இந்திய தேசிய இயக்கம் PYQ – மகாத்மா காந்தி
← திரும்பச் செல்ல
(1), (2) சரி: போயர் போரின்போது (1899) காந்தியடிகள் தென்னாப்பிரிக்க இந்தியர்களைக் கொண்டு இந்திய ஆம்புலன்ஸ் படையை அமைத்து, காயமுற்றோருக்குச் சேவை செய்தார். (1), (2) இரண்டும் உறுதியாகச் சரி என்பதால், இரண்டையும் கொண்ட ஒரே விருப்பமான (B) விடையாகிறது.
₹299 →
இந்திய தேசிய இயக்கம் PYQ – மகாத்மா காந்தி – 25 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
ARGS – 2020
"ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருப்பது, ஜப்பானியர்களை இந்தியாவின் மீது படையெடுக்கும்படியான அழைப்பிதழ்" என்ற வாக்கியங்களை எழுதியவர் யார்?
Correct Answer: A [மகாத்மா காந்தி]
விளக்கம்:
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் பர்மா வரை முன்னேறிய 1942இல் , காந்தியடிகள் தமது ஹரிஜன் இதழில் " ஆங்கிலேயர் இந்தியாவில் இருப்பதே ஜப்பான் இந்தியாவின் மீது படையெடுக்க விடுக்கப்படும் அழைப்பு " என்று எழுதினார் (அக்காலச் செய்தி: டைம் இதழ், 25 மே 1942).
2.
GSCE – 2021
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரி, எது தவறு எனக் குறிப்பிடவும்
கூற்று I: காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத் கடற்கரையோரம் உள்ள தண்டி வரை 395 கிலோ மீட்டர் தொலைவுக்குத் தண்டி யாத்திரை நடைபெற இருந்தது
கூற்று II: காந்தியடிகள் யாத்திரையாக நடந்து தண்டியை 25வது நாளில், அதாவது 1930 ஏப்ரல் 6இல் சென்று அடைந்தார்
Correct Answer: A [கூற்று I, கூற்று II தவறு]
விளக்கம்:
கூற்று I தவறு: சபர்மதியிலிருந்து தண்டி வரையிலான தொலைவு சுமார் 240 மைல் (385 கி.மீ.) (பிரிட்டானிகா); 10ஆம் வகுப்புப் பாடநூல் 241 மைல் என்கிறது. 395 கி.மீ. என்பது எந்த ஆதாரத்திலும் இல்லை.
3.
CAGS – 2022
அமைச்சரவைத் தூதுக்குழு திட்டம், "அன்றைய காலச் சூழலில் கொண்டுவரப்பட்ட உன்னதமான திட்டம்" என்று வர்ணித்தவர்
Correct Answer: B [காந்தி]
விளக்கம்:
1946-இல் இந்தியாவுக்கு வந்த அமைச்சரவைத் தூதுக்குழுவின் (Cabinet Mission) திட்டத்தை , அன்றைய சூழலில் பிரிட்டிஷ் அரசு அளிக்கக்கூடிய மிகச் சிறந்த ஆவணம் என்று பாராட்டியவர் காந்தியடிகள் .
4.
PSY – 2022
சட்ட மறுப்பு இயக்கம் காந்தியினால் ஒத்திவைப்பதற்குக் காரணமாயிருந்தது ________ ஆகும்.
Correct Answer: B [காந்தி – இர்வின் ஒப்பந்தம்]
விளக்கம்:
காந்தி–இர்வின் ஒப்பந்தம் (5 மார்ச் 1931) கையெழுத்தானதும் சட்டமறுப்பு இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது ; காந்தியடிகள் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டார்.
5.
EO GRADE III (HR&CE) – 2022
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் தனது வழக்குரைஞர் தொழில் தொடங்க உதவிய வியாபார நிறுவனம் எது?
Correct Answer: A [தாதா அப்துல்லா நிறுவனம்]
விளக்கம்:
இந்திய வணிகர் தாதா அப்துல்லாவின் தாதா அப்துல்லா நிறுவனம் (Dada Abdulla & Co.) தனது வழக்கு ஒன்றை நடத்த 1893-இல் காந்தியடிகளைத் தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்தது. அங்குதான் அவர் இனவெறிக் கொடுமைகளை நேரில் சந்தித்துப் போராட்டத் தலைவரானார்.
6.
FA – 2022
பின்வருபவர்களில் 1947 இந்திய சுதந்திர தின அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பங்கேற்காதவர் யார்?
