இந்திய ஆட்சியியல் PYQ – அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் – பகுதி 2 (வினா 28–54)
← திரும்பச் செல்ல
வழக்கு சரியான ஆண்டு முக்கியத்துவம் கேசவானந்த பாரதி 1973 ✔ அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடு இந்திரா காந்தி எதிர் ராஜ் நாராயண் 1975 (1970 அல்ல) 39-வது திருத்தத்தின் 329A(4) செல்லாது; சுதந்திரமான, நியாயமான தேர்தல் அடிப்படைக் கட்டமைப்பின் பகுதி மினர்வா மில்ஸ்…
₹499 →
இந்திய ஆட்சியியல் PYQ – அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் – பகுதி 2 (வினா 28–54) – 27 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
MASS INTERVIEWER – 2023
நெறிமுறைக் கோட்பாடுகளை எந்த நீதிமன்றத்தாலும் செயல்படுத்த முடியாது எனக் கூறும் அரசியலமைப்புப் பிரிவு எது?
Correct Answer: A [பிரிவு 37]
விளக்கம்:
பிரிவு 37 : "இந்தப் பகுதியிலுள்ள விதிகள் எந்த நீதிமன்றத்தாலும் செயல்படுத்தப்படக் கூடாதவை ; எனினும் இவற்றில் கூறப்பட்டுள்ள கோட்பாடுகள் நாட்டின் ஆட்சிக்கு அடிப்படையானவை ; சட்டமியற்றுவதில் இவற்றைப் பின்பற்றுவது அரசின் கடமை." பிரிவு உள்ளடக்கம் 36 "அரசு" – வரையறை…
2.
CEGS – 2024
"அரசு, தேசிய வாழ்வின் அமைவனங்கள் அனைத்திலும், சமுதாய, பொருளியல், அரசியல் நீதி நிறைந்து நிலவுவதான ஒரு சமுதாய முறையமைவினைப் பயனுற எய்திப் பாதுகாத்து, மக்களின் நலப்பாட்டை வளர்த்திட அரிதின் முயலுதல் வேண்டும்" என்று கூறும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு
Correct Answer: A [பிரிவு 38]
விளக்கம்:
இது பிரிவு 38(1) -இன் சொற்கள்.
3.
HOSTEL SUPERINTENDENT CUM PTO – 2024
பின்வருவனவற்றைக் கால வரிசைப்படி வரிசைப்படுத்துக:
(1) தோட்டத் தொழிலாளர் சட்டம்
(2) இந்து விதவை மறுமணச் சட்டம்
(3) வரதட்சணைத் தடைச் சட்டம்
(4) பெண்களை அநாகரிகமாகச் சித்தரித்தல் (தடை) சட்டம்
Correct Answer: C [(2), (1), (3), (4)]
விளக்கம்:
வரிசை சட்டம் ஆண்டு தொடர்பு 1 இந்து விதவை மறுமணச் சட்டம் 1856 ஈஸ்வர சந்திர வித்யாசாகர் முயற்சி 2 தோட்டத் தொழிலாளர் சட்டம் 1951 பிரிவுகள் 42, 43 (வேலைச் சூழல், தொழிலாளர் நலன்) 3 வரதட்சணைத் தடைச் சட்டம் 1961 பெண்களின் மாண்பு 4 பெண்களை அநாகரிகமாகச் சித்தரித்தல்…
4.
GROUP 4 – 2024
அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் பற்றிய சரியான கூற்றுகளைக் கண்டறிக:
(i) பிரிவுகள் 36 முதல் 51 வரை நெறிமுறைக் கோட்பாடுகள் பற்றிக் கூறுகின்றன.
(ii) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இவற்றை இந்திய அரசியலமைப்பின் "புதுமையான அம்சம்" என விவரித்தார்.
(iii) இக்கோட்பாடுகளை நீதிமன்றங்கள் மூலம் செயல்படுத்த முடியும்.
