இந்திய வரலாறு PYQ – விஜயநகர, பாமினி அரசுகள் – பகுதி 1 (வினா 1–26)
← திரும்பச் செல்ல
இத்தாலியப் பயணி நிக்கோலோ டி காண்டி (சுமார் 1420) விஜயநகரத்தைப் பற்றி " நகரத்தின் சுற்றளவு அறுபது மைல் ; அதன் சுவர்கள் மலைகள் வரை நீண்டுள்ளன" என்று குறிப்பிட்டார். அப்துர் ரசாக் ஏழு அரண் சுவர்களைக் குறிப்பிட்டார்; பயஸ் கிருஷ்ணதேவராயர் கால நகரை வர்ணித்தார்.
₹299 →
இந்திய வரலாறு PYQ – விஜயநகர, பாமினி அரசுகள் – பகுதி 1 (வினா 1–26) – 26 வினாக்கள், பாடம்: வரலாறு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
GSASO – 2020
'அமுக்தமால்யதா' என்ற நூலை எழுதியவர் யார்?
Correct Answer: A [கிருஷ்ணதேவராயர்]
விளக்கம்:
அமுக்தமால்யதா என்ற தெலுங்கு நூலை எழுதியவர் கிருஷ்ணதேவராயர் (துளுவ மரபு). இது பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் கோதை (ஆண்டாள்) கதையோடு தொடர்புடையது. ஹரிஹரர், புக்கர் சங்கம மரபைத் தோற்றுவித்த சகோதரர்கள்; இராமதேவன் தேவகிரி யாதவ அரசர்.
2.
VAS AHGS – 2020
மூக்கறுப்புப் போர் யாருடைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது?
Correct Answer: B [திருமலை நாயக்கர்]
விளக்கம்:
மூக்கறுப்புப் போர் மதுரை நாயக்கர் திருமலை நாயக்கரின் ஆட்சியின் இறுதிக் காலத்தில் மைசூர் படைகளுக்கும் மதுரைப் படைகளுக்கும் இடையே நடந்தது. இரு தரப்பினரும் பிடிபட்ட எதிரி வீரர்களின் மூக்கை அறுத்ததால் இப்பெயர் பெற்றது.
3.
ADGS – 2021
கோவாவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றிய போது விஜயநகர அரசராக இருந்தவர் யார்?
Correct Answer: C [கிருஷ்ண தேவராயர்]
விளக்கம்:
போர்த்துகீசிய ஆளுநர் அல்போன்சோ டி அல்புகர்க் 1510 -இல் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றினார். அப்போது விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் (1509 – 1529) .
4.
PTGS – 2021
விஜயநகரப் பேரரசுக்கு விஜயம் செய்த நிக்கோலோ காண்டி என்பவர் ஒரு
Correct Answer: A [இத்தாலியப் பயணி]
விளக்கம்:
நிக்கோலோ டி காண்டி இத்தாலிய (வெனிஸ்) வணிகர்; முதலாம் தேவராயர் காலத்தில் (சுமார் 1420) விஜயநகரத்துக்கு வந்தார்.
5.
AGGS – 2021
விஜயநகர அரசர்களின் நாணயங்களில் செப்பு நாணயம் எது?
Correct Answer: B [ஜிட்டல்]
விளக்கம்:
விஜயநகர நாணயங்களில் ஜிட்டல் செப்பு நாணயம். வராகன் (பகோடா) தங்க நாணயம்; இதுவே பொன் (தமிழ்), ஹொன்னு (கன்னடம்) எனப்பட்டது. தாரா வெள்ளி நாணயம். நாணயம் உலோகம் வராகன் / பகோடா தங்கம் தாரா வெள்ளி ஜிட்டல் செம்பு
6.
GROUP 1 – 2021
விஜயநகர ஆட்சியின் கீழ் இளவரசரின் முடிசூட்டல் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Correct Answer: D [யுவராஜ பட்டாபிஷேகம்]
விளக்கம்:
விஜயநகர ஆட்சியில் அரசுரிமை பரம்பரையாக வந்தது. அரசருக்குப் பின் ஆட்சிக்கு வர வேண்டிய இளவரசருக்கு (யுவராஜா) நடத்தப்பட்ட முடிசூட்டல் யுவராஜ பட்டாபிஷேகம் எனப்பட்டது.
7.
GROUP 1 – 2022
மெடோஸ் டெய்லர் ______ இன் மரணம் பாமினி ஆட்சியின் 'முடிவின் ஆரம்பம்' என்று கருதினார்.
Correct Answer: A [மஹ்மூத் கவான்]
விளக்கம்:
மூன்றாம் முகமது ஷாவின் பிரதம அமைச்சர் மஹ்மூத் கவான் 1481 -இல் போலிக் கடிதக் குற்றச்சாட்டின் பேரில் கொல்லப்பட்டார். அதன் பின் தக்காணிகள் – வெளிநாட்டவர் (அஃபாகிகள்) மோதல் வலுத்து, பாமினி அரசு ஐந்து சுல்தானியங்களாகச் சிதறியது.
