இந்திய தேசிய இயக்கம் PYQ – விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – பகுதி 2 (வினா 33–64)
← திரும்பச் செல்ல
நீதிக்கட்சி அரசு பிறப்பித்த வகுப்புவாரி அரசாணைகள் (16.09.1921, 15.08.1922) பல்வேறு சமூகங்களுக்கு அரசுப் பணி நியமனங்களில் ஒதுக்கீட்டு வாய்ப்புகளை உறுதிசெய்தன – பிராமணர் அல்லாதோருக்கு வேலைவாய்ப்பையும் கல்வியையும் விரிவுபடுத்தின (பத்தாம் வகுப்புப் பாடநூல்).
₹299 →
இந்திய தேசிய இயக்கம் PYQ – விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – பகுதி 2 (வினா 33–64) – 30 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
AGGS – 2021
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பிராமணர் அல்லாதோருக்கான சுயாட்சி வட்டார அரசியலைக் கீழ்வருவனவற்றுள் எந்த வட்டாரத்தின் அரசியல்வாதிகள் வேண்டினர்?
Correct Answer: C [மெட்ராஸ் மாகாணம்]
விளக்கம்:
பிராமணர் அல்லாதோர் அரசியல் இயக்கம் சென்னை மாகாணத்தில் வலுப்பெற்றது: 1916இல் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) உருவானது; 1916 டிசம்பரில் பிராமணர் அல்லாதோர் அறிக்கை வெளியானது; 1920 தேர்தலில் வென்று A.
2.
AGGS – 2021
கீழ்கண்ட கூற்றுகளில் ருக்மணி லட்சுமிபதி பற்றிய சரியான கூற்று எது?
- இவர் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார்
- இவர் சட்டமறுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார்
- இவர் ராஜாஜி மந்திரிசபையில் துணை சபாநாயகராக இருந்தார்
- இவர் 1926இல் பாரிசில் நடைபெற்ற அகில உலக பெண்கள் வாக்குரிமை ஒன்றிய மாநாட்டில் கலந்து கொண்டார்
Correct Answer: A [1, 2, 3, 4 சரியானது]
விளக்கம்:
ருக்மணி லட்சுமிபதி இராஜாஜியுடன் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார் (1); அது சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதி (2); உப்புச் சட்டத்தை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண் (பாடநூல்).
3.
GROUP 1 – 2021
தமிழகத்தில் 1927 ஆம் ஆண்டு நீல் உருவ சிலை சத்தியகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி (தியாகி) –
Correct Answer: B [பத்மாசனி அம்மாள்]
விளக்கம்:
ஜேம்ஸ் நீல் – மதராஸ் துப்பாக்கி ஏந்திய காலாட்படையைச் சேர்ந்தவர்; 1857 பேரெழுச்சியின்போது கொடூரமாக நடந்துகொண்டவர்.
4.
GROUP 1 – 2021
எந்த விடுதலைப் போராட்டப் பெண்மணி மெட்ராஸ் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார்?
Correct Answer: C [செல்வி துர்க்காபாய்]
விளக்கம்:
துர்காபாய் (பின்னாளில் துர்காபாய் தேஷ்முக்) மே 1930இல் சென்னை உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்றுச் சட்டமறுப்பு இயக்கக் காலத்தில் சிறை சென்றார். சென்னையில் சட்டமறுப்பு இயக்கத்தின்போது T. பிரகாசம், K.
5.
GROUP 1 – 2021
ஆளுமையை அடையாளம் காண்க:
(a) சாதிப் படிநிலையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற சமூக சேவைக்காக ராவ்சாகிப், ராவ் பகதூர், திவான் பகதூர் ஆகிய பட்டங்களால் சிறப்புச் செய்யப்பட்டார்.
(b) அவரது சுயசரிதை "ஜீவிய சரித்திர சுருக்கம்" – தொடக்ககாலச் சுயசரிதைகளுள் ஒன்று.
(c) அவர் ஆதிதிராவிட மகாஜன சபையை நிறுவினார்.
அவர் யார்?
Correct Answer: B [இரட்டைமலை சீனிவாசன்]
விளக்கம்:
மூன்று குறிப்புகளும் இரட்டைமலை சீனிவாசனைக் குறிக்கின்றன (பத்தாம் வகுப்புப் பாடநூல்): ராவ்சாகிப் (1926), ராவ் பகதூர் (1930), திவான் பகதூர் (1936) பட்டங்கள்; 1939இல் வெளியான "ஜீவிய சரித்திர சுருக்கம்" – முதன்முதலாக எழுதப்பெற்ற சுயசரிதை நூல்களுள் ஒன்று; 1893இல்…
6.
