இந்திய ஆட்சியியல் PYQ – அரசியலமைப்பின் முக்கியக் கூறுகள்

← திரும்பச் செல்ல

இந்திய ஆட்சியியல் PYQ – அரசியலமைப்பின் முக்கியக் கூறுகள் – 19 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
SURVEYOR DRAUGHTSMAN – 2022
சரியான கூற்றைத் தேர்வு செய்க:
(i) சமயச் சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் ஓர் அங்கமாகும்
(ii) ஒரு சமயம் சார்ந்த குழு மற்றொரு குழுவின் மீது ஆதிக்கம் செலுத்துதல்
(iii) எந்தச் சமயத்தையும் பின்பற்ற அரசு அனுமதியளித்தல்
(iv) சமய விவகாரங்களில் அரசு நடுநிலைமை கொண்டிருத்தல்

Correct Answer: D [(i), (iii), (iv) மட்டும்]

விளக்கம்:

சமயச் சார்பின்மை அரசியலமைப்பின் பகுதி (முகவுரை – 1976; அடிப்படைக் கட்டமைப்பு – எஸ்.ஆர். பொம்மை 1994) – (i) சரி. அரசு எந்த மதத்தையும் பின்பற்ற அனுமதிக்கிறது (பிரிவு 25) – (iii) சரி; சமய விவகாரங்களில் நடுநிலை – (iv) சரி.

2.  
VAGS – 2022
'மதச்சார்பின்மையும் மக்களாட்சியும் அரசின் இரு தூண்கள்' என்று கூறியவர் யார்?

Correct Answer: B [இந்திரா காந்தி]

விளக்கம்:

" Secularism and democracy are the twin pillars of our State, the very foundations of our society " – பிரதமர் இந்திரா காந்தி . அவர் பிரதமராக இருந்தபோதுதான் 42-வது திருத்தம் (1976) "Secular" என்ற சொல்லை முகவுரையில் சேர்த்தது.

3.  
GROUP 3A – 2023
உலகிலேயே எழுதப்பட்ட, மிக நீளமான அரசியலமைப்பு எது?

Correct Answer: B [இந்தியா]

விளக்கம்:

இந்திய அரசியலமைப்பு உலகின் மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பு. இங்கிலாந்துக்கு எழுதப்பட்ட ஒற்றை அரசியலமைப்பு ஆவணமே இல்லை; அமெரிக்க அரசியலமைப்பு எழுதப்பட்டது, ஆனால் சுருக்கமானது (மூலத்தில் 7 பிரிவுகள் மட்டும்).

4.  
HEALTH OFFICER – 2023
பின்வருவனவற்றில் எது அரசின் இன்றியமையாத பண்பாகும்?

Correct Answer: C [இறையாண்மை]

விளக்கம்:

அரசின் நான்கு இன்றியமையாக் கூறுகள்: மக்கள்தொகை, நிலப்பரப்பு, அரசாங்கம், இறையாண்மை . இறையாண்மை இல்லாத அமைப்பு "அரசு" (State) ஆகாது.

5.  
FISHERY DEPT – 2023
இந்தியாவின் இறுதி இறையாண்மை அதிகாரம் பெற்றிருப்பவர்கள்

Correct Answer: A [இந்திய மக்கள்]

விளக்கம்:

முகவுரை " இந்திய மக்களாகிய நாம் " எனத் தொடங்கி, "நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம்" என முடிகிறது – அரசியலமைப்பின் அதிகாரத்தின் இறுதி மூலம் மக்களே .

6.  
VETERINARY ASSISTANT – 2023
அரசியலமைப்பின் மற்றொரு துணிச்சலான கூறு, அது சமயச் சார்பற்ற அரசை நிறுவ முயல்வதாகும். கீழ்க்காணும் கூற்றுகளில் சமயச் சார்பற்ற அரசு பற்றிய கருத்துக்குப் பொருந்தாதது எது?

Correct Answer: D [அதன் சில கருத்துகள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவை]

விளக்கம்:

(A) மதச் சமத்துவம் – பிரிவு 14, 15, 25; (B) சிறுபான்மையினரின் பண்பாட்டு உரிமைகள் – பிரிவு 29, 30; (C) தீண்டாமை ஒழிப்பு – பிரிவு 17 – இவை அனைத்தும் சமயச் சார்பற்ற, சமத்துவ அரசின் வெளிப்பாடுகள்.

