இந்திய தேசிய இயக்கம் PYQ – இந்திய தேசிய காங்கிரஸ், அகிம்சை வழிப் போராட்ட வளர்ச்சி, புரட்சிகர இயக்கங்கள் – பகுதி 1 (வினா 1–50)
← திரும்பச் செல்ல
பிரிட்டிஷ் இந்தியக் கழகம் (British India Society) 1839இல் லண்டனில் தொடங்கப்பட்டது; அதை நிறுவியவர் நௌரோஜி அல்லர். நௌரோஜி லண்டனில் நிறுவியவை லண்டன் இந்தியக் கழகம் (1865) , கிழக்கிந்தியக் கழகம் .
₹299 →
இந்திய தேசிய இயக்கம் PYQ – இந்திய தேசிய காங்கிரஸ், அகிம்சை வழிப் போராட்ட வளர்ச்சி, புரட்சிகர இயக்கங்கள் – பகுதி 1 (வினா 1–50) – 50 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
ARGS – 2020
பஞ்சாபிய புரட்சிகரமான 'கதர் இயக்கம்' [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: கதார் இயக்கம்] எங்கு துவங்கப்பட்டது?
Correct Answer: D [சான் பிரான்சிஸ்கோ]
விளக்கம்:
லாலா ஹர்தயாள் 1913-இல் சான்பிரான்சிஸ்கோவில் 'பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பை' நிறுவினார்; சோஹன் சிங் பக்னா அதன் தலைவர். இதுவே கதார் கட்சி எனப்பட்டது (உருதுவில் 'கதார்' = கிளர்ச்சி; கைத்தறி ஆடையைக் குறிக்கும் 'கதர்' அல்ல).
2.
ARGS – 2020
சுதேசி இயக்கத்தின் அடையாளமாக கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய கல்லூரியின் முதல் முதல்வர் ________ ஆவார்.
Correct Answer: B [அரவிந்தோ கோஷ்]
விளக்கம்:
விடிவெள்ளிக் கழகத்தின் முன்னெடுப்பில் 'கல்விக்கான தேசியக் கழகம்' (National Council of Education) உருவானது – TN 12ஆம் வகுப்புப் பாடநூல் இதை 5 நவம்பர் 1905 எனக் குறிப்பிடுகிறது; 1905 நவம்பர்க் கூட்டங்களுக்குப் பின் 1906 -இல் அது முறையாக அமைந்ததாக வங்காள…
3.
ARGS – 2020
லண்டனில் கிழக்கு இந்திய கூட்டமைப்பை உருவாக்கியவர் யார்?
Correct Answer: D [தாதாபாய் நௌரோஜி]
விளக்கம்:
தாதாபாய் நௌரோஜி 1866-இல் லண்டனில் கிழக்கிந்தியக் கழகத்தை (East India Association) நிறுவினார். இந்தியாவின் நிலையைப் பிரிட்டிஷ் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து அவர்களின் கருத்தைச் செல்வாக்குக்கு உட்படுத்துவதே இதன் நோக்கம்.
4.
GSASO – 2020
'வந்தே மாதரம்' எனத் துவங்கும் பாடலை, எந்த ஆண்டு, எந்த இடத்தில், 'தேசிய பாடலாக' இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்தது? [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: 1896 கல்கத்தா மாநாட்டில் முதன்முதலில் பாடப்பட்டது]
Correct Answer: A [1896, கல்கத்தா]
விளக்கம்:
பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் "ஆனந்த மடம்" நாவலில் இடம்பெற்ற "வந்தே மாதரம்" பாடல், 1896ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இரவீந்திரநாத் தாகூரால் முதன்முதலில் பாடப்பட்டது .
5.
GSASO – 2020
வி.டி. சவார்க்காரால் ஆரம்பிக்கப்பட்ட ரகசிய சங்கம் ________ என அழைக்கப்பட்டது.
Correct Answer: B [அபிநவ பாரதம்]
விளக்கம்:
வி.டி. சாவர்க்கர் தம் சகோதரர் கணேஷ் சாவர்க்கருடன் இணைந்து 1904-இல் நாசிக்கில் 'அபிநவ பாரத்' என்ற ரகசியப் புரட்சிச் சங்கத்தை அமைத்தார். இதற்கு முன்னோடி அவர்கள் 1899-இல் தொடங்கிய 'மித்ர மேளா'.
6.
GSASO – 2020
புகழ்பெற்ற "வெள்ளையனே வெளியேறு" இயக்க போராட்டத்தை எந்த காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்தது?
Correct Answer: C [பம்பாய்]
விளக்கம்:
14 ஜூலை 1942 -இல் வார்தாவில் கூடிய காங்கிரஸ் காரியக் குழு, ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனத் தீர்மானித்தது.
