இந்திய தேசிய இயக்கம் PYQ – இந்திய தேசிய காங்கிரஸ், அகிம்சை வழிப் போராட்ட வளர்ச்சி, புரட்சிகர இயக்கங்கள் – பகுதி 2 (வினா 51–100)

← திரும்பச் செல்ல

இந்திய தேசிய இயக்கம் PYQ – இந்திய தேசிய காங்கிரஸ், அகிம்சை வழிப் போராட்ட வளர்ச்சி, புரட்சிகர இயக்கங்கள் – பகுதி 2 (வினா 51–100) – 50 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
ACF – 2023
அனைத்து இந்திய முஸ்லிம் லீக் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
(i) எல்லைப்புற மாகாணங்கள் மற்றும் பலுசிஸ்தானில் உடனடி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்
(ii) முஸ்லீம்களின் அரசியல் உரிமைகளை பாதுகாத்து மேம்படுத்துவது
(iii) இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் மற்றும் பிற சமூகங்களுக்கு இடையேயான நட்பு உணர்வுகளுக்கு எதிராக நடத்தல்
(iv) ஆங்கில அரசாங்கத்தின் மீதான விசுவாச உணர்வுகளை இந்திய முஸ்லீம்களிடையே ஊக்குவித்தல்

Correct Answer: B [(ii) மற்றும் (iv) சரி]

விளக்கம்:

1906 டிசம்பரில் டாக்காவில் தோற்றுவிக்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக்கின் நோக்கங்கள்: ஆங்கில அரசின் மீது இந்திய முஸ்லிம்களிடையே விசுவாச உணர்வை வளர்த்தல் (iv) ; முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்து மேம்படுத்துதல் (ii) ; பிற சமூகங்களிடம்…

2.  
ACF – 2023
1930ல் நடந்த சட்ட மறுப்பு இயக்கத்தின்போது மகாத்மா காந்தி கைது செய்யப்பட்ட பின் அதனை தலைமை தாங்கி நடத்திச் சென்றவர் யார்?

Correct Answer: B [அப்பாஸ் தியாப்ஜி]

விளக்கம்:

தாராசனா உப்புக் கிடங்கை முற்றுகையிடத் திட்டமிட்டிருந்த காந்தியடிகள் 5 மே 1930 -இல் கைது செய்யப்பட்டார்.

3.  
ACF – 2023
முதலாவது உலகப்போரின் போது (1914-1918) ஜெர்மனியில் தங்கியிருந்த இந்திய மாணவர்கள் எந்த அமைப்பை ஏற்படுத்தினர்?

Correct Answer: C [இந்திய சுதந்திர குழு]

விளக்கம்:

முதல் உலகப்போர்க் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்த இந்திய மாணவர்களும் அரசியல் செயல்பாட்டாளர்களும் ஜெர்மனியின் உதவியுடன் ஆங்கில ஆட்சியை எதிர்க்க 'பெர்லின் குழு' அமைத்தனர்; அது பின்னர் 'இந்திய சுதந்திரக் குழு' (Indian Independence Committee) எனப் பெயர் பெற்றது.

4.  
ACF – 2023
கீழ்காணும் காங்கிரசு மாநாடுகளை நடைபெற்ற ஆண்டுடன் பொருத்துக:
(a) கல்கத்தா மாநாடு – (1) 1885
(b) அலகாபாத் மாநாடு – (2) 1886
(c) சென்னை மாநாடு – (3) 1887
(d) மும்பை மாநாடு – (4) 1888

Correct Answer: A [(2) (4) (3) (1)]

விளக்கம்:

காங்கிரசின் முதல் மாநாடு 1885 பம்பாய் (தலைவர் W.C. பானர்ஜி); இரண்டாவது 1886 கல்கத்தா (தாதாபாய் நௌரோஜி); மூன்றாவது 1887 சென்னை (பத்ருதீன் தியாப்ஜி); நான்காவது 1888 அலகாபாத் (ஜார்ஜ் யூல்). எனவே (a)–2, (b)–4, (c)–3, (d)–1.

5.  
ACF – 2023
தவறான பொருத்தங்களை தேர்வு செய்க: பின்வருவனவற்றுள் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(i) பிரிட்டிஷ் இந்திய சங்கம் – 1851
(ii) நிலம் வைத்திருப்போர் சமூகம் – 1838
(iii) மெட்ராஸ் பூர்வீக சங்கம் – 1883
(iv) இந்திய கழகம் – 1816

Correct Answer: A [(iii) மற்றும் (iv)]

விளக்கம்:

காங்கிரசுக்கு முந்தைய அரசியல் அமைப்புகள்: நிலக்கிழார் சங்கம் (Landholders' Society) – 1838 ; பிரிட்டிஷ் இந்தியக் கழகம் – 1851 (இரண்டும் கல்கத்தா).

