இந்திய தேசிய இயக்கம் PYQ – தந்தை பெரியார்

← திரும்பச் செல்ல

இந்திய தேசிய இயக்கம் PYQ – தந்தை பெரியார் – 22 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
VAS-AGHS – 2020
பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எப்போது தொடங்கினார்?

Correct Answer: A [1925]

விளக்கம்:

10ஆம் வகுப்புப் பாடநூல்: பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அதே ஆண்டு அவர் காங்கிரசிலிருந்து விலகினார்; இயக்கத்தின் அதிகாரபூர்வச் செய்தித்தாளான குடிஅரசு இதழும் 1925இலேயே தொடங்கப்பட்டது.

2.  
VAS-AGHS – 2020
1924-ம் ஆண்டு நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தினால் பெரியாரை கைது செய்த அரசு எது?

Correct Answer: C [திருவாங்கூர் அரசு]

விளக்கம்:

வைக்கம் அன்று திருவாங்கூர் சமஸ்தானத்தின் பகுதி (இன்றைய கேரளம்).

3.  
AGGS – 2021
1925 ம் ஆண்டு ஈ.வெ.ராமசாமி காங்கிரஸிலிருந்து விலகியதற்குக் காரணம் :
  1. இவரால் காந்திய கொள்கையை பின்பற்ற முடியவில்லை
  1. காங்கிரஸ் முழுவதுமாக பிராமணத் தலைவர்களின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்தது
மேற்காணும் காரணங்களில் எவை சரியான காரணம் என எழுதுக.

Correct Answer: B [2 மட்டும்]

விளக்கம்:

1920–25இல் பெரியார் காந்தியடிகளின் திட்டங்களை (ஒத்துழையாமை, கதர், கள்ளுக்கடை மறியல்) தீவிரமாகப் பின்பற்றிய காங்கிரஸ்காரர்; எனவே காரணம் 1 தவறு.

4.  
PTGS – 2021
கூற்று (A): நீதிக்கட்சி பிராமணரல்லாதோருக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வேண்டியது.
காரணம் (R): பெரியாரின் வேண்டுதலான வகுப்புவாரி பிரதிநிதித்துவம் காங்கிரசால் நிராகரிக்கப்பட்ட காரணத்தால் பெரியார் காங்கிரசிலிருந்து விலகினார்.

Correct Answer: B [(A), (R) இரண்டும் சரி; ஆனால் (R), (A)க்குச் சரியான விளக்கம் அல்ல]

விளக்கம்:

கூற்று (A) சரி: 1916இல் உருவான தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) பிராமணரல்லாதோருக்கு அரசுப் பணிகளிலும் அரசியலிலும் உரிய பங்கு கோரியது; ஆட்சிக்கு வந்த பின் 1921 செப்டம்பர் 16, 1922 ஆகஸ்ட் 15 ஆகிய நாள்களில் இரண்டு வகுப்புவாரி அரசாணைகளை வெளியிட்டது…

5.  
GROUP 1 – 2021
"மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான், சுயமரியாதை அவனின் பிறப்புரிமை, சமூகநீதி சமூக சமத்துவத்தை உறுதிப்படுத்தும்" என்று கூறியவர் யார்?

Correct Answer: A [தந்தை பெரியார்]

விளக்கம்:

சுயமரியாதையைப் பிறப்புரிமையாக முன்வைத்தவர் தந்தை பெரியார் .

6.  
GROUP 1 – 2021
தினசரி நாளிதழான [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: வார இதழான] குடியரசின் ஆசிரியர்

Correct Answer: A [தந்தை பெரியார்]

விளக்கம்:

குடிஅரசு (1925) – பெரியார் தொடங்கி நடத்திய தமிழ் வார இதழ் ; சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வச் செய்தித்தாள் . ஒவ்வொரு இதழிலும் சமூகப் பிரச்சனைகள் குறித்துப் பெரியார் தொடர்ந்து கட்டுரை எழுதினார்; அவ்வப்போது "சித்திரபுத்திரன்" என்ற புனைபெயரிலும் எழுதினார்.

7.  
EO GRADE IV (HR&CE) – 2022
கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தித்தாள்களையும், இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக.
  1. பகுத்தறிவு
  1. விடுதலை
  1. குடியரசு
  1. புரட்சி

Correct Answer: B [3, 4, 1, 2]

விளக்கம்:

10ஆம் வகுப்புப் பாடநூல்: பெரியார் குடிஅரசு (1925), ரிவோல்ட் (1928), புரட்சி (1933), பகுத்தறிவு (1934), விடுதலை (1935) ஆகிய இதழ்களைத் தொடங்கினார். ரிவோல்ட் இவ்வினாவில் இல்லாததால் வரிசை: குடிஅரசு (3) → புரட்சி (4) → பகுத்தறிவு (1) → விடுதலை (2) = 3, 4, 1, 2 .