7.
VAS-AGHS – 2020
இந்தியாவின் "மாக்னா கார்ட்டா" என மிதவாதிகளால் வரவேற்கப்பட்ட ஒன்று எது?
Correct Answer: A [ஆகஸ்ட் பிரகடனம், 1917]
விளக்கம்:
இந்தியச் செயலர் மாண்டேகு 20 ஆகஸ்ட் 1917 -இல் வெளியிட்ட அறிக்கை, இந்திய நிர்வாகத்தில் இந்தியர்களின் பங்கை அதிகரித்து படிப்படியாகப் பொறுப்பாட்சியை வழங்குவதே பிரிட்டிஷ் கொள்கை என அறிவித்தது. மிதவாதிகள் இதனை 'இந்தியாவின் மாக்னா கார்ட்டா' என வரவேற்றனர் .
8.
ADGS – 2021
காங்கிரசின் முதற்கட்டத்தை ஏன் போர்க்குணமிக்க தேசியவாதிகள் "அரசியல் யாசகம்" என்று அழைத்தனர்?
I. காங்கிரசின் முதல் கட்ட தலைவர்கள் பிரிட்டிஷாரின் தாராளக் கொள்கை மீது நம்பிக்கை வைத்திருந்தனர்
II. அவர்கள் தங்களுடைய குறைகளை அமைதியான வழியில் முன் வைப்பதையே நம்பினர்
III. பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்கள் மீது அதிக கவனத்தைச் செலுத்தியது.
Correct Answer: D [I மற்றும் II]
விளக்கம்:
மிதவாதிகள் ஆங்கிலேயரின் நீதியுணர்விலும் தாராளவாதத்திலும் நம்பிக்கை வைத்து பேச்சுவார்த்தை, மனுக்கள், விண்ணப்பங்கள் என அமைதியான வழிகளில் குறைகளை முன்வைத்தனர்.
9.
ADGS – 2021
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க:
(a) கான் அப்துல் கஃபார் கான் – 1. செங்கோட்டை
(b) INA – 2. டொமினியன் அந்தஸ்து
(c) ஆகஸ்ட் கொடை – 3. பர்தோலி சத்தியாகிரகம்
(d) சர்தார் வல்லபாய் படேல் – 4. செஞ்சட்டை
Correct Answer: C [4 1 2 3]
விளக்கம்:
கான் அப்துல் கஃபார் கான் அமைத்த 'குடை கிட்மட்கர்' (Khudai Khidmatgar – 'இறைப் பணியாளர்கள்') தொண்டர்கள் செஞ்சட்டையினர் எனப்பட்டனர். இந்திய தேசிய இராணுவ (INA) அதிகாரிகள் மீதான விசாரணை 1945-இல் டெல்லி செங்கோட்டையில் நடந்தது.
10.
AGGS – 2021
கீழ்கண்டவற்றில் இந்தியாவில் வட்டார மொழியில் கல்வி எனும் கருத்தை முதன் முதலில் தொடங்கிய அமைப்பு எது?
Correct Answer: A [விடியல் சமூகம்]
விளக்கம்:
12-ஆம் வகுப்புப் பாடநூல்: தேசியவாத அமைப்புகளின் வழியாகவும் வட்டார மொழியிலும் கல்வி எனும் கருத்து, சுதேசி இயக்கத்துக்கு வெகு முன்னரே 1902-இல் சதீஷ் சந்திர முகர்ஜியால் விடிவெள்ளிக் கழகம் (Dawn Society) நிறுவப்பட்டபோதே உருவாகிவிட்டது.
11.
AGHS – 2021
(I): காங்கிரசின் பழைய தலைவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அழிவுகரமான பொருளாதாரக் கொள்கை அறிந்திருந்தனர்.
(II): தாதாபாய் நௌரோஜி, ரமேஷ் சந்திரதத், டி.இ. வாச்சா மற்றும் பலர் பிரிட்டிஷ் அரசின் இந்திய பொருளாதார எதிர்ப்புக் கொள்கையை பாராட்டியுள்ளனர்.
Correct Answer: A [(I) மட்டும் சரி]
விளக்கம்:
தொடக்க காலக் காங்கிரஸ் தலைவர்கள் ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலை நன்கு உணர்ந்து அதனைக் கடுமையாக விமர்சித்தனர் ; பாராட்டவில்லை. எனவே (I) மட்டும் சரி; (II) தவறு .
12.
