இந்திய ஆட்சியியல் PYQ – அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் – பகுதி 1 (வினா 1–27)

← திரும்பச் செல்ல

இந்திய ஆட்சியியல் PYQ – அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் – பகுதி 1 (வினா 1–27) – 27 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
ARGS – 2020
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் இடம்பெற்றுள்ளன?

Correct Answer: A [பகுதி IV]

விளக்கம்:

நெறிமுறைக் கோட்பாடுகள் பகுதி IV-இல் (பிரிவுகள் 36 – 51) உள்ளன.

2.  
VAS AHGS – 2020
கீழ்க்காணும் எந்தப் பிரிவின்படி 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி வழங்கப்படுகிறது?

Correct Answer: D [பிரிவு 45]

விளக்கம்:

மூல அரசியலமைப்பில் பிரிவு 45 : அரசியலமைப்பு தொடங்கிய 10 ஆண்டுகளுக்குள் 14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி வழங்க அரசு முயல வேண்டும். தரப்பட்ட விருப்பங்களில் இதுவே பொருந்தும்.

3.  
ADGS – 2021
கல்வி உரிமைச் சட்டத்தின்படி எந்த வயதுப் பிரிவுக் குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி வழங்கப்படும்?

Correct Answer: B [6 முதல் 14 வயது வரை]

விளக்கம்:

குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE) – 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, அருகிலுள்ள பள்ளியில் தொடக்கக் கல்வி (1 – 8 வகுப்பு) முடியும் வரை இலவச, கட்டாயக் கல்வி.

4.  
அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனிக்கவும்:
(a) நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு நேரடி உந்துதல், இந்திய அரசுச் சட்டம், 1935-இன் கீழ் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் ஆவணங்கள் ஆகும்.
(b) 1937 அயர்லாந்து அரசியலமைப்பே நெறிமுறைக் கோட்பாடுகளை நீதிமன்றத்தில் செயல்படுத்த முடியாதவையாக அமைக்க உந்துதல் அளித்தது.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Correct Answer: C [(a) தவறு, ஆனால் (b) சரி]

விளக்கம்:

(a) தவறு : நெறிமுறைகளுக்கு நேரடி மூலம் அயர்லாந்து அரசியலமைப்பு (1937) . 1935 சட்டத்தின் அறிவுறுத்தல் ஆவணங்களை அவை ஒத்திருக்கின்றன – ஆனால் அவை நேரடி மூலம் அல்ல.

5.  
AGGS – 2021
இந்திய அரசியலமைப்பில் அரசின் நெறிமுறைக் கோட்பாடுகளைச் சேர்த்ததன் முக்கிய நோக்கம்

Correct Answer: B [மக்கள் நல அரசு]

விளக்கம்:

நெறிமுறைகளின் முக்கிய நோக்கம் நலன்புரி அரசு (மக்கள் நல அரசு) (Welfare State) அமைத்தல் – சமூக, பொருளாதார மக்களாட்சி. (C) நலிந்த பிரிவினர் நலன் (பிரிவு 46) ஒரு பகுதி நோக்கம் மட்டுமே. (D) தவறு – பிரிவு 37-இன்படி அவை நீதிமன்றத்தால் செயல்படுத்த முடியாதவை .

6.  
GROUP 1 – 2021
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு பன்னாட்டு அமைதியையும் பாதுகாப்பையும் ஊக்குவிக்கிறது?

Correct Answer: D [பிரிவு 51]

விளக்கம்:

பிரிவு 51 – அரசு கீழ்க்காண்பவற்றுக்கு முயல வேண்டும்: உட்பிரிவு உள்ளடக்கம் 51(a) பன்னாட்டு அமைதி, பாதுகாப்பை மேம்படுத்துதல் 51(b) நாடுகளிடையே நியாயமான, மதிப்புமிக்க உறவுகளைப் பேணுதல் 51(c) பன்னாட்டுச் சட்டம், ஒப்பந்தக் கடப்பாடுகளை மதித்தல் 51(d) பன்னாட்டுத்…

7.  
EO G4 – 2022
அரசின் நெறிமுறைக் கோட்பாடுகளை "அரசியலமைப்பின் உயிர் தரும் விதிகள்" எனக் கூறியவர் ———

Correct Answer: A [எல்.எம். சிங்வி]

விளக்கம்:

" உயிர் தரும் விதிகள் " (Life-giving provisions) – எல்.எம். சிங்வி . அம்பேத்கர் " புதுமையான அம்சம் " என்றார். கூறியவர் கருத்து எல்.எம். சிங்வி உயிர் தரும் விதிகள் பி.ஆர்.