7.  
ACF – 2023
சமயச் சார்பற்ற மக்களாட்சி பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
(i) அரசு எந்த ஒரு மதத்தாலும் கட்டுப்படுத்தப்படாது.
(ii) ஒருவருடைய மதத்தின் காரணமாக அவர் மீது அரசு பாகுபாடு காட்டும்.
(iii) ஒருவர் எந்த மதத்தைப் பின்பற்ற விரும்புகிறாரோ அதைக் கடைப்பிடிக்கும் உரிமையை அரசு அனைவருக்கும் உறுதி செய்கிறது.

Correct Answer: A [(i), (iii) மட்டும்]

விளக்கம்:

சமயச் சார்பற்ற மக்களாட்சியில் அரசு எந்த மதத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லை – (i) சரி; ஒவ்வொருவரும் விரும்பிய மதத்தைக் கடைப்பிடிக்கலாம் (பிரிவு 25) – (iii) சரி. மத அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டாது (பிரிவு 15(1), 16(2)) – எனவே (ii) தவறு.

8.  
GROUP 1C (DEO) – 2023
'நாம் இதுவரை அறிந்ததைவிட மக்கள் மக்களாட்சியின் நிறைவான, செழுமையான கருத்தைக் கொண்டவை சர்வோதய இயக்கத்தின் கோட்பாடுகள்' என்று கூறியவர்

Correct Answer: C [அனிமா போஸ்]

விளக்கம்:

சர்வோதய இயக்கத்தின் தத்துவத்தை " a fuller and richer concept of people's democracy than any we have yet known " என்று குறிப்பிட்டவர் அனிமா போஸ் .

9.  
COMBINED RESEARCH ASSISTANT – 2023
இந்திய அரசியலமைப்பில் பொதிந்துள்ள "சோசலிசக் கோட்பாட்டின்" தன்மையானது,
(1) அரசு நடவடிக்கைகளில் சோசலிசக் கருத்துகளின் தாக்கம்
(2) மக்களாட்சிச் சோசலிச அரசை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது
(3) கிழக்கு ஐரோப்பியக் கூட்டுச் சோசலிச முறையைப் போன்றது
(4) முழுமையான மார்க்சியத்தின் தாக்கம்

Correct Answer: D [(1), (2) மட்டும் சரி]

விளக்கம்:

இந்தியச் சமதர்மம் மக்களாட்சிச் சமதர்மம் – மக்களாட்சி வழிமுறைகளிலும் சட்டத்தின் ஆட்சிக்குள்ளும் சமூக, பொருளாதார நீதியை அடைய முயல்கிறது; அரசின் செயல்பாடுகளில் (நெறிமுறைக் கோட்பாடுகள், நலத்திட்டங்கள்) சமதர்மக் கருத்துகளின் தாக்கம் உள்ளது – (1), (2) சரி.

10.  
ASSISTANT TRAINING OFFICER (TEXTILE DEPT) – 2023
சமயச் சார்பின்மை (Secularism) என்ற சொல் ———— மொழிச் சொல்லான "சேக்குலம்" (Saeculum) என்பதிலிருந்து பெறப்பட்டது.

Correct Answer: B [இலத்தீன்]

விளக்கம்:

"Secular" ← இலத்தீன் " saeculum " (உலகியல் / காலம் / தலைமுறை). சமயம் சாராத, உலகியல் சார்ந்த விவகாரங்களைக் குறிக்கப் பயன்பட்டது. அரசியல் அறிவியலின் பல சொற்களும் இலத்தீனிலிருந்து வந்தவை.

11.  
HINDU RELIGIOUS EO G1 – 2024
இந்தியா மதச்சார்பற்ற நாடு எனக் கருதப்படுவதற்கு மிக முக்கியக் காரணம் எது?

Correct Answer: D [மதம் அரசியலிலிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளது]

விளக்கம்:

சமயச் சார்பின்மையின் மிக முக்கிய அம்சம், மதத்தை அரசு அதிகாரத்திலிருந்து பிரித்து வைப்பதே (separation of religion from State power) – அரசுக்கு அதிகாரப்பூர்வ மதம் இல்லை; அரசு எந்த மதத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லை; ஆட்சி மத அடிப்படையில் நடப்பதில்லை.

