இந்திய ஆட்சியியல் PYQ – அடிப்படை உரிமைகள் – பகுதி 2 (வினா 50–97)
← திரும்பச் செல்ல
பி. இராஜேந்திரன் எதிர் சென்னை மாநிலம் (1968) – தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிச் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றிய வழக்கு.
₹499 →
இந்திய ஆட்சியியல் PYQ – அடிப்படை உரிமைகள் – பகுதி 2 (வினா 50–97) – 48 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
பொருத்துக:
(a) பிரிவு 15 — 1. சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் அடிப்படையில் பாகுபாடு தடை
(b) பிரிவு 16 — 2. பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு
(c) பிரிவு 26 — 3. சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்
(d) பிரிவு 29(2) — 4. அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாட்டுக்குத் தடை
Correct Answer: C [1 2 3 4]
விளக்கம்:
நான்கும் நேரான இணைகள்: 15 – பாகுபாடு தடை; 16 – பொது வேலைவாய்ப்பு; 26 – சமய விவகாரங்கள்; 29(2) – அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனச் சேர்க்கையில் மதம், இனம், சாதி, மொழி அடிப்படையில் பாகுபாடு தடை. (ஒப்பீட்டு அட்டவணை: வினா 17 விளக்கம்.)
2.
இந்திய அரசியலமைப்பின் ________ பிரிவின் கீழ் அரசு நிதியில் நடக்கும் எந்தக் கல்வி நிறுவனத்திலும் சமயக் கல்வி வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
Correct Answer: B [28-வது]
விளக்கம்:
பிரிவு 28 : துணைப் பிரிவு நிறுவன வகை சமயக் கல்வி 28(1) முழுமையாக அரசு நிதியில் நடப்பவை முற்றிலும் தடை 28(2) அரசு நிர்வகிக்கும், ஆனால் சமயக் கல்வி கட்டாயம் என்ற அறக்கட்டளையால் நிறுவப்பட்டவை அனுமதி 28(3) அரசு அங்கீகாரம் / நிதியுதவி பெறுபவை விருப்பத்தின் பேரில்…
3.
AAO & AHO – 2024
கீழ்க்கண்ட உரிமைகளை அவற்றின் வகையுடன் முறையே பொருத்துக:
(a) வாக்களிக்கும் உரிமை — 1. பண்பாட்டு உரிமை
(b) சங்கம் அமைக்கும் உரிமை — 2. சுரண்டலுக்கு எதிரான உரிமை
(c) மரபைப் பாதுகாக்கும் உரிமை — 3. அரசியல் உரிமை
(d) குழந்தைத் தொழிலாளர் (தடை) — 4. சுதந்திர உரிமை
Correct Answer: A [3 4 1 2]
விளக்கம்:
உரிமை வகை பிரிவு வாக்குரிமை அரசியல் உரிமை (3) – அடிப்படை உரிமை அல்ல; அரசியலமைப்பு உரிமை 326 சங்கம் அமைத்தல் சுதந்திர உரிமை (4) 19(1)(c) மொழி, எழுத்து, பண்பாட்டைப் பாதுகாத்தல் பண்பாட்டு உரிமை (1) 29(1) குழந்தைத் தொழிலாளர் தடை சுரண்டலுக்கு எதிரான உரிமை (2) 24
4.
"14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைச் சுரங்கங்களில், தொழிற்சாலைகளில் அல்லது பிற பணிகளில் அமர்த்துவது சட்டத்துக்கு எதிரானது". இது எந்த வகை உரிமையின் கீழ் வருகிறது?
Correct Answer: C [சுரண்டலுக்கு எதிரான உரிமை]
விளக்கம்:
பிரிவு 24 – சுரண்டலுக்கு எதிரான உரிமை (பிரிவுகள் 23 – 24).
5.
கல்வி உரிமை பின்வரும் எந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டது?
Correct Answer: A [பிரிவு 21A]
விளக்கம்:
பிரிவு 21A – 86-வது திருத்தம் (2002); 1.4.2010 முதல் நடைமுறை. "22A" என்ற பிரிவு இல்லை; 23 – மனித வணிகத் தடை; 24 – குழந்தைத் தொழிலாளர் தடை. (அட்டவணை: வினா 22 விளக்கம்.)
6.
GROUP 2 & 2A – 2024
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணைகளைக் கண்டறிக:
(i) பிரிவு 18 – பட்டங்கள் ஒழிப்பு
(ii) பிரிவு 21 – உயிர், தனிமனித சுதந்திரப் பாதுகாப்பு
(iii) பிரிவு 23 – கைதுக்கு எதிரான பாதுகாப்பு
(iv) பிரிவு 20 – சுதந்திரமாக நடமாடும் உரிமை
Correct Answer: A [(iii), (iv) தவறான இணைகள்]
விளக்கம்:
கூற்று சரியான பிரிவு (iii) கைது, தடுப்புக் காவலுக்கு எதிரான பாதுகாப்பு 22 (23 அல்ல – அது மனித வணிகத் தடை) (iv) நாடு முழுவதும் நடமாடும் உரிமை 19(1)(d) (20 அல்ல – அது குற்றத் தீர்ப்பில் பாதுகாப்பு) (i) பட்டங்கள் ஒழிப்பு 18 – சரி (ii) உயிர், தனிமனித சுதந்திரம்…
7.