Correct Answer: C [(i), (ii) மட்டும்]
விளக்கம்:
(i) சரி – பகுதி IV, பிரிவுகள் 36 – 51. (ii) சரி – அம்பேத்கர். (iii) தவறு – பிரிவு 37-இன்படி நீதிமன்றங்களால் செயல்படுத்த முடியாதவை . வினா 28 விளக்கத்தைப் பார்க்கவும்.
5.
அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அரசின் கடமைகளை எந்த வடிவில் அரசியலமைப்பில் சேர்த்தனர்?
Correct Answer: C [அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்]
விளக்கம்:
அரசின் கடமைகள் = நெறிமுறைக் கோட்பாடுகள் . அடிப்படைக் கடமைகள் (51A) குடிமக்களின் கடமைகள்; அவை மூல அரசியலமைப்பில் இல்லை – 1976-இல் சேர்க்கப்பட்டவை.
6.
GROUP 1 – 2024
நெறிமுறைக் கோட்பாடுகளை "நோக்கங்கள், விழைவுகளின் அறிக்கை" என அழைத்தவர் யார்?
Correct Answer: A [கே.சி. வேர்]
விளக்கம்:
" நோக்கங்கள், விழைவுகளின் அறிக்கை " (Manifesto of aims and aspirations) – கே.சி. வேர் . டி.டி. கிருஷ்ணமாச்சாரி – "உணர்வுகளின் குப்பைத் தொட்டி"; ஐவர் ஜென்னிங்ஸ் – "புனித ஆசைகள்"; அம்பேத்கர் – "புதுமையான அம்சம்".
7.
ஏழைகளுக்குச் சம நீதியும் இலவசச் சட்ட உதவியும் எந்தப் பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ளன?
Correct Answer: B [பிரிவு 39A]
விளக்கம்:
பிரிவு 39A (42-வது திருத்தம், 1976) – சம நீதி, இலவசச் சட்ட உதவி.
8.
CTS (INTERVIEW POST) – 2024
கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான புதிய நெறிமுறைக் கோட்பாட்டைச் சேர்த்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எது?
Correct Answer: C [97-வது திருத்தச் சட்டம்]
விளக்கம்:
97-வது திருத்தம் (2011) – பிரிவு 43B . திருத்தங்களின் முழு அட்டவணைக்கு வினா 14 விளக்கத்தைப் பார்க்கவும்.
9.
CTS (NON-INTERVIEW POST) – 2024
குழந்தைகளுக்கு அரசு முன்பருவக் கவனிப்பும் கல்வியும் வழங்குவது பற்றிக் கூறும் அரசியலமைப்புப் பிரிவு
Correct Answer: A [பிரிவு 45]
விளக்கம்:
பிரிவு 45 (86-வது திருத்தம், 2002-க்குப் பின்): 6 வயது நிறைவடையும் வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் முன்பருவக் கவனிப்பும் கல்வியும் வழங்க அரசு முயல வேண்டும் (செயலாக்கம்: ICDS – அங்கன்வாடிகள்).
10.
CTS (INTERVIEW POST-II) – 2024
நெறிமுறைக் கோட்பாடுகள் பற்றிய சரியான கூற்றுகளைக் கண்டறிக.
(i) இவை அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை.
(ii) 42-வது திருத்தத்தின் மூலம் நான்கு புதிய நெறிமுறைகள் சேர்க்கப்பட்டன.
(iii) 44-வது திருத்தத்தின் மூலம் இரண்டு புதிய நெறிமுறைகள் சேர்க்கப்பட்டன.
(iv) 97-வது திருத்தத்தின் மூலம் கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான ஒரு நெறிமுறை சேர்க்கப்பட்டது.
