இந்திய தேசிய இயக்கம் PYQ – வ.உ. சிதம்பரனார்
← திரும்பச் செல்ல
(1) சரி – "வந்தே மாதரம்" பாடல் இடம்பெறும் ஆனந்த மடம் நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி . (2) தவறு – மிண்டோ பிரபு இந்தியாவின் வைசிராய் (1905–1910); 1909 மிண்டோ–மார்லி சீர்திருத்தங்களுடன் தொடர்புடையவர்; சென்னை மாகாண ஆளுநர் அல்லர்.
₹299 →
இந்திய தேசிய இயக்கம் PYQ – வ.உ. சிதம்பரனார் – 14 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
VAS-AGHS – 2020
கீழ்க்கண்டவைகளில் வ.உ. சிதம்பரம் அவர்களால் எழுதப்படாத ஒன்று எது?
Correct Answer: D [சூரியோதயம்]
விளக்கம்:
சூர்யோதயம் வ.உ.சி. எழுதிய நூல் அல்ல; அது பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்த புரட்சிகரத் தேசியவாதச் செய்தித்தாள் (இந்தியா, விஜயா ஆகியவற்றுடன்). மெய்யறம், மெய்யறிவு, பாடல் திரட்டு ஆகியவை வ.உ.சி.யின் படைப்புகள். சிறையிலிருந்து விடுதலையான பின் வ.உ.சி.
2.
GROUP 2 & 2A MAINS (ரத்தான தேர்வு) – 2026 · GROUP 2 – 2022
உறுதிப்படுத்துதல் [A]: வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார்.
காரணம் [R]: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்க்க விரும்பினார்.
Correct Answer: A [[A] உறுதிப்படுத்துதல் மற்றும் [R] காரணம் சரி. காரணம் [R] உறுதிப்படுத்துதலை [A] விளக்குகிறது]
விளக்கம்:
கூற்று சரி: 1906இல் வ.உ.சி. தூத்துக்குடியில் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை (SSNC) தொடங்கினார். காரணம் சரி, விளக்கமும் கூட: ஆங்கிலேயரின் கடற்பயண முற்றுரிமைக்கு எதிராகவே அவர் இந்நிறுவனத்தை உருவாக்கினார் (12ஆம் வகுப்புப் பாடநூல்).
3.
LIBRARY – 2023
சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ. சிதம்பரம் நிறுவிய ஆண்டு
Correct Answer: B [1906]
விளக்கம்:
வ.உ.சி. 1906இல் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தைக் கூட்டுப்பங்கு நிறுவனமாகப் பதிவு செய்தார் (பதிவு நாள் 16 அக்டோபர் 1906 ). 1905 – வங்கப் பிரிவினை, சுதேசி இயக்கத் தொடக்கம்; 1907 – சூரத் பிளவு; 1908 – கோரல் ஆலை வேலைநிறுத்தமும் வ.உ.சி. கைதும்.
4.
LIBRARY – 2023
வ.உ. சிதம்பரனார் 'சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை' நிறுவியதன் நோக்கம்
Correct Answer: C [கடல் போக்குவரத்தில் (பிரிட்டிஷாரின் ஏகபோகத்திற்கு) ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்திற்குச் [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: ஏகபோகத்திற்குச் (monopoly)] சவால் விடுக்க]
விளக்கம்:
பாடநூலின்படி, வ.உ.சி. ஆங்கிலேயரின் கடற்பயண முற்றுரிமைக்கு (ஏகபோகம்) எதிராகவே சுதேசிக் கப்பல் நிறுவனத்தை உருவாக்கினார்.
5.
EO GRADE III (HR&CE) – 2022 · CAGS – 2022
'தென்னாட்டுத் திலகர்' என அழைக்கப்பட்டவர் ______ ஆவார்.
Correct Answer: D [வ.உ. சிதம்பரனார்]
விளக்கம்:
திலகரின் சீடராக விளங்கிய வ.உ.சி. தீவிர தேசியவாதப் போக்கைத் தென்னாட்டில் முன்னெடுத்ததால் "தென்னாட்டுத் திலகர்" (தமிழ்நாட்டின் திலகர்) என அழைக்கப்படுகிறார். திலகரும் தம் கேசரி, மராட்டா இதழ்களில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் வெற்றியைப் பாராட்டி எழுதினார்.