12.  
CTS (ITI) – 2024
பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
பட்டியல் I — பட்டியல் II
(a) அடிப்படை உரிமைகள் — 1. இங்கிலாந்து
(b) நாடாளுமன்ற முறை அரசாங்கம் — 2. அமெரிக்கா
(c) நெருக்கடி நிலை அதிகாரம் — 3. அயர்லாந்து
(d) அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் — 4. ஜெர்மனி
குறியீடுகள்: (a) (b) (c) (d)

Correct Answer: C [2 1 4 3]

விளக்கம்:

(a) அடிப்படை உரிமைகள் – அமெரிக்கா (2) ; (b) நாடாளுமன்ற ஆட்சி முறை – இங்கிலாந்து (1) ; (c) நெருக்கடிநிலையின்போது அடிப்படை உரிமைகளை நிறுத்திவைத்தல் – ஜெர்மனி (வெய்மார்) (4) ; (d) நெறிமுறைக் கோட்பாடுகள் – அயர்லாந்து (3) . குறியீடு 2 1 4 3 .

13.  
CTS (INTERVIEW POST-II) – 2024
கீழ்க்கண்டவற்றில் அரசமைப்பின் கூட்டாட்சி அல்லாத கூறு(களை)க் கண்டறிக.
(i) நெகிழும் அரசியலமைப்பு
(ii) சுதந்திரமான நீதித்துறை
(iii) ஈரவை நாடாளுமன்றம்
(iv) அரசியலமைப்பே அனைத்திலும் மேலானது

Correct Answer: B [(i) மட்டும்]

விளக்கம்:

கூட்டாட்சியில் அதிகாரப் பகிர்வை ஒரு தரப்பு தனியே மாற்ற முடியாதபடி அரசியலமைப்பு இறுக்கமாக இருக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் பெரும்பகுதியை நாடாளுமன்றமே தனியாகத் திருத்த முடியும் – இந்த நெகிழ்ச்சி ஒரு ஒற்றையாட்சி (கூட்டாட்சி அல்லாத) அம்சம் .

14.  
GROUP 4 – 2025
கூற்று [A]: இந்திய அரசியலமைப்பு தன்மையில் கூட்டாட்சி அரசியலமைப்பு ஆகும்.
காரணம் [R]: இந்திய அரசியலமைப்பு ஐக்கிய அமெரிக்க நாடுகளைப் போல் இரட்டைக் குடியுரிமையை வழங்கியுள்ளது.

Correct Answer: C [கூற்று [A] சரி, காரணம் [R] தவறு]

விளக்கம்:

இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சித் தன்மை கொண்டது (இரட்டை அரசு, அதிகாரப் பகிர்வு, சுதந்திர நீதித்துறை, ஈரவை) – ஒற்றையாட்சிச் சாயலுடன் – [A] சரி. ஆனால் இந்தியாவில் ஒற்றைக் குடியுரிமை (பிரிட்டன் மூலம்) மட்டுமே; இரட்டைக் குடியுரிமை அமெரிக்காவில் உள்ளது – [R] தவறு.

15.  
கூற்று [A]: இந்திய அரசமைப்பு நெகிழும், நெகிழாத் தன்மைகளைக் கொண்டுள்ளது.
காரணம் [R]: இந்திய அரசமைப்பின் அடிப்படையை மாற்றாமல் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Correct Answer: B [கூற்று [A], காரணம் [R] இரண்டும் சரி; காரணம் [R] கூற்று [A]-க்கான சரியான விளக்கம்]

விளக்கம்:

இரண்டும் சரி. அரசியலமைப்பு 100 முறைக்கு மேல் திருத்தப்பட்டிருப்பது (கடைசியாக நிறைவேறியது 106-வது திருத்தம், 2023) அதன் நெகிழ்ச்சியைக் காட்டுகிறது; இத்தனை திருத்தங்களுக்குப் பின்னும் அடிப்படைக் கட்டமைப்பு மாறாமல் இருப்பது (கேசவானந்த பாரதி, 1973) அதன்…

16.  
CTS (ITI LEVEL II) – 2025
இந்திய அரசியலமைப்பின் முக்கியக் கூறுகள்
(i) மிக நீளமான எழுதப்பட்ட அரசமைப்பு
(ii) ஒற்றைக் குடியுரிமை
(iii) நெருக்கடி நிலைப் பிரகடனம்

Correct Answer: D [(i), (ii), (iii)]

விளக்கம்:

மூன்றும் முக்கியக் கூறுகளே: மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பு ; ஒற்றைக் குடியுரிமை (பகுதி II, பிரிவு 5 – 11); நெருக்கடிநிலை விதிகள் (பகுதி XVIII – தேசிய நெருக்கடி பிரிவு 352, மாநில நெருக்கடி பிரிவு 356, நிதி நெருக்கடி பிரிவு 360).

