இந்திய தேசிய இயக்கம் PYQ – மௌலானா அபுல் கலாம் ஆசாத்
← திரும்பச் செல்ல
(i) சரி – ஆசாத் கிலாபத் இயக்கத்தின் முன்னணித் தலைவராக இருந்தார்; அவ்வியக்கத்தின்போது காந்தியடிகளுடன் நெருங்கிப் பணியாற்றினார். (ii) சரி – முஸ்லிம் லீக்கின் இனவாதப் பிரிவினைக் கொள்கையை அவர் வெளிப்படையாக நிராகரித்தார்.
₹299 →
இந்திய தேசிய இயக்கம் PYQ – மௌலானா அபுல் கலாம் ஆசாத் – 9 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
ADGS – 2021
பின்வரும் வார்த்தைகளைக் கூறியவர் யார்? "பாகிஸ்தான் திட்டம் இந்தியா முழுமைக்கும் தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கும் அது மட்டுமல்லாது இது நிறைய பிரச்சனைகளை உருவாக்கும் தீர்ப்பதை விட"
Correct Answer: C [மௌலானா அபுல்கலாம் ஆசாத்]
விளக்கம்:
ஒன்றுபட்ட இந்தியாவுக்காக இறுதிவரை உறுதியாக நின்றவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் .
2.
GROUP 1 – 2021
1916 ஆம் ஆண்டில் சிறைவாசத்தின் போது எழுதப்பட்ட அபுல் கலாம் ஆசாத்தின் வாழ்க்கை சரிதையின் பெயர் என்ன?
Correct Answer: A [தஷ்கிரா]
விளக்கம்:
அல்-ஹிலால், அல்-பலாக் இதழ்கள் தடைசெய்யப்பட்ட பின், முதல் உலகப்போர்க் காலத்தில் ஆசாத் ராஞ்சியில் சிறைவைக்கப்பட்டார் (1916 – 1920) . அக்காலத்தில் அவர் எழுதியதே "தஸ்கிரா" (Tazkira) என்ற தன்வரலாற்றுத் தன்மையுடைய நூல்.
3.
GROUP 1 – 2021
தர்ஜூமான் குர்ஆன் [குர்ஆனின் அரபி மொழியிலிருந்து உருது மொழிக்கு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு] என்ற மிகச் சிறந்த படைப்பினை உருவாக்கியவர் யார்?
Correct Answer: C [மௌலானா அபுல் கலாம் ஆசாத்]
விளக்கம்:
"தர்ஜுமான் உல் குர்ஆன்" – குர்ஆனின் உருது மொழிபெயர்ப்பும் விளக்கவுரையும் – மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் மிகச் சிறந்த சமயப் படைப்பு. அதன் முதல் வரைவு அவரது சிறைவாசக் காலத்தில் உருவானது.
4.
GROUP 1 – 2021
கீழ்கண்ட கூற்றுகளில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் பற்றிய தவறான கூற்று எது?
- மௌலானா அபுல்கலாம் ஆசாத் கல்கத்தாவில் பிறந்தார்.
- இவர் 'லிசான் உல் சித்திக்' என்ற பத்திரிக்கையின் பதிப்பாசிரியர் ஆவார்.
- இவர் அல்ஹிலால் என்ற இதழை வெளியிட்டார்.
- இவர் இந்திய தேசிய காங்கிரஸ்க்கு 1923 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Correct Answer: D [2, 3, 4 சரி; 1 தவறு]
விளக்கம்:
1 தவறு – ஆசாத் 1888 நவம்பர் 11 அன்று மெக்காவில் (அன்றைய உதுமானியப் பேரரசு) பிறந்தார்; பின்னர் குடும்பம் கல்கத்தாவில் குடியேறியது. 2 சரி – 1903இல் " லிசான் உஸ் சித்க் " என்ற மாத இதழை வெளியிட்டார்.
5.