CAGS – 2022
கலெக்டர் ஆஷ் வாஞ்சிநாதன் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆண்டு
Correct Answer: A [ஜூன் 17, 1911]
விளக்கம்:
நீலகண்ட பிரம்மச்சாரியின் பாரத மாதா சங்கத்தால் ஈர்க்கப்பட்ட செங்கோட்டை வாஞ்சிநாதன் , 1911 ஜூன் 17இல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் W.D.E. ஆஷை மணியாச்சி ரயில் சந்திப்பில் சுட்டுக் கொன்றார்; பின்னர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார் (பத்தாம் வகுப்புப் பாடநூல்).
7.
GROUP 4 – 2022
காலவரிசைப்படி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்களை வரிசைப்படுத்துக.
- பி.டி. ராஜன்
- ஏ. சுப்பராயலு ரெட்டியார்
- பி. முனுசாமி நாயுடு
- சி. ராஜாஜி
- பி. சுப்பராயன்
Correct Answer: B [2, 5, 3, 1, 4]
விளக்கம்:
A. சுப்பராயலு (1920) நீதிக்கட்சியின் முதல் முதலமைச்சர்; சுயராஜ்ஜியக் கட்சியினர் ஆட்சியேற்க மறுத்ததால் சுயேச்சையான P. சுப்பராயன் (1926) அமைச்சரவை அமைத்தார்; P. முனுசாமி நாயுடு (1930) , P.T.
8.
GROUP 4 – 2022
பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது?
Correct Answer: D [ஆதி திராவிட மகாஜன சபை]
விளக்கம்:
இரட்டைமலை சீனிவாசன் 1893இல் ஆதிதிராவிட மகாஜன சபையை உருவாக்கினார் (பத்தாம் வகுப்புப் பாடநூல்). (A) சாக்கிய பௌத்த சங்கம் (1898), (B) அத்வைதானந்த சபை – இரண்டும் அயோத்திதாசர் நிறுவியவை; (C) அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் (1928) – எம்.சி.
9.
DPGS – 2022
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற தீர்ப்பு எது?
Correct Answer: B [ஆஷ் கொலை வழக்கு]
விளக்கம்:
1911 ஜூன் 17இல் மணியாச்சி தொடருந்து நிலையத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் , வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து நடந்த ஆஷ் கொலைச் சதி வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சர் சி.
10.
EO – 2022
சென்னை மாநில ஆலைகளுக்குப் பொருளுதவிச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
Correct Answer: B [1922]
விளக்கம்:
நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் தொழில்களுக்கு அரசு உதவி வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட "சென்னை மாநில ஆலைகளுக்குப் பொருளுதவிச் சட்டம், 1922" (Madras State Aid to Industries Act, 1922) – சட்டத்தின் பெயரிலேயே 1922 என்ற ஆண்டு உள்ளது; இது Madras Act V of 1923 எனப்…
11.
EO GRADE III (HR&CE) – 2022
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மற்றும் உப்பு சத்தியாகிரகத்தையும் எடுத்து நடத்தி கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி பெயரைக் குறிப்பிடுக.
Correct Answer: B [ருக்மணி லக்ஷ்மிபதி]
விளக்கம்:
ருக்மணி லட்சுமிபதி 1930 வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் இராஜாஜியுடன் பங்கேற்றார்; உப்புச் சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி அவரே (பத்தாம் வகுப்புப் பாடநூல்); சென்னை மாகாணத்தில் உப்புச் சத்தியாகிரகத்துக்காகச் சிறை சென்ற முதல் பெண்ணும் அவரே.
12.
GROUP 2 – 2022
மதராஸ் மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டி விருதுநகர் சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த ஆண்டு
Correct Answer: B [1956 அக்டோபர்]
விளக்கம்:
விருதுநகரைச் சேர்ந்த காந்தியவாதி தியாகி சங்கரலிங்கனார் "மதராஸ் மாநிலம்" என்பதை "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 27 ஜூலை 1956 முதல் உண்ணாவிரதம் இருந்து, 76 நாள்களுக்குப் பின் 13 அக்டோபர் 1956 அன்று உயிர் துறந்தார்.
