இந்திய தேசிய இயக்கம் PYQ – விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – பகுதி 1 (வினா 1–32)
← திரும்பச் செல்ல
செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் 17 ஜூன் 1911இல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் W.D.E. ஆஷை மணியாச்சி ரயில் சந்திப்பில் சுட்டுக் கொன்றார் (பத்தாம் வகுப்புப் பாடநூல்).
₹299 →
இந்திய தேசிய இயக்கம் PYQ – விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – பகுதி 1 (வினா 1–32) – 29 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
GROUP 2 & 2A MAINS (ரத்தான தேர்வு) – 2026
பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?
(1) பாளையக்காரர் முறை 1585இல் துவங்கியது
(2) வேலு நாச்சியார் இராமநாதபுரம் அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார்
(3) அக்டோபர் 16, 1789இல் கட்டபொம்மன் கயத்தாறு பழைய கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்
(4) தென் இந்திய கிளர்ச்சி, 1801
Correct Answer: D [(1) மற்றும் (3)]
விளக்கம்:
பாளையக்காரர் முறையை 1529இல் பதவியேற்ற மதுரை நாயக்கர் விஸ்வநாத நாயக்கர் தம் அமைச்சர் அரியநாதரின் உதவியோடு தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார் – 1585 அல்ல.
2.
GROUP 1 – 2022
கீழ்க்கண்ட வாக்கியங்களில் மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன் பற்றிய சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரசியல் சார்ந்த அமைப்பு
(ii) இது 1852ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது
(iii) மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் நிறுவனர் ஜி. லஷ்மிநரசு செட்டி
(iv) மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் தலைவர் அனந்தாச்சார்லு
Correct Answer: C [(ii) மற்றும் (iii) மட்டும்]
விளக்கம்:
சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association – MNA) 1852இல் கஜுலு லட்சுமிநரசு மற்றும் அவரைச் சார்ந்தோரால் நிறுவப்பட்டது (பத்தாம் வகுப்புப் பாடநூல்). எனவே (ii), (iii) சரி.
3.
ROAD INSPECTOR – 2023
பொருத்துக:
(a) திராவிடர் இல்லம் – 1. மறைமலையடிகள்
(b) தொழிலாளன் – 2. இரட்டைமலை சீனிவாசன்
(c) தனித்தமிழ் இயக்கம் – 3. சிங்காரவேலர்
(d) ஜீவிய சரித சுருக்கம் – 4. நடேசனார்
Correct Answer: A [4 3 1 2]
விளக்கம்:
பத்தாம் வகுப்புப் பாடநூலின்படி: சி. நடேசனார் பிராமணர் அல்லாத மாணவர்களுக்காக ஜூலை 1916இல் திருவல்லிக்கேணியில் திராவிடர் இல்லம் என்ற தங்கும் விடுதியை நிறுவினார் (4). ம. சிங்காரவேலர் தொழிலாளர் சிக்கல்களை வெளிப்படுத்த தொழிலாளன் இதழை வெளியிட்டார் (3).
4.
ROAD INSPECTOR – 2023
கேப்டன் லட்சுமி செகல் எங்கு பிறந்தவர்?
Correct Answer: A [சென்னை]
விளக்கம்:
கேப்டன் லட்சுமி செகல் (லட்சுமி சுவாமிநாதன்) 24 அக்டோபர் 1914இல் சென்னையில் (மதராஸ்) பிறந்தார்.
5.
ACF – 2023
ஜீவானந்தம் குறித்த தகவல்களில் சரியானவை
(i) ஜீவானந்தம் "உண்மை விளக்க நிலையம்" என்னும் ஆசிரமத்தைத் தோற்றுவித்தார்.
(ii) இவர் சுசீந்திரத்தில் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
(iii) ஜீவானந்தம் காந்தி ஆசிரமத்தைச் சிறுவயலில் நிறுவவில்லை.
(iv) இவர் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
Correct Answer: D [(i) மற்றும் (iv) மட்டும்]
விளக்கம்:
ப. ஜீவானந்தம் இளமையில் காந்தியவாதியாகப் பொதுவாழ்வைத் தொடங்கினார். 1924 வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார் – (iv) சரி. சுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்டத்திலும் கலந்துகொண்டார் – எனவே "கலந்துகொள்ளவில்லை" என்ற (ii) தவறு.