6.
GROUP 4 – 2022
பின்வரும் பத்தியைப் படித்து பின்வரும் வினாவிற்கு பதிலளிக்கவும். இந்த பகுதிக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
பத்தி: சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் உருவாக்கம் சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அற்புதமான வளர்ச்சியைக் குறித்தது. தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் மக்களுக்குக் கப்பல் கட்டுவதில் நடைமுறைப் பயிற்சி அளிக்கவும், கடல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு சவால் விடுவதில் உறுதியாகவும் வ.உ. சிதம்பரம் 1906இல் ஷியாலியில் ஒரு நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்குவதற்கான தனது முடிவை அறிவித்தார்.
பின்வருவனவற்றில் எது பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது?
Correct Answer: D [கப்பல் கட்டும் பாரம்பரியத்தில் தமிழர்களின் அறிவை மீட்டெடுப்பது நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்கியதன் நோக்கமாகும்.]
விளக்கம்:
பத்தி, நிறுவனத்தின் நோக்கங்களாக இரண்டைக் கூறுகிறது: தமிழர்களின் கடல்/கப்பல் கட்டும் மரபை மீட்டெடுத்தல் (நடைமுறைப் பயிற்சி மூலம்), ஆங்கில முற்றுரிமைக்குச் சவால் விடுதல் . (D) முதல் நோக்கத்தை நேரடியாகக் கூறுகிறது.
7.
JAILOR – 2022
வ.உ. சிதம்பரனாரால் தூத்துக்குடியில் சுதேசிக் கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்டது. அவர் ______, ______ என்ற பெயர்களையுடைய இரண்டு கப்பல்களை வாங்கினார். அவை ______க்கும் ______க்கும் இடையே செலுத்தப்பட்டன.
Correct Answer: A [காலியா, லாவோ ; தூத்துக்குடி, கொழும்பு]
விளக்கம்:
10ஆம் வகுப்புப் பாடநூல்: வ.உ.சி. காலியா, லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றைத் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே ஓட்டினார். இரு கப்பல்களும் பிரான்சிலிருந்து வாங்கப்பட்டவை.
8.
ASSISTANT TRAINING OFFICER TEXTILE DEPT – 2023
சுதேசி நீராவிக்கப்பல் கழகத்தின் பெரிய பங்குதாரர்களாக இருந்தவர்கள் யார்?
Correct Answer: A [பாண்டித்துரை, ஹாஜி பக்கீர்]
விளக்கம்:
12ஆம் வகுப்புப் பாடநூல்: பாண்டித்துரையும், ஹாஜி பக்கீர் முகமதுவும் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் பெரிய பங்குதாரர்களில் இருவர் .
9.
ASSISTANT TRAINING OFFICER TEXTILE DEPT – 2023
கூற்று [A]: சுதேசி நீராவி கப்பல்களின் பங்கு ஆசிய நாடுகளுக்கு மட்டும் விற்பனை செய்யப்பட்டது.
காரணம் [R]: அரவிந்த் கோஷ் சுதேசி முயற்சிகளைப் பாராட்டி கம்பெனியின் பங்குகள் விற்பனைக்கு உதவினார்.
Correct Answer: D [[A] மற்றும் [R] இரண்டுமே சரியானது ; ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கமல்ல]
விளக்கம்:
கூற்று சரி: ₹25 மதிப்புள்ள 40,000 பங்குகள் இந்தியர்கள், இலங்கையர், ஆசிய நாட்டவருக்கு மட்டும் விற்கப்பட்டன. காரணம் சரி: அரவிந்த கோஷ் சுதேசி முயற்சிகளைப் பாராட்டி, பங்குகள் விற்பனையாக உதவினார் (12ஆம் வகுப்புப் பாடநூல்).
10.
