இந்திய வரலாறு PYQ – சாளுக்கியர்களும் இராஷ்டிரகூடர்களும்

← திரும்பச் செல்ல

இந்திய வரலாறு PYQ – சாளுக்கியர்களும் இராஷ்டிரகூடர்களும் – 8 வினாக்கள், பாடம்: வரலாறு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
GROUP 1 – 2022
ராஷ்டிரகூடர்களின் தேசிய சின்னம் என்ன?

Correct Answer: B [தங்க கழுகு]

விளக்கம்:

இராஷ்டிரகூடர்களின் அரச சின்னம் கருடன் (பொற்கழுகு – Golden Eagle). புலி சோழர்களின் சின்னம்; சாளுக்கியர்களின் சின்னம் வராகம் (பன்றி). அரச மரபு அரசச் சின்னம் இராஷ்டிரகூடர் கருடன் (பொற்கழுகு) சாளுக்கியர் வராகம் பல்லவர் நந்தி (காளை) சோழர் புலி பாண்டியர் மீன்

2.  
GROUP 4 – 2022
சரியான இணையைத் தேர்வு செய்க.
(1) பட்டடக்கல் - வாதாபி சாளுக்கியர்
(2) எலிபெண்டா குகைகள் - அசோகர்
(3) எல்லோரா குகைகள் - ராஷ்டிரகூடர்கள்
(4) மாமல்லபுரம் - முதலாம் நரசிம்மவர்மன்

Correct Answer: A [1, 3, 4 சரி]

விளக்கம்:

(1) சரி – பட்டடக்கல் கோயில்கள் வாதாபி (பாதாமி) சாளுக்கியர் களால் கட்டப்பட்டவை. (3) சரி – எல்லோராவின் புகழ்பெற்ற கைலாசநாதர் கோயில் இராஷ்டிரகூட மன்னன் முதலாம் கிருஷ்ணனால் குடைந்தெடுக்கப்பட்டது.

3.  
GROUP 3A – 2023
பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்:

Correct Answer: C [நந்திச் சாளுக்கியர்கள்]

விளக்கம்:

சாளுக்கியருக்கு மூன்று முக்கியக் கிளைகள் உண்டு: பாதாமி (வாதாபி) சாளுக்கியர் , வெங்கி (கீழைச்) சாளுக்கியர் , கல்யாணி (மேலைச்) சாளுக்கியர் . " நந்திச் சாளுக்கியர் " என்ற கிளை இல்லை; நந்தி பல்லவர்களின் சின்னம் (நந்திவர்மன் போன்ற பெயர்களும் பல்லவருடையவை).

4.  
ROAD INSPECTOR – 2023
கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

Correct Answer: A [அய்கோல்]

விளக்கம்:

அய்ஹோல் கல்வெட்டு (பொ.ஆ. 634) இரண்டாம் புலிகேசியின் அவைப் புலவர் இரவிகீர்த்தியால் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது. நர்மதைக் கரையில் ஹர்ஷவர்த்தனரை வென்றது உள்ளிட்ட புலிகேசியின் வெற்றிகளை இது விவரிக்கிறது.

5.  
LIBRARY SCIENCE – 2023
அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு

Correct Answer: D [1 9 8 3]

விளக்கம்:

அஜந்தா, எல்லோரா குகைகள் 1983 இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தலங்களாக அறிவிக்கப்பட்டன. அதே ஆண்டில் ஆக்ரா கோட்டை, தாஜ்மகால் ஆகியவையும் அறிவிக்கப்பட்டன; இவையே இந்தியாவின் முதல் உலகப் பாரம்பரியத் தலங்கள்.

6.  
AJ – 2023
இவற்றில் எது "இந்தியக் கட்டிடக் கலையின் தொட்டில்" என்று வர்ணிக்கப்படுகிறது?

Correct Answer: A [ஐஹோல்]

விளக்கம்:

சாளுக்கியர் கட்டிய பல தொடக்ககாலக் கோயில்கள் (லாட்கான் கோயில், துர்கை கோயில் போன்றவை) உள்ள அய்ஹோல் " இந்தியக் (கோயில்) கட்டடக் கலையின் தொட்டில் " என அழைக்கப்படுகிறது.

7.  
COMBINED TECHNICAL SERVICES (ITI – LEVEL II) – 2025
பட்டடக்கல் கோயில் வளாகம் ________ அரசர்களுடன் தொடர்புடையது.

Correct Answer: B [சாளுக்கிய]

விளக்கம்:

கர்நாடகத்தின் மலப்பிரபா ஆற்றங்கரையில் உள்ள பட்டடக்கல் கோயில் வளாகம் வாதாபிச் சாளுக்கியர் களால் கட்டப்பட்டது; 1987 இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தலமானது.

8.  
GROUP 4 – 2025
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
ஆசிரியர் – நூல்
(a) அமோகவர்ஷர் – 1. மகாபுராணம்
(b) ஜினசேனர் – 2. கவிராஜமார்க்கம்
(c) குணபத்ரர் – 3. காதம்பரி
(d) பாணர் – 4. ஆதிபுராணம்

Correct Answer: B [2 4 1 3]

விளக்கம்:

இராஷ்டிரகூட அரசர் அமோகவர்ஷர் – கன்னட அணியிலக்கண நூல் கவிராஜமார்க்கம் (2). அவரது அவையின் சமண அறிஞர் ஜினசேனர் – ஆதிபுராணம் (4). ஜினசேனரின் சீடர் குணபத்ரர் – மகாபுராணத்தை (உத்தரபுராணம்) நிறைவு செய்தார் (1). ஹர்ஷரின் அவைப் புலவர் பாணர் – காதம்பரி (3).

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய வரலாறு PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-history-pyq

📘 இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 426 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 137 அட்டவணைகள் & குறிப்புகள் · 20 அலகுகள் (25 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய வரலாறு PYQ – பல்வகை வரலாற்று வினாக்கள் › இந்திய வரலாறு PYQ – மதச்சார்பற்ற நாடாக இந்தியா – சமூக நல்லிணக்கம் › இந்திய வரலாறு PYQ – இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் – வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு › இந்திய வரலாறு PYQ – இந்திய சமூக – பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும் › இந்திய வரலாறு PYQ – ஐரோப்பியர் வருகை › இந்திய வரலாறு PYQ – பக்தி, சூஃபி இயக்கங்களும் சீக்கியமும்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0