8.
CAGS – 2022
1474-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த இரஷ்யப் பயணியின் பெயர்.
Correct Answer: D [நிகிதின்]
விளக்கம்:
அஃபனாசி நிகிதின் இரஷ்ய வணிகர்; மூன்றாம் முகமது ஷா காலத்தில் பாமினி அரசுக்கு வந்து (பாடநூல்: 1470 – 74) மக்களின் வறுமை, பிரபுக்களின் ஆடம்பர வாழ்வு பற்றி எழுதினார்.
9.
CAGS – 2022
விஜயநகர அரசில் கீழ்க்கண்ட எந்த வரி தொழிற்சாலை வரி [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: தொழில் வரி] என அழைக்கப்படுகின்றது?
- அட்டகாடா சங்கம், மாஸ்தி
- பாடிக் காவல்
- சந்தை முதல்
- தறிக் கடமை மற்றும் செக்குக் கடமை
Correct Answer: D [4 மட்டும்]
விளக்கம்:
"கடமை" என்பது வரி. தறிக் கடமை – நெசவுத் தறிகள் மீதான வரி; செக்குக் கடமை – எண்ணெய்ச் செக்குகள் மீதான வரி. இவை கைத்தொழில்கள் மீது விதிக்கப்பட்டதால் தொழில் வரிகள் ஆகும். பாடிக் காவல் – ஊர்க் காவலுக்கான (காவல்) வரி; சந்தை முதல் – சந்தை வணிகம் தொடர்பான வரி.
10.
DPGS – 2022
விஜய நகரம் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டது?
- பீஜநகர்
- விருபாட்சபுரம்
- ஹோஸ்பட்டணம்
- வித்யாநகரம்
Correct Answer: D [1, 2, 3, 4]
விளக்கம்:
துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில் அமைந்த விஜயநகரம் (இன்றைய ஹம்பி ) பல பெயர்களால் அழைக்கப்பட்டது – பீஜநகர் (வெளிநாட்டவர், சுல்தானிய வரலாற்றாசிரியர் வழக்கு), விருபாட்சபுரம் (விருபாட்சர் கோயிலை ஒட்டி), ஹொசபட்டணம் ("புதிய நகரம்"; வினாவில் 'ஹோஸ்பட்டணம்'),…
11.
DPGS – 2022
மஹ்மூத் கவான் எந்தக் குற்றத்துக்காகக் கொல்லப்பட்டார்?
Correct Answer: C [போலியான தேசத்துரோகக் குற்றச்சாட்டு]
விளக்கம்:
கவானின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட தக்காணப் பிரபுக்கள், அவர் சுல்தானுக்கு எதிராகச் சதி செய்வதாக ஒரு போலிக் கடிதத்தைத் தயாரித்துச் சுல்தானின் கையில் கிடைக்கச் செய்தனர்.
12.
CEGS – 2022
பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையினை அட்டவணை-I உடன் அட்டவணை-II-ஐப் பொருத்துக.
அட்டவணை I (பயணிகள்) – அட்டவணை II (விசயநகர ஆட்சியாளர்கள்)
(a) நிக்கோலோ-டி-காண்டி – 1. கிருஷ்ணதேவராயர்
(b) டோமிங்கோ பயஸ் – 2. தேவராயர் II
(c) பெர்னோ நூனிஸ் – 3. தேவராயர் I
(d) அப்துல் ரசாக் – 4. அச்சுதராயர்
Correct Answer: A [3 1 4 2]
விளக்கம்:
காண்டி – முதலாம் தேவராயர் (சுமார் 1420); பயஸ் – கிருஷ்ணதேவராயர் ; நூனிஸ் – அச்சுததேவராயர் (சுமார் 1535 – 37); அப்துர் ரசாக் – இரண்டாம் தேவராயர் (1443). எனவே குறியீடு 3 1 4 2 .
13.
PSY – 2022
ஜாம்பவதி கல்யாணம் என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது?
Correct Answer: D [சமஸ்கிருதம்]
விளக்கம்:
ஜாம்பவதி கல்யாணம் கிருஷ்ணதேவராயர் வடமொழியில் (சமஸ்கிருதம்) எழுதிய நாடக நூல். அவரது மற்றொரு வடமொழி நூல் உஷா பரிணயம் ; தெலுங்கில் அவர் எழுதியது அமுக்தமால்யதா .
14.
PSY – 2022
பாமினி அரசில் குல்பர்காவில் இருந்து பீடாருக்குத் தலைநகரை மாற்றியவர் யார்?
