பொது அறிவியல் PYQ – அறிவியல் மனப்பான்மை, அறிவியல் முறை

← திரும்பச் செல்ல

பொது அறிவியல் PYQ – அறிவியல் மனப்பான்மை, அறிவியல் முறை – 27 வினாக்கள், பாடம்: அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
Agricultural Officer 2023
(SCIENCE) 'அறிவியல்' எனும் சொல்லின் தோற்றுவாய் மொழி

Correct Answer: B [லத்தீன்]

விளக்கம்:

"Science" என்ற ஆங்கிலச் சொல் "அறிவு" எனப் பொருள்படும் "scientia" என்ற இலத்தீன் சொல்லிலிருந்து தோன்றியது.

2.  
Group 1 2022
அறிவியலின் பின்வரும் பண்புகளில் எது உண்மையல்ல?
(i) இது இயற்கை விதிகளால் வழிநடத்தப்படுகிறது
(ii) இது காணக்கூடிய உலகத்திற்கு எதிராகச் சோதிக்கக்கூடியது
(iii) இதன் முடிவுகள் நிரந்தரமானவை
(iv) இது பொய்யாக்கக்கூடியது

Correct Answer: C [(iii) மட்டும்]

விளக்கம்:

அறிவியல் இயற்கை விதிகளால் வழிநடத்தப்படுகிறது; புலனறியும் உலகத்துடன் சோதிக்கக்கூடியது; தவறென நிரூபிக்கப்படக்கூடியது (falsifiable). அதன் முடிவுகள் நிரந்தரமானவை அல்ல – புதிய சான்றுகள் வந்தால் மாற்றப்படக்கூடியவை (tentative). எனவே (iii) மட்டுமே தவறு.

3.  
Group 2 2022
அறிவியல் சிந்தனையின் கொள்கைகள்
(i) அனுபவவாதம்
(ii) பகுத்தறிவுவாதம்
(iii) ஐயவாதம் (சந்தேகம்)

Correct Answer: D [(i), (ii) மற்றும் (iii)]

விளக்கம்:

அறிவியல் சிந்தனையின் அடிப்படைகள்: அனுபவவாதம் (empiricism – கண்டறிதல், சோதனை வழி அறிதல்), பகுத்தறிவுவாதம் (rationalism – தர்க்க ரீதியான சிந்தனை), ஐயவாதம் (skepticism – சான்றின்றி எதையும் ஏற்காமை). மூன்றும் சரி.

4.  
Combined Research Assistant 2023
கீழ்க்கண்டவற்றில் அறிவியல் அறிவை வளர்ப்பது எது?

Correct Answer: A [உற்றுநோக்கல்]

விளக்கம்:

கூர்ந்து நோக்குதல் (observation) அறிவியல் முறையின் முதல் படி; அதுவே அறிவியல் அறிவை வளர்க்கிறது. ஊகம், மூடநம்பிக்கை, சகிப்பின்மை ஆகியவை அறிவியல் அறிவுக்குத் தடைகள்.

5.  
Veterinary Assistant 2023
அறிவியல் முறையைப் படிக்கும் சரியான வரிசையைத் தேர்வு செய்யவும்
1. அனுபவச் சோதனை
2. கருதுகோள்
3. கவனிப்பு (உற்றுநோக்கல்)
4. முடிவுரை

Correct Answer: A [3, 2, 1, 4]

விளக்கம்:

அறிவியல் முறையின் வரிசை: கூர்ந்து நோக்குதல் → கருதுகோள் உருவாக்குதல் → சோதனை மூலம் சரிபார்த்தல் (empirical test) → முடிவு. எனவே 3, 2, 1, 4.

6.  
Group 2/2A 2024
அறிவியல் முறைகளின் உருவாக்கத்தில் ஆசிரியர் – மாணவர் தொடர்ச்சியின் காலவரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.

Correct Answer: C [சாக்ரடீஸ் – பிளேட்டோ – அரிஸ்டாட்டில் – அலெக்சாண்டர்]

விளக்கம்:

அறிவியல் முறையின் வளர்ச்சியில் ஆசிரியர்–மாணவர் தொடர்: சாக்ரடீஸ் → பிளேட்டோ (சாக்ரடீஸின் மாணவர்) → அரிஸ்டாட்டில் (பிளேட்டோவின் மாணவர்) → அலெக்சாண்டர் (அரிஸ்டாட்டிலின் மாணவர்).