6.
ACF – 2023
நந்தி மலையில் யார் தனது அரசியல் வாழ்விற்குப் பிறகு ஆசிரமத்தை நிறுவியது?
Correct Answer: B [நீலகண்ட பிரம்மச்சாரி]
விளக்கம்:
நீலகண்ட பிரம்மச்சாரி 1904இல் வேறு சிலருடன் இணைந்து பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை உருவாக்கினார் (பத்தாம் வகுப்புப் பாடநூல்); இவ்வமைப்பால் ஈர்க்கப்பட்டவரே ஆஷைச் சுட்ட வாஞ்சிநாதன் .
7.
DEO – 2023
பட்டியல் I இல் உள்ளதைப் பட்டியல் II உடன் பொருத்துக.
(a) பூலித்தேவர் – 1. சிறுவயல்
(b) மருது சகோதரர்கள் – 2. திண்டுக்கல்
(c) கோபால நாயக்கர் – 3. ஆனைமலை
(d) யாதுல் நாயக்கர் – 4. நெற்கட்டும்செவல்
Correct Answer: B [4 1 2 3]
விளக்கம்:
பத்தாம் வகுப்புப் பாடநூலின்படி: பூலித்தேவர் – நெற்கட்டும்செவல் (இன்றைய தென்காசி மாவட்டம்) (4); மருது சகோதரர்கள் – தலைமையிடம் சிறுவயல் (1); கோபால நாயக்கர் – விருப்பாட்சிப் பாளையக்காரர், திண்டுக்கல் கூட்டமைப்பின் தலைவர் (2); யதுல் நாயக்கர் – ஆனைமலை (3).
8.
DEO – 2023
கூற்று [A]: சுதேசி இயக்கத்துடன் தமிழகத்தில் தீவிரவாதமும் தலைதூக்கியது.
காரணம் [R]: சுதேசி இயக்கத் தலைவர்கள் மக்கள் தலைவர்களாக மாறினர்; அவர்களின் பேச்சும் எழுத்தும் மக்களை எழுச்சியுறச் செய்தன.
Correct Answer: B [[A] மற்றும் [R] சரி; மேலும் [R], [A] விற்கான சரியான விளக்கம்]
விளக்கம்:
வங்கப் பிரிவினை (1905) சுதேசி இயக்கத்துக்கு இட்டுச் சென்று விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றியது. தமிழ்நாட்டில் வ.உ. சிதம்பரனார், V.
9.
DEO – 2023
1884ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மெட்ராஸ் மஹாஜன சபா, கீழ்க்கண்டவற்றில் எதைக் கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்டது?
Correct Answer: C [அரசியல் கல்வி புகட்டுவதற்காக]
விளக்கம்:
சென்னை மகாஜன சபை (16 மே 1884) தென்னிந்தியாவில் தெளிவான தேசிய (அரசியல்) நோக்கங்களுடன் தொடங்கப்பெற்ற தொடக்க கால அமைப்பு.
10.
DEO – 2023
தில்லையாடி வள்ளியம்மை பற்றி சரியான கூற்றைக் கூறுக.
(i) தென் ஆப்பிரிக்காவில் இனப் பாகுபாட்டிற்கு எதிராகத் தனது 16 வயதில் பங்கெடுத்தவர்
(ii) காந்தியோடு ஆரம்பகாலத்தில் வேலை செய்தவர்
(iii) இனப் பாகுபாட்டிற்கு எதிராக நடந்த போராட்டத்திலேயே இறந்து போனவர்
Correct Answer: B [(i), (ii) மற்றும் (iii) சரி]
விளக்கம்:
தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிறந்த தமிழ்ப் பெண்.
11.
DEO – 2023
கீழ்க்காணும் இவை ஏதும் வைக்கம் சத்தியாகிரகத்திற்கு காரணமல்ல. [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: கீழ்க்காணும் இவற்றில் வைக்கம் சத்தியாகிரகத்திற்கான காரணங்கள் எவை?]