Correct Answer: A [முதலாம் அகமது ஷா]
விளக்கம்:
முதலாம் அகமது ஷா (அகமது ஷா வலி) பாமினித் தலைநகரைக் குல்பர்காவிலிருந்து பீடாருக்கு மாற்றினார்.
15.
EO GRADE III (HR&CE) – 2022
இந்தியாவில், நிக்கோலோ காண்டி மற்றும் அப்துர் ரசாக் ______ ஆட்சியின் போது வருகைபுரிந்தனர்
Correct Answer: C [விஜயநகர் அரசர்கள்]
விளக்கம்:
இத்தாலியர் நிக்கோலோ டி காண்டி (முதலாம் தேவராயர் காலம்), பாரசீகர் அப்துர் ரசாக் (இரண்டாம் தேவராயர் காலம், 1443) இருவரும் விஜயநகர (சங்கம மரபு) ஆட்சிக் காலத்தில் வந்தனர். பாமினி அரசுக்கு வந்த பயணி இரஷ்யர் அஃபனாசி நிகிதின்.
16.
FA – 2022
விஜயநகரப் பேரரசில் கொண்டாடப்படும் முக்கிய விழா
Correct Answer: B [மகாநவமி]
விளக்கம்:
மகாநவமி விஜயநகரப் பேரரசின் புகழ்பெற்ற அரசு விழா. ஒன்பது நாள் நடைபெற்ற இவ்விழாவின்போது நாயக்கர்களும் சிற்றரசர்களும் தலைநகரில் கூடி அரசருக்குத் திறை செலுத்தினர். ஹம்பியில் உள்ள மகாநவமி மேடை (மகாநவமி திப்பா) இவ்விழாவுடன் தொடர்புடையது.
17.
JAILOR – 2022
சங்கம வம்சத்தின் கடைசி மன்னர் ______.
Correct Answer: C [இரண்டாம் விருபாக்ஷர்]
விளக்கம்:
சங்கம மரபின் கடைசி அரசர் இரண்டாம் விருபாக்ஷராயர் (1465 – 1485) . அவரது திறமையற்ற ஆட்சியில் பேரரசு சீர்குலைய, சாளுவ நரசிம்மர் ஆட்சியைக் கைப்பற்றி சாளுவ மரபைத் தொடங்கினார் (முதல் "அபகரிப்பு"). மல்லிகார்ஜுனராயர் இரண்டாம் தேவராயருக்குப் பின் வந்தவர்.
18.
JAILOR – 2022
தௌலதாபாத்திற்கு அருகில் வானியல் ஆய்வுக்கூடம் கட்டியவர் யார்?
Correct Answer: D [பெரோஸ் ஷா பாமினி]
விளக்கம்:
பாமினி சுல்தான் தாஜுதீன் பெரோஸ் ஷா (1397 – 1422) தௌலதாபாத் அருகே வானியல் ஆய்வுக்கூடம் அமைத்தார். அவர் பல மொழிகள் அறிந்த கல்வியாளர்; பீமா ஆற்றங்கரையில் பெரோஸாபாத் நகரை நிறுவினார்.
19.
JAILOR – 2022
விஜயநகரப் பேரரசுக்கு மிகப்பெரிய தோல்வியைக் கொடுத்ததும், தலைநகர் விஜயநகரத்தில் இருந்து பெனுகொண்டாவிற்கு மாற வழிவகுத்ததுமான போர் ______
Correct Answer: A [தலைக்கோட்டை போர்]
விளக்கம்:
23 ஜனவரி 1565 -இல் நடந்த தலைக்கோட்டைப் போரில் (ராக்சஷி–தங்கடி போர்) தக்காணச் சுல்தான்களின் கூட்டணி அலிய ராமராயரைத் தோற்கடித்துக் கொன்றது; விஜயநகரம் சூறையாடப்பட்டது.
20.
JUNIOR REHABILITATION OFFICER – 2023
"கண்டாசாரா" என்றழைக்கப்படும் ஒழுங்கான இராணுவத்துறையினைக் கொண்டிருந்த அரசர்கள்
Correct Answer: A [விஜயநகர ஆட்சியாளர்கள்]
விளக்கம்:
விஜயநகர அரசில் இராணுவத் துறை கண்டாசாரா எனப்பட்டது. அதன் தலைவர் தண்டநாயகர் அல்லது சேனாதிபதி. காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, பீரங்கிப் படை ஆகியவை இருந்தன.
21.
FISHERY DEPT INSPECTOR – 2023
பாமினி சுல்தானகத்தில் 'தரஃப்தார்' என்பது
Correct Answer: A [மாகாண ஆளுநர்கள்]
விளக்கம்:
பாமன் ஷா தம் அரசை நான்கு மாகாணங்களாகப் பிரித்தார்; அவை தரஃப்கள் எனப்பட்டன. ஒவ்வொரு தரஃபுக்கும் நியமிக்கப்பட்ட ஆளுநர் தரஃப்தார் ; அவரே அப்பகுதியின் நிருவாகம், வரிவசூல், படை ஆகியவற்றுக்குப் பொறுப்பு. நான்கு தரஃப்கள் (மாகாணங்கள்) குல்பர்கா தௌலதாபாத் பீடார் பெரார்
22.
