இந்திய தேசிய இயக்கம் PYQ – ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

← திரும்பச் செல்ல

இந்திய தேசிய இயக்கம் PYQ – ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் – 16 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
GSASO – 2020
கி.பி. 1902ஆம் ஆண்டு காவல் நிர்வாகப் பணிச் செயல்பாடுகளைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழு என்ன?

Correct Answer: A [பிரேசர் குழு]

விளக்கம்:

கர்சன் பிரபு 1902இல் சர் ஆண்ட்ரூ பிரேசர் தலைமையில் காவல்துறை ஆணையத்தை (Police Commission) அமைத்து, நாடு முழுவதும் காவல் நிர்வாகத்தின் செயல்பாட்டை ஆராயச் செய்தார்.

2.  
VAS-AGHS – 2020
வரிவசூலிக்கும் வழிமுறையை ரயத்துவாரியில் புகுத்தியவர்

Correct Answer: A [சர் தாமஸ் மன்றோ]

விளக்கம்:

இரயத்துவாரி முறை – இடைத்தரகர் இன்றி அரசே நேரடியாகப் பயிரிடுவோருடன் (ரயத்) வருவாய் ஒப்பந்தம் செய்யும் முறை. 1814இல் இயக்குநர் குழு இம்முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்தது; இதை வடிவமைத்தவர் சர் தாமஸ் மன்றோ .

3.  
AGGS – 2021
ஜமீன்தாரி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்?

Correct Answer: C [எல். காரன்வாலிஸ் பிரபு]

விளக்கம்:

காரன்வாலிஸ் பிரபு வங்காளம், பீகார், ஒரிசா பகுதிகளின் ஜமீன்தார்களுடன் ஏற்படுத்திய நிலையான நிலவரித் திட்டம் (1793) ஜமீன்தாரி முறை எனப்படுகிறது. வரி வசூலிப்போராக இருந்தோர் வாரிசுரிமை கொண்ட ஜமீன்தார்களாக மாறினர்; பயிரிடுவோர் குத்தகை விவசாயிகளாக மாற்றப்பட்டனர்.

4.  
PTGS – 2021
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் பின்பற்றிய கொள்கை

Correct Answer: D [பிரித்தாளும் கொள்கை]

விளக்கம்:

இந்தியர்களைச் சமய, பிராந்திய அடிப்படையில் பிரித்து ஒற்றுமையைக் குலைத்து ஆட்சியைத் தக்கவைக்க ஆங்கிலேயர் பின்பற்றியது "பிரித்தாளும் கொள்கை" (Divide and Rule) .

5.  
CEGS – 2022
கூற்று (A): 1929இன் பிற்பகுதியில் உருவான உலகளாவிய மந்தநிலை இந்தியாவையும் பாதித்தது.
காரணம் (R): குறிப்பாக விவசாயப் பொருட்களின் விலைகளில் மிகக் கடுமையான வீழ்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஏற்றுமதி சார்ந்த காலனித்துவப் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியைக் கொண்டு வந்தது.

Correct Answer: B [(A), (R) இரண்டும் சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம்]

விளக்கம்:

1929இல் அமெரிக்காவின் வால் தெருவில் தொடங்கிய பொருளாதாரப் பெருமந்தம் இந்தியாவையும் தாக்கியது (A சரி).

6.  
JAILOR – 2022
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
கி.பி. 1858-ல் கானிங் பிரபு எந்த இடத்தில் மகாராணியாரின் பிரகடனத்தை வெளியிட்டார்?

Correct Answer: A [அலகாபாத்]

விளக்கம்:

1858 நவம்பர் 1 அன்று அலகாபாத்தில் கூட்டப்பட்ட அரசு தர்பாரில் விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையைக் கானிங் பிரபு வாசித்தார். அவரே கம்பெனி ஆட்சியின் கடைசி தலைமை ஆளுநரும் இந்தியாவின் முதல் வைசிராயும் ஆவார்.

7.  
ROAD INSPECTOR – 2023
ஆங்கிலேயர் ஆட்சியில் கல்விக் கொள்கை பற்றிய தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) நான்கு காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
(ii) 1845இல் சர் சார்லஸ் வுட் டெஸ்பேட்ச் தொடங்கப்பட்டது.
(iii) இது மாக்னா கார்ட்டா என்றும் அழைக்கப்படுகிறது.