Correct Answer: C [மகாத்மா காந்தி]
விளக்கம்:
15 ஆகஸ்ட் 1947 அன்று டெல்லியில் நடந்த அதிகாரபூர்வ விழாக்களில் காந்தியடிகள் கலந்துகொள்ளவில்லை . அன்று அவர் வகுப்புக் கலவரங்கள் நடந்த கல்கத்தாவில் அமைதிக்காக உண்ணாவிரதமும் பிரார்த்தனையும் மேற்கொண்டிருந்தார்.
7.
FA – 2022
வன்முறை இல்லாமல் அநீதியை எதிர்த்துப் போராடும் புதிய ________ வழியைக் காந்தி மக்களுக்குக் காட்டினார்.
Correct Answer: C [சத்தியாகிரகம்]
விளக்கம்:
வன்முறையின்றி அநீதியை எதிர்க்கும் காந்தியடிகளின் போராட்ட முறை சத்தியாகிரகம் . இது சத்யம் (உண்மை) , அகிம்சை (வன்முறையற்ற தன்மை) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது (தமிழ்நாட்டு 12ஆம் வகுப்பு வரலாறு).
8.
GROUP 1 – 2022
"இந்தியர்களின் ஒத்துழைப்போடு ஆங்கிலேயரின் ஆட்சி நிறுவப்பட்டது. இந்த ஒத்துழைப்பினால்தான் இந்த ஆட்சி பிழைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியர்கள் ஒத்துழைக்க மறுத்தால், இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி ஒரு வருடத்தில் வீழ்ந்து சுயராஜ்ஜியம் மலரும்" என்று கூறியவர் யார்?
Correct Answer: C [மகாத்மா காந்திஜி]
விளக்கம்:
இக்கருத்தை காந்தியடிகள் தமது புகழ்பெற்ற நூலான இந்திய சுயராஜ்ஜியம் (Hind Swaraj, 1909) நூலில் வெளிப்படுத்தினார். இதுவே பின்னாளில் ஒத்துழையாமை இயக்கத்தின் (1920) அடிப்படைச் சிந்தனையானது: ஆங்கிலேயருடன் ஒத்துழைக்க மறுத்தால் ஆட்சி தானாக வீழும்.
9.
DEO – 2023
பின்வரும் பத்தியைப் படித்து, இதில் யாருடைய மதப்பார்வை வெளிப்படுகிறது என்பதைக் கூறவும்.
"நான் சமூக சேவையில் முழுமையாக ஈடுபட்டிருந்தால் அதற்குக் காரணம் சுய உணர்தலுக்கான எனது விருப்பமே. சேவையின் மூலம் மட்டுமே கடவுளை உணர முடியும் என்று நான் உணர்ந்ததால், நான் சேவை என்ற மதத்தை எனது சொந்த மதமாக்கினேன். எனக்குச் சேவை என்பது இந்திய சேவை. ஏனென்றால் நான் அதைத் தேடாமலே அது என்னிடம் வந்தது. காரணம் அதற்கான தகுதி என்னிடம் இருந்தது."
Correct Answer: B [மகாத்மா காந்தி]
விளக்கம்:
இப்பத்தி காந்தியடிகளின் சுயசரிதையான "சத்திய சோதனை" (The Story of My Experiments with Truth) நூலில் இடம்பெற்றது. சுய உணர்தலுக்காக (self-realisation) சமூக சேவை , சேவையின் வழியே கடவுளை உணர்தல் , "சேவையே என் மதம்" என்பன காந்தியடிகளின் சமயப் பார்வை.
10.
DEO – 2023
கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியை வாசித்து அதனடிப்படையில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடையளி.
பத்தி 1: மகாத்மா காந்தி கூறியதாவது "சில சாதாரண இளைஞர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் நோக்கத்திற்காகத் தங்கள் மகள்களை முற்றிலும் அறியாமை மற்றும் படிப்பறிவில்லாத நிலையில் வைக்கும் பெற்றோரின் குற்றம் சார்ந்த அலட்சியத்திற்காக வருந்துகிறேன்".
மேற்கண்ட பத்தியிலிருந்து உருவான கீழ்க்கண்டவைகளில் சிறந்த மறைமுகமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
Correct Answer: A [தங்கள் மகள்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான கடும் நடவடிக்கைகளைப் பெற்றோர் எடுக்க வேண்டும்]
விளக்கம்:
கவனிக்க: இவ்வினாவின் தமிழ் வடிவம் ஆங்கில வடிவத்திலிருந்து வேறுபடுகிறது (ஆங்கிலத்தில் "young man of means" – வசதி படைத்த இளைஞர் ; தமிழில் "சில சாதாரண இளைஞர்கள்"); மேலே உள்ள விடை ஆங்கில வடிவப்படி.