13.
GROUP 2 – 2022
'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
Correct Answer: D [M.C. ராஜா]
விளக்கம்:
"The Oppressed Hindus" (ஒடுக்கப்பட்ட இந்துக்கள்) என்ற நூலை எழுதியவர் எம்.சி. ராஜா (மயிலை சின்னதம்பி ராஜா) .
14.
GROUP 2 – 2022
கீழ்க்கண்டவற்றில் ஒன்று மட்டும் நீதிக்கட்சியின் சாதனை அல்ல?
Correct Answer: D [ஒத்துழையாமை இயக்கம்]
விளக்கம்:
ஒத்துழையாமை இயக்கம் (1920–22) காந்தியடிகள் தலைமையில் காங்கிரஸ் நடத்திய இயக்கம்; காங்கிரஸ் 1920 தேர்தலைப் புறக்கணித்ததால் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது.
15.
GROUP 2 – 2022
மெட்ராஸ் மாகாணத்தில் உப்புச் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்ற முதல் பெண்மணி யார்?
Correct Answer: A [ருக்மிணி லட்சுமிபதி]
விளக்கம்:
இராஜாஜி தலைமையிலான வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற ருக்மணி லட்சுமிபதி 1930இல் சிறை சென்று, சென்னை மாகாணத்தில் உப்புச் சத்தியாகிரகத்துக்காகச் சிறை சென்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார்; உப்புச் சட்டத்தை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்ணும்…
16.
REPORTER – 2022
நவீன தமிழகத்தில் தோன்றிய முதல் சமூக சீர்திருத்தவாதியாகக் கருதப்படுபவர் யார்?
Correct Answer: B [வைகுண்ட சுவாமிகள்]
விளக்கம்:
தமிழ்நாட்டின் சமூக இயக்கங்களை முன்னெடுத்தவர்களாகப் பன்னிரண்டாம் வகுப்புப் பாடநூல் இராமலிங்க அடிகள், வைகுண்டர், பின்னர் அயோத்தி தாசர் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
17.
JAILOR – 2022
பொருத்துக:
(i) மெட்ராஸ் திராவிட இயக்கம் [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: மதராஸ் திராவிடர் சங்கம்] – 1. 1916
(ii) சுயமரியாதை இயக்கம் – 2. 1925
(iii) தென்னிந்தியத் தாராளவாதக் கூட்டமைப்பு – 3. 1944
(iv) திராவிடர் கழகம் – 4. 1912
Correct Answer: A [4 2 1 3]
விளக்கம்:
பத்தாம் வகுப்புப் பாடநூலின்படி: 1912 – டாக்டர் சி. நடேசனார் "மதராஸ் ஐக்கியக் கழகம்" அமைத்தார்; அதுவே பின்னர் மதராஸ் திராவிடர் சங்கம் ஆனது (4). 1925 – பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார் (2). 1916 நவம்பர் 20 – தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (1).
18.
CBT – 2022 · TNPSC – 2022
கூற்று [A]: பிராமணர் அல்லாதோர் ஆங்கிலேய இந்திய ஆட்சியில் அரசுத் துறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
காரணம் [R]: 1921ஆம் ஆண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணை நிறைவேற்றப்பட்டமையேயாகும்.
Correct Answer: C [கூற்று மற்றும் காரணம் சரி; காரணம் கூற்றை விளக்குகின்றது]
விளக்கம்:
சமூக நீதியை நிலைநாட்டும் நோக்கில், பல்வேறு சாதிகளையும் சமூகங்களையும் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணிகளில் சமமான வாய்ப்புகளை உறுதிசெய்ய நீதிக்கட்சி அரசு இரண்டு வகுப்புவாரி அரசாணைகளை (1921 செப்டம்பர் 16, 1922 ஆகஸ்ட் 15) பிறப்பித்தது (பத்தாம் வகுப்புப் பாடநூல்).
19.
CBT – 2022
கீழ்கண்டவற்றுள் எது உண்மையான கூற்று அல்ல?
Correct Answer: D [1920ஆம் ஆண்டுத் தேர்தலில் நீதிக்கட்சி காங்கிரஸ் கட்சியை முழுமையாகத் தோற்கடித்தது]
விளக்கம்:
1920 தேர்தலைக் காங்கிரஸ் புறக்கணித்தது (ஒத்துழையாமை இயக்கம்); எனவே காங்கிரஸ் போட்டியிடவே இல்லை – "காங்கிரசை நீதிக்கட்சி முழுமையாகத் தோற்கடித்தது" என்பது தவறு.