(i) கேரளாவில் இருந்த ஈழவர்கள் மற்றும் இதர தீண்டத்தகாதோர் உரிமைகளை மீட்டெடுக்க
(ii) கேரளாவில் உள்ள ஈழவர்கள் மற்றும் இதர தீண்டத்தகாதோர் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை
(iii) கேரளாவில் உள்ள ஈழவர்கள் மற்றும் இதர தீண்டத்தகாதோர் பொது இடங்களில் அனுமதிக்காததை கண்டித்து
(iv) ஆங்கிலேயர்கள் கேரளா காங்கிரஸை தடை செய்ததை கண்டித்து
Correct Answer: C [(i), (ii) மற்றும் (iii) சரி]
விளக்கம்:
வைக்கம் – அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் (ஒரு சுதேச அரசு; இன்றைய கேரளம்) ஒரு நகரம்.
12.
AJ – 2023
I. பிராமணர்கள் நவீன கல்வியினால் அதிக நன்மை அடைந்தனர்; அதன்மூலம் அதிகமான அரசு வேலைகள் பெற்றனர் என்பது பிராமணர் அல்லாதோர் இயக்கம் தென்னிந்தியாவில் உருவாகக் காரணங்களில் ஒன்று.
II. ஆகையினால், அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கைகள் வலுவாயின.
பின்வரும் கூற்றுகளில் சரியானது எது / எவை?
Correct Answer: C [I மற்றும் II]
விளக்கம்:
ஆங்கிலக் கல்வியின் பயனைப் பெருமளவு பெற்ற பிராமணர்கள் அரசுப் பணிகளிலும் கல்வியிலும் மேலாதிக்கம் பெற்றிருந்தனர்; இதற்கு எதிராகப் பிராமணர் அல்லாதோர் தங்களை அரசியல் அமைப்பாக அணிதிரட்டிக்கொண்டனர் (கூற்று I).
13.
AJ – 2023
1920இல் சட்டமன்ற மேலவையில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியல் சாதியைச் சேர்ந்த முதல் பிரதிநிதி
Correct Answer: A [எம்.சி. ராஜா]
விளக்கம்:
எம்.சி. ராஜா (மயிலை சின்னதம்பி ராஜா, 1883–1943) ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்டமேலவைக்கு வந்த முதல் உறுப்பினர் (1920–1926) ; சென்னை சட்டமன்றத்தில் நீதிக்கட்சியின் துணைத் தலைவராகச் செயல்பட்டார்; தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர்…
14.
CESGS – 2023
சரியான விடையைத் தேர்வு செய்க: சென்னைவாசிகள் சங்கம், தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட ஆண்டு
Correct Answer: B [1852]
விளக்கம்:
சென்னைவாசிகள் சங்கம் 1852இல் கஜுலு லட்சுமிநரசு உள்ளிட்டோரால் நிறுவப்பட்டது; இதில் வணிகர்களே அதிக எண்ணிக்கையில் அங்கம் வகித்தனர்.
15.
CESGS – 2023
முத்துலட்சுமி அம்மையார் பற்றிய சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
Correct Answer: A [மருத்துவர்]
விளக்கம்:
டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் (முத்துலட்சுமி ரெட்டி) ஒரு மருத்துவர் . நீதிக்கட்சியின் கீழிருந்த சட்டமன்றம் 1921இல் பெண்களுக்கு வாக்குரிமை அளித்ததன் விளைவாக 1926இல் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரானார் .
16.
CESGS – 2023
கூற்று [A]: இரட்டைமலை சீனிவாசனின் தன்னலமற்ற சேவைக்காக ராவ்சாகிப், ராவ் பகதூர், திவான் பகதூர் ஆகிய பட்டங்களால் சிறப்புச் செய்யப்பட்டார்.
காரணம் [R]: இவர் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, சமத்துவம் மற்றும் சமூக உரிமைகள் ஆகியவற்றுக்காகப் போராடினார்.
