இந்திய வரலாறு PYQ – பல்லவர்கள்
← திரும்பச் செல்ல
சரியான பொருத்தம்: (a) சிம்மவிஷ்ணு – பல்லவர் (2), (b) முதலாம் ஜெயசிம்மன் – சாளுக்கியர் (1), (c) முதலாம் ஆதித்தன் – சோழர் (4), (d) சதகர்ணி – சாதவாகனர் (3) . எனவே குறியீடு 2 1 4 3 .
₹299 →
இந்திய வரலாறு PYQ – பல்லவர்கள் – 10 வினாக்கள், பாடம்: வரலாறு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
PSY – 2022
சீனப் பயணி யுவான் சுவாங் யாருடைய காலத்தில் காஞ்சிக்கு வருகை புரிந்தார்?
Correct Answer: B [நரசிம்மவர்மன்]
விளக்கம்:
சீனப் பௌத்தப் பயணி யுவான் சுவாங் முதலாம் நரசிம்மவர்மன் (630 – 668) காலத்தில் (சுமார் 640) காஞ்சிபுரத்துக்கு வந்தார். காஞ்சியைப் பெரிய, அழகிய நகரம் எனவும், அங்கு பல பௌத்த மடங்கள் இருந்தன எனவும் குறிப்பிட்டார். அபராஜிதன் கடைசிப் பல்லவ அரசர்.
2.
CSSS – 2023 · BURSAR – 2023
கீழ்க்கண்ட பல்லவ ஆட்சியாளர்களில் யார் "வாதாபிகொண்டான்" என்ற பட்டத்தினைக் கொண்டவர்?
Correct Answer: C [நரசிம்மவர்மன் – I]
விளக்கம்:
முதலாம் நரசிம்மவர்மன் தம் படைத்தலைவர் பரஞ்சோதியின் தலைமையில் சாளுக்கியத் தலைநகர் வாதாபியைக் கைப்பற்றினார் (642); இப்போரில் இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்டார். அதனால் அவர் " வாதாபிகொண்டான் " எனப் பட்டம் பெற்றார். அவரது மற்றொரு பட்டம் " மாமல்லன் ".
3.
FA – 2022
தென்னிந்திய ஓவியங்கள் பற்றிய நூல்
Correct Answer: A [தட்சிணசித்திரம்]
விளக்கம்:
தட்சிணசித்திரம் தென்னிந்திய ஓவியக் கலை பற்றிய நூல்; முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது (அவருக்கு "சித்திரகாரப்புலி" என்ற பட்டமும் உண்டு).
4.
FA – 2022
"தசகுமாரசரித்திரம்" என்னும் நூலின் ஆசிரியர்
Correct Answer: C [தண்டி]
விளக்கம்:
தசகுமாரசரிதம் என்ற வடமொழி உரைநடை நூலை எழுதியவர் தண்டி ; அவர் சில ஆண்டுகள் பல்லவ அரசவையை அணிசெய்தார். அவர் எழுதிய அணியிலக்கண நூல் காவியாதர்சம் . அமரசிம்மர் – அமரகோசம் (நிகண்டு); காளிதாசர் – சாகுந்தலம்; வாத்ஸ்யாயனர் – காமசூத்திரம்.
5.
ASSISTANT TRAINING OFFICER TEXTILE DEPT – 2023
______ இன் காசக்குடி செப்பேடுகளில் அபராதங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
Correct Answer: A [நந்திவர்மன்]
விளக்கம்:
நந்திவர்ம பல்லவனின் (இரண்டாம் நந்திவர்மன் – பல்லவமல்லன்) காசக்குடி செப்பேடுகளில் அபராதங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன (தமிழ்நாட்டு 11ஆம் வகுப்பு வரலாறு, அலகு 9). பல்லவர் காலத்தில் நீதிமன்றம் அதிகர்ண மண்டபம் , நீதிபதி தர்மாதிகாரி எனப்பட்டனர்.
6.
