வினாடி வினா
← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
[ARGS 2020] 'திராவிடன் அசோசியேசன்' தொடங்கப்பட்ட ஆண்டு
Correct Answer: B [1912]
Notes:
சென்னை திராவிடர் சங்கம் (திராவிடன் அசோசியேசன்) 1912-ல் சி. நடேசனாரால் பிராமணரல்லாத மாணவர்களுக்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்டது.
2.
[ARGS 2020] 1884 ஆம் ஆண்டு பி. அனந்த சார்லு மற்றும் பி. ரெங்கையா நாயுடு தொடங்கிய அரசியல் சார்ந்த அமைப்பு எவ்வாறு அறியப்பட்டது?
Correct Answer: C [மெட்ராஸ் மகாஜன சபா]
Notes:
சென்னை மகாஜன சபை 1884 மே மாதம் பி. அனந்தாச்சார்லு, பி. ரங்கையா நாயுடு, எம். வீரராகவாச்சாரியார் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
3.
[ARGS 2020] தமிழகத்தில் தன்னாட்சி இயக்கத்திற்காக மிகச் சிறப்பான பணியாற்றியவர் யார்?
Correct Answer: A [திருமதி. அன்னிபெசண்ட்]
Notes:
அன்னிபெசன்ட் 1916 செப்டம்பரில் சென்னை அடையாறில் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கி, நியூ இந்தியா, காமன்வீல் இதழ்கள் மூலம் பரப்பினார்.
4.
[GSASO-2020] புனித இராமலிங்கரின் கருணை என்ற கோட்பாடு இதனை அடிப்படையாக கொண்டிருந்தது
Correct Answer: D [ஆன்மநேய ஒருமைப்பாடு]
Notes:
இராமலிங்க அடிகளின் ஜீவகாருண்யம் எல்லா உயிர்களும் ஒன்றே என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
5.
[ARGS-2021] பிராமணர் அல்லாத இயக்கம் ________ ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
Correct Answer: A [1916]
Notes:
1916-ல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) தொடங்கப்பட்டு பிராமணரல்லாதோர் அறிக்கை வெளியிடப்பட்டதுடன் பிராமணரல்லாத இயக்கம் தொடங்கியது.
6.
[PTGS-2021] பொருத்துக:
சமூக சீர்திருத்தம் – சீர்திருத்தவாதிகள்
(a) உடன்கட்டை முறை ஒழிப்பு – 1. ஈஸ்வர்சந்திர வித்யாசாகர்
(b) தலித் மக்களுக்கான ஆலய பிரவேசம் – 2. தந்தை பெரியார்
(c) விதவை மறுமண சட்டம் – 3. ராஜாராம் மோகன் ராய்
(d) தீண்டாமைக்கெதிரான சுயமரியாதை இயக்கம் – 4. அம்பேத்கர்
சமூக சீர்திருத்தம் – சீர்திருத்தவாதிகள்
(a) உடன்கட்டை முறை ஒழிப்பு – 1. ஈஸ்வர்சந்திர வித்யாசாகர்
(b) தலித் மக்களுக்கான ஆலய பிரவேசம் – 2. தந்தை பெரியார்
(c) விதவை மறுமண சட்டம் – 3. ராஜாராம் மோகன் ராய்
(d) தீண்டாமைக்கெதிரான சுயமரியாதை இயக்கம் – 4. அம்பேத்கர்
Correct Answer: A [a-3, b-4, c-1, d-2]
Notes:
உடன்கட்டை ஒழிப்பு – ராஜாராம் மோகன் ராய்; ஆலய நுழைவு – அம்பேத்கர் (காலாராம் போராட்டம்); விதவை மறுமணச் சட்டம் 1856 – வித்யாசாகர்; சுயமரியாதை இயக்கம் – பெரியார்.
7.
[PTGS-2021] அயோத்திதாசரால் தோற்றுவிக்கப்பட்டது எது?