6.  
DEO – 2023
________ ஓர் பத்திரிக்கையாளராக பணியாற்றியதற்காக சிறைக்கு அனுப்பப்பட்ட முதல் இந்தியராவார்.

Correct Answer: D [சுரேந்திரநாத் பானர்ஜி]

விளக்கம்:

சுரேந்திரநாத் பானர்ஜி தமது 'தி பெங்காலி' (The Bengalee) இதழில், நீதிமன்றத்தில் சாலிகிராமக் கல் கொண்டுவரப்பட்டதைக் குறித்து நீதிபதியை விமர்சித்து எழுதியதற்காக 1883 -இல் நீதிமன்ற அவமதிப்புக்காகச் சிறைத் தண்டனை பெற்றார்.

7.  
DEO – 2023
இந்துஸ்தான் குடியரசு சங்கம் எங்கு இந்துஸ்தான் சமதர்ம சமூக குடியரசுச் சங்கமாக மறு சீரமைக்கப்பட்டது?

Correct Answer: A [தில்லி]

விளக்கம்:

1924 -இல் கான்பூரில் ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் (HRA) உருவானது; 1925 காக்கோரி ரயில் கொள்ளை க்குப் பின் அது ஒடுக்கப்பட்டது.

8.  
DEO – 2023
________ ல் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பின் காந்தியடிகள் ஆச்சார்யா வினோபா பாவே அவர்களை "முதல் சத்தியாகிரகி" என தேர்ந்தெடுத்தார்.

Correct Answer: B [1940-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி வார்தாவிற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில்.]

விளக்கம்:

ஆகஸ்ட் கொடையைக் காங்கிரஸ் நிராகரித்த பின் காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். போருக்கு எதிராகப் பேசி கைதாவதே அதன் முறை.

9.  
AJ – 2023 · ACF – 2023
இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர்

Correct Answer: B [பத்ருதீன் தியாப்ஜி]

விளக்கம்:

காங்கிரசின் மூன்றாவது மாநாடு 1887 -இல் சென்னையில் நடைபெற்றது; அதற்குத் தலைமை தாங்கியவர் பத்ருதீன் தியாப்ஜி – காங்கிரசின் முதல் முஸ்லிம் தலைவர் . சென்னையில் நடந்த காங்கிரசின் முதல் மாநாடும் இதுவே. C.

10.  
AJ – 2023
சவுரி சவுரா நிகழ்ந்த தற்போதைய இந்திய மாநிலம் எது?

Correct Answer: B [உத்திரப்பிரதேசம்]

விளக்கம்:

5 பிப்ரவரி 1922 -இல் ஐக்கிய மாகாணத்தின் (இன்றைய உத்தரப் பிரதேசம்) கோரக்பூர் மாவட்டத்திலுள்ள சௌரி சௌராவில் ஒத்துழையாமை இயக்க ஊர்வலத்தினர் காவல் நிலையத்துக்குத் தீ வைத்ததில் காவலர்கள் பலர் உயிரிழந்தனர்.

11.  
AJ – 2023
பிரிட்டன் மக்கள் அவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?

Correct Answer: D [தாதாபாய் நௌரோஜி]

விளக்கம்:

தாதாபாய் நௌரோஜி 1892 -இல் லண்டன் ஃபின்ஸ்பரி மத்தியத் தொகுதியிலிருந்து லிபரல் கட்சி வேட்பாளராக வென்று பிரிட்டிஷ் பொதுமக்கள் சபை (House of Commons) உறுப்பினரான முதல் இந்தியர் ஆனார்.

12.  
AJ – 2023
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளைக் கால வரிசைப்படுத்துக:
I. தண்டி யாத்திரை
II. சம்பாரன் சத்தியாகிரகம்
III. கதர் இயக்கம் [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: கதார் இயக்கம்]
IV. கிலாபத் இயக்கம்

Correct Answer: D [III, II, IV, I]

விளக்கம்:

கதார் இயக்கம் – 1913 (சான்பிரான்சிஸ்கோ); சம்பரான் சத்தியாகிரகம் – 1917 ; கிலாபத் இயக்கம் – 1919–20 (அலி சகோதரர்கள்); தண்டி யாத்திரை – 1930 . எனவே III, II, IV, I.

13.  
BURSAR – 2023
இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட ஆண்டு

Correct Answer: B [கி.பி. 1885]

விளக்கம்:

ஓய்வுபெற்ற ஆங்கில அதிகாரி A.O. ஹியூம் (ஆலன் ஆக்டேவியன் ஹியூம்) முயற்சியால் இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் 28 -இல் பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் தொடங்கியது. முதல் மாநாட்டுக்கு W.C.