கூற்று [A]: பிரிவு 240 வழங்கும் அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவர் பி.பி. மண்டல் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தார்.
காரணம் [R]: பின்தங்கிய நிலையைத் தீர்மானிக்க இவ்வாணையம் பதினொரு குறிகாட்டிகளை உருவாக்கியது.
Correct Answer: C [[A] தவறு; [R] சரி]
விளக்கம்:
மண்டல் ஆணையம் (1.1.1979) பிரிவு 340 -இன் கீழ் அமைக்கப்பட்டது; பிரிவு 240 – சில ஒன்றியப் பிரதேசங்களுக்கு ஒழுங்குமுறைகள் வகுக்கும் குடியரசுத் தலைவர் அதிகாரம். எனவே [A] தவறு.
8.
GROUP 1 – 2024
1951-ஆம் ஆண்டு முதல் அரசியலமைப்புத் திருத்தம் மூலம் சேர்க்கப்பட்ட பிரிவு ________.
Correct Answer: A [பிரிவு 15(4)]
விளக்கம்:
சென்னை மாநிலம் எதிர் செண்பகம் துரைராஜன் (1951) தீர்ப்பைத் தொடர்ந்து, 1-வது திருத்தம் (1951) பிரிவு 15(4) -ஐச் சேர்த்தது. 15(1), 15(2), 15(3) மூல அரசியலமைப்பிலேயே உள்ளவை.
9.
"6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் அரசு சட்டத்தால் தீர்மானிக்கும் முறையில் இலவச, கட்டாயக் கல்வி" – இது ________ அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் வந்தது.
Correct Answer: B [86-வது]
விளக்கம்:
இது பிரிவு 21A -இன் வாசகம் – 86-வது திருத்தம் (2002) . 73-வது (1992) – ஊராட்சிகள்; 72-வது (1992) – திரிபுரா சட்டமன்றத்தில் ST இட ஒதுக்கீடு; 80-வது (2000) – ஒன்றிய – மாநில வரி பகிர்வு முறை மாற்றம். (86-வது திருத்த அட்டவணை: வினா 22 விளக்கம்.)
10.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) பாதுகாப்புக்கான அரசியலமைப்பு விதிகள் யாவை?
(1) பிரிவு 15(4)
(2) பிரிவு 16(4)
(3) பிரிவு 17(1)
(4) பிரிவு 19(2)
Correct Answer: C [(1), (2) சரி]
விளக்கம்:
15(4) – கல்வி உள்ளிட்டவற்றில் சமூக, கல்வியில் பின்தங்கியோருக்குச் சிறப்பு ஏற்பாடு; 16(4) – பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு. பிரிவு 17-க்குத் துணைப் பிரிவுகள் இல்லை (தீண்டாமை ஒழிப்பு); 19(2) – பேச்சுச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள்.
11.
சுரண்டலுக்கு எதிரான உரிமை பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவற்றைக் கண்டறிக:
(i) சிறுபான்மையினரின் மொழி, எழுத்து, பண்பாட்டைப் பாதுகாத்தல்
(ii) மனித வணிகத் தடை
(iii) உயிர்ப் பாதுகாப்பு
(iv) தொழிற்சாலைகளில் குழந்தைகளைப் பணியமர்த்தத் தடை
Correct Answer: C [(ii), (iv) மட்டும் சரி]
விளக்கம்:
சுரண்டலுக்கு எதிரான உரிமை = பிரிவு 23 (மனித வணிகம், கட்டாய உழைப்பு தடை) + பிரிவு 24 (குழந்தைத் தொழிலாளர் தடை). (i) – பண்பாட்டு, கல்வி உரிமை (பிரிவு 29); (iii) – சுதந்திர உரிமை (பிரிவு 21). (வகைகள் அட்டவணை: வினா 14 விளக்கம்.)
12.
CTS (INTERVIEW POST) – 2024
கல்வி உரிமை இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவால் உறுதி செய்யப்பட்டுள்ளது?
Correct Answer: B [பிரிவு 21A]
விளக்கம்:
பிரிவு 21A . பிரிவு 22(1) – கைதானவர் காரணம் அறியும், வழக்கறிஞரை அணுகும் உரிமை. (அட்டவணை: வினா 22 விளக்கம்.)
13.
CTS (ITI) – 2024
ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வியை அரசு வழங்க வேண்டும் என்று அறிவிக்கும் பிரிவு எது?
Correct Answer: A [பிரிவு 21A]
விளக்கம்:
பிரிவு 21A – "அரசு, சட்டத்தால் தீர்மானிக்கும் முறையில், ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி வழங்கும்." பிரிவு 20 – குற்றத் தீர்ப்பில் பாதுகாப்பு; 21 – உயிர், சுதந்திரம்; 22 – கைது, தடுப்புக் காவல்.
