இந்திய தேசிய இயக்கம் PYQ – ஐரோப்பியரின் வருகை

← திரும்பச் செல்ல

இந்திய தேசிய இயக்கம் PYQ – ஐரோப்பியரின் வருகை – 19 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
GSASO – 2020
இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பிய நாடு எது?

Correct Answer: D [போர்ச்சுக்கல்]

விளக்கம்:

1498-இல் போர்ச்சுகல் நாட்டின் வாஸ்கோ-டா-காமா கடல் வழியாகக் கள்ளிக்கோட்டையை அடைந்தார். இந்தியாவுடன் கடல் வழி வணிகத்தைத் தொடங்கிய முதல் ஐரோப்பியர் போர்த்துகீசியரே .

2.  
GSCE – 2021
இங்கிலாந்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் தத்துவ அறிஞர்களால் தொடங்கப்படாமல் மன்னராலேயே தொடங்கப்பட்டது. அவர் யார்?

Correct Answer: B [8-ம் ஹென்றி]

விளக்கம்:

இங்கிலாந்தில் சமயச் சீர்திருத்தம் இறையியல் அறிஞர்களால் அல்லாமல் மன்னர் எட்டாம் ஹென்றியால் தொடங்கப்பட்டது.

3.  
GROUP 1 – 2021
முதன் முதலில் கிறித்துவ நம்பிக்கையைத் தென்னிந்தியாவிற்குக் கொணர்ந்தவர் யார்?

Correct Answer: D [புனித தாமஸ்]

விளக்கம்:

இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவரான புனித தாமஸ் கி.பி. முதல் நூற்றாண்டில் கேரளக் கடற்கரைக்கு வந்து கிறித்தவத்தைப் பரப்பினார் என்பது நீண்டகால மரபு . அவர் சென்னை மயிலாப்பூரில் உயிர்நீத்ததாகவும் நம்பப்படுகிறது; அவரது நினைவாகச் சாந்தோம் தேவாலயம் உள்ளது.

4.  
SURVEYOR DRAFTMAN – 2022
முசிறியை "இந்தியாவின் முதல் பேரங்காடி" என்று கூறும் வெளிநாட்டு நூல் ______ ஆகும்.

Correct Answer: A [இயற்கை வரலாறு]

விளக்கம்:

பொ.ஆ. முதலாம் நூற்றாண்டில் ரோமானிய எழுத்தாளர் மூத்த பிளினி எழுதிய "இயற்கை வரலாறு" (Natural History) , சேரநாட்டுத் துறைமுகமான முசிறியை "இந்தியாவின் முதல் பேரங்காடி" (primum emporium Indiae) என்று குறிப்பிடுகிறது.

5.  
CSSS – 2023
1709-இல் தரங்கம்பாடியில் ______ ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.

Correct Answer: C [சீகன்பால்கு]

விளக்கம்:

டேனியரின் ஆதரவில் 1706-இல் தரங்கம்பாடி வந்தடைந்த லூத்தரன் சமயப் பரப்பாளர் பார்த்தலோமியஸ் சீகன்பால்கு தரங்கம்பாடியில் முழுமையான அச்சகத்தை நிறுவினார் (10-ஆம் வகுப்புப் பாடநூல்: 1709). விவிலியத்தின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

6.  
RESEARCH ASSISTANT TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE – 2023
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை

Correct Answer: B [செயின்ட் ஜார்ஜ் கோட்டை]

விளக்கம்:

1639-இல் சந்திரகிரி அரசர் சென்னையை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கிக் கோட்டை கட்ட அனுமதித்தார். அங்கு கட்டப்பட்ட கோட்டையே புனித ஜார்ஜ் கோட்டை . இந்திய மண்ணில் கம்பெனி முதன்முதலாகப் பெற்ற நிலப்பகுதி இதுவே (11-ஆம் வகுப்புப் பாடநூல்).

7.  
GEOLOGY – 2023
சரியான விடையைத் தேர்வு செய்க.
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு இடைப்பட்ட நாடுகளைத் தக்கவைத்துக்கொள்ள எத்தகைய கொள்கையைக் கடைப்பிடித்தார்?