COMBINED ACCOUNTANT – TREASURY DEPT – 2024
சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி பதிவு செய்யப்பட்ட நாள்
Correct Answer: B [அக்டோபர் 16, 1906]
விளக்கம்:
சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் 16 அக்டோபர் 1906 அன்று கூட்டுப்பங்கு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. 1908 தேதிகள் பொருந்தாது – அவ்வாண்டில் வ.உ.சி. கைது (12 மார்ச் 1908), தண்டனை (7 ஜூலை 1908) ஆகியவை நடந்தன.
11.
GROUP 4 – 2024
சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியின் ஆரம்ப மொத்த முதலீட்டு தொகை
Correct Answer: D [₹10 லட்சம்]
விளக்கம்:
பாடநூல்: சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தின் மொத்த முதலீடு ₹10 லட்சம் ; அது 40,000 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பங்கு ₹25 வீதம் இந்தியர், இலங்கையர், ஆசிய நாட்டவருக்கு மட்டும் விற்கப்பட்டது. கணக்குச் சரிபார்ப்பு: 40,000 × ₹25 = ₹10,00,000.
12.
GROUP 4 – 2024
கீழ்கண்ட கூற்றுகளில் வ.உ. சிதம்பரம் பிள்ளையை பற்றிய சரியான வாக்கியங்கள் எவை?
(i) கோபாலகிருஷ்ண கோகலேவின் சீடர் ஆவார்.
(ii) இவர் செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்டார்.
(iii) இந்திய பணியாளர் சங்கத்தை தோற்றுவித்தார்.
(iv) வழக்கறிஞர் ஆவார்
Correct Answer: C [(ii) மற்றும் (iv) மட்டும்]
விளக்கம்:
(i) தவறு – வ.உ.சி. மிதவாதி கோகலேவின் சீடர் அல்லர்; தீவிர தேசியவாதி திலகரின் சீடர் . (ii) சரி – சிறையில் செக்கிழுக்க வைக்கப்பட்டதால் "செக்கிழுத்த செம்மல்" எனப் போற்றப்படுகிறார்.
13.
GROUP 2 & 2A MAINS – 2025
கூற்று [A]: வ.உ.சி.க்கு தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
காரணம் [R]: சூரத் மாநாட்டில் கலந்து கொண்டு திலகரைப் பின்பற்றி தத்துவத்தை ஆதரித்தார்.
Correct Answer: C [[A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R], [A]ன் சரியான விளக்கம் அல்ல]
விளக்கம்:
கூற்று சரி: தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு 7 ஜூலை 1908இல் வ.உ.சி.க்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் (ஒவ்வொன்றும் 20 ஆண்டுகள் – மொத்தம் 40 ஆண்டுகள் ) விதிக்கப்பட்டன (12ஆம் வகுப்புப் பாடநூல்). காரணம் சரி: அவர் சூரத் மாநாட்டில் (1907) பங்கேற்ற திலகரின் சீடர்.
14.
GROUP 2 & 2A MAINS – 2025
சரியான பொருத்தத்தை கண்டுபிடி.
(1) பங்கிம் சந்திர சாட்டர்ஜி – ஆனந்த மடம்
(2) மிண்டோ பிரபு – சென்னை
(3) சுதேசி – வ.உ.சி
(4) லாலா லஜபதி ராய் – கல்விக்கான தேசிய கழகம்
Correct Answer: A [(1) மற்றும் (3) சரி]
விளக்கம்:
(1) சரி – "வந்தே மாதரம்" பாடல் இடம்பெறும் ஆனந்த மடம் நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி . (2) தவறு – மிண்டோ பிரபு இந்தியாவின் வைசிராய் (1905–1910); 1909 மிண்டோ–மார்லி சீர்திருத்தங்களுடன் தொடர்புடையவர்; சென்னை மாகாண ஆளுநர் அல்லர்.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய தேசிய இயக்கம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-national-movement-pyq
📘 இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 606 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 142 அட்டவணைகள் & குறிப்புகள் · 8 அலகுகள் (23 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இத்தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட பிற வரலாற்று வினா
› இந்திய தேசிய இயக்கம் PYQ – செய்தித்தாள்கள், இதழ்கள், நூல்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – பிற தலைவர்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இராஜாஜி
› இந்திய தேசிய இயக்கம் PYQ – தந்தை பெரியார்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – காமராஜர்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