11.
DEO – 2023
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தன்னுடைய வழக்கறிஞர் தொழிலின் முதல் வருமானமாகப் பெற்ற ரூ.30-ஐத் தன்னுடைய கட்சிக்காரருக்கே ________ கோர்ட்டில் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
Correct Answer: A [பம்பாய்]
விளக்கம்:
இங்கிலாந்தில் வழக்கறிஞர் படிப்பை முடித்து வந்த காந்தியடிகள் பம்பாயில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். அங்கு சிறுவழக்கு நீதிமன்றத்தில் (Small Causes Court) தமது முதல் வழக்கை எடுத்து ரூ.30 கட்டணம் பெற்றார்.
12.
BURSAR – 2023
'ஹரிஜன்' பத்திரிகை யாரால் தொடங்கப்பட்டது?
Correct Answer: B [காந்திஜி]
விளக்கம்:
ஹரிஜன் வார இதழை காந்தியடிகள் 1933-இல் தொடங்கினார்; தீண்டாமை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கம். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கக் கருத்துகளையும் அவர் இதில் எழுதினார். அம்பேத்கர் நடத்திய இதழ்கள் மூக் நாயக் , பஹிஷ்கிரித் பாரத் ; நேருவுடன் தொடர்புடையது நேஷனல் ஹெரால்டு .
13.
CSSS – 2023
மகாத்மா காந்தியின் அரசியல் குரு யார்?
Correct Answer: D [கோபால கிருஷ்ண கோகலே]
விளக்கம்:
காந்தியடிகள் கோபால கிருஷ்ண கோகலேவைத் தமது அரசியல் குருவாக ஏற்றார். கோகலேவின் அறிவுரைப்படி, 1915-இல் இந்தியா திரும்பிய பின் அரசியலில் ஈடுபடும் முன் ஓராண்டு நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களின் நிலையை அறிந்தார் (தமிழ்நாட்டு 10, 12ஆம் வகுப்பு வரலாறு).
14.
MAY – 2023
தென்னாப்பிரிக்காவில் எந்த இரயில் நிலையத்தில் காந்தி இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார்?
Correct Answer: A [பீட்டர்மாரிட்ஸ்பர்க்]
விளக்கம்:
1893-இல் டர்பனிலிருந்து பிரிட்டோரியாவுக்கு முதல் வகுப்புப் பயணச்சீட்டுடன் பயணம் செய்த காந்தியடிகள், "வெள்ளையர் அல்லாதவர்" என்பதால் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் வண்டியிலிருந்து வெளியே தள்ளப்பட்டார்.
15.
FISHERY DEPT – 2023
"சத்தியத்துடனான எனது சோதனைகளின் கதை", ________-இன் சுயசரிதை.
Correct Answer: A [மகாத்மா காந்தி]
விளக்கம்:
"சத்திய சோதனை" (The Story of My Experiments with Truth) காந்தியடிகளின் சுயசரிதை . இதனை அவர் குஜராத்தி மொழியில் எழுதினார்; நவஜீவன் இதழில் தொடராக வெளிவந்தது; மகாதேவ தேசாய் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
16.
VETERINARY ASSISTANT – 2023
'தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்' என்னும் நூலை மகாத்மா காந்தி எப்பொழுது வெளியிட்டார்?
Correct Answer: A [1928]
விளக்கம்:
தென்னாப்பிரிக்கப் போராட்ட வரலாற்றைக் காந்தியடிகள் முதலில் குஜராத்தியில் எழுதினார்; அதன் முதல் முப்பது அத்தியாயங்களை எரவாடா சிறையில் எழுதியதாக முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
17.
JUNIOR ANALYST TN MEDICAL SERVICE – 2023
பின்வரும் கூற்றைக் கூறியது யார்?
"சுயராஜ்ஜியம் என்பது இந்திய மக்கள் சுதந்திரமாகத் தங்கள் பிரதிநிதிகள் மூலம் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதாகும்."