AGHS – 2021
பின்வருவனவற்றை பொருத்துக:
(a) லாகூர் காங்கிரஸ் – 1. பார்வர்டு பிளாக்
(b) மூவர்ண கொடி – 2. ராவி நதி
(c) நேதாஜி – 3. பூரண சுயராஜ்யம்
(d) யூனியன் ஜாக் – 4. பிரிட்டிஷ் கொடி
Correct Answer: C [3 2 1 4]
விளக்கம்:
1929 டிசம்பர் லாகூர் காங்கிரஸ் (தலைவர் ஜவஹர்லால் நேரு) பூரண சுயராஜ்ஜியத்தை இலக்காக அறிவித்தது; 31 டிசம்பர் 1929 நள்ளிரவில் ராவி நதிக்கரையில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. சுபாஷ் சந்திர போஸ் 1939-இல் ஃபார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார்.
13.
AGHS – 2021
கீழ்கண்டவைகளில் எது சுதேசி இயக்கத்தின் விளைவாக இந்திய தகவல் தொடர்பு துறையில் ஏற்படுத்தப்பட்ட தாக்கம் எனலாம்?
Correct Answer: D [வட்டார மொழிகளின் செல்வாக்கு பெருகல்]
விளக்கம்:
12-ஆம் வகுப்புப் பாடநூல்: சுதேசி இயக்கத்தின்போது ஆங்கிலத்தில் உரையாற்றுவது மாறி, சுதேச மொழிகளில் (வட்டார மொழிகளில்) சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டது செய்திப் பரிமாற்றத்திலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது . வட்டார மொழிப் பத்திரிகைகளும் வளர்ந்தன.
14.
GSCE – 2021
கீழ்கண்டவற்றுள் எது/எவை சுதேசி இயக்கத்தின் போது தீவிர தேசியவாதத்தின் இயங்கு தளமாக உருவெடுத்தன?
(1) பஞ்சாப்
(2) வங்காளம்
(3) மகாராஷ்டிரம்
(4) தூத்துக்குடி
Correct Answer: D [1, 2, 3, 4 சரி]
விளக்கம்:
TN 10ஆம் வகுப்புப் பாடநூல்: "சுதேசி இயக்கத்தின்போது தீவிர தேசியவாதத்தின் இயங்கு தளமாக பஞ்சாப், மகாராஷ்டிரா, வங்காளம் ஆகியன உருவெடுத்தன. தென்னிந்தியாவில் வ.உ.
15.
GSCE – 2021
1940 ல் ஆகஸ்ட் கொடையை அறிவித்தவர் யார்?
Correct Answer: A [லின்லித்கோ பிரபு]
விளக்கம்:
இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களின் ஆதரவைப் பெற வைசிராய் லின்லித்கோ 8 ஆகஸ்ட் 1940 -இல் 'ஆகஸ்ட் கொடை'யை அறிவித்தார்: போருக்குப் பின் டொமினியன் அந்தஸ்து , அரசியலமைப்பை உருவாக்க இந்தியர்களைக் கொண்ட அமைப்பு, வைசிராய் நிர்வாகக் குழு விரிவாக்கம் ஆகியவை அதன் கூறுகள்.
16.
PSY – 2022
டிரியோ என சிறப்பாக அழைக்கப்பட்டவர்கள் யாவர்?
Correct Answer: B [லால், பால் மற்றும் பால்]
விளக்கம்:
லாலா லஜபதி ராய் (பஞ்சாப்), பால கங்காதர திலகர் (மகாராஷ்டிரம்), பிபின் சந்திர பால் (வங்காளம்) ஆகிய மூவரும் 'லால்–பால்–பால்' எனும் முப்பெரும் தலைவர்கள் என அழைக்கப்பட்டனர்.
17.
PSY – 2022
ஒடுக்கப்பட்ட மக்கள் தெளிவான [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: நியாயமான] பிரதிநிதித்துவத்தை உள்ளாட்சி தேர்தலில் பெற்றிடவும் மற்றும் பொது பணியில் தேர்வாகிட உதவிடுவதும் ________ ஒப்பந்தமாகும்.
Correct Answer: A [பூனா]
விளக்கம்:
வகுப்புவாரி ஒதுக்கீட்டில் (1932) ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட தனித்தொகுதியை எதிர்த்து காந்தியடிகள் எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். அதன் விளைவாக 24 செப்டம்பர் 1932 -இல் காந்தியடிகளுக்கும் அம்பேத்கருக்கும் இடையே பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது.
18.
PSY – 2022
1893 ஆம் ஆண்டு சிகாகோ உலக சமய பாராளுமன்றத்தில் தியாசபியின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் யார்?
Correct Answer: A [அன்னிபெசன்ட்]
விளக்கம்:
1893 சிகாகோ உலக சமயப் பாராளுமன்றத்தில் அன்னிபெசன்ட் பிரம்மஞான சபையின் (Theosophical Society) சார்பில் பங்கேற்றார். அதே மாநாட்டில் விவேகானந்தர் இந்து சமயத்தின் சார்பில் உரையாற்றினார்.