7.  
Group 1 2021
சிறப்புப் பரிசோதனைகள்:
1. நீல லிட்மஸ் தாளை ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் நனைத்தால் அது சிவப்பாக மாறும்.
2. நீல லிட்மஸ் தாளை ஆக்சாலிக் அமிலத்தில் நனைத்தால் அது சிவப்பாக மாறும்.
3. நீல லிட்மஸ் தாளை கந்தக அமிலத்தில் நனைத்தால் அது சிவப்பாக மாறும்.
பொது விதி: அமிலமானது நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றும். இது ______ ஆய்ந்தறிதல் என அழைக்கப்படும்.

Correct Answer: D [தொகுத்தறி (விதிவரு)]

விளக்கம்:

பல குறிப்பிட்ட சோதனைகளின் முடிவுகளிலிருந்து ஒரு பொது விதியை ("அமிலங்கள் நீல லிட்மஸைச் சிவப்பாக்கும்") உருவாக்குவது தொகுத்தறி (inductive) காரணமறிதல். பொது விதியிலிருந்து குறிப்பிட்ட முடிவுக்கு வருவது பகுத்தறி (deductive) காரணமறிதல்.

8.  
Group 1 2024
பொதுவான கருத்தியலிலிருந்து குறிப்பான விவரங்களுக்குச் செல்லும் கற்றல் வழிமுறை இவ்வாறு அழைக்கப்படுகிறது

Correct Answer: B [பகுத்தறி (விதிவிளக்க) கற்றல்]

விளக்கம்:

பொதுக் கருத்திலிருந்து குறிப்பிட்ட விவரங்களுக்குச் செல்லும் கற்றல் / காரணமறிதல் முறை பகுத்தறி (deductive) கற்றல். குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து பொது விதிக்குச் செல்வது தொகுத்தறி (inductive) கற்றல்.

9.  
Agricultural Officer 2023
ஒரு நோக்கம் அல்லது இலக்குடன் மனதில் படிப்படியாகச் சிந்தித்தலை வரையறுக்கப் பயன்படுத்தும் சொல்

Correct Answer: B [பகுத்தறிதல்]

விளக்கம்:

ஒரு குறிக்கோளை நோக்கிப் படிப்படியாகச் சிந்திப்பது காரணமறிதல் (reasoning); இங்கு "பகுத்தறிதல்" என்பது இப்பொருளில் வருகிறது. தொகுத்தறி – பகுத்தறி அட்டவணையில் உள்ள "பகுத்தறி" (deductive) வேறு.

10.  
CTS (Non-Interview Posts) 2024
______ என்பது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பெறக்கூடியதும், வெளிப்படுத்துவதற்கு மிகவும் கடினமானதும் ஆகும்.

Correct Answer: B [உள்ளார்ந்த (மறைமுக) அறிவு]

விளக்கம்:

தனிப்பட்ட அனுபவத்தால் பெறப்பட்டு, சொற்களில் விளக்குவதற்குக் கடினமான அறிவு மறைமுக அறிவு (tacit knowledge); எ.கா. மிதிவண்டி ஓட்டுதல். எழுத்தில் தெளிவாகப் பதிவு செய்யக்கூடியது வெளிப்படை அறிவு (explicit knowledge).

11.  
Veterinary Assistant 2023 · CTS (Interview Posts) 2024
'அறிவியல் மனப்பான்மை' (Scientific temper) என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்

Correct Answer: B [நேரு – 'கண்டறிந்த இந்தியா']

விளக்கம்:

"அறிவியல் மனப்பான்மை" (scientific temper) என்ற சொல்லை ஜவஹர்லால் நேரு தமது "இந்தியாவின் கண்டுபிடிப்பு" (The Discovery of India, 1946) நூலில் பயன்படுத்தி மக்களிடையே பரப்பினார்.

