வினாடி வினா
← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
[G-1 2022] பொருத்துக:
பெயர் – தொடர்புடையது
(a) சுவாமி சகஜானந்தா – 1. அப்ரஸ்டு ஹிந்துஸ் (ஒடுக்கப்பட்ட இந்துக்கள்)
(b) M.C. ராஜா – 2. தமிழன்
(c) பண்டிட் அயோத்திதாசர் – 3. நந்தனார் கல்விக் கழகம்
(d) வீரேசலிங்கம் – 4. விதவை இல்லம்
பெயர் – தொடர்புடையது
(a) சுவாமி சகஜானந்தா – 1. அப்ரஸ்டு ஹிந்துஸ் (ஒடுக்கப்பட்ட இந்துக்கள்)
(b) M.C. ராஜா – 2. தமிழன்
(c) பண்டிட் அயோத்திதாசர் – 3. நந்தனார் கல்விக் கழகம்
(d) வீரேசலிங்கம் – 4. விதவை இல்லம்
Correct Answer: A [a-3, b-1, c-2, d-4]
Notes:
சுவாமி சகஜானந்தா நந்தனார் கல்விக் கழகத்தை நிறுவினார்; எம்.சி. ராஜா 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' நூலை எழுதினார்; அயோத்திதாசர் 'தமிழன்' இதழை நடத்தினார்; வீரேசலிங்கம் விதவை இல்லத்தை நிறுவினார்.
2.
[G-1 2021] 1820களில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பொதுவாக தடைச் செய்யப்பட்டவை
(a) குடைப் பயன்பாடு
(b) காலணி அணிவது
(c) தங்க நகை அணிவது
(d) தலைப்பாகை அணிவது
(a) குடைப் பயன்பாடு
(b) காலணி அணிவது
(c) தங்க நகை அணிவது
(d) தலைப்பாகை அணிவது
Correct Answer: A [(a), (b), (c)]
Notes:
தாழ்த்தப்பட்ட சாதியினர் குடை பிடிக்கவும், காலணி அணியவும், தங்க நகை அணியவும் தடை செய்யப்பட்டிருந்தனர் என தமிழ்நாடு பாடநூல் குறிப்பிடுகிறது.
3.
[G-1 2021] கீழ்காண்பவர்களில் யார் "டாக்டர் B.R. அம்பேத்கரை இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே எதிர்நோக்கிய அறிவுசார் மனிதர்" எனக் கருதப்படுகிறார்?
Correct Answer: A [அயோத்தி தாஸ் பண்டிதர்]
Notes:
அம்பேத்கருக்கு முன்பே பௌத்தத்தைத் தழுவி தலித் அடையாளத்தை முன்னெடுத்த அயோத்திதாசப் பண்டிதர், அம்பேத்கரை இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே எதிர்நோக்கிய அறிஞர் எனப் போற்றப்படுகிறார்.
4.
[G-1 2021] சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியவர்
Correct Answer: D [இராமலிங்க அடிகள்]
Notes:
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) 1865-ல் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.
5.
[G-1 2021] ஆளுமையை அடையாளம் காணவும்:
(a) சாதி வரிசையில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக அவர் செய்த தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக ராவ் சாகிப், ராவ் பகதூர் மற்றும் திவான் பகதூர் என்ற பட்டங்களை கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.
(b) அவரது சுயசரிதை ஜீவிய சரித சுருக்கம் ஆரம்பகால சுயசரிதைகளில் ஒன்றாகும்.
(c) அவர் ஆதி திராவிட மகாஜன சபையை நிறுவினார்.
யார் அவர்?
(a) சாதி வரிசையில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக அவர் செய்த தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக ராவ் சாகிப், ராவ் பகதூர் மற்றும் திவான் பகதூர் என்ற பட்டங்களை கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.
(b) அவரது சுயசரிதை ஜீவிய சரித சுருக்கம் ஆரம்பகால சுயசரிதைகளில் ஒன்றாகும்.
(c) அவர் ஆதி திராவிட மகாஜன சபையை நிறுவினார்.
யார் அவர்?
Correct Answer: B [இரட்டைமலை சீனிவாசன்]
Notes:
இரட்டைமலை சீனிவாசன் 'ஜீவிய சரித சுருக்கம்' (1939) என்ற சுயசரிதையை எழுதினார்; ஆதி திராவிட மகாஜன சபையை நிறுவினார்; ராவ் சாகிப், ராவ் பகதூர், திவான் பகதூர் பட்டங்களைப் பெற்றார்.
6.
[CSSE & SI Fishery Feb 2023] கே. காமராஜருக்குப் பின் மதராஸ் மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றவர் யார்?