19.
PSY – 2022
இந்திய தேசிய காங்கிரஸின் இரண்டாவது பெண் தலைவர்
Correct Answer: A [சரோஜினி நாயுடு]
விளக்கம்:
காங்கிரசின் முதல் பெண் தலைவர் அன்னிபெசன்ட் (1917, கல்கத்தா) . இரண்டாவது பெண் தலைவர் சரோஜினி நாயுடு (1925, கான்பூர்) ; இவரே காங்கிரஸ் தலைவரான முதல் இந்தியப் பெண் . 'இந்தியாவின் கவிக்குயில்' எனப் போற்றப்பட்டார்.
20.
CEGS – 2022
ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த நாள்
Correct Answer: C [13 ஏப்ரல் 1919]
விளக்கம்:
ரௌலட் சட்டத்தை எதிர்த்த தலைவர்கள் சைபுதீன் கிச்லு, டாக்டர் சத்தியபால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, 13 ஏப்ரல் 1919 (பைசாகி நாள்) அன்று அமிர்தசரஸ் ஜாலியன் வாலாபாக்கில் மக்கள் கூடினர். ஜெனரல் டயர் முன்னறிவிப்பின்றிச் சுடக் கட்டளையிட்டார்.
21.
EO GRADE III (HR&CE) – 2022
1917–ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக அன்னிபெசன்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ________ கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
Correct Answer: B [கல்கத்தா]
விளக்கம்:
தன்னாட்சி இயக்கத்தை (Home Rule, 1916) வழிநடத்திய அன்னிபெசன்ட், 1917 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்; காங்கிரசின் முதல் பெண் தலைவர் அவரே. லக்னோ (1916) – காங்கிரஸ்–லீக் ஒப்பந்தம், மிதவாத–தீவிரவாத இணைப்பு; சூரத் (1907) – காங்கிரஸ் பிளவு.
22.
EO GRADE III (HR&CE) – 2022
செப்டம்பர் 1943-இல், இந்திய தேசிய இராணுவம் எங்கிருந்து தனது டெல்லி அணிவகுப்பைத் துவங்கியது?
Correct Answer: B [இரண்டாம் பகதூர் ஷாவின் கல்லறையின் அருகில்]
விளக்கம்:
1857 பெரும் புரட்சியின் அடையாளமாக விளங்கிய முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர் ஷா ஆங்கிலேயரால் ரங்கூனுக்கு (பர்மா) நாடு கடத்தப்பட்டு அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.
23.
GROUP 2 – 2022
சரியானவற்றைத் தேர்ந்தெடு:
கட்சி – நிறுவனர்
(a) சுதந்திரா கட்சி – 1. சோகன் சிங் பக்னா
(b) கதர் கட்சி [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: கதார் கட்சி] – 2. மோதிலால் நேரு
(c) சுயராஜ்ய கட்சி – 3. சி. ராஜ கோபாலாச்சாரி
(d) பார்வர்ட் பிளாக் கட்சி – 4. சுபாஷ் சந்திர போஸ்
Correct Answer: D [3 1 2 4]
விளக்கம்:
சுதந்திரா கட்சி (1959) – இராஜாஜி ; கதார் கட்சி (1913) – லாலா ஹர்தயாள் நிறுவியது; சோஹன் சிங் பக்னா அதன் தலைவர் ; சுயராஜ்ஜியக் கட்சி (1923) – சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ; ஃபார்வர்டு பிளாக் (1939) – சுபாஷ் சந்திர போஸ் . எனவே 3 1 2 4.
24.
GROUP 2 – 2022
பின்வரும் கூற்றுகளைக் காண்க.
(i) 1905-இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்
(ii) 1905-இல் நடைபெற்ற கொல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்புவிடுத்தார்
(iii) 1905 ஆகஸ்ட் 7-இல் கொல்கத்தா நகர அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
Correct Answer: D [(i), (ii) மற்றும் (iii) சரி]
விளக்கம்:
இவ்வினா 12-ஆம் வகுப்புப் பாடநூலின் பயிற்சி வினா . பாடநூல்: கர்சன் பிரபு 1905-இல் மேற்கொண்ட வங்கப் பிரிவினை பிரித்தாளும் கொள்கையின் வெளிப்பாடு.
25.
GROUP 2 – 2022
கி.பி. 1931 ஆம் ஆண்டின் இரண்டாவது வட்ட மேஜை மாநாடு:
- வில்லிங்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த போது நடைபெற்றது.
- இந்திய தேசிய காங்கிரசின் பிரதிநிதியாக காந்தி இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
Correct Answer: C [1 மற்றும் 2 சரி]
விளக்கம்:
இரண்டாம் வட்டமேசை மாநாடு (செப்டம்பர்–டிசம்பர் 1931) லண்டனில் நடந்தது. அப்போது இந்தியாவின் வைசிராய் வில்லிங்டன் பிரபு (ஏப்ரல் 1931-இல் இர்வினுக்குப் பின் பதவியேற்றவர்).
