இந்திய தேசிய இயக்கம் PYQ – தேசிய மறுமலர்ச்சி – பகுதி 1 (வினா 1–35)

← திரும்பச் செல்ல

இந்திய தேசிய இயக்கம் PYQ – தேசிய மறுமலர்ச்சி – பகுதி 1 (வினா 1–35) – 33 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
GSASO – 2020
கீழே கொடுக்கப்பட்டவைகளில் தயானந்த சரஸ்வதி எழுதிய நூல் எது?

Correct Answer: A [சத்யார்த்த பிரகாசம்]

விளக்கம்:

ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதி (1824–1883) 1875இல் தமது முக்கிய நூலான ‘சத்யார்த்த பிரகாஷ்’ (சத்தியத்தின் ஒளி) என்பதை வெளியிட்டார் (TN 11ஆம் வகுப்பு வரலாறு).

2.  
AGGS – 2021
‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?

Correct Answer: D [பார்சி இயக்கம்]

விளக்கம்:

பம்பாயில் தொடங்கிய பார்சி சீர்திருத்த இயக்கத்தின் குரல் ‘ராஸ்ட் கோப்தார்’ (உண்மை விளம்பி) . 1851இல் கல்வி கற்ற பார்சிகள் ‘ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா’ (சமய சீர்திருத்தச் சங்கம்) என்ற அமைப்பை நிறுவினர்; நௌரோஜி பர்துன்ஜி, தாதாபாய் நௌரோஜி , கே.ஆர். காமா, எஸ்.எஸ்.

3.  
PTGS – 2021
பொருத்துக:
சமூக சீர்திருத்தம் – சீர்திருத்தவாதிகள்
(a) உடன்கட்டை முறை ஒழிப்பு – 1. ஈஸ்வர்சந்திர வித்யாசாகர்
(b) தலித் மக்களுக்கான ஆலய பிரவேசம் – 2. தந்தை பெரியார்
(c) விதவை மறுமண சட்டம் – 3. ராஜாராம் மோகன் ராய்
(d) தீண்டாமைக்கெதிரான சுயமரியாதை இயக்கம் – 4. அம்பேத்கர்

Correct Answer: A [3 4 1 2]

விளக்கம்:

சரியான இணைகள்: உடன்கட்டை ஒழிப்பு – ராஜா ராம்மோகன் ராய் (3) ; ஆலய நுழைவு – அம்பேத்கர் (4) ; விதவை மறுமணச் சட்டம் – வித்யாசாகர் (1) ; சுயமரியாதை இயக்கம் – பெரியார் (2) → 3 4 1 2 .

4.  
PTGS – 2021
நிரந்தர நிலவரியை ஆதரித்தும் மற்றும் அரசினால் விதிக்கப்படும் அதிகபட்சமான வரியை ஒவ்வொரு தனி நபரே கட்ட வேண்டுமெனக் கூறியது யார்? [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: ஒவ்வொரு உழவரும் செலுத்த வேண்டிய அதிகபட்சக் குத்தகையை அரசு நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரியவர் யார்?]

Correct Answer: B [இராஜா ராம் மோகன்ராய்]

விளக்கம்:

கவனிக்க: இவ்வினாவின் தமிழ் வடிவம் ஆங்கில வடிவத்திலிருந்து வேறுபடுகிறது (ஆங்கிலம்: "உழவர் செலுத்தும் அதிகபட்சக் குத்தகையை அரசு நிர்ணயிக்க வேண்டும்"; தமிழ்: "அதிகபட்ச வரியை ஒவ்வொருவரும் கட்ட வேண்டும்"); மேலே உள்ள விடை ஆங்கில வடிவப்படி.

5.  
CAGS – 2022
உடன்கட்டை ஏறும் வழக்கம் சட்டத்திற்குப் புறம்பான, தண்டனைக்குரிய குற்றம் எனக் கூறியவர்

Correct Answer: A [வில்லியம் பெண்டிங் பிரபு]

விளக்கம்:

1829இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் ‘சதி’ எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்துச் சட்டம் இயற்றினார்; இதில் ராஜா ராம்மோகன் ராய் முக்கியப் பங்கு வகித்தார் (TN 10ஆம் வகுப்பு). அச்சட்டம் வங்காள ஒழுங்குமுறைச் சட்டம் XVII (டிசம்பர் 1829) எனப்படுகிறது.