Correct Answer: B [(ii) மட்டும்]

விளக்கம்:

சார்லஸ் உட்டின் கல்வி அறிக்கை (Wood's Despatch) வெளியானது 1854இல் ; 1845இல் அல்ல – எனவே (ii) தவறு. தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை உள்ளடக்கிய இவ்விரிவான திட்டம் "இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் மகாசாசனம் (Magna Carta)" என்று அழைக்கப்படுகிறது (iii சரி).

8.  
ROAD INSPECTOR – 2023
சாரதா சட்டத்தின்படி பெண்களின் திருமண வயது ______ ஆண்டுகள்.

Correct Answer: C [14]

விளக்கம்:

ஹர்பிலாஸ் சாரதா முன்மொழிந்த குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் (1929) "சாரதா சட்டம்" எனப்படுகிறது. இது பெண்களின் குறைந்தபட்சத் திருமண வயதை 14 ஆகவும், ஆண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயித்தது. 1978 திருத்தம் இதனைப் பெண்களுக்கு 18, ஆண்களுக்கு 21 என உயர்த்தியது.

9.  
GEOLOGY – 2023
கூற்று [A]: மெக்காலே தனது குறிப்புகளில் ஆங்கில வழியில் மேற்கத்தியக் கல்வி கற்பிக்கப்படுவதற்கு ஆதரவாக வாதிட்டார்.
காரணம் [R]: மெக்காலே, இந்தியர்களுக்குச் சமஸ்கிருதத்திலும், பாரசீக மொழியிலும் கல்வி புகட்டக் கூடாது என்ற எண்ணம் கொண்டிருந்தார்.

Correct Answer: C [கூற்று சரி; காரணம் கூற்றைச் சரியாக விளக்குகிறது]

விளக்கம்:

1835 கல்விக் குறிப்பில் (Minute) மெக்காலே கீழ்த்திசை மொழிகளான அரபு, சமஸ்கிருதம் போன்றவற்றில் உள்ள இலக்கியங்களைவிட ஐரோப்பிய அறிவே மேலானது என வாதிட்டு, ஆங்கில வழியில் மேற்கத்தியக் கல்வியை ஆதரித்தார்.

10.  
GEOLOGY – 2023
கூற்று [A]: பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அணுகுமுறையால் இந்தியச் சிறுதொழில் அழிந்தது.
காரணம் [R]: 1833ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் தடையில்லா வாணிபக் கொள்கையை அறிவித்தது.

Correct Answer: B [[A] மற்றும் [R] ஆகிய இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A]-விற்குச் சரியான விளக்கமாகும்]

விளக்கம்:

காலனி அரசு 1833இல் தலையிடா வணிகக் கொள்கையை (Laissez Faire) கடைப்பிடிப்பதாக முடிவு செய்தது (11ஆம் வகுப்புப் பாடநூல்).

11.  
GROUP 1 & 1A – 2025
பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(1) சர் தாமஸ் மன்றோ – 1857 ஆம் ஆண்டு உரிமச் சட்டம்
(2) சர் சார்லஸ் மெட்காஃப் – இந்திய பத்திரிக்கைகளின் விடுதலையாளர்
(3) வெல்லெஸ்லி பிரபு – தாளின் கீழே அச்சுப்பொறியாளர் பெயர்
(4) கானிங் பிரபு – உரிமை மற்றும் தணிக்கை முறை

Correct Answer: A [(1) மற்றும் (4)]

விளக்கம்:

1857 உரிமச் சட்டம் (Licensing Act) பெரும் புரட்சிக் காலத்தில் கானிங் பிரபு காலத்தில் கொண்டுவரப்பட்டது; தாமஸ் மன்றோ 1827-இலேயே மறைந்தவர் – (1) தவறான இணை.

12.  
COMBINED TECHNICAL SERVICES (IV POST) – 2025
கூற்று [A]: காரன்வாலிசால் அறிமுகப்படுத்தப்பட்ட நிரந்தர நிலவரித் திட்டம் இந்திய சமுதாயத்தில் ஊரகப் பொருளாதாரத்தின் அடிப்படையான பல மாற்றங்களைக் கொண்டு வந்தது.
காரணம் [R]: இத்திட்டம் பழைய கிராமிய சமுதாயம், சொத்துரிமையில் மாற்றம், புதிய சமுதாய வகுப்பினையும் அழித்தது.