26.
REPORTER – 2022
1932 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 ஆம் நாள் [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: 16 ஆகஸ்ட் 1932] வகுப்புவாத கொடையை அறிவித்த பிரிட்டிஷ் பிரதம மந்திரி யார் என்பதைக் குறிப்பிடவும்.
Correct Answer: A [ராம்சே மெக்டொனால்டு]
விளக்கம்:
பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு 16 ஆகஸ்ட் 1932 -இல் வகுப்புவாரி ஒதுக்கீட்டை (Communal Award) அறிவித்தார். அது முஸ்லிம், சீக்கியர், ஐரோப்பியர் ஆகியோருடன் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கும் தனித்தொகுதியை வழங்கியது.
27.
REPORTER – 2022
பின்வரும் பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க:
(a) வினோபா பாவே – 1. போலீஸ் நடவடிக்கை
(b) நேதாஜி – 2. நவகாளி
(c) ஐதராபாத் நிஸாம் – 3. சத்தியாகிரகி
(d) காந்திஜி – 4. ஆசாத் இந்து பாஜ்
Correct Answer: A [3 4 1 2]
விளக்கம்:
வினோபா பாவே – 1940 தனிநபர் சத்தியாகிரகத்தின் முதல் சத்தியாகிரகி ; நேதாஜி – ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் (இந்திய தேசிய இராணுவம்) ; ஐதராபாத் நிஜாம் – 1948 'போலீஸ் நடவடிக்கை' (ஆபரேஷன் போலோ) மூலம் ஐதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது; காந்தியடிகள் – 1946 நவகாளி (வங்காளம்)…
28.
REPORTER – 2022
கல்கத்தாவிலிருந்து டெல்லியை பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரமாக மாற்றப்பட்ட ஆண்டு
Correct Answer: B [1911]
விளக்கம்:
டிசம்பர் 1911 டெல்லி தர்பாரில் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் தலைநகரைக் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றும் முடிவை அறிவித்தார்; அதே தர்பாரில் வங்கப் பிரிவினை ரத்தும் அறிவிக்கப்பட்டது. அப்போதைய வைசிராய் ஹார்டிஞ்ச் .
29.
JAILOR – 2022
எந்த இயக்கத்தின் மூலமாக "செய் அல்லது செத்துமடி" என்னும் பிரச்சாரம் அறியப்பட்டது?
Correct Answer: D [வெள்ளையனே வெளியேறு இயக்கம்]
விளக்கம்:
8 ஆகஸ்ட் 1942 -இல் பம்பாயில் 'வெள்ளையனே வெளியேறு' தீர்மானம் நிறைவேறியபோது காந்தியடிகள் "செய் அல்லது செத்துமடி" (Do or Die) என்று முழங்கினார்: "இந்தியாவை விடுவிப்போம்; அல்லது அம்முயற்சியில் உயிர் துறப்போம்" என்பது அதன் பொருள்.
30.
JAILOR – 2022
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் கதாநாயகி எனக் கருதப்படுபவர் யார்?
Correct Answer: A [அருணா ஆசப் அலி]
விளக்கம்:
தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 9 ஆகஸ்ட் 1942 -இல் பம்பாய் கோவாலியா டேங்க் மைதானத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றியவர் அருணா ஆசப் அலி ; பின்னர் தலைமறைவாக இருந்து இயக்கத்தை வழிநடத்தினார். எனவே அவர் 'வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் கதாநாயகி' எனப்படுகிறார்.
31.
SURVEYOR DRAFTMAN – 2022
ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விசாரிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்த குழுவின் பெயர்
Correct Answer: B [ஹண்டர் குழு]
விளக்கம்:
ஜாலியன் வாலாபாக் படுகொலை (13 ஏப்ரல் 1919) குறித்து விசாரிக்க அரசு அக்டோபர் 1919 -இல் லார்டு ஹண்டர் தலைமையில் 'ஹண்டர் குழுவை' அமைத்தது. அக்குழு ஜெனரல் டயரைக் கண்டித்தாலும் கடுந்தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை. காங்கிரஸ் தனியாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது.
32.
TNPSC – 2022
பின்வருவனவற்றுள் பொருந்தாத ஜோடி எது?