14.
CTS (INTERVIEW POST-II) – 2024
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் பொதுவாக எவ்வாறு கருதப்படுகின்றன?
Correct Answer: D [தனிமனித சுதந்திரத்தில் அரசு தலையிடக் கூடாது என்ற எதிர்மறைக் கடப்பாடுகள்]
விளக்கம்:
பெரும்பாலான அடிப்படை உரிமைகள் "அரசு இதைச் செய்யக் கூடாது" என்ற எதிர்மறை வடிவில் உள்ளன (எ.கா. பிரிவு 14 – "அரசு மறுக்கக் கூடாது"; பிரிவு 13(2) – "அரசு சட்டம் இயற்றக் கூடாது"). A தவறு – பல உரிமைகள் வெளிநாட்டவருக்கும் உண்டு.
15.
GROUP 1B & 1C – 2024
RTE சட்டம் குறித்துச் சரியான கூற்று எது?
1. அனைவருக்கும் தரமான கல்வியைச் சமமாகப் பெறுவதை உறுதி செய்தல்.
2. இலவச, கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமை.
3. பெண் குழந்தைகள், நலிந்த பிரிவுக் குழந்தைகளின் கல்வியில் கவனம்.
4. பள்ளிகளில் படிக்கும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல்.
Correct Answer: C [(2) மட்டும்]
விளக்கம்:
RTE சட்டத்தின் முழுப் பெயரே " குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 " – அதன் நோக்கம் 6 – 14 வயதுக் குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமை (கூற்று 2).
16.
குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
Correct Answer: B [2009]
விளக்கம்:
RTE சட்டம் 2009 -இல் இயற்றப்பட்டது (குடியரசுத் தலைவர் ஒப்புதல் 26.8.2009); 1.4.2010 முதல் நடைமுறை. 2020 – தேசியக் கல்விக் கொள்கை.
17.
ASSISTANT PUBLIC PROSECUTOR GRADE II – 2025
அடிப்படை உரிமைகளிலிருந்து சொத்துரிமையை நீக்கிய சட்டத்திருத்தம்
Correct Answer: C [44-வது திருத்தம் 1978]
விளக்கம்:
44-வது திருத்தம் (1978) . 43-வது திருத்தம் (1977) – 42-வது திருத்தத்தின் சில விதிகளை (எ.கா. பிரிவுகள் 31D, 32A) நீக்கியது; 45-வது (1980) – SC/ST இட ஒதுக்கீடு, ஆங்கிலோ-இந்தியர் நியமனம் 10 ஆண்டு நீட்டிப்பு.
18.
SPECIAL COMPETITIVE – 2025
இந்திய அரசியலமைப்பில் பிரிவு 31 எந்தத் திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டு பிரிவு 300A சேர்க்கப்பட்டது?
Correct Answer: D [44-வது திருத்தம்]
விளக்கம்:
44-வது திருத்தம் (1978) பிரிவு 31 -ஐ (சொத்துரிமை) நீக்கி 300A -ஐச் சேர்த்தது.
19.
GROUP 1 & 1A – 2025
அடிப்படை உரிமைகள் தொடர்பான கீழ்க்கண்ட பிரிவுகளுள் சரியாகப் பொருத்தப்படாத இணைகள் எவை?
1. பிரிவு 12 – அரசின் வரையறை
2. பிரிவு 21 – கல்வி உரிமை
3. பிரிவு 34 – அடிப்படை உரிமைகளை மாற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரம்
4. பிரிவு 35 – அடிப்படை உரிமை விதிகளைச் செயல்படுத்தச் சட்டமியற்றல்
Correct Answer: C [2, 3 மட்டும்]
விளக்கம்:
கல்வி உரிமை – பிரிவு 21A (21 அல்ல). படைகளுக்கு உரிமைகளை மாற்றும் நாடாளுமன்ற அதிகாரம் – பிரிவு 33 ; பிரிவு 34 – இராணுவச் சட்டம் அமலில் உள்ள பகுதியில் உரிமைகளுக்குக் கட்டுப்பாடு.
20.
அரசியலமைப்பின் பிரிவு 21 பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i) மகா சாசனத்தின் புகழ்பெற்ற வாசகங்களில் ஒன்றை இப்பிரிவு நினைவூட்டுகிறது.
(ii) அரசியலமைப்பு இறக்கும் உரிமையை வழங்கவில்லை.
(iii) நிர்வாகச் சட்டத்தால் ஆளப்படும் நாகரிகச் சமூகத்தில் காவல் மரணம் மிக மோசமான குற்றங்களில் ஒன்றாக இருக்கலாம்.
Correct Answer: B [(i), (ii) மட்டும்]
விளக்கம்:
(i) சரி – மகா சாசனத்தின் "நாட்டின் சட்டப்படி அல்லாமல்…" வாசகத்தை நினைவூட்டுகிறது. (ii) சரி – கியான் கௌர் (1996) : வாழும் உரிமையில் இறக்கும் உரிமை அடங்காது (காமன் காஸ் (2018) மாண்புடன் இறத்தல் – செயலற்ற கருணைக்கொலை – மட்டும் ஏற்றது). (iii) தவறு – டி.கே.