6.  
CAGS – 2022
பிரம்ம சமாஜத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?

Correct Answer: D [அது பிற சமயங்களின் போதனைகளை உள்ளடக்கவில்லை.]

விளக்கம்:

1828இல் ராஜா ராம்மோகன் ராய் நிறுவிய பிரம்ம சமாஜம் இந்து மதத்தைத் தூய்மைப்படுத்தல், ஒரு கடவுள் வழிபாடு, உருவ வழிபாட்டு எதிர்ப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது (TN 11ஆம் வகுப்பு) → (A), (B), (C) சரியானவை.

7.  
DPGS – 2022
கல்கத்தாவில் உள்ள இந்துக் கல்லூரியை நிறுவியவர்

Correct Answer: D [டேவிட் ஹேர்]

விளக்கம்:

கல்கத்தா இந்துக் கல்லூரி 1817இல் நிறுவப்பட்டது; ஸ்காட்லாந்துக் கடிகாரத் தயாரிப்பாளரும் கல்வி ஆர்வலருமான டேவிட் ஹேர் இதன் நிறுவலில் முதன்மைப் பங்காற்றினார். இக்கல்லூரி ‘மகாபாடசாலை’ எனவும் அழைக்கப்பட்டது; பின்னர் பிரசிடென்சி கல்லூரி ஆனது.

8.  
TNPSC – 2022 · DPGS – 2022
1882ஆம் ஆண்டு பூனாவில் ஆரிய மகிளா சமாஜ்யை நிறுவியவர்

Correct Answer: A [பண்டிட் ரமாபாய்]

விளக்கம்:

சமஸ்கிருதப் புலமைக்காக ‘பண்டித’, ‘சரஸ்வதி’ பட்டங்கள் பெற்ற பண்டித ரமாபாய் (1858–1922) , கணவர் மறைவுக்குப் பின் பூனா திரும்பி ரானடே, பண்டார்க்கர் ஆகியோரின் உதவியுடன் ஆரிய மகிளா சமாஜ் என்ற அமைப்பை நிறுவினார்; 1882இல் 300 பெண்கள் அதில் கல்வி கற்றனர் (TN 11ஆம்…

9.  
EO – 2022
மூல சங்கரர் பிற்காலத்தில் ________ என்று அழைக்கப்பட்டார்.

Correct Answer: B [தயானந்த சரஸ்வதி]

விளக்கம்:

குஜராத்தில் பிறந்த மூலசங்கர் துறவியாகும் எண்ணத்தில் இளமையிலேயே வீட்டை விட்டு வெளியேறி, பின்னர் சுவாமி தயானந்த சரஸ்வதி (1824–1883) எனப் புகழ்பெற்றார்.

10.  
FA – 2022
பின்வரும் அறிக்கையில் எது/எவை சரியானது?
(1) பம்பாய் பிரசிடென்சியின் முதல் அரசியல் நிறுவன அமைப்பு பாம்பே அசோசியேஷன்.
(2) மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் அமைப்பு மெட்ராஸ் மகாஜன சபா.
(3) மேரி கார்பெண்டர் இராஜாராம் மோகன்ராயின் ஆலோசனையின்படி பூனா சர்வஜனிக் சபாவை நிறுவினார்.
கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து சரியான விருப்பத்தைத் தேர்வு செய்க:

Correct Answer: A [(1) மட்டுமே]

விளக்கம்:

(1) சரி: பம்பாய் சங்கம் (Bombay Association) 1852இல் ஜெகந்நாத் சங்கர்சேத் முதலியோரால் நிறுவப்பட்ட பம்பாய் மாகாணத்தின் முதல் அரசியல் அமைப்பு.

11.  
FA – 2022
பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத் தேர்வு செய்க.
(i) அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த சர் சையது அகமதுகான் தொடக்கத்தில் காங்கிரசை ஆதரித்தார்.
(ii) 1909இல் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்து சபையானது இந்துமத வகுப்புவாத அரசியலுக்கு அடித்தளமிட்டது.