- சாம்பரான் சத்தியாகிரகம் – 1917
- கேதா சத்தியாகிரகம் – 1927
- அகமதாபாத் மில் வேலைநிறுத்தம் – 1918
- ரவுலட் சட்ட சத்தியாகிரகம் – 1919
Correct Answer: C [2 மட்டும்]
விளக்கம்:
காந்தியடிகளின் தொடக்கக்காலப் போராட்டங்கள்: சம்பரான் (1917) – அவுரி விவசாயிகள்; அகமதாபாத் ஆலை வேலைநிறுத்தம் (1918) – காந்தியடிகளின் உண்ணாவிரதம்; கேதா (1918) – பஞ்சத்தால் வரி தள்ளுபடி கோரிக்கை; ரௌலட் சத்தியாகிரகம் (1919) .
33.
TNPSC – 2022
1914 ஆம் ஆண்டு ஜாக்ரோனில் உள்ள ராதா கிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியை நிறுவியவர் யார்?
Correct Answer: C [லாலா லஜபதி ராய்]
விளக்கம்:
பஞ்சாபின் ஜாக்ரோன் நகருக்கும் லாலா லஜபதி ராய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு: அவரது இல்லம் இன்றும் அங்கு நூலகமும் அருங்காட்சியகமுமாக உள்ளது.
34.
TNPSC – 2022
கூற்று [A]: தாதாபாய் நௌரோஜி கிழக்கிந்தியக் கழகத்தை லண்டனில் உருவாக்கினார்.
காரணம் [R]: பிரிட்டிஷ் பொதுமக்கள் கருத்தின் மீது செல்வாக்கு ஏற்படுத்த விரும்பினார்.
Correct Answer: A [[A] மற்றும் [R] சரி, மற்றும் [R], [A] க்கான சரியான விளக்கம்]
விளக்கம்:
தாதாபாய் நௌரோஜி 1866-இல் லண்டனில் கிழக்கிந்தியக் கழகத்தை நிறுவினார். இந்தியப் பிரச்சினைகளை விவாதித்து, இந்தியர் நலனுக்காகப் பிரிட்டிஷ் பொதுமக்களின் கருத்தையும் ஆட்சியாளர்களையும் செல்வாக்குக்கு உட்படுத்துவதே அதன் நோக்கம்.
35.
TNPSC – 2022
சத்தியாகிரக உத்தி பல்வேறு முறைகளை உள்ளடக்கியது. பின்வருவனவற்றுள் எது/எவை காந்தியால் சேர்க்கப்படவில்லை?
(i) உண்ணாவிரதம்
(ii) வேலை நிறுத்தம்
(iii) எரிந்த பூமி கொள்கை
(iv) நிலத்தடி நடவடிக்கைகள்
Correct Answer: B [(iii) மற்றும் (iv)]
விளக்கம்:
சத்தியாகிரகம் உண்மையும் அகிம்சையும் அடிப்படையாகக் கொண்டது; அது வெளிப்படையானது. உண்ணாவிரதம், கடையடைப்பு (ஹர்த்தால்) , மறியல், ஒத்துழையாமை, சட்டமறுப்பு ஆகியவை அதன் வழிமுறைகள்.
36.
VCGS – 2022
இந்தியாவிற்கு சுதந்திரம் தர வேண்டும் என்ற தீர்மானத்தை காங்கிரஸ் காரிய கமிட்டி ________ சந்திப்பில் நிறைவேற்றியது.
Correct Answer: B [வார்தா]
விளக்கம்:
கிரிப்ஸ் தூதுக்குழு (1942) தோல்வியடைந்த பின், 14 ஜூலை 1942 -இல் வார்தாவில் கூடிய காங்கிரஸ் காரியக் குழு , ஆங்கிலேயர் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனத் தீர்மானித்தது ('வார்தா தீர்மானம்').
37.
VCGS – 2022
தனது கவிதை தனி திறமையினால் வங்காள இலக்கியத்திற்கு புதிய வடிவம் சேர்த்தவர் யார்?
Correct Answer: B [இரவீந்திரநாத் தாகூர்]
விளக்கம்:
கவனிக்க: இவ்வினாவின் தமிழ் வடிவம் ஆங்கில வடிவத்திலிருந்து வேறுபடுகிறது (ஆங்கிலத்தில் "political genius" – அரசியல் மேதைமை; தமிழில் "கவிதைத் தனித்திறமை"); மேலே உள்ள விடை ஆங்கில வடிவப்படி. இரு வடிவங்களுக்கும் விடை ஒன்றே.
38.
VCGS – 2022
நீண்ட காலமாக இங்கிலாந்திலுள்ள இந்திய செயலருக்கு இந்திய வருவாயிலிருந்து ஊதியம் செலுத்திவரப்பட்டது. எப்பொழுது அது நிறுத்தப்பட்டது?
Correct Answer: A [1919]
விளக்கம்:
1858 சட்டத்தால் உருவான இந்தியச் செயலர் (Secretary of State for India) பதவிக்கான ஊதியம் இந்திய வருவாயிலிருந்தே வழங்கப்பட்டு வந்தது.