14.  
CESGS – 2023
ஆலன் ஆக்டேவியன் ஹியூம் எந்த ஆண்டு, சென்னையில் பிரம்மஞான சபையின் கூட்டமொன்றிற்கு தலைமை தாங்கினார்?

Correct Answer: A [டிசம்பர் 1884]

விளக்கம்:

TN 12ஆம் வகுப்புப் பாடநூல்: பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் பணி (ICS) அதிகாரியான A.O. ஹியூம் டிசம்பர் 1884இல், சென்னையில் பிரம்மஞான சபையின் கூட்டமொன்றிற்குத் தலைமை ஏற்றிருந்தார் .

15.  
CESGS – 2023 · GROUP 1 – 2021
இரவீந்திரநாத் தாகூர் தனது அரசப் பட்டத்தை துறந்த நிகழ்ச்சி

Correct Answer: C [ஜாலியன் வாலாபாக் படுகொலை]

விளக்கம்:

13 ஏப்ரல் 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு வழங்கிய 'சர்' (Knighthood) பட்டத்தைத் துறந்தார் ; இதுகுறித்து வைசிராய் செம்ஸ்ஃபோர்டுக்குக் கடிதம் எழுதினார். மாப்ளா கலகம் (1921), சௌரி சௌரா (1922) பிற்பட்ட நிகழ்வுகள்.

16.  
CESGS – 2023
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?

Correct Answer: A [உஷா மேத்தா]

விளக்கம்:

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது உஷா மேத்தா பம்பாயில் ரகசியமாக 'காங்கிரஸ் வானொலி' நிலையத்தை நடத்தினார்; ராம் மனோகர் லோகியா அதில் வழக்கமாக உரையாற்றினார். நவம்பர் 1942 -இல் உஷா மேத்தா கைது செய்யப்பட்டார்.

17.  
CSSS & SUB INSPECTOR FISHERY – 2023
இந்திய தேசிய இராணுவத்தின் மீது விசாரணை நடைபெற்ற இடம் ________ ஆகும்.

Correct Answer: B [செங்கோட்டை]

விளக்கம்:

இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1945 -இல் INA அதிகாரிகள் ஷா நவாஸ் கான், பிரேம் குமார் செகல், குர்பக்ஷ் சிங் தில்லான் ஆகியோர் மீது டெல்லி செங்கோட்டையில் விசாரணை நடந்தது. புலாபாய் தேசாய், ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோர் அவர்களுக்காக வாதாடினர்.

18.  
CSSS & SUB INSPECTOR FISHERY – 2023
"அமர் சோனார் பங்களா" என்ற வங்காள தேசிய கீதத்தை இயற்றியவர் யார்?

Correct Answer: C [இரவீந்திரநாத் தாகூர்]

விளக்கம்:

"அமர் சோனார் பங்களா" (என் பொன்னான வங்காளம்) பாடலை இரவீந்திரநாத் தாகூர் 1905 வங்கப் பிரிவினை எதிர்ப்பு (சுதேசி) இயக்கக் காலத்தில் இயற்றினார்; வங்காளதேசம் இப்பாடலைத் தன் நாட்டுப்பண்ணாக ஏற்றுக்கொண்டது. இந்தியாவின் நாட்டுப்பண் 'ஜன கண மன'வும் தாகூர் இயற்றியதே.

19.  
CSSS & SUB INSPECTOR FISHERY – 2023
1933-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் நாள் எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?

Correct Answer: A [கோவில் நுழைவு நாள்]

விளக்கம்:

பூனா ஒப்பந்தத்துக்குப் பின் காந்தியடிகள் அரிஜன சேவா சங்கத்தை அமைத்து தீண்டாமை ஒழிப்புப் பரப்புரையில் ஈடுபட்டார். கோவில் நுழைவுப் போராட்டம் அதன் முக்கியப் பகுதி; 1933 ஜனவரி 8-ஆம் நாள் 'கோவில் நுழைவு நாள்' என அனுசரிக்கப்பட்டது (10-ஆம் வகுப்புப் பாடநூல்).