21.
GROUP 4 – 2025
மண்டல் ஆணைய அறிக்கை பற்றிய சரியான கூற்று / கூற்றுகள் எது / யாவை?
(i) இவ்வாணையம் சமூகம், கல்வி, பொருளாதாரம் என்ற மூன்று குறிகாட்டிகளைப் பயன்படுத்தியது.
(ii) சமூகக் குறிகாட்டியில் ஐந்து அளவுகோல்களும் கல்விக் குறிகாட்டியில் இரண்டு அளவுகோல்களும் பயன்படுத்தப்பட்டன.
(iii) பொருளாதாரக் குறிகாட்டியில் நான்கு அளவுகோல்கள்; ஆக மொத்தம் 11 அளவுகோல்கள் மண்டல் ஆணைய அறிக்கையில் பயன்படுத்தப்பட்டன.
Correct Answer: B [(i), (iii) மட்டும்]
விளக்கம்:
மண்டல் ஆணையம்: சமூகம் 4 , கல்வி 3 , பொருளாதாரம் 4 = 11 . எனவே (ii) தவறு (5, 2 அல்ல); (i), (iii) சரி. (அட்டவணை: வினா 56 விளக்கம்.)
22.
CTS (INTERVIEW POST) – 2025
தவறான இணைகளைத் தேர்வு செய்க:
(1) MISA – உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம்
(2) NASA – தேசியப் பாதுகாப்புச் சட்டம்
(3) TADA – பயங்கரவாத, சீர்குலைவுச் செயல்கள் (தடுப்பு) சட்டம்
(4) POTA – பயங்கரவாதக் கணிப்புச் சட்டம்
Correct Answer: D [(2), (4)]
விளக்கம்:
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் சுருக்கம் NSA (NASA அல்ல); POTA = Prevention of Terrorism Act – பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ("Prediction" அல்ல).
23.
CTS (NON-INTERVIEW POST) – 2025
அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள் குறித்துக் கீழ்க்கண்டவற்றுள் எது / எவை சரி?
(i) அவை நிர்வாகம், சட்டமன்றம் ஆகியவற்றின் அதிகாரங்களுக்கு வரம்புகளாக உள்ளன.
(ii) அவை நிர்வாகம், சட்டமன்றம் ஆகியவற்றுக்கு அதிகாரம் அளிக்கின்றன.
(iii) அடிப்படை உரிமைகளின் ஊற்றுக்கண் நீதித்துறை.
Correct Answer: A [(i) மட்டும்]
விளக்கம்:
அடிப்படை உரிமைகள் அரசின் அதிகாரத்துக்கு வரம்புகள் – அதிகாரம் வழங்குவதில்லை . அவை அரசியலமைப்பிலிருந்தே தோன்றுகின்றன; நீதித்துறை அவற்றைப் பாதுகாக்கிறது, விளக்குகிறது மட்டுமே. எனவே (i) மட்டும் சரி.
24.
குழந்தைகளைத் தொழிற்சாலை, சுரங்கம் அல்லது எந்த அபாயகரமான தொழிலிலும் பணியமர்த்தக் கூடாது எனக் கூறும் பிரிவு எது?
Correct Answer: D [பிரிவு 24]
விளக்கம்:
பிரிவு 24 (அடிப்படை உரிமை). பிரிவு 39(e), (f) (அரசு நெறிமுறை) – குழந்தைகளின் இளம் வயது தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது, அவர்கள் சுரண்டலிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அரசின் கொள்கை இலக்காகக் கூறுகிறது; தடை விதிப்பது பிரிவு 24.
25.
CTS (ITI) – 2025
பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) தீண்டாமை ஒழிப்பு — 1. பிரிவு 326
(b) கல்வி சாராப் பட்டங்கள் ஒழிப்பு — 2. பிரிவு 39
(c) வயது வந்தோர் வாக்குரிமை — 3. பிரிவு 17
(d) அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் — 4. பிரிவு 18
Correct Answer: A [3 4 1 2]
விளக்கம்:
பொருள் பிரிவு தீண்டாமை ஒழிப்பு 17 (3) பட்டங்கள் ஒழிப்பு (இராணுவ, கல்விப் பட்டங்கள் தவிர) 18 (4) வயது வந்தோர் வாக்குரிமை (18 வயது – 61-வது திருத்தம், 1988) 326 (1) அரசு பின்பற்ற வேண்டிய சில கொள்கை நெறிமுறைகள் 39 (2)
26.
GROUP 2 & 2A – 2025
"நாட்டின் சட்டப்படி அல்லாமல் எந்த மனிதனும் கைது செய்யப்படவோ, சிறையிலிடப்படவோ, உடைமை பறிக்கப்படவோ, சட்டப் பாதுகாப்பு நீக்கப்படவோ, நாடுகடத்தப்படவோ, வேறு எவ்வகையிலும் அழிக்கப்படவோ கூடாது."