8.  
பொருத்துக:
(a) பிரிவு 39(b) — 1. சூழலியல், சுற்றுச்சூழலை மாசுபாட்டிலிருந்து பாதுகாத்தல்
(b) பிரிவு 48A — 2. சம வேலைக்குச் சம ஊதியம்
(c) பிரிவு 39(d) — 3. ஏழைகளுக்கு இலவசச் சட்ட உதவி
(d) பிரிவு 39A — 4. பரம்பரைச் சொத்துடைமை ஒழிப்பு

Correct Answer: B [4 1 2 3]

விளக்கம்:

48A → 1 (சுற்றுச்சூழல்); 39(d) → 2 (சம ஊதியம்); 39A → 3 (இலவசச் சட்ட உதவி); மீதமுள்ள 39(b) → 4. குறியீடு 4 1 2 3 .

9.  
CAGS – 2022
கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டதைச் சுட்டுக.

Correct Answer: C [பிரிவு 41 : வேளாண்மை, கால்நடை வளர்ப்பை ஒழுங்கமைத்தல்]

விளக்கம்:

வேளாண்மை, கால்நடை வளர்ப்பை ஒழுங்கமைத்தல் பிரிவு 48 . பிரிவு 41 – வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை, வேலையின்மை / முதுமை / நோய் / ஊனம் ஆகியவற்றில் பொது உதவி.

10.  
CEGS – 2022
பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற நலிந்த பிரிவினரின் கல்வி, பொருளாதார நலன்களை ஊக்குவிக்கும் பிரிவைக் கண்டறிக.

Correct Answer: A [பிரிவு 46]

விளக்கம்:

பிரிவு 46 (காந்தியக் கோட்பாடு) – SC, ST, நலிந்த பிரிவினரின் கல்வி, பொருளாதார நலன்களைச் சிறப்புக் கவனத்துடன் மேம்படுத்தி , சமூக அநீதி, அனைத்து வகைச் சுரண்டலிலிருந்தும் பாதுகாத்தல்.

11.  
EO – 2022
"நெறிமுறைக் கோட்பாடுகளும் அடிப்படை உரிமைகளும் அரசியலமைப்பின் மனசாட்சி" என விவரித்தவர் யார்?

Correct Answer: A [கிரான்வில் ஆஸ்டின்]

விளக்கம்:

கிரான்வில் ஆஸ்டின் (The Indian Constitution: Cornerstone of a Nation, 1966) – பகுதி III, IV இரண்டையும் சேர்த்து " அரசியலமைப்பின் மனசாட்சி " என்றார். பிறர் கூறியவற்றுக்கு வினா 7 விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.

12.  
EO G3 – 2022
பின்வரும் நாடுகளில் நெறிமுறைக் கோட்பாடுகளை முதன்முதலில் தம் அரசியலமைப்பில் சேர்த்த நாடு எது?

Correct Answer: D [ஸ்பெயின்]

விளக்கம்:

சமூக, பொருளாதாரக் கொள்கை நெறிகளை அரசியலமைப்பில் சேர்த்த தொடக்க நாடு ஸ்பெயின் ; அதை அயர்லாந்து பின்பற்றியது; அயர்லாந்திலிருந்து இந்தியா பெற்றது.

13.  
FAG6 – 2022
குடிமக்களுக்குப் பொதுச் சிவில் சட்டம் பற்றிக் கூறும் அரசியலமைப்புப் பிரிவு எது?

Correct Answer: C [பிரிவு 44]

விளக்கம்:

பிரிவு 44 : "இந்திய நாடு முழுவதும் குடிமக்களுக்குப் பொதுச் சிவில் சட்டத்தை உறுதி செய்ய அரசு முயல வேண்டும்" – தாராளவாத–அறிவுசார் கோட்பாடு.

14.  
GROUP 2 – 2022
கூட்டுறவுச் சங்கங்களை ஊக்குவிப்பதற்காகப் பிரிவு 43B-ஐச் சேர்த்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எது?

Correct Answer: D [97-வது திருத்தச் சட்டம், 2011]

விளக்கம்:

97-வது திருத்தம் (2011) – பிரிவு 43B (கூட்டுறவுச் சங்கங்களின் தன்னார்வ உருவாக்கம், தன்னாட்சி, மக்களாட்சிக் கட்டுப்பாடு, தொழில்முறை மேலாண்மை). (அதே திருத்தம் பிரிவு 19(1)(c)-இல் "கூட்டுறவுச் சங்கங்கள்" சொல்லையும் பகுதி IXB-ஐயும் சேர்த்தது.

15.  
மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக அரசு ஒரு சமூக ஒழுங்கை நிறுவ வேண்டும் என்று எந்த அரசியலமைப்புப் பிரிவு கூறுகிறது?

Correct Answer: A [பிரிவு 38]

விளக்கம்:

பிரிவு 38 – "மக்கள் நலனை மேம்படுத்தச் சமூக ஒழுங்கை அரசு உறுதி செய்ய வேண்டும்".

