இந்திய வரலாறு PYQ – மராத்தியர்கள்

← திரும்பச் செல்ல

இந்திய வரலாறு PYQ – மராத்தியர்கள் – 24 வினாக்கள், பாடம்: வரலாறு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
VAS AHGS – 2020
தென்னிந்தியாவில் மராட்டியர் காலத்தில் கிராமத்தினைப் பாதுகாப்பது யார் பொறுப்பு?

Correct Answer: D [பட்டீல்]

விளக்கம்:

மராத்திய ஆட்சியில் கிராமமே நிர்வாகத்தின் அடிப்படை அலகு. பட்டீல் (பட்டேல்) தலைமைக் கிராம அதிகாரி ; கிராமத்தின் வருவாய், ஒழுங்கு, பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர்; கிரிமினல் வழக்குகளையும் விசாரித்தார். அவரது பதவி மரபுவழியானது.

2.  
ADGS – 2021
'மாவல்' என்பதன் பொருள் என்ன?

Correct Answer: C [சூரியன் மறையும் பகுதி]

விளக்கம்:

மாவல் என்றால் "சூரியன் மறையும் நிலம்" (மேற்கு நிலம்) . இது பூனா மாவட்டத்தின் மேற்கே சஹ்யாத்ரி (மேற்குத் தொடர்ச்சி) மலையை ஒட்டிய மலைப்பகுதி. அங்கு வாழ்ந்த உழைக்கும் மலைவாழ் மக்கள் மாவலிகள் ; அவர்களே சிவாஜியின் படையின் முதுகெலும்பாக விளங்கினர்.

3.  
GROUP 4 – 2022
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக.

Correct Answer: C [சிவாஜியின் படை வீரர்கள் சூரத்தை 1665-ல் சூறையாடினர்]

விளக்கம்:

சிவாஜி சூரத்தை முதன்முதலில் 1664-இல் சூறையாடினார்; இரண்டாவது முறை 1670-இல் . 1665 என்பது புரந்தர் உடன்படிக்கை ஆண்டு. எனவே கூற்று (C) தவறு. சிவாஜியின் காப்பாளர் தாதாஜி கொண்டதேவ்; 1674 ஜூன் 6-இல் ராய்கர் கோட்டையில் முடிசூட்டி "சத்ரபதி" பட்டம் சூடினார் – இவை சரி.

4.  
CAGS – 2022
கூற்று (A): சவுத் மற்றும் சர்தேஷ்முகி வரிகள் மராத்திய அரசின் முக்கிய வருவாய் ஆதாரங்கள் ஆகும்.
காரணம் (R): 'சவுத்வரி' என்பது அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டி மொத்த நிலவருவாயில் 25% வசூலிக்கப்பட்டது. 'சர்தேஷ்முகி' வரி நிலவருவாயில் பத்தில் ஒரு பங்கு (1/10) வசூலிக்கப்பட்டது.

Correct Answer: B [(A), (R) இரண்டும் சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம்]

விளக்கம்:

அரசின் வருவாய் போதாத நிலையில் சிவாஜி அண்டைப் பகுதிகளான முகலாய மாகாணங்கள், பீஜப்பூர் பகுதிகளிடமிருந்து சௌத், சர்தேஷ்முகி என்ற இரு வரிகளை வசூலித்தார்.

5.  
PSY – 2022
1664-ஆம் ஆண்டு சிவாஜியால் தாக்கப்பட்டதும் மற்றும் சூறையாடப்பட்டதுமான மேற்குக் கடற்கரை துறைமுகம் எது?

Correct Answer: D [சூரத்]

விளக்கம்:

சூரத் முகலாயப் பேரரசின் செல்வம் மிகுந்த முக்கியத் துறைமுகம். சிவாஜி 1664-இல் சூரத்தைத் தாக்கிச் சூறையாடினார் ; 1670-இல் மீண்டும் கைப்பற்றினார்.

6.  
VCGS – 2022
கீழ்க்காணும் தளபதிகளில் மராத்திய அரசர் சிவாஜியால் கொல்லப்பட்டவர் யார்?

Correct Answer: A [அப்சல் கான்]

விளக்கம்:

பீஜப்பூர் சுல்தான் அனுப்பிய தளபதி அஃப்சல் கானை, சிவாஜி 1659-இல் பிரதாப்கர் அருகே சந்திப்பின்போது "புலிநகம்" (வாக்நக்) கொண்டு கொன்றார். முகலாயத் தளபதி ஷாயிஸ்தா கான் மீது சிவாஜி 1663-இல் பூனாவில் இரவுத் தாக்குதல் நடத்தினார்; அவர் விரல்களை இழந்து தப்பினார்.