20.  
CSSS & SUB INSPECTOR FISHERY – 2023
இந்திய தேசிய காங்கிரசால் பூரண சுதந்திர நாளாகக் கொண்டாடிய நாள்

Correct Answer: A [ஜனவரி 26, 1930]

விளக்கம்:

1929 லாகூர் காங்கிரஸ் பூரண சுயராஜ்ஜியத்தை இலக்காக அறிவித்தது. அதன்படி 26 ஜனவரி 1930 நாடு முழுவதும் 'பூரண சுயராஜ்ஜிய நாளாக' (சுதந்திர நாளாக) கொண்டாடப்பட்டு, விடுதலை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

21.  
MAY – 2023
கூற்று [A]: "வந்தே மாதரம்" என்பது போராட்டத்திற்கான முழக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
காரணம் [R]: வங்காளப் பிரிவினைக்கு எதிரான சுதேசி இயக்கத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Correct Answer: B [[A] மற்றும் [R] சரி, [R] என்பது [A]-வின் சரியான விளக்கமாகும்]

விளக்கம்:

பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் "ஆனந்த மடம்" நாவலில் இடம்பெற்ற "வந்தே மாதரம்" பாடல், 1905 வங்காளப் பிரிவினைக்கு எதிரான சுதேசி இயக்கத்தின்போது போராட்ட முழக்கமாக மாறியது. எனவே கூற்று, காரணம் இரண்டும் சரி; அது முழக்கமாக ஏற்கப்பட்டது ஏன் என்பதைக் காரணமே விளக்குகிறது.

22.  
MAY – 2023
காங்கிரஸ் கட்சியின் வானொலியில் பணியாற்றிய, திடுக்கிடும் செய்தியை வாசிப்பதில் தேர்ச்சிபெற்ற [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: வியக்கத்தக்க வளமான குரல் கொண்ட], நேர்த்தியான வார்த்தை உச்சரிப்பைக் கொண்ட பெண்மணி

Correct Answer: C [உஷா மேத்தா]

விளக்கம்:

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது (1942) பம்பாயிலிருந்து ரகசியமாக இயங்கிய "காங்கிரஸ் வானொலி"யின் குரலாக ஒலித்தவர் உஷா மேத்தா . தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இயக்கச் செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்க இவ்வானொலி பயன்பட்டது.

23.  
GROUP 3A – 2023
பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) சம்பரான் சத்தியாகிரகம் – 1. 1922
(b) வகுப்புவாத விருது – 2. 1932
(c) அகமதாபாத் ஆலைத்தொழிலாளர் வேலைநிறுத்தம் – 3. 1918
(d) பர்தோலி தீர்மானம் – 4. 1917

Correct Answer: A [4 2 3 1]

விளக்கம்:

சம்பரான் சத்தியாகிரகம் – 1917 , அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் வேலைநிறுத்தம் – 1918 ஆகியவை காந்தியடிகளின் தொடக்க காலப் போராட்டங்கள். சௌரி சௌரா நிகழ்வுக்குப் பின் (1922) ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தும் முடிவு பர்தோலி தீர்மானம் மூலம் எடுக்கப்பட்டது.

24.  
GROUP 3A – 2023
1931ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தலைமை வகித்தவர்

Correct Answer: B [வல்லபாய் படேல்]

விளக்கம்:

1931 மார்ச் கராச்சி காங்கிரஸ் மாநாட்டுக்கு வல்லபாய் படேல் தலைமை வகித்தார் . இம்மாநாடு காந்தி–இர்வின் ஒப்பந்தத்தை ஏற்றது; அடிப்படை உரிமைகள், தேசியப் பொருளாதாரத் திட்டம் குறித்த தீர்மானத்தையும் நிறைவேற்றியது.

25.  
HEALTH OFFICER – 2023
சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் ________ கட்சியின் போர் அமைச்சரவையின் பிரதிநிதியாக இருந்தார்.

Correct Answer: A [தொழிலாளர் கட்சி]

விளக்கம்:

சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவையில் தொழிலாளர் கட்சியின் சார்பில் பங்கு வகித்தவர் சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் ; இதுவே கிரிப்ஸ் தூதுக்குழு மீது இந்தியத் தலைவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியது (TN 12ஆம் வகுப்பு). அவர் தலைமையிலான குழு மார்ச் 1942இல் இந்தியா வந்தது.

26.  
HEALTH OFFICER – 2023
பின்வருவனவற்றில் எது பொருத்தமற்றதாக உள்ளது?

Correct Answer: D [நேரு அறிக்கை – 1946]

விளக்கம்:

நேரு அறிக்கை 1928இல் மோதிலால் நேரு தலைமையிலான குழுவால் தயாரிக்கப்பட்டது; 1946 அல்ல. எனவே (D) தவறான இணை. பிற மூன்று இணைகளும் சரி. 1946இல் நடந்தது அமைச்சரவைத் தூதுக்குழு (Cabinet Mission) வருகை.

27.  
HEALTH OFFICER – 2023
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியச் சுதந்திரச் சட்டம் எப்பொழுது இயற்றப்பட்டது?

Correct Answer: C [ஜூலை 1947]

விளக்கம்:

மௌண்ட்பேட்டன் திட்டம் 3 ஜூன் 1947 அன்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய விடுதலைச் சட்டத்தை ஜூலை 1947இல் இயற்றியது (அரசு ஒப்புதல் 18 ஜூலை 1947).