Correct Answer: C [அத்வைதானந்த சபா]
Notes:
அயோத்திதாசர் 1870-ல் நீலகிரியில் அத்வைதானந்த சபையைத் தொடங்கினார்; சத்யசோதக் சமாஜ் – புலே, சமரச வேத சன்மார்க்க சங்கம் – வள்ளலார், அய்யாவழி – வைகுண்ட சுவாமிகள்.
8.
[ADGS-2021] இந்தியாவின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம்
Correct Answer: C [மதராஸ் தொழிலாளர் சங்கம்]
Notes:
1918 ஏப்ரலில் பி.பி. வாடியா, திரு.வி.க. ஆகியோரால் தொடங்கப்பட்ட சென்னை தொழிலாளர் சங்கமே இந்தியாவின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம்.
9.
[EO-G3-2022] திராவிட மகாஜன சபையை நிறுவியவர் யார்?
Correct Answer: B [அயோத்திதாசர் பண்டிதர்]
Notes:
அயோத்திதாசப் பண்டிதர் 1891-ல் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக திராவிட மகாஜன சபையை நிறுவினார்.
10.
[EO-G3-2022] "வள்ளலார்" எனப் பலராலும் அறியப்பட்டவர்?
Correct Answer: C [இராமலிங்க அடிகள்]
Notes:
வடலூர் இராமலிங்க அடிகள் (1823-1874) வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார்.
11.
[VCGS-2022] 1898 ம் ஆண்டு மெட்ராஸில் விதவைகள் இல்லத்தை ஏற்படுத்தியவர்
Correct Answer: A [வீரசலிங்கம் பந்தலு]
Notes:
விதவை மறுமணத்தின் முன்னோடியான கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு 1898-ல் சென்னையில் விதவைகள் இல்லத்தை ஏற்படுத்தினார்.
12.
[VCGS-2022] 1920ல் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் ________ தமிழ்நாட்டின் முதலமைச்சரானவர்.
Correct Answer: B [ஏ. சுப்புராயலு ரெட்டியார்]
Notes:
1920 தேர்தலில் நீதிக்கட்சி வென்றதும் ஏ. சுப்புராயலு ரெட்டியார் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரானார்; 1921-ல் பனகல் அரசர் அவருக்குப் பின் வந்தார்.
13.
[2022 EXAM] 1922 ம் ஆண்டு கயா காங்கிரஸ் அமர்வில் சபைகளை 'ஒன்று சீர்படுத்துவது அல்லது முடித்து வைப்பது' என்ற முன்மொழிவை, கீழ்வரும் தலைவர்களுள் யார் எதிர்த்தது?
Correct Answer: D [சி. இராஜகோபாலச்சாரியார்]
Notes:
கயா மாநாட்டில் (1922) சி.ஆர். தாஸ், மோதிலால் நேரு சட்டமன்ற நுழைவை முன்மொழிந்தனர்; 'மாற்றம் விரும்பாதோர்' அணிக்குத் தலைமை தாங்கிய இராஜாஜி அதை எதிர்த்தார்.
14.
[2022 EXAM] கீழ்க்கண்டவற்றில் சரியான இணையைத் தேர்ந்தெடுக்க:
1. வேலூர்க் கலகம் – 10 ஜூலை 1806
2. 1857 ம் ஆண்டு புரட்சி – தேயிலைத் தொழிலாளர்கள்
3. மெட்ராஸ் மகாஜன சபை – Dr. ரங்கய்யா நாயுடு
4. வங்கப்பிரிவினை – 20 ஜூலை 1905
1. வேலூர்க் கலகம் – 10 ஜூலை 1806
2. 1857 ம் ஆண்டு புரட்சி – தேயிலைத் தொழிலாளர்கள்
3. மெட்ராஸ் மகாஜன சபை – Dr. ரங்கய்யா நாயுடு
4. வங்கப்பிரிவினை – 20 ஜூலை 1905
Correct Answer: C [1, 3 மற்றும் 4 சரி]
Notes:
வேலூர்க் கலகம் 10 ஜூலை 1806-ல் நடந்தது; ரங்கையா நாயுடு சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர்; வங்கப் பிரிவினை 20 ஜூலை 1905-ல் அறிவிக்கப்பட்டது. 1857 புரட்சி சிப்பாய்களின் கலகம், தோட்டத் தொழிலாளர்களுடையது அல்ல.