Correct Answer: D [[A] மற்றும் [R] சரி; மற்றும் [R] [A]-விற்கான சரியான விளக்கம் ஆகும்]

விளக்கம்:

கவனிக்க: இவ்வினாவின் தமிழ் வடிவம் ஆங்கில வடிவத்திலிருந்து வேறுபடுகிறது (ஆங்கிலக் காரணம் "புதிய சமூக வகுப்புகளை உருவாக்கியது" என்கிறது; தமிழ்க் காரணம் "புதிய சமுதாய வகுப்பினையும் அழித்தது" என்கிறது; (B) விருப்பமும் இரு மொழிகளில் வேறுபடுகிறது); மேலே உள்ள விடை…

13.  
GROUP 2 & 2A – 2025
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்திடுக:
(1) நிரந்தர நிலவரித் திட்டம் – கர்சன் பிரபு
(2) வங்கப் பிரிவினை – காரன்வாலிஸ்
(3) இரயத்துவாரி முறை – மன்றோ
(4) இருப்புப்பாதை இணைப்பு – டல்ஹௌசி

Correct Answer: D [(3) மற்றும் (4) சரி]

விளக்கம்:

(1), (2) இணைகள் இடம் மாறியுள்ளன: நிலையான நிலவரித் திட்டம் – காரன்வாலிஸ் (1793) ; வங்கப் பிரிவினை – கர்சன் (1905) . (3) இரயத்துவாரி – சர் தாமஸ் மன்றோ (சென்னை மாகாணம்) சரி.

14.  
GROUP 2 & 2A MAINS – 2025
பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) மெட்ராஸ் மருத்துவப் பள்ளி – 1. 1837
(b) மெட்ராஸ் பிரசிடென்சி கல்லூரி – 2. 1835
(c) மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி – 3. 1842
(d) பச்சையப்பாஸ் கல்லூரி – 4. 1840

Correct Answer: B [2 4 1 3]

விளக்கம்:

சென்னையின் தொடக்க கால உயர்கல்வி நிறுவனங்கள்: மருத்துவப் பள்ளி – 1835 (இன்றைய சென்னை மருத்துவக் கல்லூரி); கிறித்தவக் கல்லூரி – 1837 (பள்ளியாகத் தொடக்கம்); மாநிலக் கல்லூரி (பிரசிடென்சி) – 1840 (உயர்நிலைப் பள்ளியாகத் தொடக்கம்); பச்சையப்பன் கல்லூரி – 1842 .

15.  
AJ – 2023
தமிழ்நாட்டில் 1948 ஆம் ஆண்டு ஜமீன்தார் முறையை ஒழிக்க பரிந்துரை செய்த குழுவின் பெயரைக் குறிப்பிடுக.

Correct Answer: B [பிரகாசம் குழு]

விளக்கம்:

இராஜாஜி தலைமையிலான முதல் காங்கிரஸ் அமைச்சரவையில் (1937–39) வருவாய் அமைச்சராக இருந்த T. பிரகாசம் தலைமையில் அமைந்த சென்னை எஸ்டேட் நிலச் சட்டக் குழு (பிரகாசம் குழு) 1938-இல் தன் அறிக்கையை அளித்து, ஜமீன்தாரி முறையை ஒழிக்கப் பரிந்துரைத்தது.

16.  
JAILOR – 2022
1843-ம் ஆண்டு ஆங்கிலேயரால் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட முதல் நவீன வங்கி

Correct Answer: D [மெட்ராஸ் வங்கி]

விளக்கம்:

பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ வரலாற்றின்படி மெட்ராஸ் வங்கி (Bank of Madras) 1843 ஜூலை 1 அன்று நிறுவப்பட்டது. வங்காள வங்கி, பம்பாய் வங்கி ஆகியவற்றுடன் இது மூன்று மாகாண வங்கிகளில் (Presidency Banks) ஒன்று.

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய தேசிய இயக்கம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-national-movement-pyq

📘 இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 606 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 142 அட்டவணைகள் & குறிப்புகள் · 8 அலகுகள் (23 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இத்தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட பிற வரலாற்று வினா › இந்திய தேசிய இயக்கம் PYQ – செய்தித்தாள்கள், இதழ்கள், நூல்கள் › இந்திய தேசிய இயக்கம் PYQ – பிற தலைவர்கள் › இந்திய தேசிய இயக்கம் PYQ – இராஜாஜி › இந்திய தேசிய இயக்கம் PYQ – தந்தை பெரியார் › இந்திய தேசிய இயக்கம் PYQ – காமராஜர்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0