இந்தப் புகழ்பெற்ற வாசகம் அமைந்துள்ள ஆவணம் ...
Correct Answer: C [மகா சாசனம் (Magna Carta)]
விளக்கம்:
இது மகா சாசனத்தின் (1215) புகழ்பெற்ற வாசகம். இதையே நமது பிரிவு 21 நினைவூட்டுகிறது.
27.
CTS (ITI LEVEL II) – 2025
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
(a) சமயச் சுதந்திரம் — 1. பிரிவு 28
(b) சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம் — 2. பிரிவு 27
(c) குறிப்பிட்ட சமய மேம்பாட்டுக்கு வரி செலுத்துவது குறித்த சுதந்திரம் — 3. பிரிவு 25
(d) சில கல்வி நிறுவனங்களில் சமயக் கல்வி / வழிபாட்டில் பங்கேற்பது குறித்த சுதந்திரம் — 4. பிரிவு 26
Correct Answer: A [(3) (4) (2) (1)]
விளக்கம்:
பிரிவு உள்ளடக்கம் 25 மனசாட்சிச் சுதந்திரம்; சமயத்தை ஏற்க, பின்பற்ற, பரப்ப (3) 26 சமய விவகாரங்களை நிர்வகித்தல் (4) 27 குறிப்பிட்ட சமய மேம்பாட்டுக்கு வரி செலுத்தக் கட்டாயம் இல்லை (2) 28 சில கல்வி நிறுவனங்களில் சமயக் கல்வி / வழிபாடு (1)
28.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
பின்வரும் நாள்களை மாதங்களின் அடிப்படையில் கால வரிசைப்படுத்துக:
1. சமத்துவ நாள்
2. தேசிய ஒருமைப்பாட்டு நாள்
3. தேசிய அறிவியல் நாள்
4. பயங்கரவாத எதிர்ப்பு நாள்
Correct Answer: D [3, 1, 4, 2]
விளக்கம்:
நாள் தேதி பின்னணி தேசிய அறிவியல் நாள் (3) பிப்ரவரி 28 சி.வி.
29.
அடிப்படை உரிமைகள் பற்றிய சரியான கூற்றுகளைக் கண்டறிக:
(i) சொத்துரிமை அடிப்படை உரிமைகளிலிருந்து நீக்கப்பட்டது.
(ii) பிரிவு 300A-இன்படி சொத்துரிமை ஒரு சட்ட உரிமை அல்ல.
(iii) தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.
Correct Answer: B [(i), (iii) மட்டும்]
விளக்கம்:
(ii) தவறு – பிரிவு 300A-இன் கீழ் சொத்துரிமை சட்ட உரிமையே . (i), (iii) சரி – மூலத்தில் 7 வகை, இன்று 6 வகை அடிப்படை உரிமைகள். (அட்டவணைகள்: வினாக்கள் 8, 14 விளக்கம்.)
30.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
(1) 86-வது திருத்தம் — (i) மாநிலங்களுக்கு இடையேயான விற்பனை வரி
(2) 42-வது திருத்தம் — (ii) பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிப்பு
(3) 48-வது திருத்தம் — (iii) அடிப்படைக் கடமைகள்
(4) 46-வது திருத்தம் — (iv) 6 – 14 வயதுக் குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி
Correct Answer: C [(iv) (iii) (ii) (i)]
விளக்கம்:
திருத்தம் ஆண்டு பொருள் 42-வது 1976 அடிப்படைக் கடமைகள் – பிரிவு 51A (iii) 46-வது 1982 விற்பனை வரி – "சரக்கு விற்பனை" வரையறை விரிவு (i) 48-வது 1984 பஞ்சாபில் பிரிவு 356 ஆட்சியை ஓராண்டுக்கு மேல் நீட்டிக்கப் பிரிவு 356(5)-இல் திருத்தம் (ii) 86-வது 2002 பிரிவு…
31.
ASSISTANT PUBLIC PROSECUTOR GRADE II – 2026
வரிசை I-ஐ வரிசை II-உடன் பொருத்திக் கீழே தரப்பட்டுள்ள குறியீடுகளில் சரியான விடையைத் தெரிவு செய்க:
(a) 86-வது அரசியலமைப்புத் திருத்தம் — 1. 31C
(b) 44-வது அரசியலமைப்புத் திருத்தம் — 2. 31A, 31B
(c) முதலாவது அரசியலமைப்புத் திருத்தம் — 3. 300A
(d) 25-வது அரசியலமைப்புத் திருத்தம் — 4. 21A
Correct Answer: D [4 3 2 1]
விளக்கம்:
திருத்தம் ஆண்டு சேர்த்த பிரிவு 1-வது 1951 31A, 31B (2) 25-வது 1971 31C (1) 44-வது 1978 300A (3) 86-வது 2002 21A (4)
32.
சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும்:
1. குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் – 1989
2. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் – 1953
3. தீண்டாமைக் குற்றங்கள் சட்டம் – 1955
4. தேசியப் பிற்படுத்தப்பட்டோர் நிதி – மேம்பாட்டுக் கழகம் – 1992
Correct Answer: D [3, 4 சரி]
விளக்கம்:
[சரியான பொருள்: கூற்று 1 – "குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்" (Protection of Civil Rights Act).] 1 தவறு – 1955 சட்டம் 1976 -இல் "குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்" ஆனது; 1989 – SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்.
33.
CTS (INTERVIEW POST) – 2026
நீதிப் புனராய்வுக் கோட்பாட்டை முன்மொழிந்தவர்
Correct Answer: B [ஜான் மார்ஷல்]
விளக்கம்:
அமெரிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜான் மார்ஷல் , மார்பரி எதிர் மேடிசன் (1803) வழக்கில், அரசியலமைப்புக்கு முரணான சட்டத்தைச் செல்லாது என அறிவிக்கும் நீதிமன்ற அதிகாரத்தை நிலைநாட்டினார்.
34.
இந்தியாவில் நீதிப் புனராய்வு எதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது?
(i) அடிப்படை உரிமைகள்
(ii) அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு
(iii) கருத்துக் கணிப்பு
(iv) பொது வாக்கெடுப்பு
Correct Answer: C [(i), (ii) மட்டும்]
விளக்கம்:
சாதாரணச் சட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்கு முரணானால் செல்லாது (பிரிவு 13); அரசியலமைப்புத் திருத்தங்கள் அடிப்படைக் கட்டமைப்பை மீறினால் செல்லாது (கேசவானந்த பாரதி, 1973). கருத்துக் கணிப்பு, பொது வாக்கெடுப்பு ஆகியவை நீதிமன்ற அளவுகோல்கள் அல்ல.
35.
அரசின் கீழுள்ள எந்தப் பதவிக்கும் வேலைவாய்ப்பு அல்லது நியமனம் தொடர்பாக அனைத்துக் குடிமக்களுக்கும் சம வாய்ப்பு என்பது பின்வரும் எந்தத் திருத்தங்களோடு தொடர்புடையது?
(1) 17-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 1964
(2) 77-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 1995
(3) 85-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2001
(4) 1-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 1951
Correct Answer: C [(2), (3) மட்டும்]
விளக்கம்:
பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு – பிரிவு 16 . அதைத் திருத்தியவை 77-வது (16(4A) – SC/ST-க்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு) மற்றும் 85-வது (16(4A)-இல் "தொடர்விளைவு மூப்பு").
36.
GROUP 2A MAINS – 2025
இந்திய அரசியலமைப்பின் ________ பிரிவு தொழிற்சாலைகள், சுரங்கங்கள் அல்லது வேறு எந்த அபாயகரமான தொழிலிலும் குழந்தைகளைப் பணியமர்த்துவதைத் தடை செய்கிறது.
Correct Answer: B [24]
விளக்கம்:
பிரிவு 24 . பிரிவு 39 – குழந்தைகள் சுரண்டப்படக் கூடாது என்பதை நெறிமுறையாகக் கூறுகிறது; 21A – கல்வி; 17 – தீண்டாமை ஒழிப்பு. (குழந்தைகள் தொடர்பான பிரிவுகள் அட்டவணை: வினா 73 விளக்கம்.)
37.
பட்டியல் I-ஐப் பட்டியல் II-உடன் சரியாகப் பொருத்துக:
பட்டியல் I (நீதிப்பேராணை) — பட்டியல் II (நேரடிப் பொருள்)
(a) ஆட்கொணர்வு நீதிப்பேராணை — 1. எந்த அதிகாரத்தால்
(b) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை — 2. சான்றளிக்கப்பட
(c) நெறிமுறை உணர்த்தும் நீதிப்பேராணை — 3. நாங்கள் ஆணையிடுகிறோம்
(d) தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை — 4. உடலைக் கொண்டு வா
Correct Answer: A [4 3 2 1]
விளக்கம்:
Habeas Corpus – உடலைக் கொண்டு வா (4); Mandamus – நாங்கள் ஆணையிடுகிறோம் (3); Certiorari – சான்றளிக்கப்பட (2); Quo Warranto – எந்த அதிகாரத்தால் (1). (முழு அட்டவணை: வினா 29 விளக்கம்.)
38.
கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்:
(1) பிரிவு 19 உறுதி செய்யும் அடிப்படைச் சுதந்திரங்கள் நெருக்கடிநிலைக் காலத்தில் தானாகவே நிறுத்திவைக்கப்படும்.
(2) பிரிவு 359-இன் கீழ் சில உரிமைகளை நிறுத்திவைக்கக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
(3) சில உரிமைகள் இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
(4) ஆயுதப் படைகளில் பணியாற்றுவோருக்கு அடிப்படை உரிமைகளை வழங்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.