Correct Answer: B [[A] மற்றும் [R] சரி; [R], [A] விற்கான சரியான விளக்கம்]
விளக்கம்:
பத்தாம் வகுப்புப் பாடநூல்: இரட்டைமலை சீனிவாசன் (1859–1945) சாதிப் படிநிலைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, சமத்துவம், சமூக உரிமைகளுக்காகப் போராடினார் ; அவருடைய தன்னலமற்ற சேவைக்காக ராவ்சாகிப் (1926), ராவ் பகதூர் (1930), திவான் பகதூர் (1936) ஆகிய…
17.
CSSS – 2023
சிவசுப்ரமணியனார் 1799 செப்டம்பர் 13ஆம் நாள் தூக்கிலிடப்பட்ட இடம்
Correct Answer: B [நாகலாபுரம்]
விளக்கம்:
கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணியனார் கோலார்பட்டி மோதலில் கைது செய்யப்பட்டு நாகலாபுரத்தில் 13 செப்டம்பர் 1799 அன்று தூக்கிலிடப்பட்டார் (பத்தாம் வகுப்புப் பாடநூல்).
18.
CSSS – 2023
தவறான ஒன்றைத் தெரிவு செய்க: இரட்டைமலை சீனிவாசன்
- 1893இல் ஆதிதிராவிட மகாஜன சபை எனும் அமைப்பை உருவாக்கினார்.
- லண்டனில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் வட்டமேசை மாநாடுகளில் கலந்து கொண்டார்.
- அவ்வப்போது "சித்திரபுத்திரன்" எனும் புனைப்பெயரில் கட்டுரைகளும் எழுதினார்.
- 1932இல் செய்துகொள்ளப்பட்ட பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுள் இவரும் ஒருவர்.
Correct Answer: C [3 மட்டும்]
விளக்கம்:
கூற்றுகள் 1, 2, 4 இரட்டைமலை சீனிவாசனுக்குப் பொருந்துபவை (பத்தாம் வகுப்புப் பாடநூல்). "சித்திரபுத்திரன்" என்பது பெரியார் ஈ.வெ. இராமசாமி "குடிஅரசு" இதழில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதப் பயன்படுத்திய புனைபெயர் – எனவே 3 மட்டுமே பொருந்தாதது.
19.
CSSS – 2023
வேலுநாச்சியாரின் தந்தையின் பெயர் ________ ஆகும்.
Correct Answer: B [செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி]
விளக்கம்:
வேலுநாச்சியார் (1730–1796) இராமநாதபுரத்தின் அரசர் செல்லமுத்து (விஜய ரகுநாத) சேதுபதிக்கு 1730இல் அரச குடும்பத்தின் ஒரே பெண் வாரிசாகப் பிறந்தார் (பத்தாம் வகுப்புப் பாடநூல்; சிவகங்கை மாவட்ட அரசு இணையதளம்).
20.
CSSS – 2023
'சிவகங்கையின் சிங்கம்' என அழைக்கப்படுபவர் ________
Correct Answer: B [சின்ன மருது]
விளக்கம்:
தமிழ்நாடு எட்டாம் வகுப்புச் சமூக அறிவியல் பாடநூலின் (வரலாறு – "மக்களின் புரட்சி") பயிற்சி வினாவின்படி 'சிவகங்கையின் சிங்கம்' என அழைக்கப்பட்டவர் சின்ன மருது .
21.
COMBINED TECHNICAL SERVICES (ITI POST) – 2025 · GROUP 3A – 2023
1932 ஜனவரி 26இல் ________ புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்.
Correct Answer: D [பாஷ்யம்]
விளக்கம்:
1932 ஜனவரி 26இல் , பரவலாக ஆரியா என அழைக்கப்பட்ட பாஷ்யம் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார் (பத்தாம் வகுப்புப் பாடநூல்).
22.
GROUP 3A – 2023
கட்டபொம்மனைத் தூக்கிலிட்டுக் கொலை செய்வதை நிறைவேற்றியவர்
Correct Answer: B [மேஜர் பானர்மென்]
விளக்கம்:
வெல்லெஸ்லி பிரபுவின் ஆணைப்படி திருநெல்வேலி நோக்கிச் சென்ற படைகளுக்கு மேஜர் பானர்மென் தலைமையேற்றார்; பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டார்.
23.