17.  
42-வது சட்டத்திருத்தம் பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.
(i) சமதர்மம், மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு ஆகிய சொற்கள் சேர்க்கப்பட்டன.
(ii) அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டன.
(iii) அரசின் மூன்று புதிய நெறிமுறைக் கோட்பாடுகள் சேர்க்கப்பட்டன.
(iv) ஒன்பதாவது அட்டவணையில் சில தேசியச் சட்டங்கள் சேர்க்கப்பட்டன.

Correct Answer: B [(i), (ii), (iii) சரி]

விளக்கம்:

42-வது திருத்தம் (1976): முகவுரையில் சமதர்ம, சமயச் சார்பற்ற, ஒருமைப்பாடு – (i) சரி; அடிப்படைக் கடமைகள் (பகுதி IVA, பிரிவு 51A) – (ii) சரி; மூன்று புதிய நெறிமுறைக் கோட்பாடுகள் – 39A, 43A, 48A – (iii) சரி.

18.  
GROUP 2A MAINS (REVOKED) – 2026
பின்வருவனவற்றில் தவறாகப் பொருத்தப்பட்ட இணை(கள்) எது / எவை?
(i) எழுதப்பட்ட அரசியலமைப்பு – இங்கிலாந்து
(ii) எழுதப்படாத அரசியலமைப்பு – அமெரிக்க ஐக்கிய நாடுகள்
(iii) நீண்ட, எழுதப்பட்ட அரசியலமைப்பு – இந்தியா
(iv) அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் – அயர்லாந்து

Correct Answer: A [(i), (ii) மட்டும்]

விளக்கம்:

(i), (ii) இரண்டிலும் நாடுகள் இடம் மாறியுள்ளன: இங்கிலாந்து (பிரிட்டன்) – எழுதப்படாத அரசியலமைப்பு; அமெரிக்கா – எழுதப்பட்ட அரசியலமைப்பு (1787). (iii) இந்தியா – மிக நீளமான எழுதப்பட்டது – சரி; (iv) நெறிமுறைக் கோட்பாடுகள் – அயர்லாந்து (1937 அரசியலமைப்பு) – சரி.

19.  
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
மூல ஆதாரங்கள் — பெறப்பட்ட இயல்புகள்
(a) இங்கிலாந்து அரசமைப்பு — 1. குடியரசுத் தலைவர் தேர்தல் முறை
(b) அயர்லாந்து அரசமைப்பு — 2. உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை அதிகார வரம்பு
(c) ஜப்பானிய அரசமைப்பு — 3. ஒற்றைக் குடியுரிமை
(d) கனடா அரசமைப்பு — 4. சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறை
குறியீடுகள்: (a) (b) (c) (d)

Correct Answer: B [3 1 4 2]

விளக்கம்:

(a) பிரிட்டன் – ஒற்றைக் குடியுரிமை (3) ; (b) அயர்லாந்து – குடியரசுத் தலைவர் தேர்தல் முறை (1) ; (c) ஜப்பான் – சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறை (4) (பிரிவு 21); (d) கனடா – உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை அதிகாரம் (2) (பிரிவு 143). குறியீடு 3 1 4 2 .

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய ஆட்சியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-polity-pyq

📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 ₹499 →
மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய ஆட்சியியல் PYQ – குழுக்களும் ஆணையங்களும் › இந்திய ஆட்சியியல் PYQ – முக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் › இந்திய ஆட்சியியல் PYQ – முக்கியச் சட்டங்களும் பிரிவுகளும் › இந்திய ஆட்சியியல் PYQ – அரசியல் கட்சிகள் › இந்திய ஆட்சியியல் PYQ – பெண்களுக்கு அதிகாரமளித்தல் › இந்திய ஆட்சியியல் PYQ – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0