Correct Answer: D [(4) மட்டும்]
விளக்கம்:
பிரிவு 33 நாடாளுமன்றத்துக்குத் தருவது ஆயுதப் படைகள், காவல், உளவுத்துறை முதலியோருக்கு உரிமைகளைக் கட்டுப்படுத்தும் / நீக்கும் அதிகாரம் – "வழங்கும்" அதிகாரம் அல்ல. எனவே (4) தவறு.
39.
GROUP 2A MAINS (RE-EXAM) – 2026
பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
கூற்று [A]: முழுமையாக அரசு நிதியில் நடக்கும் எந்தக் கல்வி நிறுவனத்திலும் சமயக் கல்வி வழங்கப்படலாம்.
காரணம் [R]: அரசு அனைத்துச் சமயங்களிடமும் நடுநிலையான, பாரபட்சமற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
Correct Answer: C [[A] தவறு, [R] சரி]
விளக்கம்:
பிரிவு 28(1) : முழுமையாக அரசு நிதியில் நடக்கும் கல்வி நிறுவனத்தில் சமயக் கல்வி வழங்கக் கூடாது – [A] தவறு. அரசு எல்லாச் சமயங்களிடமும் நடுநிலை காக்க வேண்டும் என்பது சமயச்சார்பின்மையின் அடிப்படை – [R] சரி; அதுவே பிரிவு 28(1)-இன் காரணமும் ஆகும்.
40.
கீழ்க்கண்ட இணைகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடு:
(1) சமத்துவ உரிமை – பிரிவுகள் 14 – 18
(2) சுதந்திர உரிமை – பிரிவுகள் 25 – 28
(3) சுரண்டலுக்கு எதிரான உரிமை – பிரிவுகள் 23 – 24
(4) பண்பாடு, கல்வி உரிமைகள் – பிரிவுகள் 25 – 26
Correct Answer: C [(1), (3) சரி]
விளக்கம்:
சுதந்திர உரிமை – 19 – 22 (25 – 28 என்பது சமயச் சுதந்திரம்); பண்பாடு, கல்வி உரிமைகள் – 29 – 30 . (1), (3) மட்டுமே சரி. (வகைகள் அட்டவணை: வினா 14 விளக்கம்.)
41.
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
(i) இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.பி. மண்டல்.
(ii) ஆணையம் தன் அறிக்கையை 1982-இல் சமர்ப்பித்தது.
(iii) அரசுப் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை ஆணையம் பரிந்துரைக்கவில்லை.
Correct Answer: A [(i) மட்டும்]
விளக்கம்:
(i) சரி. (ii) தவறு – அறிக்கை 31.12.1980 -இல் சமர்ப்பிக்கப்பட்டது (1982 அல்ல). (iii) தவறு – ஆணையம் OBC-க்கு 27% பரிந்துரைத்தது; 1990-இல் வி.பி. சிங் அரசு அதைச் செயல்படுத்த அறிவித்தது; இந்திரா சஹானி (1992) உறுதி செய்தது.
42.
GROUP 2A MAINS (REVOKED) – 2026
கூற்று [A]: இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25-இன்படி, அனைவருக்கும் தாம் விரும்பும் சமயத்தைப் பின்பற்றும் உரிமை உண்டு.
காரணம் [R]: இந்தியாவில் அனைவரும் சுதந்திரமாக ஒரு சமயத்தைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்றலாம். இந்தியாவுக்கு அலுவல் சமயம் என்று எதுவும் இல்லை; அதாவது அரசு எந்தக் குறிப்பிட்ட சமயத்துக்கும் சார்பாக இருக்காது. சமயத்தைப் பின்பற்றுவதில் அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
Correct Answer: B [[A], [R] இரண்டும் சரி; [R], [A]-வுக்குச் சரியான விளக்கம்]
விளக்கம்:
[A] சரி – பிரிவு 25(1): " அனைத்து நபர்களுக்கும் " மனசாட்சிச் சுதந்திரமும் சமயத்தை ஏற்க, பின்பற்ற, பரப்பும் உரிமையும் உண்டு.
43.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 20 பற்றிய கூற்றுகளில் உண்மையல்லாதவை:
(i) ஒரு செயல் செய்யப்பட்டபோது குற்றமில்லையெனில், பின்னர் கொண்டுவரப்படும் எந்தச் சட்டமும் அதைக் குற்றமாக்க முடியாது.
(ii) ஒருவரை ஒரே குற்றத்துக்காக இரு முறைக்கு மேல் ஆபத்துக்குள்ளாக்கக் கூடாது.
(iii) உண்மை கண்டறியும் (Lie-detector) சோதனையின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை பிரிதம் சிங் எதிர் பஞ்சாப் அரசு வழக்கில் விளக்கப்பட்டது.
Correct Answer: D [(ii), (iii) மட்டும்]
விளக்கம்:
(i) சரி – 20(1) முன்தேதியிட்ட குற்றவியல் சட்டம் கூடாது. (ii) தவறு – 20(2) : ஒரே குற்றத்துக்காக " ஒரு முறைக்கு மேல் " வழக்குத் தொடர்ந்து தண்டிக்கக் கூடாது ("இரு முறைக்கு மேல்" அல்ல).