GROUP 3A – 2023
தமிழகத்தில் சட்டமறுப்பு இயக்கத்தின்போது உப்புச் சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி யார்?
Correct Answer: A [ருக்மணி லட்சுமிபதி]
விளக்கம்:
பத்தாம் வகுப்புப் பாடநூல்: சட்டமறுப்பு இயக்கத்தில் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்; உப்புச் சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ருக்மணி லட்சுமிபதி .
24.
VETERINARY ASSISTANT – 2023
ஆதி திராவிட மகாஜன சபை என்று பின்னாட்களில் அழைக்கப்பட்ட பறையர் மகாஜன சபையைத் தோற்றுவித்து வழிநடத்தியவர் யார்?
Correct Answer: B [இரட்டைமலை சீனிவாசன்]
விளக்கம்:
தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்த இரட்டைமலை சீனிவாசன் உரிமை மறுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக 1893இல் ஆதிதிராவிட மகாஜன சபை எனும் அமைப்பை உருவாக்கினார் (பத்தாம் வகுப்புப் பாடநூல்); இதுவே தொடக்கத்தில் பறையர் மகாஜன சபை என வழங்கியது.
25.
ARGS – 2020
பிராமணர் அல்லாத இயக்கம் ________ ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
Correct Answer: A [1916]
விளக்கம்:
1916 நவம்பர் 20இல் டாக்டர் சி. நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம்.
26.
ARGS – 2020
1927 மெட்ராஸில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசுக்குத் தலைமை தாங்கியவர் யார்?
Correct Answer: C [டாக்டர் அன்சாரி]
விளக்கம்:
1927 சென்னை காங்கிரஸ் மாநாட்டுக்கு டாக்டர் எம்.ஏ. அன்சாரி தலைமை தாங்கினார். இம்மாநாடு முழுமையான சுதந்திரமே தனது இலக்கு என அறிவித்தது (பத்தாம் வகுப்புப் பாடநூல்).
27.
ARGS – 2020
பாரத ஆஸ்ரமத்தைத் தோற்றுவித்தவர்
Correct Answer: B [சுப்பிரமணிய சிவா]
விளக்கம்:
சுப்பிரமணிய சிவா தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத ஆசிரமத்தை நிறுவினார்; அங்கு பாரத மாதா கோவில் அமைக்கவும் முயன்றார்.
28.
ARGS – 2020
தன்னாட்சி இயக்கம் தமிழகத்திலிருந்து உதயமாக முக்கிய காரணமான பெண் யார்?
Correct Answer: A [திருமதி. அன்னிபெசன்ட்]
விளக்கம்:
பிரம்மஞான சபையின் தலைவரும் அயர்லாந்துப் பெண்மணியுமான அன்னிபெசன்ட் அயர்லாந்தின் தன்னாட்சி அமைப்புகளை அடியொற்றி 1916இல் தன்னாட்சி இயக்கத்தை (Home Rule League) சென்னையிலிருந்து தொடங்கினார். G.S. அருண்டேல், B.P. வாடியா, C.P. ராமசாமி ஆகியோர் துணைநின்றனர்.
29.
VAS-AGHS – 2020
மணியாச்சியில் வாஞ்சிநாதன், மாவட்ட ஆட்சியர் ஆஷைச் சுட்டுக் கொன்றபோது, இங்கிலாந்து மன்னராக இருந்தவர் யார்?
Correct Answer: C [ஐந்தாம் ஜார்ஜ்]
விளக்கம்:
செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் 17 ஜூன் 1911இல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் W.D.E. ஆஷை மணியாச்சி ரயில் சந்திப்பில் சுட்டுக் கொன்றார் (பத்தாம் வகுப்புப் பாடநூல்).
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய தேசிய இயக்கம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-national-movement-pyq
📘 இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 606 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 142 அட்டவணைகள் & குறிப்புகள் · 8 அலகுகள் (23 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இத்தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட பிற வரலாற்று வினா
› இந்திய தேசிய இயக்கம் PYQ – செய்தித்தாள்கள், இதழ்கள், நூல்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – பிற தலைவர்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இராஜாஜி
› இந்திய தேசிய இயக்கம் PYQ – தந்தை பெரியார்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – காமராஜர்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