7.  
JAILOR – 2022
பின்வரும் அரசுகளில், எந்த அரசு 'சௌத்' எனப்படும் வரியை விதித்தது?

Correct Answer: A [மராட்டியர்]

விளக்கம்:

சௌத் – மராத்தியர் அண்டைப் பகுதிகளிடமிருந்து வசூலித்த, வருவாயில் நான்கில் ஒரு பங்கு (25%) வரி. இதனுடன் கூடுதல் 10% சர்தேஷ்முகி வரியும் வசூலிக்கப்பட்டது. சிவாஜி தொடங்கிய இவ்வரிகளைப் பின்னர் பேஷ்வாக்களும் தொடர்ந்தனர்.

8.  
REPORTER – 2022
மராத்தியர் ஆட்சியில் நாட்டின் முக்கிய வருவாய் எதிலிருந்து பெறப்பட்டது?

Correct Answer: A [நிலம்]

விளக்கம்:

தமிழ்நாடு பாடநூலின்படி மராத்திய அரசில் " நில வருவாய்தான் முக்கிய வருவாயாக இருந்தது ". சிவாஜி நிலத்தை அளந்து, விளைச்சலில் 30% அரசின் பங்காக நிர்ணயித்தார்; பின்னர் அது 40% ஆக உயர்த்தப்பட்டது.

9.  
HEALTH OFFICER – 2023
தஞ்சாவூரின் முதல் மராட்டிய அரசன் யார்?

Correct Answer: B [வெங்கோஜி]

விளக்கம்:

ஷாஜிக்கு மற்றொரு மனைவி மூலம் பிறந்தவரும் சிவாஜியின் சகோதரருமான வெங்கோஜி (எக்கோஜி) 1676-இல் தஞ்சாவூரில் மராத்திய ஆட்சியைத் தொடங்கினார் .

10.  
CSSS – 2023
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்:

Correct Answer: B [பான்ஸ்லே – நாக்பூர்]

விளக்கம்:

மராத்தியக் கூட்டமைப்பில் போன்ஸ்லேக்கள் நாக்பூரை ஆண்டனர். ஹோல்கர் – இந்தூர்; சிந்தியா – குவாலியர்; கெய்க்வாட் – பரோடா; பேஷ்வா – பூனா. மராத்தியக் குடும்பம் தலைநகர் பேஷ்வா பூனா போன்ஸ்லே நாக்பூர் ஹோல்கர் இந்தூர் சிந்தியா குவாலியர் கெய்க்வாட் பரோடா

11.  
CESGS – 2023
சிவாஜியின் அஷ்டப்பிரதானத்தில் தலைமை நீதிபதி என அழைக்கப்பட்டவர்

Correct Answer: A [நியாயதீஷ்]

விளக்கம்:

சிவாஜியின் எட்டு அமைச்சர் குழு அஷ்டபிரதான் . அதில் நியாயதீஷ் – தலைமை நீதிபதி ; குடிமை, இராணுவ நீதிக்குப் பொறுப்பானவர். பண்டிட்ராவ் – சமயத் தலைவர்; சுமந்த் – வெளியுறவு; பந்த்பிரதான் (பேஷ்வா) – பிரதம அமைச்சர்.

12.  
ACF – 2023
சிவாஜியின் வாரிசுகளைச் சரியாகக் காலவரிசைப்படுத்துக.
(i) முதலாம் ஷாஹு
(ii) இரண்டாம் சிவாஜி
(iii) முதலாம் இராஜாராம்
(iv) சம்பாஜி
(v) இராம்ராஜா

Correct Answer: A [(iv), (iii), (ii), (i), (v)]

விளக்கம்:

சிவாஜிக்குப் (இ. 1680) பின் மூத்த மகன் சம்பாஜி ; 1689-இல் முகலாயர் அவரைக் கொன்றபின் இளவல் இராஜாராம் (செஞ்சியிலிருந்து போர்); 1700-இல் இராஜாராம் இறந்தபின் அவரது மனைவி தாராபாய் தம் கைக்குழந்தை இரண்டாம் சிவாஜி பெயரில் ஆட்சி நடத்தினார்; ஔரங்கசீப் மறைவுக்குப்…

13.  
HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINER – 2024
பேசின் ஒப்பந்தம், இரண்டாம் பேஷ்வா பாஜிராவுக்கும் ________ க்கும் இடையே கையெழுத்தானது.

Correct Answer: B [வெல்லெஸ்லி]

விளக்கம்:

பேசின் உடன்படிக்கை (1802 டிசம்பர் 31) – பேஷ்வா இரண்டாம் பாஜிராவுக்கும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடையே கையெழுத்தானது. அப்போதைய தலைமை ஆளுநர் வெல்லெஸ்லி பிரபு தமது துணைப்படைத் திட்டத்தைப் பேஷ்வா மீது திணித்தார்.