20.
VCGS – 2022
தமிழ்நாட்டில் 1923ஆம் ஆண்டில் மே தினத்தின் முதல் கொண்டாட்டம் ________ ஏற்பாடு செய்யப்பட்டது.
Correct Answer: A [சிங்காரவேலர்]
விளக்கம்:
சென்னை மாகாணத் தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடி ம. சிங்காரவேலர் (1860–1946) 1923இல் முதன்முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தார் (பத்தாம் வகுப்புப் பாடநூல்).
21.
VCGS – 2022
1911ஆம் வருடம், ஜூன் மாதம் 11ஆம் நாள் [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: 17ஆம் நாள்], மாவட்ட ஆட்சியர் ஆஷ் தனது துரதிருஷ்டமான பயணத்தைத் திருநெல்வேலியிலிருந்து ________க்கு மேற்கொண்டார்.
Correct Answer: A [கொடைக்கானல்]
விளக்கம்:
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் W.D.E. ஆஷ் 1911 ஜூன் 17இல் மணியாச்சி ரயில் சந்திப்பில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்; பின்னர் வாஞ்சிநாதன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் (பத்தாம் வகுப்புப் பாடநூல்).
22.
VCGS – 2022
1920இல் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் ________ தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
Correct Answer: B [ஏ. சுப்பராயலு ரெட்டியார்]
விளக்கம்:
1920 தேர்தலில் சட்டமன்றத்தின் 98 இடங்களில் 63இல் வென்ற நீதிக்கட்சியின் A. சுப்பராயலு சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரானார் . 1923 தேர்தலுக்குப் பின் பனகல் அரசர் அமைச்சரவை அமைத்தார் (பத்தாம் வகுப்புப் பாடநூல்) – (A) தவறு. (C) P. சுப்பராயன் – 1926.
23.
GROUP 1 – 2022
பொருத்துக:
(a) சுவாமி சகஜானந்தா – 1. அப்ரெஸ்டு ஹிந்துஸ்
(b) M.C. ராஜா – 2. தமிழன்
(c) பண்டிட் அயோத்திதாசர் – 3. நந்தனார் கல்விக் கழகம்
(d) வீரேசலிங்கம் – 4. விதவை இல்லம்
Correct Answer: A [3 1 2 4]
விளக்கம்:
சுவாமி சகஜானந்தர் சிதம்பரத்தில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்காக நந்தனார் கல்விக் கழகத்தை நிறுவினார் (3). எம்.சி. ராஜா – "The Oppressed Hindus" நூலின் ஆசிரியர் (1). அயோத்திதாசர் 1907இல் தொடங்கிய "ஒரு பைசாத் தமிழன்" வார இதழ் பின்னர் "தமிழன்" என வெளிவந்தது (2).
24.
ASSISTANT TRAINING OFFICER TEXTILE DEPT – 2023
சரியான விடையைத் தேர்வு செய்க: வாஞ்சிநாதன் உறுப்பினராக இருந்த புரட்சிகர தேசியவாதக் குழுவின் பெயர்
Correct Answer: C [பாரத மாதா குழு]
விளக்கம்:
1904இல் நீலகண்ட பிரம்மச்சாரியும் வேறு சிலரும் பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை உருவாக்கினர்; ஆங்கில அதிகாரிகளைக் கொல்வதன் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்றைத் தூண்டுவதே அதன் நோக்கம்.
25.
EO GRADE I (HR&CE) – 2024
தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையின் கீழ் நடைபெற்ற வேதாரண்யம் நடையின்போது கலந்துகொண்ட சத்தியாகிரகிகள் எத்தனை பேர்?
Correct Answer: C [98]
விளக்கம்:
வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக யாத்திரைக்கு இராஜாஜி 98 தொண்டர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களுடன் 1930 ஏப்ரல் 13இல் திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்ட யாத்திரை ஏப்ரல் 28இல் வேதாரண்யத்தை அடைந்தது.
26.
AAO & AHO – 2024 · GROUP 1 – 2021
தமிழ்நாட்டுச் சுதேசி இயக்கத் தலைவர்கள் பிபின் சந்திரபால் விடுதலை செய்யப்பட்ட அந்த நாளை ______ தினமாக திருநெல்வேலியில் கொண்டாட திட்டமிட்டனர்.