28.  
HEALTH OFFICER – 2023 · EO GRADE III (HR&CE) – 2022
இந்தியாவில் முதன்முறையாகத் தனி வாக்காளர் முறை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு சட்டம்

Correct Answer: A [1909ஆம் ஆண்டு சட்டம்]

விளக்கம்:

1909ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் (மிண்டோ–மார்லி சீர்திருத்தம்) முஸ்லிம்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகளை முதன்முதலில் வழங்கியது.

29.  
FISHERY DEPT – 2023
இந்திய தேசிய காங்கிரசின் 'பாதுகாப்பு வால்வு கோட்பாடு' என்ற கருத்து எங்கிருந்து உருவானது?

Correct Answer: B [வில்லியம் வெடர்பர்ன்]

விளக்கம்:

A.O. ஹியூம், அதிகரித்துவந்த மக்கள் அதிருப்தி வன்முறையாக வெடிக்காமல் வெளியேறும் "பாதுகாப்பு வால்வாக" காங்கிரசை உருவாக்கினார் என்ற கருத்து, வில்லியம் வெடர்பர்ன் எழுதிய ஹியூமின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து (1913) உருவானது. W.C.

30.  
FISHERY DEPT – 2023
வேலன்டைன் சிரோல் என்பவரால் 'இந்திய கிளர்ச்சியின் தந்தை' என்று அழைக்கப்பட்டவர் யார்?

Correct Answer: D [பால கங்காதர திலகர்]

விளக்கம்:

ஆங்கிலேய இதழாளர் வேலன்டைன் சிரோல் தமது "Indian Unrest" நூலில் பால கங்காதர திலகரை "இந்திய அமைதியின்மையின் தந்தை" என்று குறிப்பிட்டார். "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை" என முழங்கிய திலகர் கேசரி (மராத்தி), மராட்டா (ஆங்கிலம்) இதழ்களை நடத்தினார்.

31.  
VETERINARY ASSISTANT – 2023
ஒத்துழையாமை இயக்கத்தின் போது காந்திஜி எந்தப் பட்டத்தைத் திருப்பி அளித்தார்?

Correct Answer: C [கெய்சர்-இ-ஹிந்த்]

விளக்கம்:

தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காகக் காந்தியடிகளுக்கு வழங்கப்பட்ட கெய்சர்-இ-ஹிந்த் தங்கப்பதக்கத்தை , ஒத்துழையாமை இயக்கத்தின்போது அவர் திருப்பிக் கொடுத்தார்.

32.  
VETERINARY ASSISTANT – 2023
இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' முதன்முதலில் பாடப்பட்டது?

Correct Answer: D [கல்கத்தா - 1896]

விளக்கம்:

1896ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இரவீந்திரநாத் தாகூர் "வந்தே மாதரம்" பாடலை முதன்முதலில் பாடினார். இப்பாடல் பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் "ஆனந்த மடம்" நாவலில் இடம்பெற்றது.

33.  
JSO – 2023
1946-இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிடம் அதிகாரம் தரப்படுமேயானால் அதன் விளைவு வங்காளத்தில் பூர்ண சுதந்திரம் அறிவிப்பது மட்டுமின்றி ஓர் இணையான அரசாங்கம் அமைக்கப்படும் என்று யார் கூறியது?

Correct Answer: C [சுஹ்ரவர்தி]

விளக்கம்:

1946 ஆகஸ்டில் வைஸ்ராய், முஸ்லிம் லீக் இன்றி காங்கிரசை மட்டும் இடைக்கால அரசை அமைக்க அழைத்தார். அப்போது வங்காள முஸ்லிம் லீக் அமைச்சரவையின் தலைவரான H.S.

34.  
COMBINED RESEARCH ASSISTANT – 2023
இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு பூனாவிலிருந்து பம்பாய்க்கு மாற்றப்பட்டது தொடர்பாகப் பின்வரும் காரணங்களில் சரியானது எது?

Correct Answer: A [பூனா காலரா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது]

விளக்கம்:

காங்கிரசின் முதல் மாநாடு பூனாவில் நடத்தத் திட்டமிடப்பட்டது; ஆனால் அங்கு காலரா நோய் பரவியதால் இடம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது. மாநாடு 1885 டிசம்பர் 28 அன்று பம்பாயில் W.C. பானர்ஜி தலைமையில் நடைபெற்றது.

35.  
ASSISTANT TRAINING OFFICER TEXTILE DEPT – 2023
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய நோக்கங்களும் கோரிக்கைகளும்:
(i) அரசில் இந்தியப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்.
(ii) நாட்டில் தேசிய ஒற்றுமை உணர்வை ஊக்குவித்தல்.
(iii) நாட்டில் பொதுக் கருத்தை ஒழுங்கமைக்கவும் பயிற்றுவிக்கவும்.

