்பூர் நகரையும் ஜந்தர் மந்தர் வானியல் ஆய்வகங்களையும் அமைத்தவர். ஜஹாங்கீர் காலத்தவர் அல்ல. மற்ற இணைகள் சரி.
25.
CSSS – 2023
கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை தவறாகப் பொருந்தியுள்ளது?
Correct Answer: A [ஜாகிருதீன் பாபர் – உலகைக் கைப்பற்றியவர்]
விளக்கம்:
"உலகைக் கைப்பற்றியவர்" என்பது ஜஹாங்கீர் என்ற பெயரின் பொருள். பாபர் என்ற சொல்லுக்குப் "புலி" என்று பொருள்; ஜாகிருதீன் என்பதற்கு "சமயத்தின் காவலர்" என்று பொருள்.
26.
CSSS – 2023
______ முகலாயக் கட்டடக் கலையின் சிறப்புமிக்க வடிவமாகும்.
Correct Answer: D [தாஜ்மஹால்]
விளக்கம்:
ஷாஜகான் தம் மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக ஆக்ராவில் கட்டிய தாஜ்மஹால் முகலாயக் கட்டடக் கலையின் உச்சம்; அதன் தலைமைக் கட்டடக் கலைஞர் உஸ்தாத் அகமது லகோரி . கோல் கும்பாஸ் (பீஜப்பூர்) ஆதில் ஷாஹி சுல்தான் முகமது ஆதில் ஷாவின் கல்லறை – முகலாயக் கட்டடம் அல்ல.
27.
ROAD INSPECTOR – 2023
காம்ரான், அஸ்காரி, ஹிண்டால் யாருடைய சகோதரர்கள்?
Correct Answer: B [ஹுமாயூன்]
விளக்கம்:
காம்ரான், அஸ்காரி, ஹிண்டால் – மூவரும் பாபரின் மகன்கள், ஹுமாயூனின் சகோதரர்கள் .
28.
CESGS – 2023
'சூர்' வம்சத்தை நிறுவியவர்
Correct Answer: B [ஷெர் ஷா]
விளக்கம்:
ஷெர் ஷா (ஃபரீத்) ஹுமாயூனை சௌசா (1539), கன்னோசி (1540) போர்களில் தோற்கடித்து சூர் வம்ச ஆட்சியை (1540 – 1555) நிறுவினார். ரூபாய் நாணயம், சாலைகள் (கிராண்ட் டிரங்க் சாலை), சத்திரங்கள் அவரது சீர்திருத்தங்கள்.
29.
CESGS – 2023
அக்பரின் அவையில் இடம் பெற்றிருந்த ______ ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகன் எனப் பலராலும் அறியப்பட்டவர்.
Correct Answer: C [சூர்தாஸ்]
விளக்கம்:
கிருஷ்ண பக்திக் கவிஞர் சூர்தாஸ் "ஆக்ராவின் பார்வையற்ற பாடகர்" என அழைக்கப்படுகிறார்; சூர்சாகர் அவரது புகழ்பெற்ற நூல். துக்காராம் மகாராஷ்டிர பக்தி ஞானி; மீராபாய் ராஜஸ்தானின் கிருஷ்ண பக்தை; இராமானந்தர் கபீரின் குரு.
30.
JSO – 2023
கூற்று [A]: ராஜபுத்திரர்களின் தற்காலிக வீழ்ச்சி பாபர் இந்தியாவில் தனது ஆட்சியை நிலைநாட்ட உதவியது.
காரணம் [R]: கனுவாப் போர் ராஜபுத்திரர்களின் கூட்டமைப்பின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
Correct Answer: B [[A], [R] இரண்டும் சரி; [R], [A]-வுக்குச் சரியான விளக்கம்]
விளக்கம்:
பானிப்பட்டில் (1526) தில்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றிய பின்னும், பாபருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது மேவார் அரசர் ராணா சங்கா தலைமையிலான ராஜபுத்திரக் கூட்டமைப்பு .
31.
JSO – 2023
கூற்று [A]: அக்பர் தன் நாட்டு மக்களைத் தாராளவாதக் கொள்கையுடன் அணுகினார்.
காரணம் [R]: அக்பரது ஆசிரியர் அப்துல் லத்தீப் அக்பருக்கு சுல்-இ-குல் என்ற கொள்கையைப் போதித்தார்.
Correct Answer: B [[A], [R] இரண்டும் சரி; [R], [A]-வுக்குச் சரியான விளக்கம்]
விளக்கம்:
அக்பரின் ஆசிரியர் மீர் அப்துல் லத்தீப் , இளமையிலேயே அக்பருக்கு சுல்-இ-குல் (அனைவருக்கும் அமைதி) என்ற கொள்கையைக் கற்பித்தார்.
32.
GEOLOGY – 2023
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான கூற்று எது?
(i) ஹுமாயூன் நாமாவைத் தொகுத்தவர் குல்பதன் பேகம்
(ii) பதௌனி பாகவத புராணத்தைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார்
(iii) தோடர்மால் பாகவத புராணத்தைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார்
(iv) ஹாஜி இப்ராஹிம் சர்ஹிந்தி அதர்வ வேதத்தை மொழிபெயர்த்தார்
Correct Answer: B [(i), (iii), (iv) சரி; (ii) மட்டும் தவறு]
விளக்கம்:
அக்பர் சமஸ்கிருத நூல்களைப் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப் பெரிய மொழிபெயர்ப்புத் துறையை அமைத்தார். பாகவத புராணத்தை மொழிபெயர்த்தவர் தோடர்மால் ; பதௌனி இராமாயணத்தை (மகாபாரதத்தின் ஒரு பகுதியையும்) மொழிபெயர்த்தார் – எனவே (ii) தவறு.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய வரலாறு PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-history-pyq
📘 இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 426 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 137 அட்டவணைகள் & குறிப்புகள் · 20 அலகுகள் (25 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய வரலாறு PYQ – பல்வகை வரலாற்று வினாக்கள்
› இந்திய வரலாறு PYQ – மதச்சார்பற்ற நாடாக இந்தியா – சமூக நல்லிணக்கம்
› இந்திய வரலாறு PYQ – இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் – வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு
› இந்திய வரலாறு PYQ – இந்திய சமூக – பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்
› இந்திய வரலாறு PYQ – ஐரோப்பியர் வருகை
› இந்திய வரலாறு PYQ – பக்தி, சூஃபி இயக்கங்களும் சீக்கியமும்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