14.  
COMBINED ACCOUNTANT – TREASURY DEPT – 2024
சிவாஜி யாரிடமிருந்து சிங்ககாட் கோட்டையைக் கைப்பற்றினார்? [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: 1670-இல் சிவாஜி யாரிடமிருந்து சிங்ககாட் கோட்டையைக் கைப்பற்றினார்?]

Correct Answer: B [முகலாயர்கள்]

விளக்கம்:

புரந்தர் உடன்படிக்கையின் (1665) படி சிவாஜி தம் கோட்டைகளில் பலவற்றை, கொண்டானா (சிங்ககாட்) உட்பட, முகலாயரிடம் ஒப்படைத்தார். 1670-இல் சிவாஜியின் தளபதி தானாஜி மாலுசரே முகலாயரிடமிருந்து இக்கோட்டையை மீட்டார்; அப்போரில் தானாஜி வீரமரணம் அடைந்தார்.

15.  
GROUP 4 – 2024
பின்வருவனவற்றை அவற்றின் சரியான பதிலுடன் பொருத்தவும்:
(a) பேஷ்வா – 1. செயலர்
(b) சுர்நாவிஸ் – 2. தலைமை நீதிபதி
(c) நியாயதீஸ் – 3. தலைமை அர்ச்சகர்
(d) பண்டிட் ராவ் – 4. பிரதம அமைச்சர்

Correct Answer: B [4 1 2 3]

விளக்கம்:

அஷ்டபிரதானில் பேஷ்வா – பிரதம அமைச்சர் (4) ; சுருநாவிஸ் (சச்சிவ்) – செயலர் (1) , அரசரின் கடிதப் போக்குவரத்தைக் கவனித்தவர்; நியாயதீஷ் – தலைமை நீதிபதி (2) ; பண்டிட்ராவ் – சமயத் தலைவர் (3) . எனவே 4 1 2 3.

16.  
GROUP 1 – 2024
மராட்டிய பேரரசின் இரண்டாவது நிறுவனர்

Correct Answer: C [பாலாஜி விஸ்வநாத்]

விளக்கம்:

உள்நாட்டுப் போரால் சிக்கலில் இருந்த மராத்திய அரசை ஷாஹுவுக்கு உதவி மீண்டும் ஒழுங்குபடுத்தியவர் பாலாஜி விஸ்வநாத் (பேஷ்வா 1713 – 1720).

17.  
COMBINED TECHNICAL (IV POST) – 2024
இந்திய கொரிலா போர்முறையின் "தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?

Correct Answer: A [சிவாஜி]

விளக்கம்:

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அமைப்பைப் பயன்படுத்தி, எதிரியை எதிர்பாராத நேரத்தில் தாக்கி மறையும் கொரில்லாப் போர்முறையை (கனிமி காவா) சிவாஜி சிறப்பாகக் கையாண்டார்; எனவே "இந்தியக் கொரில்லாப் போர்முறையின் தந்தை" எனப்படுகிறார்.

18.  
COMBINED TECHNICAL (NON IV POST) – 2024
எந்த ஆண்டில் சிவாஜி 'சத்ரபதி' என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டார்?

Correct Answer: B [கி.பி. 1674]

விளக்கம்:

1674 ஜூன் 6-இல் ராய்கர் கோட்டையில் வேத முறைப்படி முடிசூட்டிக்கொண்ட சிவாஜி "சத்ரபதி" (பேரரசர்) என்ற பட்டத்தைச் சூடினார். 1676 இறுதியில் தெற்கே (கர்நாடகம்) புறப்பட்டு, செஞ்சியை 1677-இலும் வேலூரை 1678-இலும் கைப்பற்றினார்.

19.  
COMBINED TECHNICAL SERVICES (ITI POST) – 2024
மராத்திய சிவாஜி காலத்தில் நடந்த சரியான கூற்றினைத் தேர்ந்தெடு.

Correct Answer: C [சிவாஜியின் வருவாய் நிர்வாகம், நியாயமானதாக உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாக அமைந்திருந்தது]

விளக்கம்:

பாடநூல்: " சிவாஜியின் வருவாய் நிர்வாகம் நியாயமானதாக, உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாக அமைந்திருந்தது " – (C) சரி.