Correct Answer: C [(i), (ii) மற்றும் (iii)]

விளக்கம்:

தொடக்க காலக் காங்கிரஸ் அரசில் இந்தியப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் எனக் கோரியது; இந்தியாவை ஒரே நாடாக ஒருங்கிணைத்து தேசிய ஒற்றுமை உணர்வை வளர்ப்பது அதன் இன்றியமையா நோக்கம் (TN 12ஆம் வகுப்பு).

36.  
ASSISTANT TRAINING OFFICER TEXTILE DEPT – 2023
இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவினைத் தலைமை தாங்கியவர்

Correct Answer: C [டாக்டர் லட்சுமி]

விளக்கம்:

இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவான ஜான்சி ராணி படைப்பிரிவு க்குத் தலைமை தாங்கியவர் மருத்துவர் கேப்டன் லட்சுமி செகல் (TN 10ஆம் வகுப்பு). 1857 புரட்சியின் வீராங்கனை ராணி லட்சுமிபாயின் பெயர் இப்படைக்குச் சூட்டப்பட்டது.

37.  
GROUP 1 – 2024 · RESEARCH ASSISTANT TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE – 2023
முதன்முதலாக "ஜன கண மன" எனும் பாடல் இந்திய தேசிய காங்கிரசின் எந்த மாநாட்டில் பாடப்பட்டது?

Correct Answer: C [1911 கல்கத்தா மாநாட்டில்]

விளக்கம்:

இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய "ஜன கண மன" பாடல், 27 டிசம்பர் 1911 அன்று கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலில் பாடப்பட்டது. இது 24 ஜனவரி 1950 அன்று அரசியலமைப்பு நிர்ணய சபையால் இந்தியாவின் நாட்டுப்பண்ணாக ஏற்கப்பட்டது.

38.  
RESEARCH ASSISTANT TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE – 2023
கூற்று [A]: காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப்பெற முடிவு செய்தார்.
காரணம் [R]: மக்களால் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடத்தப்பட்டன; குறிப்பாக 1922-ல் சௌரி சௌரா சம்பவம் நடத்தப்பட்டது.

Correct Answer: C [[A] மற்றும் [R] சரியானவை, [R] கூற்று [A]க்குச் சரியான விளக்கமாகும்]

விளக்கம்:

1922 பிப்ரவரி 5 அன்று உத்தரப்பிரதேசத்தின் சௌரி சௌராவில் வன்முறைக் கும்பல் காவல் நிலையத்துக்குத் தீ வைத்ததில் 22 காவலர்கள் உயிரிழந்தனர்.

39.  
RESEARCH ASSISTANT TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE – 2023
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளைக் கால வரிசைப்படி எழுதுக:
(I) கிரிப்ஸ் தூதுக்குழு
(II) தண்டி யாத்திரை
(III) காந்தி இர்வின் ஒப்பந்தம்
(IV) முதல் வட்டமேசை மாநாடு

Correct Answer: B [II, IV, III, I]

விளக்கம்:

தண்டி யாத்திரை (மார்ச்–ஏப்ரல் 1930) → முதல் வட்டமேசை மாநாடு (நவம்பர் 1930, லண்டன்; காங்கிரஸ் புறக்கணிப்பு) → காந்தி–இர்வின் ஒப்பந்தம் (மார்ச் 1931) → கிரிப்ஸ் தூதுக்குழு (மார்ச் 1942) . எனவே II, IV, III, I.

40.  
JUNIOR ANALYST TN MEDICAL SERVICE – 2023
பின்வரும் நிகழ்வுகளைச் சரியான கால வரிசைப்படி அமைத்து, கொடுக்கப்பட்டுள்ள விடைகளிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) சம்பரான் சத்தியாகிரகம்
(ii) மகத் சத்தியாகிரகம்
(iii) தண்டி உப்புச் சத்தியாகிரகம்
(iv) கேதா சத்தியாகிரகம்

Correct Answer: C [(i), (iv), (ii), (iii)]

விளக்கம்:

சம்பரான் (1917) → கேதா (1918) → மஹத் சத்தியாகிரகம் (1927) → தண்டி உப்புச் சத்தியாகிரகம் (1930) . மஹத் சத்தியாகிரகம், மகாராஷ்டிரத்தின் மஹத் நகரில் பொதுக் குளத்தில் (சவுதார் குளம்) தாழ்த்தப்பட்டோருக்கு நீர் எடுக்கும் உரிமைக்காக அம்பேத்கர் தலைமையில் நடந்தது.