Correct Answer: B [சுதேசி தினம்]
விளக்கம்:
கவனிக்க: இவ்வினாவின் தமிழ் வடிவம் ஆங்கில வடிவத்திலிருந்து வேறுபடுகிறது ((B) ஆங்கிலத்தில் "Swarajya day" – சுயராஜ்ஜிய நாள்; தமிழில் "சுதேசி தினம்"); மேலே உள்ள விடை ஆங்கில வடிவப்படி.
27.
COMBINED TECHNICAL SERVICES (NON IV POST) – 2024
பின்வருபவைகளில் எது மெட்ராஸ் மாகாணத்தில் நிறுவப்பட்ட முதல் அரசியல் நிறுவனமாகும்?
Correct Answer: A [சென்னை பூர்வீகக் கூட்டமைப்பு]
விளக்கம்:
சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association, 1852) தென்னிந்தியாவில் தொடங்கப்பெற்ற காலத்தால் முற்பட்ட அமைப்பு (பத்தாம் வகுப்புப் பாடநூல்) – சென்னை மாகாணத்தின் முதல் அரசியல் அமைப்பு.
28.
COMBINED TECHNICAL SERVICES (IV POST – II) – 2024
கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அடுக்குக.
- வேதாரண்யம் யாத்திரை
- வைக்கம் சத்தியாகிரகம்
- இந்தி எதிர்ப்புப் போராட்டம்
- காமராஜ் திட்டம்
Correct Answer: C [2 1 3 4]
விளக்கம்:
வைக்கம் சத்தியாகிரகம் (1924–25) – பெரியார் தலைமையேற்றுச் சிறை சென்றதால் "வைக்கம் வீரர்" எனப் போற்றப்பட்டார்; வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக யாத்திரை (13–28 ஏப்ரல் 1930) – இராஜாஜி; இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1937–39) – இராஜாஜி அரசு இந்தியைக் கட்டாயப்…
29.
COMBINED TECHNICAL SERVICES (IV POST – II) – 2024
பின்வருபனவற்றில் சரியாக பொருத்தப்படாத பொருத்தங்கள் எவை?
- குடியரசு – கருப்புச் சட்டை
- திராவிட நாடு – அண்ணா
- பொன்மொழிகள் – அண்ணா
- ஆரிய மாயை – பெரியார்
Correct Answer: A [3 மற்றும் 4 சரியானப் பொருத்தங்கள் அல்ல]
விளக்கம்:
"ஆரிய மாயை" – அண்ணா எழுதிய நூல்; "பொன்மொழிகள்" – பெரியாரின் நூல். ஆகவே இணைகள் 3, 4 இரண்டும் இடம் மாறியுள்ளன. "திராவிட நாடு" – அண்ணா நடத்திய இதழ் (சரி).
30.
ASSISTANT PUBLIC PROSECUTOR GRADE II – 2026
1921 மற்றும் 1922ஆம் ஆண்டின் வகுப்புவாத ஆணை பற்றிய அறிக்கைகளைக் கவனிக்கவும்.
Correct Answer: C [உள்ளூர் அமைப்பு மற்றும் கல்வி நிலையங்களில் பிராமணர் அல்லாதோருக்கு இட ஒதுக்கீட்டு நியமனங்கள் ஏற்படுத்திக் கொடுக்கிறது]
விளக்கம்:
நீதிக்கட்சி அரசு பிறப்பித்த வகுப்புவாரி அரசாணைகள் (16.09.1921, 15.08.1922) பல்வேறு சமூகங்களுக்கு அரசுப் பணி நியமனங்களில் ஒதுக்கீட்டு வாய்ப்புகளை உறுதிசெய்தன – பிராமணர் அல்லாதோருக்கு வேலைவாய்ப்பையும் கல்வியையும் விரிவுபடுத்தின (பத்தாம் வகுப்புப் பாடநூல்).
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய தேசிய இயக்கம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-national-movement-pyq
📘 இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 606 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 142 அட்டவணைகள் & குறிப்புகள் · 8 அலகுகள் (23 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இத்தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட பிற வரலாற்று வினா
› இந்திய தேசிய இயக்கம் PYQ – செய்தித்தாள்கள், இதழ்கள், நூல்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – பிற தலைவர்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இராஜாஜி
› இந்திய தேசிய இயக்கம் PYQ – தந்தை பெரியார்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – காமராஜர்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