20.  
GROUP 1B & 1C – 2024
சிவாஜியின் குருவான ராம் தாஸ் சாம்ராத் போதனையின் தத்துவம்

Correct Answer: A [அத்வைத வேதாந்தம்]

விளக்கம்:

மகாராஷ்டிரத் துறவி சமர்த்த ராமதாசர் இராமபக்தியைப் பரப்பினார்; அவர் கூறிய பக்தி அத்வைத வேதாந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அவரது முக்கிய நூல் தாசபோதம் . தமிழ்நாட்டுப் பாடநூலின்படி சிவாஜி அவரைத் தம் குருவாக ஏற்று மரியாதை செலுத்தினார்.

21.  
SPECIAL COMPETITIVE – 2025
சரியான இணையைத் தேர்வு செய்க.
  1. முக்கிய பிரதான் – பிரதம மந்திரி
  1. சுமந்த் – தலைமை படைத் தளபதி
  1. நியாயதீஷ் – தலைமை நீதிபதி
  1. சாரி நௌபத் – வெளியுறவு செயலாளர்

Correct Answer: A [1 மற்றும் 3 சரி]

விளக்கம்:

முக்கிய பிரதான் (பேஷ்வா) – பிரதம அமைச்சர் , நியாயதீஷ் – தலைமை நீதிபதி – சரி. சுமந்த் வெளியுறவுச் செயலர் ; சாரிநௌபத் தலைமைத் தளபதி – 2, 4 ஆகியவற்றில் இவை இடம் மாறியுள்ளன. (B), (C) இரண்டிலும் தவறான இணை 2 உள்ளது; (D)-இல் தவறான இணை 4 உள்ளது.

22.  
GROUP 1 & 1A – 2025
பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) பேஷ்வா – 1. அயல்நாட்டு செயலர்
(b) அமாத்யா – 2. முதலமைச்சர்
(c) சச்சிவ் – 3. நிதியமைச்சர்
(d) சுமந்த் – 4. கண்காணிப்பாளர்

Correct Answer: C [2 3 4 1]

விளக்கம்:

பேஷ்வா – முதலமைச்சர் / பிரதம அமைச்சர் (2) ; அமாத்யா – நிதி அமைச்சர் (3) , அரசின் அனைத்துப் பொதுக் கணக்குகளையும் ஆராய்ந்து ஒப்புதல் அளித்தவர்; சச்சிவ் – கண்காணிப்பாளர் (4) , அரசரின் கடிதப் போக்குவரத்தையும் பர்கானாக் கணக்குகளையும் மேற்பார்வையிட்டவர்; சுமந்த் –…

23.  
GROUP 1 & 1A – 2025
சிவாஜி சுதந்திர அரசராக முடிசூட்டப்பட்ட இடம்

Correct Answer: A [ராய்காட்]

விளக்கம்:

சிவாஜி 1674 ஜூன் 6-இல் ராய்கர் (ராய்காட்) கோட்டையில் முடிசூட்டிக்கொண்டு "சத்ரபதி" ஆனார்; ராய்கரே அவரது தலைநகர். சூரத் – அவர் சூறையாடிய முகலாயத் துறைமுகம்; பூனா – அவரது இளமைக் காலப் பகுதி, பின்னாளில் பேஷ்வாக்களின் தலைநகர்.

24.  
GROUP 2 & 2A MAINS – 2025
பேசின் உடன்படிக்கை (1802) தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
(i) பேசின் உடன்படிக்கை பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் மற்றும் ஆங்கிலேயருக்கு இடையில் கையெழுத்தானது.
(ii) பேஷ்வா 26 லட்சம் ரூபாய் வருமானம் தரும் பிரதேசங்களைக் கம்பெனிக்கு நிரந்தரமாக விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டார்.
(iii) பேஷ்வா சூரத் நகரைக் கம்பெனியிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டார்.

Correct Answer: D [(i), (ii) மற்றும் (iii)]

விளக்கம்:

பேசின் உடன்படிக்கை (1802) பேஷ்வா இரண்டாம் பாஜிராவுக்கும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடையே கையெழுத்தானது.

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய வரலாறு PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-history-pyq

📘 இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 426 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 137 அட்டவணைகள் & குறிப்புகள் · 20 அலகுகள் (25 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய வரலாறு PYQ – பல்வகை வரலாற்று வினாக்கள் › இந்திய வரலாறு PYQ – மதச்சார்பற்ற நாடாக இந்தியா – சமூக நல்லிணக்கம் › இந்திய வரலாறு PYQ – இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் – வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு › இந்திய வரலாறு PYQ – இந்திய சமூக – பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும் › இந்திய வரலாறு PYQ – ஐரோப்பியர் வருகை › இந்திய வரலாறு PYQ – பக்தி, சூஃபி இயக்கங்களும் சீக்கியமும்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0