FISHERY DEPT INSPECTOR – 2023
கொடுக்கப்பட்ட அட்டவணை I மற்றும் அட்டவணை II பொருத்தி கீழே கொடுக்கப்பட்ட குறியீடுகளில் (code) ல் பொருத்துக
அட்டவணை I (அரசு) – அட்டவணை II (தலைநகரம்)
(a) நிஜாம் ஷாஹி – 1. கோல்கொண்டா
(b) குதுப் ஷாஹி – 2. பிஜப்பூர்
(c) இமாத் ஷாஹி – 3. அகமது நகர்
(d) அடில் ஷாஹி – 4. பீரார்
Correct Answer: A [3 1 4 2]
விளக்கம்:
பாமினி அரசு சிதறிய பின் தோன்றிய சுல்தானியங்கள்: நிஜாம் ஷாஹி – அகமதுநகர் (3) , குதுப் ஷாஹி – கோல்கொண்டா (1) , இமாத் ஷாஹி – பெரார் (4) , அடில் ஷாஹி – பீஜப்பூர் (2) . குறியீடு 3 1 4 2 .
23.
AJ – 2023
பீஜப்பூரில் அடில்ஷாஹி பேரரசு யாரால் நிறுவப்பட்டது?
Correct Answer: D [யூசுப் அடில் ஷா]
விளக்கம்:
பீஜப்பூர் அடில் ஷாஹி அரசைத் தோற்றுவித்தவர் யூசுப் அடில் ஷா (1490). இவ்வரசின் புகழ்பெற்ற கட்டடம் கோல் கும்பாஸ் (முகமது அடில் ஷாவின் கல்லறை).
24.
JSO – 2023
கிருஷ்ண தேவராயரின் அமுக்தமால்யதா யாருடைய வாழ்க்கையை விவரிக்கிறது?
Correct Answer: A [பெரியாழ்வார்]
விளக்கம்:
அமுக்தமால்யதா ("சூடிக் கொடுத்தவள்" – ஆண்டாளைக் குறிக்கும் பெயர்) – வைணவ ஆழ்வார் பெரியாழ்வார் (விஷ்ணுசித்தர்) மற்றும் அவரது வளர்ப்பு மகள் கோதை (ஆண்டாள்) ஆகியோரின் கதையைக் கூறும் தெலுங்குக் காவியம்.
25.
GEOLOGY – 2023
அலாவுதீன் ஹசன் ஷாவுக்குப் பின் பதவிக்கு வந்தவர்
Correct Answer: A [முதலாம் முகமது ஷா]
விளக்கம்:
பாமினி அரசைத் தோற்றுவித்த அலாவுதீன் ஹசன் பாமன் ஷா (1347 – 1358) (இயற்பெயர் ஜாபர் கான் ) மறைந்த பின் முதலாம் முகமது ஷா (1358 – 1375) ஆட்சிக்கு வந்தார்.
26.
ACF – 2023
"விஜயநகரம் நகரத்தின் சுற்றளவு அறுபது மைல்" என்று குறிப்பிடும் வெளிநாட்டுப் பயணி யார்?
Correct Answer: B [நிக்கோலா காண்டி]
விளக்கம்:
இத்தாலியப் பயணி நிக்கோலோ டி காண்டி (சுமார் 1420) விஜயநகரத்தைப் பற்றி " நகரத்தின் சுற்றளவு அறுபது மைல் ; அதன் சுவர்கள் மலைகள் வரை நீண்டுள்ளன" என்று குறிப்பிட்டார். அப்துர் ரசாக் ஏழு அரண் சுவர்களைக் குறிப்பிட்டார்; பயஸ் கிருஷ்ணதேவராயர் கால நகரை வர்ணித்தார்.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய வரலாறு PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-history-pyq
📘 இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 426 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 137 அட்டவணைகள் & குறிப்புகள் · 20 அலகுகள் (25 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய வரலாறு PYQ – பல்வகை வரலாற்று வினாக்கள்
› இந்திய வரலாறு PYQ – மதச்சார்பற்ற நாடாக இந்தியா – சமூக நல்லிணக்கம்
› இந்திய வரலாறு PYQ – இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் – வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு
› இந்திய வரலாறு PYQ – இந்திய சமூக – பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்
› இந்திய வரலாறு PYQ – ஐரோப்பியர் வருகை
› இந்திய வரலாறு PYQ – பக்தி, சூஃபி இயக்கங்களும் சீக்கியமும்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