15.
[2022 EXAM] தமிழ்நாட்டில் 1923 ஆம் ஆண்டில் மே தினத்தின் முதல் கொண்டாட்டம் ________ ஏற்பாடு செய்யப்பட்டது.
Correct Answer: A [சிங்காரவேலர்]
Notes:
ம. சிங்காரவேலர் 1923 மே 1 அன்று சென்னையில் இந்தியாவின் முதல் மே தினத்தைக் கொண்டாடி, தொழிலாளர் விவசாயிகள் கட்சியைத் தொடங்கினார்.
16.
[Surveyor Draftsman 2022] தவறான இணையைத் தெரிவு செய்க:
Correct Answer: B [சுப்பிரமணிய பாரதியார் – டிசம்பர் 11, 1881]
Notes:
சுப்பிரமணிய பாரதியார் பிறந்தது 11 டிசம்பர் 1882; 1881 அல்ல. மற்ற பிறந்த தேதிகள் சரியானவை.
17.
[Surveyor Draftsman 2022] ஆளுமையை (நபரை) அடையாளம் காண்க.
இவர் தமிழக அரசியல் இயக்கத்தில் பகுத்தறிவு கருத்துக்கள் மற்றும் அறிவியல் பார்வைகளை ஏற்படுத்தியவர்; விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக பாடுபட்டவர்; இந்திய அரசியலில் சமதர்ம கருத்துக்களைப் பரப்பியவர்; இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டவர்.
இவர் தமிழக அரசியல் இயக்கத்தில் பகுத்தறிவு கருத்துக்கள் மற்றும் அறிவியல் பார்வைகளை ஏற்படுத்தியவர்; விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக பாடுபட்டவர்; இந்திய அரசியலில் சமதர்ம கருத்துக்களைப் பரப்பியவர்; இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டவர்.
Correct Answer: C [சிங்காரவேலர்]
Notes:
காங்கிரஸ் உறுப்பினரும் முன்னோடி பொதுவுடைமைவாதியுமான ம. சிங்காரவேலர் பகுத்தறிவு, அறிவியல், சமதர்மக் கருத்துகளைப் பரப்பி தொழிலாளர், விவசாயிகளுக்காகப் போராடினார்.
18.
[Surveyor Draftsman 2022] ________ தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடி கொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடத்திலும் காட்டியவர்.
Correct Answer: A [இராமலிங்க அடிகள்]
Notes:
ஜீவகாருண்யத்தைப் போதித்த இராமலிங்க அடிகள் 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடினார்.
19.
[Surveyor Draftsman 2022] 1952-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி ________ ஆகும்.
Correct Answer: C [ஸ்ரீவில்லிபுத்தூர்]
Notes:
1952 முதல் பொதுத் தேர்தலில் காமராசர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
20.
[Reporter Exam-2022] நவீன தமிழகத்தில் தோன்றிய முதல் சமூக சீர்திருத்தவாதியாகக் கருதப்படுபவர் யார்?
Correct Answer: B [வைகுண்ட சுவாமிகள்]
Notes:
அய்யாவழி, சமத்துவ சமாஜம் ஆகியவற்றை நிறுவிய வைகுண்ட சுவாமிகள் (1809-1851) நவீன தமிழகத்தின் முதல் சமூக சீர்திருத்தவாதியாகக் கருதப்படுகிறார்.
21.
[G-2 2022] மதராசு மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டி விருதுநகர் சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த ஆண்டு
Correct Answer: B [1956 அக்டோபர்]
Notes:
சங்கரலிங்கனார் 1956 ஜூலை 27 அன்று உண்ணாவிரதம் தொடங்கி 76 நாட்களுக்குப் பின் 1956 அக்டோபர் 13 அன்று உயிர் நீத்தார்.
22.