Correct Answer: A [மகாத்மா காந்தி]
விளக்கம்:
1922-இல் காந்தியடிகள் , "சுயராஜ்ஜியம் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அளிக்கும் இலவசப் பரிசு அல்ல" என்றும், அது சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வழியாக வெளிப்படும் இந்திய மக்களின் விருப்பத்திலிருந்து எழ வேண்டும் என்றும் எழுதினார் (மக்களவை வெளியீடு:…
18.
JUNIOR ANALYST TN MEDICAL SERVICE – 2023
"ஐம்பதாயிரம் நன்கு பயிற்சிபெற்ற படைவீரர்களால் என்ன செய்ய முடியவில்லையோ, அதனை மகாத்மா செய்து முடித்தார். அவர் அமைதியை ஏற்படுத்தினார். அவர் ஓர் தனிமனிதப் படை" இதனைக் கூறியது யார்?
Correct Answer: D [மௌண்ட்பேட்டன் பிரபு]
விளக்கம்:
1947 விடுதலையின்போது பஞ்சாபில் பெரும் படையைக் கொண்ட எல்லைக் காவல் படை (Punjab Boundary Force) கலவரங்களைத் தடுக்க முடியவில்லை. அதே நேரம் கல்கத்தாவில் காந்தியடிகள் தனி ஒருவராக உண்ணாவிரதம், பிரார்த்தனை மூலம் அமைதியை நிலைநாட்டினார்.
19.
GROUP 1 – 2024
காந்திஜியின் தண்டி நடைபயணத்தைப் பற்றிய "The Romance of Salt" என்ற நூலை எழுதியவர் யார்?
Correct Answer: B [அனில் தார்கர்]
விளக்கம்:
"The Romance of Salt" நூலை எழுதியவர் இதழாளர் அனில் தார்கர் (Anil Dharker) . 1930 மார்ச் 12 அன்று தொடங்கிய தண்டி யாத்திரையைப் பற்றியும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கக் காந்தியடிகள் உப்பைக் குறியீடாகத் தேர்ந்தெடுத்தது ஏன் என்பது பற்றியும் இந்நூல் பேசுகிறது.
20.
GROUP 1 – 2024
பின்வருவனவற்றுள் மகாத்மா காந்தியைப் பற்றிய சரியான கூற்றுகள் எவை?
(i) காந்தியின் பொருளாதாரத் திட்டத்தின் சின்னம் காதி
(ii) வடக்கு பீகாரில் விவசாயிகளின் இயக்கத்தைக் காந்தி தொடங்கினார்
(iii) நியூ இந்தியாவில் காந்தி வெள்ளையனே வெளியேறு பற்றி எழுதினார்
(iv) காந்தியின் சத்தியாகிரக இயக்கம் இந்திய தேசிய காங்கிரசிற்கு எதிரானது
Correct Answer: B [(i) மற்றும் (ii) மட்டும்]
விளக்கம்:
(i) சரி: கதர் (காதி) காந்தியடிகளின் சுதேசி – கிராமப் பொருளாதாரத் திட்டத்தின் சின்னம் . (ii) சரி: வடக்கு பீகாரின் சம்பரான் (1917) மாவட்டத்தில் அவுரி (இண்டிகோ) விவசாயிகளுக்காக அவர் போராட்டம் நடத்தினார்.
21.
COMBINED TECHNICAL SERVICES (NON IV POST) – 2024
பின்வருவனவற்றிற்கான வழிமுறைகள்: பின்வரும் பத்தியை வாசித்து அதற்கான விடையை அளிக்கவும். உங்களது விடை பின்வருகின்ற பத்திகளுக்குத் தொடர்புடையதாக அமைய வேண்டும்.
பத்தி – I: சத்தியாகிரகம் என்ற சொல் உண்மை மற்றும் உண்ணாவிரதம் கடைபிடித்தல் [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: உறுதியாகப் பற்றுதல் (holding fast)] என்ற இரண்டு சொற்களின் இணைவு ஆகும். சத்தியாகிரகத்தின் அடிப்படை அஹிம்சை என்பதை காந்தி இவ்வாறு விளக்குகிறார். "ஒரு மனிதன் அஹிம்சைவாதியானால் தன்னைக் காயப்படுத்துபவர்களிடம் கோபம் கொள்ளாமல் இருப்பது. அவன் அவனுக்குத் தீங்கு செய்ய விரும்பவில்லை. அவன் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புகிறான்" என்பது ஆகும்.
பின்வருவனவற்றுள் எது ஒன்று இந்தப் பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது?