Correct Answer: A [கூற்று (i) மற்றும் (ii) சரி]

விளக்கம்:

இவ்வினா TN 12ஆம் வகுப்பு வரலாறு, அலகு 6 "தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்" பாடப் பயிற்சியிலிருந்து எடுக்கப்பட்டது.

12.  
GROUP 2 – 2022
கொல்கத்தாவில் முகமதியரின் இலக்கியம் மற்றும் அறிவியல் அமைப்பை ஏற்படுத்தியவர்

Correct Answer: C [அப்துல் லத்தீஃப்]

விளக்கம்:

முகமதியர் இலக்கிய அறிவியல் கழகம் (Muhammadan Literary and Scientific Society) 1863இல் கல்கத்தாவில் நவாப் அப்துல் லத்தீஃப் என்பவரால் நிறுவப்பட்டது. வங்காள முஸ்லிம்களிடையே மேலைக் கல்வியையும் நவீனச் சிந்தனையையும் பரப்புவதே அதன் நோக்கம்.

13.  
SURVEYOR – 2023 · SURVEYOR DRAFTMAN – 2022
________ தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடி கொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடத்திலும் காட்டியவர்.

Correct Answer: A [இராமலிங்க அடிகள்]

விளக்கம்:

இராமலிங்க அடிகள் (வள்ளலார், 1823–1874) உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்க வேண்டும் என்றார்; தம் அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார்; இதை அவர் ‘ஜீவகாருண்யம்’ என்றார் (TN 10ஆம் வகுப்பு – வினாவின்…

14.  
VCGS – 2022
அகாலி இயக்கம் ________ன் மறுவுருவாகச் செயல்பட்டது.

Correct Answer: C [சிங் சபா இயக்கம்]

விளக்கம்:

"அகாலி இயக்கம் சிங் சபா இயக்கத்தின் கிளை இயக்கமே" (TN 11ஆம் வகுப்பு); "சிங் சபாவே அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்" (TN 10ஆம் வகுப்பு).

15.  
VCGS – 2022
மிகவும் புகழ்பெற்ற பாடலான, "கத்தியின்றி, இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்" தொகுத்து வெளியிட்டவர் [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: இயற்றியவர்]

Correct Answer: A [வெ. இராமலிங்கம்]

விளக்கம்:

"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்ற பாடலை நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் இயற்றினார்.

16.  
ROAD INSPECTOR – 2023
சதி நடைமுறை பற்றிய சரியான கூற்றினை/கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) ராஜா ராம் மோகன் ராய் இந்த சதி எனும் நடைமுறையை ஒழிக்க உறுதிமொழி எடுத்தார்.
(ii) இந்த நடைமுறையை ஒழிக்க வில்லியம் பெண்டிங்கிற்கு உதவினார்.
(iii) சதி பழக்கம் தண்டனைக்குரிய குற்றமாக 1829இல் அறிவிக்கப்பட்டது.

Correct Answer: D [(i), (ii) மற்றும் (iii)]

விளக்கம்:

மூன்று கூற்றுகளும் சரி. ராஜா ராம்மோகன் ராய் உடன்கட்டை ஏறுதலுக்கு எதிரான "மனவுறுதிமிக்க போராளி" ; இப்பழக்கத்தை ஒழிப்பதை வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டார்.

17.  
LIBRARY – 2023
1875இல் ஆரிய சமாஜத்தை நிறுவியவர் யார்?

Correct Answer: B [தயானந்த சரஸ்வதி]

விளக்கம்:

ஆரிய சமாஜம் 1875இல் சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது; பஞ்சாபில் அது சீர்திருத்த இயக்கங்களுக்குத் தலைமையேற்றது.

18.  
ACF – 2023
கி.பி. 1817ஆம் ஆண்டு இராஜாராம் மோகன்ராய், இராதா காந்த தேவ் மற்றும் பலர் இணைந்து மகாபாடசாலையை ________ இடத்தில் நிறுவினர்.