Correct Answer: A [சுற்றுவேலிக் கொள்கை]

விளக்கம்:

கம்பெனி போதிய படைவலிமை இல்லாத நிலையில், தன் எல்லைகளைக் காக்க இடைப்பட்ட நாடுகளை (buffer states) நிலைநிறுத்தும் சுற்றுவேலிக் கொள்கையை (Ring Fence) வாரன் ஹேஸ்டிங்ஸ் பின்பற்றினார் (11-ஆம் வகுப்புப் பாடநூல்). எ.கா.

8.  
AAO & AHO – 2024
பொருத்துக:
(a) மங்களூர் உடன்படிக்கை – 1. 1765
(b) பாரிஸ் உடன்படிக்கை – 2. 1794
(c) ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கை – 3. 1783
(d) அலகாபாத் உடன்படிக்கை – 4. 1784

Correct Answer: B [4 3 2 1]

விளக்கம்:

மங்களூர் உடன்படிக்கை – 1784 (இரண்டாம் மைசூர் போர் முடிவு); பாரிஸ் உடன்படிக்கை – 1783 (அமெரிக்க விடுதலைப் போரின் முடிவில் கையெழுத்தானது; இரண்டாம் மைசூர் போர்க் காலச் சூழலில் 11-ஆம் வகுப்புப் பாடநூல் இதைக் குறிப்பிடுகிறது); அலகாபாத் உடன்படிக்கை – 1765 .

9.  
GROUP 1B & 1C – 2024
பின்வருவனவற்றைப் பொருத்துக.
(a) இரயத்துவாரி முறை – 1. 1790
(b) மூன்றாம் மைசூர் போர் – 2. 1882
(c) உட்ஸ் அறிக்கை – 3. 1820
(d) ஹண்டர் கமிஷன் – 4. 1854

Correct Answer: B [3 1 4 2]

விளக்கம்:

தாமஸ் மன்றோ 1820-இல் சென்னை மாகாண ஆளுநரானார்; அவர் காலத்தில் இரயத்துவாரி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது – 11-ஆம் வகுப்புப் பாடநூலின்படி 1822-இல் இது செம்மையாக நடைமுறைக்கு வந்தது; வினாவின் விருப்பங்களில் உள்ள 1820 மன்றோ ஆளுநரான ஆண்டு.

10.  
ASSISTANT PUBLIC PROSECUTOR GRADE II – 2025
இந்தியாவில் முதலாவதாகக் கட்டப்பட்ட ஆங்கிலிக்கன் தேவாலயம் ______ ஆகும்.

Correct Answer: B [புனித மேரி தேவாலயம்]

விளக்கம்:

சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் உள்ள புனித மேரி தேவாலயம் (1680-இல் அர்ப்பணிக்கப்பட்டது) இந்தியாவில் கட்டப்பட்ட முதல் ஆங்கிலிக்கன் தேவாலயம் ஆகும்.

11.  
COMBINED TECHNICAL SERVICES (NON IV POST) – 2025
கூற்று மற்றும் காரண வகை:
கூற்று [A]: இராபர்டோ டி நொபிலியின் மொழித்திறன் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் விரிவாக எழுத உதவியது. இவர் தமிழ் உரைநடையின் தந்தையெனக் கருதப்படுகிறார்.
காரணம் [R]: போர்த்துகீசியர் தங்களது ரோமன் கத்தோலிக்க குருமார்களைக் கீழை நாடுகளுக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான பரதவர்களைக் கத்தோலிக்கக் கிறித்தவ மதம் ஏற்கச் செய்தனர்.

Correct Answer: D [[A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R], [A]-க்கு சரியான விளக்கம் இல்லை]

விளக்கம்:

11-ஆம் வகுப்புப் பாடநூலின்படி, இயேசு சபையைச் சேர்ந்த இராபர்டோ டி நொபிலி தமிழிலும் சமஸ்கிருதத்திலும் விரிவாக எழுதினார்; தமிழ் உரைநடையின் தந்தையெனக் கருதப்படுகிறார் – கூற்று சரி.