8.  
GROUP 1 – 2022
பெரியாருடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைக் கால வரிசைப்படி வரிசை படுத்தவும்.
  1. வைக்கம் சத்தியாகிரகம்
  1. ஒத்துழையாமை இயக்கம்
  1. கள்ளுக்கடை மறியல்
  1. சென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர்

Correct Answer: A [2, 3, 4, 1]

விளக்கம்:

ஒத்துழையாமை இயக்கம் 1920இல் தொடங்கியது; அதன் ஒரு பகுதியாகப் பெரியார் 1921இல் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியல் செய்து சிறை சென்றார்; 1922இல் திருப்பூர் மாநாட்டில் சென்னை மாகாணக் காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார் ; 1924இல் வைக்கம் சத்தியாகிரகம் . எனவே 2 → 3 → 4 → 1.

9.  
LIBRARY – 2023
பெரியார் ஈ.வே. இராமசாமி நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு

Correct Answer: B [1938]

விளக்கம்:

இராஜாஜி அரசு பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்து நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் (1937–39) பெரியார் சிறையிலடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோதே 1938இல் (29 டிசம்பர்) நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

10.  
LIBRARY – 2023
ஏன் ஈ.வெ. இராமசாமி பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்?

Correct Answer: C [காங்கிரஸ் நடத்திய பள்ளியில் பிராமணருக்கும் பிராமணர் அல்லாதவருக்கும் தனித்தனியே உணவுப் பந்தியிட்டது]

விளக்கம்:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிதியுதவியில் வ.வே. சுப்பிரமணியம் நடத்திய சேரன்மாதேவி குருகுலத்தில் , உணவு உண்ணும் இடத்தில் பிராமண – பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனித்தனிப் பந்தி என்ற சாதிப் பாகுபாடு நிலவியது.

11.  
LIBRARY – 2023
தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் 1920 [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: 1921] ஆம் ஆண்டு யாரால் நடத்தப்பட்டது?

Correct Answer: B [பெரியார் ஈ.வெ. இராமசாமி]

விளக்கம்:

தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய அம்சமாகத் திகழ்ந்தவை கள்ளுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்களே (10ஆம் வகுப்புப் பாடநூல்).

12.  
ACF – 2023
______ன் சோவியத் யூனியன் பயணத்தின் மூலம் அந்நாடு ஐந்தாண்டுகள் திட்டங்கள் மற்றும் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் அதிவேக வளர்ச்சி பெற்றதைப் பார்த்தார்.

Correct Answer: D [ஈ.வெ. இராமசாமி]

விளக்கம்:

பெரியார் டிசம்பர் 1931இல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு எகிப்து, கிரீஸ், துருக்கி, சோவியத் ஒன்றியம் , ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்சு, போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்குச் சென்று நவம்பர் 1932இல் நாடு திரும்பினார்; ரஷ்யாவில் ஏறத்தாழ மூன்று மாதங்கள் தங்கி,…

13.  
DEO – 2023
எந்த அமைப்பு பின்னர் நீதிக்கட்சியாக மாறியது?

Correct Answer: D [தென்னிந்திய தாராளவாத கூட்டமைப்பு (சவுத் இண்டியன் லிபரல் பெடரேஷன்)]

விளக்கம்:

1916 நவம்பர் 20இல் டாக்டர் சி. நடேசனார், பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் உள்ளிட்ட பிராமணரல்லாத தலைவர்கள் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தை (South Indian Liberal Federation) உருவாக்கினர்.

14.  
AJ – 2023 · DEO – 2023
1944ம் ஆண்டு ______ல் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி என்ற பெயர் திராவிடக் கழகம் [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: திராவிடர் கழகம்] என்று மாற்றப்பட்டது.

Correct Answer: B [சேலம்]

விளக்கம்:

27 ஆகஸ்ட் 1944இல் சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16ஆவது ஆண்டு மாநாட்டில், பெரியாரின் தலைமையில் கட்சி திராவிடர் கழகம் (தி.க.) எனப் பெயர் மாற்றம் பெற்றது.

15.  
AJ – 2023
பின்வருபவர்களில் "வைக்கம் வீரர்" என்ற பட்டத்தைப் பெற்றவர் யார்?

Correct Answer: C [ஈ.வெ. ராமசாமி]

விளக்கம்:

1924 வைக்கம் சத்தியாகிரகத்துக்குத் தலைமையேற்றுச் சிறை சென்ற பெரியார் ஈ.வெ. இராமசாமியை மக்கள் "வைக்கம் வீரர்" எனப் பாராட்டினர்; 1925இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சென்னை மாகாணக் காங்கிரஸ் மாநாடு அவரை "வைக்கம் வீரர்" எனப் போற்றித் தீர்மானம் நிறைவேற்றியது. டி.எம்.

16.  
CESGS – 2023
பின்வரும் இதழ்களில் பெரியார் ஈ.வெ.ரா.வுடன் தொடர்பில்லாதது எது?

Correct Answer: C [தேசபக்தன்]

விளக்கம்:

குடிஅரசு (1925), ரிவோல்ட் (1928), புரட்சி (1933) – மூன்றும் பெரியார் தொடங்கிய இதழ்கள். தேசபக்தன் தமிழ்த் தேசியவாத நாளிதழ்; அதன் ஆசிரியர் திரு.வி. கல்யாணசுந்தரம் (திரு.வி.க.) – பெரியாருடையது அல்ல.