Correct Answer: C [கல்கத்தா]

விளக்கம்:

‘மகாபாடசாலை’ என்பது 1817இல் கல்கத்தாவில் தொடங்கப்பட்ட இந்துக் கல்லூரியின் மறுபெயர். டேவிட் ஹேர் இதன் நிறுவலில் முதன்மைப் பங்காற்றினார்; கல்கத்தாவின் இந்துப் பெருமக்கள் நிதியுதவி அளித்தனர். இக்கல்லூரி பின்னர் பிரசிடென்சி கல்லூரி ஆனது.

19.  
MAY – 2023
கீழே கொடுக்கப்பட்டவற்றுள் சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்க.
(1) இந்து விதவை மறுதிருமணச் சட்டம் – 1856
(2) வங்க சதி ஒழுங்குமுறை – 1829
(3) மெட்ராஸ் பிராமணர் அல்லாதோர் சங்கம் – 1919
(4) இந்து சமய அறநிலையச் சட்டம் – 1821

Correct Answer: B [(1) மற்றும் (2) மட்டும் சரி]

விளக்கம்:

(1) சரி: வித்யாசாகர் இயக்கத்தின் விளைவாக 1856இல் விதவைகள் மறுமணச் சட்டம் . (2) சரி: 1829 வங்காள சதி ஒழுங்குமுறைச் சட்டம் (பெண்டிங்). (3) தவறு: மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் 1909இல் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது; 1919 அல்ல.

20.  
HEALTH OFFICER – 2023
‘ஆத்மிய சபா’வைத் தொடங்கியவர்

Correct Answer: B [ராஜா ராம் மோகன்ராய்]

விளக்கம்:

ராஜா ராம்மோகன் ராய் 1815இல் கல்கத்தாவில் ஆத்மிய சபா என்ற அமைப்பைத் தொடங்கி, ஒரு கடவுள் வழிபாடு, உருவ வழிபாட்டு எதிர்ப்பு ஆகிய கருத்துகளை விவாதித்தார். இதுவே பின்னர் 1828இல் பிரம்ம சமாஜமாக வளர்ந்தது.

21.  
VETERINARY ASSISTANT – 2023
தன்னாட்சித் தத்துவமான ‘இந்தியா இந்தியர்களுக்கே’ என்னும் கூற்றை முதலில் வெளியிட்டவர் ________.

Correct Answer: B [சுவாமி தயானந்த சரஸ்வதி]

விளக்கம்:

‘சுயராஜ்ஜியம்’ என்ற சொல்லை "இந்தியா இந்தியர்களுக்கே" என்ற பொருளில் முதன்முதலில் முழங்கியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி எனப் போற்றப்படுகிறார்; வேதகாலப் பெருமையை முன்வைத்து இந்தியர்களிடம் தன்மதிப்பை ஊட்டினார்.

22.  
JSO – 2023
மேற்கு மற்றும் கிழக்கத்திய தத்துவக் கலப்பை எடுத்துரைத்த இந்திய சமூக சீர்திருத்தவாதி யார்?

Correct Answer: A [இராஜாராம் மோகன் ராய்]

விளக்கம்:

"இந்திய மறுமலர்ச்சியின் தந்தை" எனப்படும் ராஜா ராம்மோகன் ராய் சமஸ்கிருதம், அரபி, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்; உபநிடதங்களின் ஒரு கடவுள் கோட்பாட்டை ஏற்றதோடு, மேலைநாட்டுப் பகுத்தறிவு, ஆங்கிலக் கல்வி, மேலை அறிவியல் ஆகியவற்றையும் முழுமையாக…

23.  
VAS-AGHS – 2020
புனித இராமலிங்கரின் கருணை என்ற கோட்பாடு இதனை அடிப்படையாகக் கொண்டிருந்தது

Correct Answer: D [ஆன்மநேய ஒருமைப்பாடு]

விளக்கம்:

வள்ளலாரின் ஜீவகாருண்யம் (எல்லா உயிர்களிடமும் கருணை) என்ற கொள்கை, எல்லா உயிர்களும் ஒரே இறைவனின் உயிர்க்கூறுகள்; ஆகவே அவை அனைத்தும் உடன்பிறப்புகள் என்ற "ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை" என்ற அடிப்படையில் அமைந்தது.