Correct Answer: B [எம். பக்தவத்சலம்]
Notes:
1963-ல் காமராஜர் திட்டத்தின்படி காமராஜர் பதவி விலகியபோது எம். பக்தவத்சலம் மதராஸ் மாநில முதலமைச்சரானார்; அவர் 1967 வரை பதவியில் இருந்தார்.
7.
[Veterinary Asst Mar 2023] ஆதி திராவிட மகாஜன சபை என்று பின்னாட்களில் அழைக்கப்பட்ட பறையர் மகாஜன சபையை தோற்றுவித்து வழிநடத்தியவர் யார்?
Correct Answer: B [இரட்டைமலை சீனிவாசன்]
Notes:
இரட்டைமலை சீனிவாசன் பறையர் மகாஜன சபையை நிறுவினார்; அது பின்னர் ஆதி திராவிட மகாஜன சபை எனப் பெயர் மாற்றப்பட்டது.
8.
[JRO & Asst Prof (Psychology) Mar 2023] ஆதிக்க இந்தியாவின் முதல் மற்றும் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த ஒரே கவர்னர் ஜெனரல் யார்?
Correct Answer: A [சி. இராசகோபாலாச்சாரியார்]
Notes:
1948-ல் மவுண்ட்பேட்டனுக்குப் பின் சி. இராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) இந்தியாவின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரல் ஆனார்.
9.
[DEO May 2023] 1884-ம் ஆண்டு நிறுவப்பட்ட மெட்ராஸ் மஹாஜன சபா, கீழ்க்கண்டவற்றில் எதை கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்டது?
Correct Answer: C [அரசியல் கல்வி புகட்டுவதற்காக]
Notes:
1884-ல் தொடங்கப்பட்ட சென்னை மகாஜன சபை மக்களுக்கு அரசியல் கல்வி புகட்டவும் அவர்களின் குறைகளை அரசிடம் எடுத்துரைக்கவும் உருவாக்கப்பட்டது.
10.
[Library Exam May 2023] தியோசபிகல் சொசைட்டியின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct Answer: B [அடையாறு]
Notes:
பிரம்மஞான சபை (தியோசபிகல் சொசைட்டி) 1882–83-ல் தனது சர்வதேச தலைமையகத்தை சென்னை அடையாறுக்கு மாற்றியது.
11.
[Combined Research Asst 2023] சமூக இயக்கத்தின் பொதுவான நோக்கம் என்பது
Correct Answer: B [சமூக மாற்றம்]
Notes:
சமூக இயக்கம் என்பது சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட கூட்டுச் செயல்பாடு என சமூகவியலாளர்கள் (எ.கா. எம்.எஸ்.ஏ. ராவ்) வரையறுக்கின்றனர்.
12.
[CESS May 2023] சரியான விடையைத் தேர்வு செய்க:
சென்னைவாசிகள் சங்கம், தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட ஆண்டு
சென்னைவாசிகள் சங்கம், தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட ஆண்டு
Correct Answer: B [1852]
Notes:
சென்னைவாசிகள் சங்கம் 1852-ல் கஜுலு லட்சுமிநரசு செட்டி உள்ளிட்டோரால் தொடங்கப்பட்டது.
13.
[CESGS 2023] 1967 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டத்திருத்தம்) முக்கிய நோக்கம்
Correct Answer: B [தமிழகத்தில் நடைபெற்ற சுயமரியாதை திருமணங்களுக்குச் சட்டபூர்வமான அங்கீகாரம் அளிப்பது]
Notes:
அண்ணாதுரை அரசு 1967-ல் கொண்டுவந்த திருத்தம் (பிரிவு 7A) புரோகிதர் மற்றும் வேத சடங்குகள் இன்றி நடைபெறும் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளித்தது.
14.
[CESGS 2023] கூற்று [A]: இரட்டைமலை சீனிவாசனின் தன்னலமற்ற சேவைக்காக ராவ்சாகிப், ராவ் பகதூர், திவான் பகதூர் ஆகிய பட்டங்களால் சிறப்புச் செய்யப்பட்டார்.
காரணம் [R]: இவர் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, சமத்துவம் மற்றும் சமூக உரிமைகள் ஆகியவற்றுக்காகப் போராடினார்.
காரணம் [R]: இவர் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, சமத்துவம் மற்றும் சமூக உரிமைகள் ஆகியவற்றுக்காகப் போராடினார்.
Correct Answer: B [கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்]
Notes:
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான அவரது வாழ்நாள் போராட்டத்தைப் பாராட்டி ராவ் சாகிப் (1926), ராவ் பகதூர் (1930), திவான் பகதூர் (1936) பட்டங்கள் வழங்கப்பட்டன; எனவே காரணம் கூற்றை விளக்குகிறது.