44.
CTS (NON-INTERVIEW POST) – 2026
கூற்று [A], காரணம் [R] ஆகியவற்றைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
கூற்று [A]: இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் பகுதி III-இல் அமைந்துள்ளன.
காரணம் [R]: அடிப்படை உரிமைகளை உருவாக்க, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அமெரிக்க அரசியலமைப்பின் உரிமைகள் சாசனத்திலிருந்து ஊக்கம் பெற்றனர்.
Correct Answer: B [[A], [R] சரி; ஆனால் [R], [A]-வுக்குச் சரியான விளக்கம் அல்ல]
விளக்கம்:
இரண்டு கூற்றுகளும் சரி. ஆனால் உரிமைகள் பகுதி III -இல் இடம்பெற்றிருப்பதற்கு அமெரிக்க ஊக்கம் காரணம் அல்ல – [R] உரிமைகளின் மூலத்தைக் கூறுகிறது; [A] அவற்றின் இடத்தைக் கூறுகிறது. ஆகவே [R], [A]-வுக்கான விளக்கம் அல்ல.
45.
GROUP 1 – 2026
இந்தியாவில் அடிப்படை உரிமைகள் தொடர்பான கருத்துகளில் சரியானவை எவை?
(i) அடிப்படை உரிமைகள் குறிப்பிட்ட சில தனிநபர்களின் சமத்துவத்தைத் தாங்கிப்பிடிக்கின்றன.
(ii) அடிப்படை உரிமைகள் மனிதர்களின் அரசாங்கத்தை அல்ல, சட்டங்களின் அரசாங்கத்தை நிலைநாட்டுகின்றன.
(iii) அடிப்படை உரிமைகள் அரசியல் மக்களாட்சி என்ற இலட்சியத்தை மேம்படுத்துகின்றன.
Correct Answer: C [(ii), (iii) சரி]
விளக்கம்:
அடிப்படை உரிமைகள் அனைத்துத் தனிநபர்களின் சமத்துவத்தை உறுதி செய்கின்றன – "சிலரின்" அல்ல; எனவே (i) தவறு. (ii) – சட்டத்தின் ஆட்சி; (iii) – அரசியல் மக்களாட்சி – இரண்டும் சரி.
46.
இந்திய அரசியலமைப்பின் கீழ் சமத்துவச் சமூக அமைப்புக்கு அடித்தளம் அமைப்பவை எவை?
(i) தீண்டாமை ஒழிப்பு
(ii) சமூக அநீதி, சுரண்டலிலிருந்து பாதுகாப்பு
(iii) சட்டவிரோதக் குடியேறிகளுக்குத் தடை
Correct Answer: C [(i), (ii) மட்டும்]
விளக்கம்:
தீண்டாமை ஒழிப்பு (பிரிவு 17), சுரண்டலுக்கு எதிரான உரிமை (பிரிவுகள் 23, 24), பிரிவு 46 (நலிந்த பிரிவினரைச் சமூக அநீதியிலிருந்தும் எல்லா வகைச் சுரண்டலிலிருந்தும் பாதுகாத்தல்) ஆகியவை சமத்துவச் சமூக அமைப்புக்கு (Egalitarian social order) அடிகோலுகின்றன.
47.
குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் எந்த வயதினருக்குத் தரமான கல்வியை உறுதி செய்கிறது?
Correct Answer: D [6 – 14 வயது]
விளக்கம்:
RTE சட்டம் 2009 – 6 முதல் 14 வயது வரை (பிரிவு 21A). (RTE அட்டவணை: வினா 64 விளக்கம்.)
48.
GROUP 1C (DEO) – 2023
கீழ்க்கண்ட தீர்ப்பினைப் பொருத்தமான வழக்குடன் சேர்:
"சாதி முழுவதுமாகச் சமூக, கல்வி நிலைகளில் பிற்பட்டிருந்தால், அரசியலமைப்புப் பிரிவு 15(4)-இன் பொருள் வரம்புக்கு உட்பட்டு அச்சாதியைச் சமூக, கல்வி நிலையில் பிற்பட்ட வகுப்பாகக் கருதி அதற்கு இட ஒதுக்கீடு செய்யலாம்"
Correct Answer: C [பி. இராஜேந்திரன் எதிர் தமிழ்நாடு அரசு]
விளக்கம்:
பி. இராஜேந்திரன் எதிர் சென்னை மாநிலம் (1968) – தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிச் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றிய வழக்கு.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய ஆட்சியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-polity-pyq
📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய ஆட்சியியல் PYQ – குழுக்களும் ஆணையங்களும்
› இந்திய ஆட்சியியல் PYQ – முக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்
› இந்திய ஆட்சியியல் PYQ – முக்கியச் சட்டங்களும் பிரிவுகளும்
› இந்திய ஆட்சியியல் PYQ – அரசியல் கட்சிகள்
› இந்திய ஆட்சியியல் PYQ – பெண்களுக்கு அதிகாரமளித்தல்
› இந்திய ஆட்சியியல் PYQ – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