12.  
Executive Officer Gr. I (HR&CE) 2024
அறிவியல் மனப்பான்மையைப் பொறுத்தவரை உண்மையானது எது?

Correct Answer: A [திறந்த மனப்பான்மை மற்றும் அறிவுசார் நேர்மை]

விளக்கம்:

திறந்த மனப்பான்மையும் அறிவு நேர்மையும் அறிவியல் மனப்பான்மையின் அடிப்படைப் பண்புகள்: சான்றுகளின் அடிப்படையில் கருத்தை மாற்றிக்கொள்ளத் தயாராக இருத்தல், உண்மைகளை உள்ளபடியே ஏற்றல்.

13.  
Asst. Director (Fisheries) 2022
திறந்த மனப்பான்மை என்ற பண்பு ______ ஆகும்.

Correct Answer: D [அறிவியல் மனப்பான்மை]

விளக்கம்:

புதிய கருத்துகளையும் சான்றுகளையும் ஏற்கும் திறந்த மனப்பான்மை அறிவியல் மனப்பான்மையின் (scientific attitude) ஒரு பண்பு.

14.  
Research Asst. (Animal Husbandry) 2023
கீழ்வருவனவற்றுள் எது "என் வழி மட்டுமே வழி அல்ல" என்ற வாக்கியத்தின் மூலம் விளக்கப்படுகிறது?
(i) நேர்மை
(ii) பகுத்தறிவு
(iii) திறந்த மனப்பான்மை
(iv) படைப்பாற்றல்

Correct Answer: C [(iii) மட்டும்]

விளக்கம்:

"என் வழி மட்டுமே வழி அல்ல" என்பது பிறர் கருத்துகளையும் மாற்று வழிகளையும் ஏற்கும் திறந்த மனப்பான்மையைக் குறிக்கிறது.

15.  
Geology Service 2023
அறிவியல் மனப்பான்மையுடன் தொடர்புபடுத்தப்படாத பண்பை அடையாளம் காண்க.

Correct Answer: D [பக்கச்சார்பான]

விளக்கம்:

சார்புநிலை (bias) அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானது. கூர்ந்த நோக்கு, திறந்த மனப்பான்மை, மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்ட நிலை ஆகியவை அறிவியல் மனப்பான்மையின் பண்புகள்.

16.  
Asst. Public Prosecutor Gr. II 2025
அறிவியல் மனப்பான்மை எதனை ஊக்குவிப்பதில்லை?
(i) விசாரணை உணர்வு
(ii) பகுத்தறிவுச் சிந்தனை
(iii) பகுப்பாய்வுத் திறன்
(iv) மூடநம்பிக்கை மற்றும் பாரபட்சம்

Correct Answer: B [(iv) மட்டும்]

விளக்கம்:

அறிவியல் மனப்பான்மை வினவும் ஆர்வம், பகுத்தறிவுச் சிந்தனை, பகுப்பாய்வுத் திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது; மூடநம்பிக்கையையும் முன்முடிவுகளையும் ஊக்குவிப்பதில்லை.

17.  
Executive Officer Gr. I (HR&CE) 2024
அறிவியல் மனப்பான்மையைக் கீழ் உள்ளவற்றில் எது தவிர மற்றவற்றால் புகுத்த முடியும்?
(i) கேள்விகள் கேட்டல்
(ii) ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவியல் தகவல்களைப் படித்தல்
(iii) சோதனைகள் செய்தல்
(iv) மனப்பாடம் செய்தல்

Correct Answer: D [(iv) மட்டும்]

விளக்கம்:

கேள்வி கேட்டல், நூல்களைப் படித்தல், சோதனைகள் செய்தல் ஆகியவை அறிவியல் மனப்பான்மையை வளர்க்கின்றன; புரிதலின்றி மனப்பாடம் செய்வது அதை வளர்க்காது.