17.  
CESGS – 2023
பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு
  1. பெரியார் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்
  1. சுயமரியாதைத் திருமணத்தை நீதிக்கட்சி அறிமுகப்படுத்தியது
  1. பெரியார் பட்டத்தை வழங்கியது UNESCO அமைப்பு
  1. விடுதலை பத்திரிக்கையை ஆங்கிலத்தில் நடத்தினார்

Correct Answer: A [1 சரி]

விளக்கம்:

1 சரி – காங்கிரஸ்காரராகப் பெரியார் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று கள்ளுக்கடை மறியல் செய்து (1921) சிறை சென்றார். 2 தவறு – சுயமரியாதைத் திருமணங்களை ஆதரித்துப் பரப்பியது சுயமரியாதை இயக்கம் ; நீதிக்கட்சி அல்ல.

18.  
CSSS – 2023 · SUB INSPECTOR FISHERY – 2023
'ரிவோல்ட்' என்னும் ஆங்கிலப் பத்திரிக்கையை ஈ.வே.ரா. பெரியார் தொடங்கிய ஆண்டு எது?

Correct Answer: B [1928]

விளக்கம்:

ஆங்கிலம் கற்றவர்களிடையே சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்ப, பெரியார் 1928இல் "ரிவோல்ட்" (Revolt) என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். பிற விருப்பங்கள் பெரியாரின் தமிழ் இதழ்களின் ஆண்டுகள்: 1925 – குடிஅரசு; 1933 – புரட்சி; 1934 – பகுத்தறிவு.

19.  
CSSS – 2023
'பெண் ஏன் அடிமையானாள்' என்ற நூலின் ஆசிரியர் யார்?

Correct Answer: C [பெரியார்]

விளக்கம்:

10ஆம் வகுப்புப் பாடநூல்: பெண்ணியம் குறித்துப் பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் "பெண் ஏன் அடிமையானாள்?" .

20.  
GROUP 3A – 2023
ஈ.வே.ராவிற்கு ______ ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் 'பெரியார்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

Correct Answer: C [1938]

விளக்கம்:

1938 நவம்பரில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மகளிர் மாநாடு ஈ.வெ. இராமசாமிக்கு "பெரியார்" என்ற பட்டத்தை வழங்கியது. அதே ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையிலிருந்தபடியே அவர் நீதிக்கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

21.  
ASSISTANT PUBLIC PROSECUTOR GRADE II – 2025
பின்வருவனவற்றில் E.V. இராமசாமி அவர்களைப் பற்றிய நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக :
(1) சுயமரியாதை இயக்கம் துவக்கம்
(2) நீதிக்கட்சியின் தலைவராதல்
(3) வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கெடுப்பு
(4) தனி திராவிட நாடு கோரிக்கை

Correct Answer: C [(3), (1), (2), (4)]

விளக்கம்:

வைக்கம் சத்தியாகிரகம் – 1924 ; சுயமரியாதை இயக்கம் – 1925 ; நீதிக்கட்சித் தலைவர் – டிசம்பர் 1938 ; தனி திராவிட நாடு கோரிக்கை – 1939 டிசம்பரில் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கத்தை "திராவிட நாடு திராவிடருக்கே" என மாற்றினார்; 1940 நீதிக்கட்சி மாநாட்டிலும்…

22.  
COMBINED TECHNICAL SERVICES (ITI POST) – 2025
பெரியார் பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடு.
(1) பெரியார் சிறையில் இருக்கும் போதே நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
(2) அவ்வப்போது சித்திரபுத்திரன் எனும் புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார்
(3) சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் ரிவோல்ட் ஆகும்
(4) பெரியார் தன்னுடைய 93 வயதில் (1972)-ல் இயற்கை எய்தினார்

Correct Answer: B [(1) மற்றும் (2) சரி]

விளக்கம்:

(1) சரி – இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்காகச் சிறையில் இருந்தபோதே நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (2) சரி – பாடநூல்: அவ்வப்போது "சித்திரபுத்திரன்" எனும் புனைபெயரில் கட்டுரைகளை எழுதினார்.

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய தேசிய இயக்கம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-national-movement-pyq

📘 இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 606 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 142 அட்டவணைகள் & குறிப்புகள் · 8 அலகுகள் (23 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இத்தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட பிற வரலாற்று வினா › இந்திய தேசிய இயக்கம் PYQ – செய்தித்தாள்கள், இதழ்கள், நூல்கள் › இந்திய தேசிய இயக்கம் PYQ – பிற தலைவர்கள் › இந்திய தேசிய இயக்கம் PYQ – இராஜாஜி › இந்திய தேசிய இயக்கம் PYQ – காமராஜர் › இந்திய தேசிய இயக்கம் PYQ – வ.உ. சிதம்பரனார்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0