15.
[JA 2023] I. பிராமணர்கள் நவீன கல்வியினால் அதிக நன்மை அடைந்தனர்; அதன்மூலம் அதிகமான அரசு வேலை பெற்றனர் என்பது பிராமணர் அல்லாதார் இயக்கம் தென்னிந்தியாவில் உருவாகக் காரணங்களில் ஒன்று.
II. ஆகையினால், அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கைகள் வருவாகின.
பின்வரும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
II. ஆகையினால், அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கைகள் வருவாகின.
பின்வரும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
Correct Answer: C [I மற்றும் II]
Notes:
கல்வியிலும் அரசுப் பணிகளிலும் பிராமணர்களின் ஆதிக்கம் பிராமணர் அல்லாதார் இயக்கத்தை உருவாக்கியது; அது வேலை மற்றும் கல்வியில் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டைக் கோரியது. எனவே இரண்டு கூற்றுகளும் சரி.
16.
[JA 2023] 1920ல் சட்டமன்ற மேலவையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியல் சாதியைச் சேர்ந்த முதல் பிரதிநிதி
Correct Answer: A [எம்.சி. ராஜா]
Notes:
எம்.சி. ராஜா 1920-ல் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் முதல் பிரதிநிதியாக சென்னை சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்டார்.
17.
[JA 2023] தமிழ்நாட்டில் 1948 ஆம் ஆண்டு ஜமீன்தார் முறையை ஒழிக்க பரிந்துரை செய்த குழுவின் பெயரைக் குறிப்பிடுக.
Correct Answer: B [பிரகாசம் குழு]
Notes:
டி. பிரகாசம் தலைமையிலான குழு ஜமீன்தாரி முறையை ஒழிக்கப் பரிந்துரைத்தது; அதன் விளைவாக 1948-ல் சென்னை எஸ்டேட்டுகள் (ஒழிப்பு மற்றும் ரயத்வாரியாக மாற்றம்) சட்டம் இயற்றப்பட்டது.
18.
[JSO 2023] சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.
கீழ்கண்ட கூற்றுகளில் M.S.A. ராவ் பற்றிய சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) இவர் தலைச் சிறந்த இந்திய சமூகவியலாளர்.
(ii) சமூக இயக்கங்கள் இரு பண்புகளை உள்ளடக்கியவை, ஒன்று, கூட்டுச் செயல்பாடு மற்றொன்று சமூக மாற்றத்திற்கு வழியேற்படுத்துபவை எனக் குறிப்பிடுகிறார்.
(iii) "பிராமணரல்லாதோர் இயக்கம்" என்ற சமூகச் சீர்திருத்த இயக்கம் இவரால் தோற்றுவிக்கப்பட்டது.
கீழ்கண்ட கூற்றுகளில் M.S.A. ராவ் பற்றிய சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) இவர் தலைச் சிறந்த இந்திய சமூகவியலாளர்.
(ii) சமூக இயக்கங்கள் இரு பண்புகளை உள்ளடக்கியவை, ஒன்று, கூட்டுச் செயல்பாடு மற்றொன்று சமூக மாற்றத்திற்கு வழியேற்படுத்துபவை எனக் குறிப்பிடுகிறார்.
(iii) "பிராமணரல்லாதோர் இயக்கம்" என்ற சமூகச் சீர்திருத்த இயக்கம் இவரால் தோற்றுவிக்கப்பட்டது.
Correct Answer: C [(i) மற்றும் (ii) மட்டும்]
Notes:
எம்.எஸ்.ஏ. ராவ் சமூக இயக்கங்களை சமூக மாற்றத்தை நோக்கிய கூட்டுச் செயல்பாடு என விளக்கிய புகழ்பெற்ற சமூகவியலாளர்; பிராமணரல்லாதோர் இயக்கத்தை அவர் தொடங்கவில்லை (அது நீதிக்கட்சித் தலைவர்களால் நடத்தப்பட்டது).
19.
[JSO 2023] எந்தக் கூற்றுகள் அயோத்திதாச பண்டிதர் பற்றிச் சரியானது?
(i) அவர் ஆதிதிராவிட மகாஜன சபையை உருவாக்கினார்.
(ii) அவர் 'சாக்கிய பௌத்த சமூகம்' என்ற அமைப்பை உருவாக்கினார்.
(iii) அவர் தீண்டத்தகாதோர் ஊழியர் சங்கத்தில் சேர்ந்தார்.
(iv) அவர் 'ஒரு பைசா தமிழன்' என்ற செய்தித் தாளை வெளியிட்டார்.
(i) அவர் ஆதிதிராவிட மகாஜன சபையை உருவாக்கினார்.