Correct Answer: A [சத்தியாகிரகம் என்பது அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவது ஆகும்]
விளக்கம்:
சத்தியாகிரகம் = சத்தியம் (உண்மை) + ஆக்கிரகம் (உறுதியாகப் பற்றுதல்) ; அதாவது " உண்மையை உறுதியாகப் பற்றி நிற்றல் ". இதன் அடிப்படை அகிம்சை .
22.
COMBINED TECHNICAL SERVICES (ITI POST) – 2024
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பின்வருவனவற்றுள் காந்தியடிகள் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
(i) இவர் முதல் முறையாக இனவெறி செயலை பீட்டர்மாரிட்ஸ்பர்க் இரயில் நிலையத்தில் எதிர் கொண்டார்.
(ii) இவர் டிரான்ஸ்வாலில் உள்ள நியாயமற்ற சட்டங்களை எதிர்த்துப் போராடினார்.
(iii) இவர் ரஸ்கின் அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு ஃபீனிக்ஸ் குடியிருப்பை நிறுவினார்.
Correct Answer: D [(i), (ii) மற்றும் (iii) சரி]
விளக்கம்:
மூன்று கூற்றுகளும் தமிழ்நாட்டு 10ஆம் வகுப்புப் பாடநூலின் சொற்களை ஒட்டியவை; அதன்படி மூன்றும் சரி – (D) .
23.
COMBINED TECHNICAL SERVICES (IV POST – II) – 2024
மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய பின்வரும் கூற்றுக்களில் எவை சரியானது?
(1) அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பிய வருடம் 1920
(2) இரவீந்திரநாத் தாகூர் முதன்முதலில் மகாத்மா என்று அழைத்தார்
(3) சுபாஷ் சந்திர போஸ் முதன்முதலில் அவரை தேசத் தந்தை என அழைத்தார்
Correct Answer: C [(2) மற்றும் (3) மட்டும்]
விளக்கம்:
(1) தவறு: காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியது 1915-இல் (தமிழ்நாட்டு 12ஆம் வகுப்பு வரலாறு); 1920 என்பது ஒத்துழையாமை இயக்கம் தொடங்கிய ஆண்டு.
24.
GROUP 1 & 1A – 2025
கீழ்கண்ட வாக்கியங்களைக் கருதுக, சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
(i) ஜனவரி மாதம் 30ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் மறைந்த தினமாகும்
(ii) ஜனவரி மாதம் 23ஆம் நாள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினமாகும்
(iii) ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமாகும்
(iv) சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் அக்டோபர் 13 ஆகும்
Correct Answer: D [(i), (ii), (iii) மட்டும் சரி]
விளக்கம்:
காந்தியடிகள் 30 ஜனவரி 1948 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்; அந்நாள் தியாகிகள் தினமாக நினைவுகூரப்படுகிறது. நேதாஜி பிறந்த நாள் 23 ஜனவரி (1897) ; அம்பேத்கர் பிறந்த நாள் 14 ஏப்ரல் (1891) .
25.
ASSISTANT PUBLIC PROSECUTOR GRADE II – 2026
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் எது மகாத்மா காந்திக்குத் தொடர்புடையது?
(1) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போயர் போரில் கலந்து கொண்டார்.
(2) ஆம்புலன்ஸ் படையை நிறுவினார்.
(3) 1919-ல் பஞ்சாப் துயரத்தில் காந்தியடிகளுக்குப் பங்கு இல்லை.
Correct Answer: B [(1) மற்றும் (2) மட்டும்]
விளக்கம்:
(1), (2) சரி: போயர் போரின்போது (1899) காந்தியடிகள் தென்னாப்பிரிக்க இந்தியர்களைக் கொண்டு இந்திய ஆம்புலன்ஸ் படையை அமைத்து, காயமுற்றோருக்குச் சேவை செய்தார். (1), (2) இரண்டும் உறுதியாகச் சரி என்பதால், இரண்டையும் கொண்ட ஒரே விருப்பமான (B) விடையாகிறது.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய தேசிய இயக்கம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-national-movement-pyq
📘 இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 606 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 142 அட்டவணைகள் & குறிப்புகள் · 8 அலகுகள் (23 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இத்தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட பிற வரலாற்று வினா
› இந்திய தேசிய இயக்கம் PYQ – செய்தித்தாள்கள், இதழ்கள், நூல்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – பிற தலைவர்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இராஜாஜி
› இந்திய தேசிய இயக்கம் PYQ – தந்தை பெரியார்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – காமராஜர்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
