இந்திய தேசிய இயக்கம் PYQ – வேலூர் புரட்சி (1806)

← திரும்பச் செல்ல

இந்திய தேசிய இயக்கம் PYQ – வேலூர் புரட்சி (1806) – 9 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
CEGS – 2022
வேலூர் கலகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இராணுவத் தளபதி யார்?

Correct Answer: B [ரோலோ கில்லஸ்பி]

விளக்கம்:

1806 ஜூலை 10 அன்று வேலூர்க் கோட்டையில் வெடித்த புரட்சியை ஆற்காட்டுக் குதிரைப்படைத் தளபதி கர்னல் ராபர்ட் ரோலோ ஜில்லஸ்பி ஒடுக்கினார்.

2.  
REPORTER – 2022
பின்வருவனவற்றுள் எவை, 1806ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர் சிப்பாய் கலகத்திற்கான காரணங்கள் ஆகும்?

Correct Answer: D [பதவி உயர்வின்மை, குறைவான சம்பளம், புதிய வகைத் தலைப்பாகை, சாதிக்குறியீடுகள் மற்றும் காதணிகள், சுத்தமாகத் தாடையை மழித்தல்]

விளக்கம்:

பாடநூலின்படி வேலூர் சிப்பாய்களின் மனக்குறைகள்: குறைவான ஊதியம், பதவி உயர்வுக்கான வாய்ப்புக் குறைவு .

3.  
VCGS – 2022
1806-ல் வேலூரில் ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தது. அதைக் குறிப்பிடுக

Correct Answer: D [வேலூர் கலகம்]

விளக்கம்:

1806 ஜூலை 10 அதிகாலையில் வேலூர்க் கோட்டையில் முதல் மற்றும் இருபத்து மூன்றாம் படைப்பிரிவுகளின் இந்தியச் சிப்பாய்கள் புரட்சியில் இறங்கினர். இதுவே வேலூர் புரட்சி (கலகம்) .

4.  
MAY – 2023
1857ஆம் ஆண்டுக் கிளர்ச்சிக்கு முந்தைய மற்றும் மிகவும் பிரபலமான கலகங்களில் இதுவும் ஒன்று?

Correct Answer: B [வேலூர் இந்தியச் சிப்பாய்கள் கலகம் (1806)]

விளக்கம்:

கவனிக்க: இவ்வினாவின் தமிழ் வடிவம் ஆங்கில வடிவத்திலிருந்து வேறுபடுகிறது (ஆங்கிலம் காலத்தால் முந்திய, மிகவும் அறியப்பட்ட கலகத்தைக் கேட்கிறது; தமிழ் 1857-க்கு முந்தைய பிரபலமான கலகங்களில் "ஒன்றை"க் கேட்கிறது); மேலே உள்ள விடை ஆங்கில வடிவப்படி.

5.  
AAO & AHO – 2024
1806ஆம் ஆண்டு நடந்த வேலூர் புரட்சியின் பின்விளைவுகள் பற்றிக் கூறப்படும் பின்வரும் கூற்றுகளில் எது 'சரியானது அல்ல'?

Correct Answer: D [புதிய இராணுவ விதிமுறைகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டன]

விளக்கம்:

புரட்சிக்குப் பின் புதிய இராணுவ விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டன ; எனவே (D) தவறான கூற்று. (A), (B), (C) மூன்றும் பாடநூல் கூறும் பின்விளைவுகள்.

6.  
COMBINED TECHNICAL SERVICES (IV POST) – 2025
வேலூர் கலகம் நடைபெற்ற ஆண்டு

Correct Answer: D [கி.பி. 1806]

விளக்கம்:

வேலூர்க் கோட்டையில் 1806 ஜூலை 10 அதிகாலையில் புரட்சி வெடித்தது. புதிய தலைப்பாகைக்கு எதிரான முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்திலேயே 4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு வீரர்களிடமிருந்து எழுந்தது.

7.  
COMBINED TECHNICAL SERVICES (NON IV POST) – 2025
வேலூர் கலகத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எவை உண்மை?
  1. சென்னை இராணுவப் படைகளின் தலைமைத் தளபதியாக சர் ஜான் கிரோடக் இருந்தார்.
  1. சென்னை ஆளுநராக சர் ஜார்ஜ் பர்லோ இருந்தார்.
  1. இந்தியத் தலைமை ஆளுநராக வில்லியம் பெண்டிங் பிரபு இருந்தார்.
  1. இராணுவ வீரர்களின் சீரான விதிகள் வகுக்க மேஜர் பையர்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

Correct Answer: A [1, 4 சரி]

விளக்கம்:

1806-இல் சென்னை இராணுவத்தின் தலைமைத் தளபதி சர் ஜான் கிரடாக் – (1) சரி. அப்போது சென்னை ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு ; புரட்சிக்குப் பின் அவர் இங்கிலாந்துக்குத் திரும்ப அழைக்கப்பட்டார் (பாடநூல்).

8.  
GROUP 2 & 2A MAINS (ரத்தான தேர்வு) – 2026
1806, ஜூலை 10, வேலூர் புரட்சியின்போது கொல்லப்பட்ட ஆங்கிலேயப் படையின் கர்னல்

Correct Answer: D [கர்னல் ஃபென்கோர்ட்]

விளக்கம்:

புரட்சியில் முதலில் கொல்லப்பட்டவர் கோட்டைக் காவற்படையின் உயர் பொறுப்பு வகித்த கர்னல் பேன்கோர்ட் (Fancourt). அடுத்து 23ஆம் படைப்பிரிவின் கர்னல் மீக்காரஸ் கொல்லப்பட்டார்; கோட்டைக்கு வெளியே சென்றுகொண்டிருந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்கும் சுடப்பட்டார்.

9.  
GROUP 2 & 2A MAINS (ரத்தான தேர்வு) – 2026
பின்வரும் சொற்றொடர்களில் வேலூர் கலகத்துடன் பொருந்தாத ஒன்று எது?

Correct Answer: A [வீரர்கள் அனைவரும் வட்டமான தலைப்பாகை [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: வட்டத் தொப்பி (round hat)] அணிய வேண்டும் என்று கேப்டன் ராபர்ட் கில்லெஸ்பி ஆணையிட்டார்]

விளக்கம்:

புதிய தலைப்பாகையும் இராணுவ விதிமுறைகளும் தலைமைத் தளபதி சர் ஜான் கிரடாக் காலத்தில் வந்தவை; தலைப்பாகையை வடிவமைத்து அறிமுகம் செய்தவர் அட்ஜுடன்ட் ஜெனரல் (Adjutant-General) அக்னியூ (11ஆம் வகுப்புப் பாடநூல்).

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய தேசிய இயக்கம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-national-movement-pyq

📘 இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 606 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 142 அட்டவணைகள் & குறிப்புகள் · 8 அலகுகள் (23 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இத்தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட பிற வரலாற்று வினா › இந்திய தேசிய இயக்கம் PYQ – செய்தித்தாள்கள், இதழ்கள், நூல்கள் › இந்திய தேசிய இயக்கம் PYQ – பிற தலைவர்கள் › இந்திய தேசிய இயக்கம் PYQ – இராஜாஜி › இந்திய தேசிய இயக்கம் PYQ – தந்தை பெரியார் › இந்திய தேசிய இயக்கம் PYQ – காமராஜர்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0