24.  
GROUP 1 – 2022
பின்வருவனவற்றுள் இராமலிங்க அடிகள் பற்றிய உண்மையான கூற்று எது?
(i) இராமலிங்க அடிகள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை 1865இல் ஆரம்பித்தார்
(ii) இராமலிங்க அடிகள் ஜாதிய முறைக்கு எதிரானவர்
(iii) இராமலிங்க அடிகள் 1867இல் சத்திய தர்ம சாலையை நிறுவினார்

Correct Answer: C [(i), (ii) மற்றும் (iii) உண்மையானது]

விளக்கம்:

மூன்றும் உண்மை. (i) 1865இல் இராமலிங்க அடிகள் சமரச வேத சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை நிறுவினார்; பின்னர் அது சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் எனப் பெயர் மாற்றம் பெற்றது – ஒரே அமைப்பு.

25.  
JSO – 2023
எந்தச் சட்டம் சதியைத் தடை செய்ததோடு அதைச் சட்டவிரோதமானது எனக் கூறியது?

Correct Answer: D [1829ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட ஒழுங்குபடுத்தும் சட்டம் XVII]

விளக்கம்:

தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் 1829 டிசம்பரில் வெளியிட்ட வங்காள ஒழுங்குமுறைச் சட்டம் XVII உடன்கட்டை ஏறுதலைச் சட்டவிரோதமான, தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது; ராஜா ராம்மோகன் ராயின் முயற்சிகள் இதன் மூலம் வென்றன (TN 10, 11ஆம் வகுப்பு).

26.  
GEOLOGY – 2023
கீழ்க்காண்பவற்றுள் எது/எவை அன்னி பெசன்ட் அம்மையாரின் முயற்சியில் உருவானது/உருவானவை?
(i) அவர் பனாரஸில் மத்திய இந்துக் கல்லூரியை நிறுவினார்.
(ii) அவருடைய ‘நியூ இந்தியா’ எனும் செய்தித்தாள் பிரம்மஞானசபைக் கொள்கைகளைப் பரப்பியது.

Correct Answer: C [(i) மற்றும் (ii) இரண்டும்]

விளக்கம்:

(i) சரி: 1893இல் இந்தியா வந்த அன்னிபெசன்ட் 1898இல் பனாரஸில் (வாரணாசி) மத்திய இந்துக் கல்லூரியை நிறுவினார்; அது 1916இல் மதன் மோகன் மாளவியா மூலம் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட்டது (TN 12ஆம் வகுப்பு).

27.  
COMBINED RESEARCH ASSISTANT – 2023
"ராஸ்ட் கோப்தார்" என்பது பம்பாயில் இயங்கிய ஓர் ஆங்கிலேய - குஜராத்தி [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: ஆங்கில மொழி - குஜராத்தி மொழி] செய்தித்தாள். இது தாதாபாய் நௌரோஜியால் கி.பி. 1854இல் [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: 1851] தொடங்கப்பட்டது. "ராஸ்ட் கோப்தார்" என்பதன் பொருள்

Correct Answer: A [உண்மையைக் கூறுபவர்]

விளக்கம்:

‘ராஸ்ட் கோப்தார்’ = "உண்மை விளம்பி" (Truth Teller) .

28.  
ASSISTANT TRAINING OFFICER TEXTILE DEPT – 2023
பம்பாயில் இந்து விதவைகளுக்காக ‘சாரதா சதன்’ (கற்றல் இல்லம்) என்னும் அமைப்பினைத் தொடங்கியவர் யார்?

Correct Answer: C [பண்டித ரமாபாய்]

விளக்கம்:

பண்டித ரமாபாய் ரானடே, பண்டார்க்கர் ஆகியோரின் உதவியோடு கைவிடப்பட்ட விதவைகளுக்காக ‘சாரதா சதன்’ எனும் அமைப்பைத் தொடங்கினார் (TN 11ஆம் வகுப்பு); 1889இல் பம்பாயில் தொடங்கப்பட்ட இவ்வில்லம் பின்னர் பூனாவுக்கு மாற்றப்பட்டது.