(ii) அவர் 'சாக்கிய பௌத்த சமூகம்' என்ற அமைப்பை உருவாக்கினார்.
(iii) அவர் தீண்டத்தகாதோர் ஊழியர் சங்கத்தில் சேர்ந்தார்.
(iv) அவர் 'ஒரு பைசா தமிழன்' என்ற செய்தித் தாளை வெளியிட்டார்.
Correct Answer: C [(ii) மற்றும் (iv)]
Notes:
அயோத்திதாசர் சாக்கிய பௌத்த சங்கத்தை (1898) நிறுவினார், 'ஒரு பைசா தமிழன்' (1907) இதழை வெளியிட்டார்; ஆதி திராவிட மகாஜன சபையை நிறுவியவர் இரட்டைமலை சீனிவாசன்.
20.
[ATO Textile 2023] வடலூரில் சத்திய தரும சாலையை ஏற்படுத்தியவர் யார்?
Correct Answer: A [இராமலிங்க அடிகள்]
Notes:
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) 1867-ல் வடலூரில் சத்திய தரும சாலையை (இலவச அன்னதானச் சாலை) நிறுவினார்.
21.
[Mass Interviewer 2023] கி.பி. 1891 இல் நிறுவப்பட்ட திராவிட மகாஜன சபை அதன் முதல் மாநாட்டை ______ ல் நடத்தியது.
Correct Answer: C [நீலகிரி]
Notes:
அயோத்திதாசர் 1891-ல் திராவிட மகாஜன சபையை நிறுவி, அதன் முதல் மாநாட்டை நீலகிரியில் உதகமண்டலத்தில் நடத்தினார்.
22.
[CESE 2024] கூற்று [A]: ப. ஜீவானந்தம் சுயமரியாதை பொதுவுடைமை கட்சியை ஆரம்பித்தார்.
காரணம் [R]: அரசு பணிகளில் வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை பெற திட்டம் வைத்திருந்தார்.
காரணம் [R]: அரசு பணிகளில் வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை பெற திட்டம் வைத்திருந்தார்.
Correct Answer: A [[A] சரி, [R] தவறு]
Notes:
ஜீவானந்தம் சுயமரியாதை சமதர்மக் கட்சியை சோசலிசக் கொள்கைகளுடன் தொடங்கினார்; வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீதிக்கட்சியின் கோரிக்கை, எனவே காரணம் தவறு.
23.
[Hostel Supdt cum PTO 2024] சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்
(i) சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் P. ரங்கையா பொறுப்பேற்றார்.
(ii) ஜார்ஜ் ஜோசப் மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.
(iii) முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை யாகுப் ஹசன் நிறுவினார்.
(iv) இந்தி எதிர்ப்பு மாநாடு சேலத்தில் நடத்தப்பெற்றது.
(i) சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் P. ரங்கையா பொறுப்பேற்றார்.
(ii) ஜார்ஜ் ஜோசப் மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.
(iii) முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை யாகுப் ஹசன் நிறுவினார்.
(iv) இந்தி எதிர்ப்பு மாநாடு சேலத்தில் நடத்தப்பெற்றது.
Correct Answer: D [அனைத்தும் சரி]
Notes:
பி. ரங்கையா நாயுடு சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர், ஜார்ஜ் ஜோசப் மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை அமைத்தார், யாகுப் ஹசன் முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை (1908) நிறுவினார், 1937-ல் சேலத்தில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது; அனைத்தும் சரி.
24.
[CASE 2024] பிராமணரல்லாதார் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு
Correct Answer: B [1916]
Notes:
பிராமணரல்லாதார் பிரகடனம் 1916 டிசம்பரில் தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தால் (நீதிக்கட்சி) வெளியிடப்பட்டது.
25.
[AAO & AHO 2024] 'சாக்கிய பௌத்த சங்கம்' எனும் அமைப்பை நிறுவியவர்
Correct Answer: D [அயோத்திதாசர்]
Notes:
அயோத்திதாசர் 1898-ல் சென்னையில் சாக்கிய பௌத்த சங்கத்தை நிறுவினார்.
மேலும் வினாடி வினாக்கள்
› செய்தித்தாள்கள், இதழ்கள் & ஆசிரியர்கள் – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
› நீதிக்கட்சி – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
› தமிழகத்தில் சமூக-அரசியல் இயக்கங்கள் (19, 20ஆம் நூற்றாண்டு) – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 3)
› தமிழகத்தில் சமூக-அரசியல் இயக்கங்கள் (19, 20ஆம் நூற்றாண்டு) – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
› அறிஞர் அண்ணா – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
› சுயமரியாதை இயக்கம் – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