16.  
SURVEYOR DRAUGHTSMAN – 2022
கூற்று [A]: பி.ஆர். அம்பேத்கரின் கருத்துப்படி, நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசியலமைப்பின் "புதுமையான அம்சம்".
காரணம் [R]: நெறிமுறைக் கோட்பாடுகள் அரசுக்கு வழிகாட்டியாகச் செயல்படுகின்றன.

Correct Answer: B [[A], [R] இரண்டும் சரி; [R], [A]-க்குச் சரியான விளக்கம்]

விளக்கம்:

அம்பேத்கர் நெறிமுறைகளைப் " புதுமையான அம்சம் " என்றதற்குக் காரணம் – அவை சட்டமன்றத்துக்கும் நிர்வாகத்துக்கும் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்கள் என்ற தன்மையே (1935 சட்டத்தின் கீழான அறிவுறுத்தல் ஆவணங்கள் தலைமை ஆளுநருக்கும் ஆளுநர்களுக்கும் மட்டுமே…

17.  
CBT – 2022
"ஏழைகளுக்கு அரசு இலவசச் சட்ட உதவி வழங்க வேண்டும்" என்பது எந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?

Correct Answer: A [42-வது திருத்தம்]

விளக்கம்:

பிரிவு 39A (சம நீதி, இலவசச் சட்ட உதவி) – 42-வது திருத்தம் (1976) . இதைச் செயல்படுத்த சட்டப் பணிகள் ஆணையங்கள் சட்டம், 1987 (NALSA, மாநில / மாவட்டச் சட்டப் பணிகள் ஆணையங்கள், லோக் அதாலத்). திருத்தங்களின் அட்டவணைக்கு வினா 14 விளக்கத்தைப் பார்க்கவும்.

18.  
GROUP 4 – 2022
இந்திய அரசியலமைப்பின் நெறிமுறைக் கோட்பாடுகள் ——— போன்றவை.

Correct Answer: C [அறிவுறுத்தல் ஆவணங்கள், 1935]

விளக்கம்:

நெறிமுறைகள் இந்திய அரசுச் சட்டம், 1935-இன் "அறிவுறுத்தல் ஆவணங்களை" ஒத்துள்ளன.

19.  
HEALTH OFFICER – 2023
பொது சுகாதாரத்தை மேம்படுத்த அரசு முயல வேண்டும் என்று கூறும் பிரிவு எது?

Correct Answer: A [பிரிவு 47]

விளக்கம்:

பிரிவு 47 : மக்களின் ஊட்டச்சத்து நிலை, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துதல் அரசின் முதன்மைக் கடமைகளில் ஒன்று; மருத்துவத் தேவை தவிர போதைப் பானங்கள், போதைப் பொருள்களைத் தடை செய்ய முயலுதல்.

20.  
FISHERY DEPT – 2023
கீழ்க்காணும் இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும்:
(i) முகவுரை — அரசியலமைப்பின் பகுதி அல்ல
(ii) அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் — அரசின் கடமை
(iii) அடிப்படைக் கடமைகள் — நாடாளுமன்றத்தின் கடமை
(iv) அடிப்படை உரிமைகள் — குடிமகனின் கடமை

Correct Answer: B [(ii)]

விளக்கம்:

கூறு சரியான நிலை முகவுரை அரசியலமைப்பின் பகுதியே (கேசவானந்த பாரதி, 1973); பெருபாரி வழக்கில் (1960) பகுதி அல்ல எனக் கூறப்பட்ட கருத்து மாற்றப்பட்டது நெறிமுறைக் கோட்பாடுகள் அரசின் கடமைகள் ✔ அடிப்படைக் கடமைகள் குடிமக்களின் கடமைகள் (51A) அடிப்படை உரிமைகள்…

21.  
பின்வருவனவற்றில் நெறிமுறைக் கோட்பாடுகளின் சமூகச் சிந்தனையைப் பிரதிபலிப்பது எது?

Correct Answer: C [போதுமான வாழ்வாதாரம் வழங்குதல்]

விளக்கம்:

"சமூக / சமதர்மச் சிந்தனை" (Socialistic principles) – சமூக, பொருளாதார நீதி. போதுமான வாழ்வாதாரம் – பிரிவு 39(a) இவ்வகையைச் சேர்ந்தது.

22.  
ACF – 2023
நெறிமுறைக் கோட்பாடுகளை இந்திய அரசியலமைப்பின் "புதுமையான அம்சம்" என விவரித்தவர் யார்?

Correct Answer: A [டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்]

விளக்கம்:

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நெறிமுறைகளை அரசியலமைப்பின் " புதுமையான அம்சம் " என்றார். (எம்.வி. பைலி – இந்திய அரசியலமைப்பு பற்றிய நூலாசிரியர்.) பிற அறிஞர்களின் கருத்துகளுக்கு வினா 7 விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.