39.
GROUP 1 – 2022
கால வரிசைப்படி அடுக்குக
- நேரு அறிக்கை
- பூனா ஒப்பந்தம்
- சைமன் குழு
- கிரிப்ஸ் குழு
Correct Answer: C [3, 1, 2, 4]
விளக்கம்:
சைமன் குழு 1927-இல் அமைக்கப்பட்டது (1928-இல் இந்தியா வந்தது). அதற்குப் பதிலாக இந்தியர்களே அரசியலமைப்பை வரைய முடியும் என்று காட்ட மோதிலால் நேரு தலைமையில் நேரு அறிக்கை (1928) தயாரானது. பூனா ஒப்பந்தம் 1932 ; கிரிப்ஸ் தூதுக்குழு 1942 . எனவே 3, 1, 2, 4.
40.
GROUP 1 – 2022 · EO GRADE IV (HR&CE) – 2022
இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு அமர்வில் வரலாற்று சிறப்புமிக்க 'பூர்ண சுயராஜ்' அறிக்கையை வெளியிட்டது?
Correct Answer: C [1929 லாகூர்]
விளக்கம்:
டிசம்பர் 1929 லாகூர் காங்கிரஸ் , ஜவஹர்லால் நேரு தலைமையில் பூரண சுயராஜ்ஜியத்தை (முழு விடுதலை) காங்கிரசின் இலக்காக அறிவித்தது; 26 ஜனவரி 1930 நாடு முழுவதும் முதல் 'சுதந்திர நாளாக' கொண்டாடப்பட்டது. சட்டமறுப்பு இயக்கம் தொடங்கவும் இம்மாநாடு அனுமதி அளித்தது.
41.
GROUP 1 – 2022
1944-ல் இந்திய அரசாங்கம் ________ தலைமையின் கீழ் ஒரு திட்டத் துறையை ஏற்படுத்தியது.
Correct Answer: D [சர் அர்தேசிர் தலால்]
விளக்கம்:
இரண்டாம் உலகப்போர்க் காலத்தில், போருக்குப் பிந்தைய மறுசீரமைப்புக்காக 1944 -இல் இந்திய அரசு 'திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை'யை (Planning and Development Department) உருவாக்கியது; அதன் பொறுப்பாளர் சர் அர்தேசிர் தலால் .
42.
GROUP 1 – 2022
வரிசை I உடன் வரிசை II-னைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலுள்ள சரியான விடையினைத் தெரிவு செய்க:
(a) காங்கிரசு அமைச்சரவை பதவி விலகல் – 1. 1943
(b) நீல் சிலை சத்யாகிரகம் – 2. 1942
(c) வெள்ளையனே வெளியேறு தீர்மானம் – 3. 1927
(d) சுதந்திர இந்தியாவின் மாகாண [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: தற்காலிக] அரசாங்கம் – 4. 1939
Correct Answer: C [4 3 2 1]
விளக்கம்:
இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை அனுமதியின்றி ஈடுபடுத்தியதை எதிர்த்துக் காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939 -இல் பதவி விலகின. சென்னையில் நீல் சிலை அகற்றும் சத்தியாகிரகம் 1927 -இல் நடந்தது. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் 1942 .
43.
ROAD INSPECTOR – 2023
வட்டார மொழிப் பத்திரிக்கை சட்டம், லிட்டன் பிரபுவால் இயற்றப்பட்ட ஆண்டு
Correct Answer: D [1878]
விளக்கம்:
வைசிராய் லிட்டன் பிரபு 1878 -இல் வட்டார மொழிப் பத்திரிகைச் சட்டத்தை இயற்றி, அரசை விமர்சித்த இந்திய மொழி இதழ்களைக் கட்டுப்படுத்தினார்; ஆங்கில இதழ்களுக்கு இது பொருந்தவில்லை.
44.
ROAD INSPECTOR – 2023
கூற்று (A): ராம்சே மேக்டோனால்ட் வழங்கிய வகுப்புவாரி ஒதுக்கீட்டை காந்தியடிகள் எதிர்த்தார்.
காரணம் (R): டொமினியன் அந்தஸ்தை ஆங்கிலேயர்களிடம் இருந்து பெறுவதற்காக.
Correct Answer: C [கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறானது]
விளக்கம்:
1932 வகுப்புவாரி ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்குத் தனித்தொகுதி வழங்கியது. இது இந்து சமூகத்தைப் பிளவுபடுத்தும் என்று கருதிய காந்தியடிகள் அதை எதிர்த்து எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்; விளைவு பூனா ஒப்பந்தம் . எனவே கூற்று சரி.
45.