12.  
GROUP 2 & 2A MAINS – 2025
பின்வரும் கூற்றையும், காரணத்தையும் படித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
உறுதியான கூற்று [A]: கர்நாடகாவின் [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: கர்நாடகம் (கர்நாடிக் பகுதி) – ஆற்காடு நவாப்; இன்றைய கர்நாடக மாநிலம் அல்ல] நவாப் அன்வர் உதீன் பிரெஞ்சுக்காரர்களை எதிர்த்துப் போரிட 1746-ல் ஒரு படையை அனுப்பினார்.
காரணம் [R]: மெட்ராஸ் கைப்பற்றப்பட்ட பிறகு அதை நவாப்பிடம் ஒப்படைப்பேன் என்ற வாக்குறுதியைப் பிரெஞ்சு கவர்னர் நிறைவேற்றத் தவறிவிட்டார்.

Correct Answer: B [[A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]-ன் சரியான விளக்கம்]

விளக்கம்:

முதல் கர்நாடகப் போரில் (1746–48) பிரெஞ்சுக் கப்பற்படை 1746 செப்டம்பரில் சென்னையைக் கைப்பற்றியது .

13.  
GROUP 2 & 2A MAINS (மறுதேர்வு) – 2026
கீழ்க்காண் குடியேற்றங்கள்/தலைமையிடங்களில் சரியான இணைகளைத் தெரிக.
(1) சாந்தோம் – போர்ச்சுகீசியர்கள்
(2) போர்ட் நோவா – டச்சுக்காரர்கள்
(3) தரங்கம்பாடி – ஆங்கிலேயர்கள்
(4) தேவனாம்பட்டினம் – பிரெஞ்சுக்காரர்கள்

Correct Answer: B [(1) மற்றும் (2) சரியானவை]

விளக்கம்:

சாந்தோம் போர்த்துகீசியரின் வருகைக்கான முக்கியச் சான்றாக உள்ளது. போர்ட்டோ நோவா (பரங்கிப்பேட்டை) டச்சுக்காரரின் கோட்டை மற்றும் குடியேற்றப் பகுதிகளுள் ஒன்று (11-ஆம் வகுப்புப் பாடநூல்).

14.  
GROUP 2 & 2A MAINS (மறுதேர்வு) – 2026
பின்வரும் நிகழ்வுகளை அவற்றின் காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும்.
(1) ஸ்ரீரங்கப்பட்டினம் ஒப்பந்தம்
(2) மங்களூர் ஒப்பந்தம்
(3) சல்பாய் ஒப்பந்தம்
(4) பசீன் ஒப்பந்தம்

Correct Answer: C [(3), (2), (1), (4)]

விளக்கம்:

சல்பை (1782) → மங்களூர் (1784) → ஸ்ரீரங்கப்பட்டினம் (1792) → பேசின் (1802) .

15.  
GROUP 2 & 2A MAINS (மறுதேர்வு) – 2026
பின்வருவனவற்றில் தவறானதைப் பொருத்துக.
(1) டேவிட் கோட்டை – ஆங்கிலேயர்
(2) கெல்ட்ரியா கோட்டை – டேன்ஸ்
(3) தரங்கம்பாடி கோட்டை – டச்சு
(4) லூயி கோட்டை – பிரெஞ்சு

Correct Answer: B [(2) மற்றும் (3)]

விளக்கம்:

பழவேற்காட்டில் டச்சுக்காரர் கட்டிய பாதுகாப்புக் கோட்டை ஜெல்டிரியா (Geldria) ; அது டேனியருடையது அல்ல. தரங்கம்பாடியில் உள்ள டான்ஸ்போர்க் கோட்டை டேனியருடையது ; டச்சுக்காரருடையது அல்ல. ஆகவே (2), (3) தவறான இணைகள்.

16.  
GROUP 2 & 2A MAINS (ரத்தான தேர்வு) – 2026
பட்டியல் 'A' உடன் பட்டியல் 'B'-யைப் பொருத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
(a) பாண்டிச்சேரி ஒப்பந்தம் – 1. மூன்றாம் மைசூர் போர்
(b) மெட்ராஸ் ஒப்பந்தம் – 2. இரண்டாம் மைசூர் போர்
(c) மங்களூர் ஒப்பந்தம் – 3. முதலாம் மைசூர் போர்
(d) ஸ்ரீரங்கப்பட்டின ஒப்பந்தம் – 4. இரண்டாம் கர்நாடகப் போர்

Correct Answer: B [4 3 2 1]

விளக்கம்:

புதுச்சேரி உடன்படிக்கை (1755) இரண்டாம் கர்நாடகப் போரை முடித்தது; மதராஸ் உடன்படிக்கை (1769) ஹைதர் அலியுடனான முதல் மைசூர் போரை முடித்தது; மங்களூர் உடன்படிக்கை (1784) திப்புவுடனான இரண்டாம் மைசூர் போரை முடித்தது; ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை (1792) மூன்றாம்…

17.  
GROUP 2 & 2A MAINS (ரத்தான தேர்வு) – 2026
பின்வருவனவற்றுள் சுர்ஜி – அர்ஜுன்காவ் ஒப்பந்தத்தைப் பற்றிய உண்மையான கூற்று எது?
(i) 1805ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சிந்தியா இந்த உடன்படிக்கையைச் செய்தார்
(ii) அவர் கங்கை – யமுனா இடையே உள்ள அவரது பகுதிகள் அனைத்தையும் கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைத்தார்.
(iii) தன்னுடைய அவையில் பிரிட்டிஷ் குடியிருப்பாளர்களை ஏற்றுக்கொள்ளவில்லை

Correct Answer: D [(i) மற்றும் (ii) மட்டும்]

விளக்கம்:

இரண்டாம் ஆங்கிலேய–மராத்தியப் போரில் தோற்ற தௌலத் ராவ் சிந்தியா 1803 டிசம்பர் 30 அன்று சுர்ஜி–அர்ஜுன்காவ் உடன்படிக்கையை ஏற்றார்; வினாவில் 1805 என உள்ளது – ஆண்டைத் தவிர (i) கூற்று சரி.

18.  
GROUP 2 & 2A MAINS (ரத்தான தேர்வு) – 2026
பட்டியல் I-ல் கொடுக்கப்பட்டுள்ள சாசனங்களைப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
(a) 1683-ன் சாசனம் – 1. பிற நாடுகளுடன் போர் அறிவிக்கவும் சமாதானம் செய்துகொள்ளவும் கிழக்கிந்திய கம்பெனிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது
(b) 1686-ன் சாசனம் – 2. கடற்படைத் தலைவர் மற்றும் பிற கடல் அதிகாரிகளை நியமிக்கக் கம்பெனிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது
(c) 1693-ன் சாசனம் – 3. அதிகாரிகள் பணி சுழற்சிக் கொள்கையைக் கட்டாயமாக்கியது
(d) 1694-ன் சாசனம் – 4. ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது

Correct Answer: A [1 2 4 3]

விளக்கம்:

11-ஆம் வகுப்புப் பாடநூலின்படி 1683 பட்டயம் கம்பெனிக்குப் படைகளை உருவாக்கவும், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகியவற்றிலுள்ள நாடுகளுக்கு எதிராகப் போர் அறிவிக்கவும் அமைதி உடன்படிக்கை மேற்கொள்ளவும் உரிமை வழங்கியது – (a)-1.

19.  
GROUP 2 & 2A MAINS (ரத்தான தேர்வு) – 2026
சரியானதைப் பொருத்துக:
(1) நோரிஸ் மிஷன் – 1698
(2) ஆம்பூர் போர் – 1749
(3) செயின்ட் சாந்தோம் போர் – 1746
(4) வந்தவாசிப் போர் – 1750

Correct Answer: C [(1), (2) மற்றும் (3) சரி]

விளக்கம்:

இங்கிலாந்து அரசர் மூன்றாம் வில்லியம், ஔரங்கசீப்பிடம் வணிக உரிமைகளைப் பெறுவதற்காக சர் வில்லியம் நாரிஸ் தூதுக்குழுவை அனுப்பினார்; 11-ஆம் வகுப்புப் பாடநூல் இதை 1698 எனக் குறிப்பிடுகிறது.

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய தேசிய இயக்கம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-national-movement-pyq

📘 இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 606 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 142 அட்டவணைகள் & குறிப்புகள் · 8 அலகுகள் (23 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இத்தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட பிற வரலாற்று வினா › இந்திய தேசிய இயக்கம் PYQ – செய்தித்தாள்கள், இதழ்கள், நூல்கள் › இந்திய தேசிய இயக்கம் PYQ – பிற தலைவர்கள் › இந்திய தேசிய இயக்கம் PYQ – இராஜாஜி › இந்திய தேசிய இயக்கம் PYQ – தந்தை பெரியார் › இந்திய தேசிய இயக்கம் PYQ – காமராஜர்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0