23.  
GROUP 1C (DEO) – 2023
பொருத்துக (நெறிமுறைக் கோட்பாடுகள்):
(a) சமதர்மக் கோட்பாடுகள் — 1. பொதுச் சிவில் சட்டம்
(b) காந்தியக் கோட்பாடுகள் — 2. சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல்
(c) தாராளவாதக் கோட்பாடுகள் — 3. சமுதாய மேம்பாட்டுத் திட்டம்
(d) புதிய நெறிமுறைக் கோட்பாடுகள் — 4. ஆண், பெண் இருவருக்கும் சம வேலைக்குச் சம ஊதியம்

Correct Answer: A [4 3 1 2]

விளக்கம்:

வகை பொருந்துவது பிரிவு சமதர்மம் சம வேலைக்குச் சம ஊதியம் (4) 39(d) காந்தியம் சமுதாய மேம்பாட்டுத் திட்டம் (3) – கிராமப் பஞ்சாயத்து, கிராம வளர்ச்சி 40 (திட்டம் 1952) தாராளவாதம் பொதுச் சிவில் சட்டம் (1) 44 புதிய நெறிமுறைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு (2) 48A…

24.  
கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனிக்கவும்.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சொற்களில், நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசியலமைப்பின் "புதுமையான அம்சம்"; ஏனெனில்,
I. இவை அரசுக்கு வழங்கப்படும் பொதுவான வழிகாட்டுதல் / அறிவுறுத்தல் தன்மை உடையவை.
II. ஒன்றிய, மாநில அரசுகள் கொள்கைகளை வகுக்கும்போதும் சட்டங்களை இயற்றும்போதும் மனத்தில் கொள்ள வேண்டிய கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்களை இவை உள்ளடக்கியுள்ளன.
மேற்கண்டவற்றுள் எது / எவை சரி?

Correct Answer: C [I, II இரண்டும்]

விளக்கம்:

இரண்டும் சரி. நெறிமுறைகள் அரசுக்கான பொதுவான அறிவுறுத்தல்கள் ; ஒன்றிய, மாநில அரசுகள் கொள்கை வகுக்கும்போதும் சட்டமியற்றும்போதும் மனத்தில் கொள்ள வேண்டிய இலட்சியங்கள் (பிரிவு 37: "சட்டமியற்றுவதில் இவற்றைப் பின்பற்றுவது அரசின் கடமை").

25.  
GEOLOGY – 2023
இந்திய அரசியலமைப்பின் "அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்" எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை?

Correct Answer: A [அயர்லாந்து]

விளக்கம்:

நெறிமுறைக் கோட்பாடுகள் அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து (1937) பெறப்பட்டவை. அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து பெற்ற பிற கூறுகள்: மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை நியமனம் செய்தல் , குடியரசுத் தலைவர் தேர்தல் முறை .

26.  
COMBINED RESEARCH ASSISTANT – 2023
பொருத்துக:
பொருள் — தொடர்புடைய பிரிவு
(a) போதுமான வாழ்வாதாரம் — 1. பிரிவு 38
(b) கண்ணியமான வாழ்க்கைத் தரம் — 2. பிரிவு 41
(c) வேலை செய்யும் உரிமை — 3. பிரிவு 43
(d) மக்கள் நலன் — 4. பிரிவு 39

Correct Answer: C [4 3 2 1]

விளக்கம்:

பொருள் பிரிவு போதுமான வாழ்வாதாரம் 39(a) → 4 கண்ணியமான வாழ்க்கைத் தரம் (வாழ்க்கை ஊதியத்துடன்) 43 → 3 வேலை செய்யும் உரிமை 41 → 2 மக்கள் நலன் – சமூக ஒழுங்கு 38 → 1 குறியீடு 4 3 2 1 .

27.  
RESEARCH ASSISTANT (ANIMAL HUSBANDRY) – 2023
கீழ்வருவனவற்றுள் எது அரசின் நெறிமுறைக் கோட்பாடு அல்ல?

Correct Answer: D [தீண்டாமை ஒழிப்பு]

விளக்கம்:

தீண்டாமை ஒழிப்பு – பிரிவு 17 – இது அடிப்படை உரிமை (சமத்துவ உரிமை); நெறிமுறை அல்ல.

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய ஆட்சியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-polity-pyq

📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 ₹499 →
மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய ஆட்சியியல் PYQ – குழுக்களும் ஆணையங்களும் › இந்திய ஆட்சியியல் PYQ – முக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் › இந்திய ஆட்சியியல் PYQ – முக்கியச் சட்டங்களும் பிரிவுகளும் › இந்திய ஆட்சியியல் PYQ – அரசியல் கட்சிகள் › இந்திய ஆட்சியியல் PYQ – பெண்களுக்கு அதிகாரமளித்தல் › இந்திய ஆட்சியியல் PYQ – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0