LIBRARY – 2023
இந்தியாவின் முதல் பெண் கவர்னராக, அரசியலில் ஈடுபாடு உடையவராக, இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக மற்றும் ஒரு கவிஞராகவும் திகழ்ந்தவர் ________ ஆவார்.
Correct Answer: B [சரோஜினி நாயுடு]
விளக்கம்:
'இந்தியாவின் கவிக்குயில்' சரோஜினி நாயுடு 1947-இல் ஐக்கிய மாகாணங்களின் (உத்தரப் பிரதேசம்) ஆளுநராகப் பொறுப்பேற்று இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் ஆனார். அவர் 1925 கான்பூர் காங்கிரஸ் தலைவர் ; 1930-இல் தாராசனா உப்புச் சத்தியாகிரகத்தை வழிநடத்தினார்.
46.
LIBRARY – 2023
காந்தி இர்வின் ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?
Correct Answer: A [5 மார்ச் 1931]
விளக்கம்:
காந்தி–இர்வின் ஒப்பந்தம் 5 மார்ச் 1931 -இல் கையெழுத்தானது.
47.
LIBRARY – 2023
இந்தியாவில் எப்பொழுது முதல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது?
Correct Answer: B [1920]
விளக்கம்:
ஜாலியன் வாலாபாக் படுகொலை, கிலாபத் பிரச்சினை ஆகியவற்றின் பின்னணியில் காந்தியடிகள் 1 ஆகஸ்ட் 1920 -இல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். செப்டம்பர் 1920 கல்கத்தா சிறப்பு மாநாடு அதை ஏற்றது; டிசம்பர் 1920 நாக்பூர் மாநாடு உறுதி செய்தது.
48.
LIBRARY – 2023
பொருத்துக:
(a) சம்பாரன் சத்யாகிரகம் – 1. 1919
(b) ரௌலட் சத்யாகிரகம் – 2. 1922
(c) சௌரி சௌரா – 3. 1930
(d) தண்டி சத்யாகிரகம் – 4. 1917
Correct Answer: A [4 1 2 3]
விளக்கம்:
சம்பரான் சத்தியாகிரகம் – 1917 (இந்தியாவில் காந்தியடிகளின் முதல் சத்தியாகிரகம், அவுரி விவசாயிகள்); ரௌலட் சத்தியாகிரகம் – 1919 ; சௌரி சௌரா நிகழ்வு – 5 பிப்ரவரி 1922 ; தண்டி உப்புச் சத்தியாகிரகம் – 1930 . எனவே 4 1 2 3.
49.
LIBRARY – 2023
பம்பாயில் கொடூர பிளேக் தொற்றுநோய் பரவிய ஆண்டு
Correct Answer: A [கி.பி. 1896]
விளக்கம்:
1896 -இல் பம்பாயில் புபோனிக் பிளேக் பரவி பின்னர் பூனா உள்ளிட்ட பகுதிகளுக்கும் பரவியது. பிளேக் ஒழிப்பு என்ற பெயரில் பூனாவில் பிளேக் ஆணையர் ரேண்ட் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக, 1897 -இல் சாபேகர் சகோதரர்கள் அவரைச் சுட்டுக் கொன்றனர்.
50.
ACF – 2023
பின்வருவனவற்றை காலவரன்முறைப்படுத்துக.
(i) தாதாபாய் நௌரோஜி பிரிட்டிஷ் இந்திய சங்கத்தை நிறுவினார் [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: பிரிட்டிஷ் இந்தியக் கழகம் (லண்டன், 1839) நௌரோஜியால் நிறுவப்பட்டதல்ல]
(ii) தாதாபாய் நௌரோஜி பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
(iii) கொல்கத்தாவில் நடந்த 22ஆவது காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்
(iv) லாகூரில் நடந்த 9ஆவது காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்
Correct Answer: D [(i), (ii), (iv), (iii)]
விளக்கம்:
பிரிட்டிஷ் இந்தியக் கழகம் (British India Society) 1839இல் லண்டனில் தொடங்கப்பட்டது; அதை நிறுவியவர் நௌரோஜி அல்லர். நௌரோஜி லண்டனில் நிறுவியவை லண்டன் இந்தியக் கழகம் (1865) , கிழக்கிந்தியக் கழகம் .
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய தேசிய இயக்கம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-national-movement-pyq
📘 இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 606 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 142 அட்டவணைகள் & குறிப்புகள் · 8 அலகுகள் (23 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இத்தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட பிற வரலாற்று வினா
› இந்திய தேசிய இயக்கம் PYQ – செய்தித்தாள்கள், இதழ்கள், நூல்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – பிற தலைவர்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இராஜாஜி
› இந்திய தேசிய இயக்கம் PYQ – தந்தை பெரியார்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – காமராஜர்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