[CEGS-2022] (i) அவர் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தவர்
(ii) வங்காளத்தின் கவர்னராகப் பணியாற்றியவர்
(iii) சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937-ல் ஆனார்
மேற்கூறிய கூற்றுக்கள் யாரை விவரிக்கிறது?
(ii) வங்காளத்தின் கவர்னராகப் பணியாற்றியவர்
(iii) சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937-ல் ஆனார்
மேற்கூறிய கூற்றுக்கள் யாரை விவரிக்கிறது?
Correct Answer: B [இராஜாஜி]
Notes:
சி. இராஜகோபாலாச்சாரி 1937-ல் சென்னை மாகாண முதலமைச்சர், 1947-ல் மேற்கு வங்க ஆளுநர், 1948-ல் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ஆனார்.
23.
[CAGS-2022] குலக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
Correct Answer: B [C. ராஜாஜி]
Notes:
முதலமைச்சர் ராஜாஜி 1953-ல் மாற்றியமைக்கப்பட்ட தொடக்கக் கல்வித் திட்டத்தை (குலக்கல்வித் திட்டம்) கொண்டுவந்தார்; அதற்கான எதிர்ப்பால் 1954-ல் பதவி விலகினார்.
24.
[G-1 2022] பின்வருவனவற்றுள் இராமலிங்க அடிகள் பற்றிய உண்மையான கூற்று எது?
(i) இராமலிங்க அடிகள் சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கத்தை 1865-ல் ஆரம்பித்தார்
(ii) இராமலிங்க அடிகள் ஜாதிய முறைக்கு எதிரானவர்
(iii) இராமலிங்க அடிகள் 1867-ல் சத்ய தர்ம சாலையை நிறுவினார்
(i) இராமலிங்க அடிகள் சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கத்தை 1865-ல் ஆரம்பித்தார்
(ii) இராமலிங்க அடிகள் ஜாதிய முறைக்கு எதிரானவர்
(iii) இராமலிங்க அடிகள் 1867-ல் சத்ய தர்ம சாலையை நிறுவினார்
Correct Answer: C [(i), (ii) மற்றும் (iii) உண்மை]
Notes:
இராமலிங்க அடிகள் 1865-ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தைத் தொடங்கினார்; சாதியை எதிர்த்தார்; 1867-ல் வடலூரில் சத்திய தருமச் சாலையை நிறுவினார்.
25.
[G-1 2022] சரியாகப் பொருத்தப்பட்ட ஜோடிகளைத் தேர்ந்தெடுக்கவும்:
1. நிழல் தாங்கல்கள் – வைகுண்ட சுவாமிகள்
2. இந்து முற்போக்கு முன்னேற்ற சங்கம் – ராஜாராம் மோகன் ராய்
3. சமரச சன்மார்க்க சங்கம் – வள்ளலார்
4. சுயமரியாதை அறம் – வேதநாயகம் பிள்ளை
1. நிழல் தாங்கல்கள் – வைகுண்ட சுவாமிகள்
2. இந்து முற்போக்கு முன்னேற்ற சங்கம் – ராஜாராம் மோகன் ராய்
3. சமரச சன்மார்க்க சங்கம் – வள்ளலார்
4. சுயமரியாதை அறம் – வேதநாயகம் பிள்ளை
Correct Answer: A [1 மற்றும் 3]
Notes:
நிழல் தாங்கல்களை வைகுண்ட சுவாமிகளும், சமரச சன்மார்க்க சங்கத்தை வள்ளலாரும் நிறுவினர்; மற்ற இரண்டு இணைகள் தவறு.
மேலும் வினாடி வினாக்கள்
› செய்தித்தாள்கள், இதழ்கள் & ஆசிரியர்கள் – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
› நீதிக்கட்சி – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
› தமிழகத்தில் சமூக-அரசியல் இயக்கங்கள் (19, 20ஆம் நூற்றாண்டு) – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 3)
› தமிழகத்தில் சமூக-அரசியல் இயக்கங்கள் (19, 20ஆம் நூற்றாண்டு) – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 2)
› அறிஞர் அண்ணா – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
› சுயமரியாதை இயக்கம் – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