29.  
ASSISTANT TRAINING OFFICER TEXTILE DEPT – 2023
வடலூரில் சத்திய தர்ம சாலையை ஏற்படுத்தியவர் யார்?

Correct Answer: A [இராமலிங்க அடிகள்]

விளக்கம்:

இராமலிங்க அடிகள் (வள்ளலார்) 1867இல் வடலூரில் சத்திய தர்ம சாலையை நிறுவி, சாதி, மத வேறுபாடின்றி ஏழைகளுக்கு உணவளித்தார்; தம்மைப் பின்பற்றுவோரை ஒருங்கிணைக்க சத்ய ஞான சபையை நிறுவினார் (TN 10, 11ஆம் வகுப்பு).

30.  
ASSISTANT TRAINING OFFICER TEXTILE DEPT – 2023
பொருத்துக:
(a) பிரார்த்தனை சமாஜம் – 1. 1828
(b) சமரச வேத சன்மார்க்க சங்கம் – 2. 1875
(c) பிரம்ம சமாஜம் – 3. 1865
(d) ஆரிய சமாஜம் – 4. 1867

Correct Answer: C [4 3 1 2]

விளக்கம்:

சரியான இணைகள்: பிரார்த்தனை சமாஜம் – 1867 (4) ; சமரச வேத சன்மார்க்க சங்கம் – 1865 (3) ; பிரம்ம சமாஜம் – 1828 (1) ; ஆரிய சமாஜம் – 1875 (2) → 4 3 1 2 .

31.  
RESEARCH ASSISTANT TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE – 2023
பிராமணரல்லாத இயக்கத்திற்கு அடித்தளமிட்டவர்

Correct Answer: B [மகாத்மா ஜோதிராவ் புலே]

விளக்கம்:

ஜோதிபா புலே 1873இல் நிறுவிய சத்ய சோதக் சமாஜம் , சாதி முறையால் ஒடுக்கப்பட்ட பிராமணர் அல்லாதோரின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி, சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடச் செய்தது; "பிற்காலத்தில் மகாராஷ்டிராவில் பிராமணரல்லாதோர் இயக்கம் இவருடைய பணிகளால் தோன்றியது" (TN…

32.  
RESEARCH ASSISTANT TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE – 2023
ராம் மோகன் ராய் பற்றிய கீழ்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
  1. குழந்தைத் திருமணத்திற்கு எதிராகப் போராடினார்.
  1. உடன்கட்டைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். மேலும் பிரிட்டிஷ் அரசுடன் சேர்ந்து அதை ஒழிப்பதில் வெற்றி பெற்றார்.
  1. இந்து மதத்தில் இருக்கும் உருவ வழிபாட்டையும் வழிபாட்டு முறைகளையும் எதிர்த்தார்.
  1. சமஸ்கிருத மொழி மூலம் பாரம்பரிய கல்வியைப் பரப்பப் போராடினார்.

Correct Answer: C [1, 2, 3]

விளக்கம்:

1, 2, 3 உண்மை; 4 தவறு.

33.  
JUNIOR ANALYST TN MEDICAL SERVICE – 2023
பெத்யூன் பள்ளி பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகரால் [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: ஜே.இ.டி. பெத்யூனால்; வித்யாசாகர் அதன் செயலர்] ________ ஆண்டு கல்கத்தாவில் நிறுவப்பட்டது.

Correct Answer: D [1849]

விளக்கம்:

பெத்யூன் பள்ளி 1849இல் கல்கத்தாவில் ஜே.இ.டி. பெத்யூன் (John Elliot Drinkwater Bethune) தொடங்கிய பெண்கள் பள்ளி; ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் அதன் செயலராகப் பணியாற்றினார்.

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய தேசிய இயக்கம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-national-movement-pyq

📘 இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 606 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 142 அட்டவணைகள் & குறிப்புகள் · 8 அலகுகள் (23 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இத்தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட பிற வரலாற்று வினா › இந்திய தேசிய இயக்கம் PYQ – செய்தித்தாள்கள், இதழ்கள், நூல்கள் › இந்திய தேசிய இயக்கம் PYQ – பிற தலைவர்கள் › இந்திய தேசிய இயக்கம் PYQ – இராஜாஜி › இந்திய தேசிய இயக்கம் PYQ – தந்தை பெரியார் › இந்திய தேசிய இயக்கம் PYQ – காமராஜர்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0