41.  
MASS INTERVIEWER – 2023
பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) சிட்டகாங் ஆயுதக்கிடங்குத் தாக்குதல் – 1. எம்.என். ராய்
(b) கான்பூர் சதி வழக்கு – 2. பெஞ்சமின் பிராட்லி
(c) லாகூர் சதி வழக்கு – 3. கல்பனா தத்
(d) மீரட் சதி வழக்கு – 4. பகத் சிங்

Correct Answer: B [3 1 4 2]

விளக்கம்:

சிட்டகாங் ஆயுதக்கிடங்குத் தாக்குதல் (18 ஏப்ரல் 1930) – சூரியா சென் தலைமையிலான இந்தியக் குடியரசு இராணுவம் நடத்தியது; கல்பனா தத் அக்குழுவைச் சேர்ந்த புரட்சியாளர் (TN 12ஆம் வகுப்பு). கான்பூர் (போல்ஷெவிக்) சதி வழக்கு (1924) – M.N.

42.  
MASS INTERVIEWER – 2023
கீழ்க்கண்டவற்றில் இந்தியாவில் ஆங்கில அரசிற்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட தொழிலாளர்களின் முதல் வேலைநிறுத்தங்களில் ஒன்று எது?

Correct Answer: C [கோரல் நூற்பாலை வேலைநிறுத்தம்]

விளக்கம்:

தூத்துக்குடியில் ஐரோப்பியருக்குச் சொந்தமான கோரல் பருத்தி நூற்பாலைத் தொழிலாளர்கள் 1908இல் வ.உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா ஆகியோரின் உரைகளால் தூண்டப்பெற்று வேலைநிறுத்தம் செய்தனர்.

43.  
COMBINED ENGINEER – 2024
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க:
(a) கிழக்கிந்திய அசோசியேஷன் – 1. 1885
(b) சென்னைவாசிகள் சங்கம் – 2. 1884
(c) சென்னை மகாஜன சபை – 3. 1852
(d) இந்திய தேசிய காங்கிரஸ் – 4. 1866

Correct Answer: D [4 3 2 1]

விளக்கம்:

சென்னைவாசிகள் சங்கம் – 1852 (கஜுலு லட்சுமிநரசு உள்ளிட்டோர்), கிழக்கிந்திய அசோசியேஷன் – 1866 (லண்டனில் தாதாபாய் நௌரோஜி), சென்னை மகாஜன சபை – 1884 , இந்திய தேசிய காங்கிரஸ் – 1885 (பம்பாய்). எனவே a-4, b-3, c-2, d-1.

44.  
COMBINED ENGINEER – 2024
பின்வரும் காரணங்களுக்காக 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் காங்கிரசு 'வெள்ளையனே வெளியேறு' தீர்மானத்தை இயற்றியது:
(i) கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்வியினால்
(ii) இந்தியாவை நோக்கி ஜப்பானியப் படைகள் புறப்பட்டதனால்
(iii) ஜின்னாவின் கோரிக்கைக்காக
(iv) ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் விடுதலைக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்துவதற்காக
(v) சோவியத் யூனியனை ஆதரிப்பதற்காக

Correct Answer: A [(i), (ii) மற்றும் (iv) சரியானவை]

விளக்கம்:

கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்வி , பர்மா வரை முன்னேறிய ஜப்பானியப் படைகளின் அச்சுறுத்தல் , உடனடி விடுதலையை ஏற்கும்படி ஆங்கிலேயரைக் கட்டாயப்படுத்தும் நோக்கம் ஆகியவையே 1942 ஆகஸ்ட் 8 அன்று பம்பாயில் "வெள்ளையனே வெளியேறு" தீர்மானம் நிறைவேறக் காரணங்கள்.

45.  
COMBINED ENGINEER – 2024
பின்வரும் பத்தியைப் படித்துப் பதிலளிக்கவும். பதில்கள் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
"தென் இந்தியாவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம், இயக்கத்தின் புயல் மையமாக இருந்தது. கொல்லங்கோட்டில் ஊர்வலமாகச் சென்ற மாணவர்கள் தங்கள் சட்டைப் பொத்தான்களைக் கழற்றி, காவல்துறையின் தோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கிகளுக்கு மார்பைக் காட்டினர். தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற பக்கிங்ஹாம் மற்றும் மெட்ராஸில் உள்ள கர்நாடக ஆலைகள் உட்படக் கிட்டத்தட்ட அனைத்து ஆலைகளும் வேலைநிறுத்தம் செய்தன. கோயம்புத்தூரில் உள்ள இராணுவ விமான நிலையமும் முற்றிலும் எரித்து நாசமாக்கப்பட்டது."
பின்வரும் எந்த இயக்கம் இந்தப் பத்திக்கு மிகவும் பொருத்தமானது?