18.  
AJ 2023
மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை எவ்வாறு வளர்ப்பது?
(i) மாணவர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளித்தல்
(ii) மாணவர்களைக் கேள்விகள் கேட்கவும் அதற்கான பதிலைத் தாமே கண்டறியவும் ஊக்குவித்தல்
(iii) அன்றாட வாழ்வில் அறிவியல் முறைகளைப் பயன்படுத்த ஊக்குவித்தல்
(iv) அவர்களுக்கு நன்கு தயாரிக்கப்பட்ட அறிவியல் பாடப் பொருளை வழங்குதல்

Correct Answer: B [(ii) மற்றும் (iii) மட்டும்]

விளக்கம்:

மாணவர்களைக் கேள்வி கேட்கவும், தாமே விடை தேடவும் ஊக்குவித்தல், அறிவியல் முறைகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தத் தூண்டுதல் ஆகியவையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும். கூடுதல் பயிற்சி வகுப்புகளும் ஆயத்தக் குறிப்புகளும் அதற்கான வழிகள் அல்ல.

19.  
AD Co-operation 2022 · Health Officer 2023 · Group 1 2024
திரும்பத் திரும்பத் தகவலை மனதில் பதிய வைப்பது ______ என்று அழைக்கப்படுகிறது.

Correct Answer: B [மனப்பாடம் செய்து கற்றல்]

விளக்கம்:

பொருளைப் புரிந்துகொள்வதை விட, திரும்பத் திரும்பச் சொல்லி (repetition) சொல்லுக்குச் சொல் நினைவில் நிறுத்தும் கற்றல் முறை மனப்பாடக் கற்றல் (rote learning).

20.  
Forest Apprentice 2022 · AD Town & Country Planning 2022
பெருக்கல் வாய்ப்பாடு மற்றும் ஆங்கில எழுத்துக்கள் கற்றலுக்கு உதாரணமாக அமைவது

Correct Answer: B [பொருள் உணராமல் கற்றல்]

விளக்கம்:

வாய்ப்பாடு, ஆங்கில எழுத்துகள் போன்றவற்றைக் கற்க மனப்பாடக் கற்றல் பயனுள்ளது; ஏனெனில் இவை புரிதலை விட நினைவில் வைத்தலையே பெரிதும் சார்ந்தவை. அணுக்கள், கனசெவ்வகம், சமநிலை போன்ற கருத்துகளுக்குப் புரிதல் அவசியம்.

21.  
Agricultural Officer 2023
மனப்பாடக் கற்றல் (பொருள் உணராமல் கற்றல்) என்பது

Correct Answer: A [செயலற்ற கற்றல்]

விளக்கம்:

மனப்பாடக் கற்றலில் கற்பவர் புரிதலோ பகுப்பாய்வோ இன்றி தகவலைத் திரும்பத் திரும்பச் சொல்வதால் அது செயலற்ற (passive) கற்றல். கேள்வி கேட்டல், சோதனை, விவாதம் மூலம் கற்பது செயலூக்கக் (active) கற்றல்.

22.  
Agricultural Officer 2023
பொருள் உணராமல் கற்றல் (மனப்பாடம்):
(i) கணிதம் மற்றும் அறிவியலில் சூத்திரங்களை மனப்பாடம் செய்யப் பயன்படுகிறது
(ii) திரும்பத் திரும்ப மனப்பாடம் செய்யும் முறை
(iii) சேமிக்கப்பட்ட தரவைப் புரிந்துகொள்வது தேவையில்லை

Correct Answer: D [(i), (ii) மற்றும் (iii)]

விளக்கம்:

மனப்பாடக் கற்றல் திரும்பத் திரும்பச் சொல்வதை அடிப்படையாகக் கொண்டது; கணிதம், அறிவியலில் சூத்திரங்களை நினைவில் கொள்ளப் பயன்படுகிறது; சேமிக்கப்படும் தகவலைப் புரிந்துகொள்வது அதற்குத் தேவையில்லை. மூன்று கூற்றுகளும் சரி.

23.  
AD Town & Country Planning 2022
புளூமின் கற்பித்தல் நோக்கங்களின் வகைப்பாடு விளக்குவது

Correct Answer: C [அறிவுசார், உணர்வுசார் (உளம்சார்) மற்றும் உடலியக்கம்சார் களங்கள்]

விளக்கம்:

பெஞ்சமின் ப்ளூம் தலைமையிலான குழு வகுத்த கல்வி நோக்கங்களின் வகைப்பாடு மூன்று களங்களைக் கொண்டது: அறிவுசார் (cognitive), உணர்வுசார் (affective), உடலியக்கத் திறன்சார் (psychomotor).