JUNIOR ANALYST TN MEDICAL SERVICE – 2023
பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) ராஷ்டிரகூடர்கள் – 1. அதிக எண்ணிக்கையிலான கோட்டைகள்
(b) சோழர்கள் – 2. கிராம உள்ளூர் தன்னாட்சி
(c) பல்லவர்கள் – 3. கட்டடக் கலைக்கு ஆதரவு
(d) சாளுக்கியர்கள் – 4. வேசர கட்டடக்கலை
Correct Answer: A [1 2 3 4]
விளக்கம்:
சோழர் – கிராமத் தன்னாட்சி (உத்திரமேரூர்க் கல்வெட்டு, குடவோலை முறை); பல்லவர் – குடைவரை, ஒற்றைக்கல் ரதம், கட்டுமானக் கோயில் என கட்டடக்கலைக்குப் பேராதரவு ; சாளுக்கியர் – திராவிட, நாகரப் பாணிகள் கலந்த வேசரப் பாணி .
7.
AAO & AHO – 2024
______ தொண்டை மண்டலத்தில் தங்கள் ராஜ்யத்தை நிறுவினார்.
Correct Answer: C [பல்லவர்கள்]
விளக்கம்:
பல்லவர்கள் வடபெண்ணை ஆற்றுக்கும் வட வெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட தொண்டை மண்டலத்தில் அரசமைத்தனர்; தலைநகர் காஞ்சிபுரம் . பல்லவரின் கடைசி அரசர் அபராஜிதன் சோழ அரசர் முதலாம் ஆதித்தனிடம் தோற்ற பின் தொண்டை மண்டலம் சோழர் ஆட்சிக்கு வந்தது.
8.
GROUP 4 – 2025
கூற்று [A]: பல்லவர்கள், மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் குடைவரைக் கோயில்களை உருவாக்கினர்.
காரணம் [R]: கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக் "கற்றளிகள்" என்று பெயர்.
Correct Answer: C [[A] மற்றும் [R] இரண்டும் சரி]
விளக்கம்:
முதலாம் மகேந்திரவர்மன் தாம் கட்டிய கோயில் செங்கல், மரம், உலோகம், சாந்து (சுதை) இன்றி அமைக்கப்பட்டது என மண்டகப்பட்டுக் கல்வெட்டில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் – கூற்று சரி.
9.
GROUP 2 & 2A – 2025
காலவரிசைப்படி பல்லவ மன்னர்களை வரிசைப்படுத்து:
- சிம்மவிஷ்ணு – 555 லிருந்து 590 CE
- மகேந்திரவர்மன் I – 590 லிருந்து 630 CE
- நரசிம்மவர்மன் I – 630 லிருந்து 668 CE
- ராஜசிம்மன் – 695 லிருந்து 728 CE
Correct Answer: A [1, 2, 3, 4]
விளக்கம்:
சிம்மவிஷ்ணு காவிரி வரை முன்னேறிச் சோழர் பகுதிகளைக் கைப்பற்றி, பல்லவ ஆட்சியை ஒருங்கிணைத்தார் (பாடநூல்); அவரது மகன் முதலாம் மகேந்திரவர்மன் ; அவரது மகன் முதலாம் நரசிம்மவர்மன் (வாதாபிகொண்டான்); பின்னர் இராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்மவர்மன்) கடற்கரைக் கோயிலையும்…
10.
LIBRARY SCIENCE – 2023
பொருத்துக:
(a) சிம்மவிஷ்ணு - 1. சாளுக்கியர்
(b) ஜெயசிம்மன் I - 2. பல்லவர்
(c) ஆதித்யா I - 3. சாதவாகனர்
(d) சதகர்ணி - 4. சோழர்
Correct Answer: C [2 1 4 3]
விளக்கம்:
சரியான பொருத்தம்: (a) சிம்மவிஷ்ணு – பல்லவர் (2), (b) முதலாம் ஜெயசிம்மன் – சாளுக்கியர் (1), (c) முதலாம் ஆதித்தன் – சோழர் (4), (d) சதகர்ணி – சாதவாகனர் (3) . எனவே குறியீடு 2 1 4 3 .
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய வரலாறு PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-history-pyq
📘 இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 426 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 137 அட்டவணைகள் & குறிப்புகள் · 20 அலகுகள் (25 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய வரலாறு PYQ – பல்வகை வரலாற்று வினாக்கள்
› இந்திய வரலாறு PYQ – மதச்சார்பற்ற நாடாக இந்தியா – சமூக நல்லிணக்கம்
› இந்திய வரலாறு PYQ – இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் – வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு
› இந்திய வரலாறு PYQ – இந்திய சமூக – பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்
› இந்திய வரலாறு PYQ – ஐரோப்பியர் வருகை
› இந்திய வரலாறு PYQ – பக்தி, சூஃபி இயக்கங்களும் சீக்கியமும்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