Correct Answer: B [வெள்ளையனே வெளியேறு இயக்கம்]

விளக்கம்:

தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட பின் மக்களே தன்னெழுச்சியாக நடத்திய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் (1942) தென்னிந்திய நிகழ்வுகளை இப்பத்தி விவரிக்கிறது.

46.  
COMBINED ENGINEER – 2024
பின்வருபவனவற்றுள் கான் அப்துல் கஃபார் கான் பற்றிய உண்மையான கூற்றுகள் எவை?
  1. கான் அப்துல் கஃபார் கான் ஒரு பஷ்தூன் தலைவர்
  1. கான் அப்துல் கஃபார் கான் பாட்ஷா கான் என்று அழைக்கப்படுகிறார்
  1. கான் அப்துல் கஃபார் கான் எல்லைக் காந்தி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார்
  1. கான் அப்துல் கஃபார் கான், குடை கிட்மட்கர் அமைப்பை நிறுவியவர்

Correct Answer: D [1, 2, 3 மற்றும் 4 சரியானவை]

விளக்கம்:

வடமேற்கு எல்லை மாகாணத்தைச் சேர்ந்த பஷ்தூன் (பதான்) தலைவர் கான் அப்துல் கஃபார் கான் , "பாட்ஷா கான்" , "எல்லைக் காந்தி" என அழைக்கப்பட்டார்.

47.  
EO GRADE I (HR&CE) – 2024
(i) இந்திய தேசிய காங்கிரஸ் கி.பி. 1885இல் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் நிறுவப்பட்டது
(ii) இதன் நிறுவனர்களில் ஆலன் ஆக்டேவியன் ஹியூம், தாதாபாய் நௌரோஜி மற்றும் தின்ஷா வாச்சா ஆகியோர் அடங்குவர்
(iii) இது இந்தியப் பொருளாதார இயக்கத்தில் ஒரு முக்கியப் பங்கேற்பாளராக மாறியது
மேலே காணப்படும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?

Correct Answer: D [(i) மற்றும் (ii) மட்டும்]

விளக்கம்:

இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் 28 அன்று பம்பாயில் தொடங்கப்பட்டது – (i) சரி. A.O. ஹியூம், தாதாபாய் நௌரோஜி, தீன்ஷா வாச்சா ஆகியோர் அதன் நிறுவனர்களில் அடங்குவர் – (ii) சரி.

48.  
EO GRADE I (HR&CE) – 2024
1931இல் நடந்த இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் இந்தியாவின் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதி யார்?

Correct Answer: A [சரோஜினி நாயுடு]

விளக்கம்:

இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் (லண்டன், 1931) காங்கிரசின் ஒரே அதிகாரபூர்வப் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட காந்தியடிகளுடன் சரோஜினி நாயுடு சென்றார்; அவர் இந்தியப் பெண்களின் பிரதிநிதியாக மாநாட்டில் பங்கேற்றார்.

49.  
HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINER – 2024
சூரத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் காங்கிரசின் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

Correct Answer: D [லாலா லஜபதி ராய்]

விளக்கம்:

காங்கிரசின் அடுத்த தலைவர் பொறுப்புக்கு மிதவாதிகளின் வேட்பாளரான ராஷ்பிகாரி கோஷுக்கு எதிராகத் தீவிர தேசியவாதிகள் லாலா லஜபதி ராயின் பெயரை முன்மொழிந்தனர் (TN 12ஆம் வகுப்பு).

50.  
HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINER – 2024
கீழ்க்காணும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக.
  1. வங்கப்பிரிவினை
  1. ஒத்துழையாமை இயக்கம்
  1. கிலாபத் இயக்கம்
  1. சூரத் பிளவு

Correct Answer: D [1 4 3 2]

விளக்கம்:

வங்கப் பிரிவினை (1905) → சூரத் பிளவு (1907) → கிலாபத் இயக்கம் (1919) → ஒத்துழையாமை இயக்கம் (1920) .

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய தேசிய இயக்கம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-national-movement-pyq

📘 இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 606 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 142 அட்டவணைகள் & குறிப்புகள் · 8 அலகுகள் (23 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இத்தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட பிற வரலாற்று வினா › இந்திய தேசிய இயக்கம் PYQ – செய்தித்தாள்கள், இதழ்கள், நூல்கள் › இந்திய தேசிய இயக்கம் PYQ – பிற தலைவர்கள் › இந்திய தேசிய இயக்கம் PYQ – இராஜாஜி › இந்திய தேசிய இயக்கம் PYQ – தந்தை பெரியார் › இந்திய தேசிய இயக்கம் PYQ – காமராஜர்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0