24.  
Fisheries Inspector / SI 2023
நடனம் ஆடுதல், வாகனம் ஓட்டுதல் மற்றும் எழுதுதல் ஆகியவை எந்தக் கற்றல் களத்திற்கு எடுத்துக்காட்டு?

Correct Answer: D [உடலியக்கம்சார் (செயல்பாடு சார்ந்த) கற்றல் களம்]

விளக்கம்:

நடனம், வாகனம் ஓட்டுதல், எழுதுதல் போன்ற உடல் இயக்கத் திறன்கள் உடலியக்கத் திறன்சார் (psychomotor) களத்தைச் சேர்ந்தவை.

25.  
District Educational Officer 2023
வாலஸ் என்பவரின் படைப்பாற்றல் கோட்பாட்டின்படி கீழ்க்காணும் நான்கு படிகளை வரிசைப்படுத்துக.
1. அடைகாத்தல் (உள்வளர்ச்சி)
2. உள்ளொளி தோன்றுதல்
3. ஆயத்தம்
4. சரிபார்த்தல்

Correct Answer: A [3, 1, 2, 4]

விளக்கம்:

கிரஹாம் வாலஸின் படைப்பாற்றல் நிலைகள்: ஆயத்தம் (preparation) → அடைகாத்தல் (incubation) → ஒளிர்வு / உள்ளொளி (illumination) → சரிபார்ப்பு (verification). எனவே 3, 1, 2, 4.

26.  
Asst. Conservator of Forests 2023
'பெட்டிக்கு வெளியே சிந்தித்தல்' எதனுடன் தொடர்புடையது?
(i) தர்க்க ரீதியிலான சிந்தனை
(ii) படைப்பாற்றல் சிந்தனை
(iii) விமர்சனச் சிந்தனை
(iv) பகுப்பாய்வுத் திறன்

Correct Answer: B [(ii) மட்டும்]

விளக்கம்:

"வழக்கமான சட்டகத்திற்கு வெளியே சிந்தித்தல்" (thinking out of the box) என்பது புதிய, தனித்தன்மையான தீர்வுகளைக் காணும் படைப்பாற்றல் சிந்தனை (creative thinking).

27.  
Group 1B/1C 2024
அறிவுத்திறன் ஈவு (IQ) என்பது

Correct Answer: A [(மன வயது / உடல் வயது) × 100]

விளக்கம்:

நுண்ணறிவு ஈவு (IQ) = (மன வயது / கால வயது) × 100. மன வயது / கால வயது என்ற விகிதக் கருத்தை வில்லியம் ஸ்டெர்ன் முன்வைத்தார்; 100-ஆல் பெருக்கும் முறையை லூயிஸ் டெர்மன் அறிமுகப்படுத்தினார்; IQ 90–110 சராசரி எனக் கொள்ளப்படுகிறது.

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – பொது அறிவியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-general-science-pyq

📘 TNPSC பொது அறிவு அலகு I — பொது அறிவியல் (General Science) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு I பொது அறிவியல் முழுவதும் · 14 அத்தியாயங்கள் · 260 பயிற்சி வினாக்கள் விடையுடன் · 2 மாதிரித் தேர்வுகள் (50 வினாக்கள்) · 14 மனவரைபடங்கள் · அக்டோபர் 2026 வரையிலான அறிவியல் நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› பொது அறிவியல் PYQ – கணினி, தொழில்நுட்பம், அறிவியலாளர்கள் – பகுதி 2 (வினா 27–51) › பொது அறிவியல் PYQ – கணினி, தொழில்நுட்பம், அறிவியலாளர்கள் – பகுதி 1 (வினா 1–26) › பொது அறிவியல் PYQ – மரபியல், பரிணாமம், உயிரித் தொழில்நுட்பம் – பகுதி 2 (வினா 27–52) › பொது அறிவியல் PYQ – மரபியல், பரிணாமம், உயிரித் தொழில்நுட்பம் – பகுதி 1 (வினா 1–26) › பொது அறிவியல் PYQ – நோய்கள், உடல்நலம், ஊட்டச்சத்து › பொது அறிவியல் PYQ – மனித உடற்செயலியல்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0