CESGS – 2023
யாருடைய பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது?
Correct Answer: D [அபுல்கலாம் ஆசாத்]
விளக்கம்:
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான (1947 – 1958) மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவம்பர் 11 " தேசிய கல்வி நாள் " ஆகக் கொண்டாடப்படுகிறது.
6.
JSO – 2023
1923-இல் இளம் வயதில், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பிடுக.
Correct Answer: B [அபுல்கலாம் ஆசாத்]
விளக்கம்:
1923இல் டெல்லியில் நடந்த காங்கிரஸ் சிறப்பு மாநாட்டுக்கு 35 வயதான மௌலானா அபுல் கலாம் ஆசாத் தலைவரானார்; காங்கிரஸ் வரலாற்றில் மிக இளம் வயதில் தலைவரானவர் அவரே.
7.
JSO – 2023 · HEALTH OFFICER – 2023 · SURVEYOR DRAFTMAN – 2022
பகுத்தறிவு மற்றும் தேசிய சிந்தனைகளை பரப்புரை செய்ய 1912 -ம் ஆண்டு 'அல் ஹிலால்' பத்திரிக்கையை ஆரம்பித்தவர்
Correct Answer: D [மௌலானா அபுல் கலாம் ஆசாத்]
விளக்கம்:
1912இல் கல்கத்தாவிலிருந்து "அல்-ஹிலால்" (பிறை நிலவு) என்ற உருது வார இதழைத் தொடங்கியவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் .
8.
GROUP 1B & 1C – 2024
ஆகஸ்டு கொடையை இந்திய தேசிய காங்கரஸ் மற்றும் முஸ்லீம் லீக் ஏற்க மறுத்த நிலையில் "என்னுடைய சகாக்களை கலந்தாலோசிக்காமலே ஆகஸ்டு கொடையை நான் நிராகரிக்கிறேன்" மேற்கூறிய கூற்றை கூறியவர் யார்?
Correct Answer: D [மௌலானா அபுல்கலாம் ஆசாத்]
விளக்கம்:
1940 ஆகஸ்ட் 8 அன்று அரசப்பிரதிநிதி லின்லித்கோ பிரபு அறிவித்த ஆகஸ்ட் கொடை (August Offer) அறிவிக்கப்பட்டபோது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் (1940 ராம்கர் மாநாடு முதல்).
9.
GROUP 1B & 1C – 2024
பின்வருபனவற்றுள் எவை மௌலானா அபுல்கலாம் ஆசாத் பற்றிய சரியானக் கூற்றுகள்?
(i) மௌலானா அபுல்கலாம் ஆசாத் கிலாபத் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்
(ii) முஸ்லீம் லீக்கின் கொள்கைகளை அவர் எதிர்த்தார்
(iii) பிரிவினைக்கு அவர் மனமுவந்து ஆதரவு அளித்தார்
Correct Answer: C [(i) மற்றும் (ii) மட்டும்]
விளக்கம்:
(i) சரி – ஆசாத் கிலாபத் இயக்கத்தின் முன்னணித் தலைவராக இருந்தார்; அவ்வியக்கத்தின்போது காந்தியடிகளுடன் நெருங்கிப் பணியாற்றினார். (ii) சரி – முஸ்லிம் லீக்கின் இனவாதப் பிரிவினைக் கொள்கையை அவர் வெளிப்படையாக நிராகரித்தார்.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய தேசிய இயக்கம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-national-movement-pyq
📘 இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 606 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 142 அட்டவணைகள் & குறிப்புகள் · 8 அலகுகள் (23 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இத்தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட பிற வரலாற்று வினா
› இந்திய தேசிய இயக்கம் PYQ – செய்தித்தாள்கள், இதழ்கள், நூல்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – பிற தலைவர்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இராஜாஜி
› இந்திய தேசிய இயக்கம் PYQ – தந்தை பெரியார்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – காமராஜர்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