Correct Answer: B [(i), (ii), (iv) சரி]
விளக்கம்:
(i) சரி – அயர்லாந்து. (ii) சரி – 42-வது திருத்தம்: மூன்று புதிய பிரிவுகள் 39A, 43A, 48A; பிரிவு 39(f) மாற்றியமைக்கப்பட்டது (குழந்தைகளின் நலமான வளர்ச்சி) → நான்கு புதிய நெறிமுறைகள். (iii) தவறு – 44-வது திருத்தம் ஒன்றை மட்டுமே சேர்த்தது: 38(2).
11.
GROUP 1B & 1C – 2024
கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான புதிய நெறிமுறைக் கோட்பாட்டைச் சேர்த்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எது?
Correct Answer: A [97-வது திருத்தச் சட்டம், 2011]
விளக்கம்:
97-வது திருத்தம் (2011) – பிரிவு 43B. (இது 2012 பிப்ரவரி 15 முதல் நடைமுறைக்கு வந்தது.) வினா 14 விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.
12.
நெறிமுறைக் கோட்பாடுகள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனித்துச் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்:
I. இவற்றில் கூறப்பட்டுள்ள கோட்பாடுகள் நாட்டின் ஆட்சிக்கு அடிப்படையானவை.
II. மேம்பாட்டு உரிமை பற்றிய ஐ.நா. ஆவணத்தின் முன்னோடிகள் என இவை விவரிக்கப்பட்டுள்ளன.
III. நலன்புரி அரசு என்ற கருத்தை உள்ளடக்குவதே இவற்றின் நோக்கம்.
IV. நெறிமுறைகளைச் செயல்படுத்துவதற்காக நாடாளுமன்றம் அடிப்படை உரிமைகளைத் திருத்தலாம்.
Correct Answer: D [அனைத்தும் சரி]
விளக்கம்:
நான்கும் சரி: கூற்று ஆதாரம் I பிரிவு 37 – "நாட்டின் ஆட்சிக்கு அடிப்படையானவை" II உச்ச நீதிமன்றம் ( ஏர் இந்தியா சட்டப்பூர்வக் கழகம் எதிர் ஐக்கியத் தொழிலாளர் சங்கம், 1997 ): நெறிமுறைகள் மேம்பாட்டு உரிமை பற்றிய ஐ.நா.
13.
அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் பற்றிக் கூறும் பிரிவுகள் ——— வரை.
Correct Answer: A [36 முதல் 51]
விளக்கம்:
பிரிவுகள் 36 – 51 (பகுதி IV).
14.
ASSISTANT PUBLIC PROSECUTOR GRADE II – 2025
நெறிமுறைக் கோட்பாடுகள் பற்றிய கீழ்க்கண்ட இணைகளில் தவறானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
பொருள் — திருத்தம்
(1) ஏழைகளுக்கு இலவசச் சட்ட உதவி — 42-வது திருத்தம்
(2) வருமான ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் — 44-வது திருத்தம்
(3) கூட்டுறவுச் சங்கங்கள் — 86-வது திருத்தம்
(4) காடுகள், வனவிலங்குகள் பாதுகாப்பு — 97-வது திருத்தம்
Correct Answer: C [(3), (4) தவறு]
விளக்கம்:
(1) 39A – 42-வது ✔; (2) 38(2) – 44-வது ✔; (3) கூட்டுறவு 43B – 97-வது (86-வது அல்ல) ✘; (4) காடு, வனவிலங்கு 48A – 42-வது (97-வது அல்ல) ✘. வினா 14 விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.
15.
GROUP 1 & 1A – 2025
பொருத்துக:
(a) பொருளாதார அல்லது நிதி இயலாமை காரணமாக எவருக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது — 1. பிரிவு 42
(b) கிராமப் பஞ்சாயத்துகளை அமைத்து, சுயாட்சி அலகுகளாகச் செயல்படத் தேவையான அதிகாரம் வழங்குதல் — 2. பிரிவு 43
(c) நியாயமான, மனிதாபிமான வேலைச் சூழலும் மகப்பேறு நிவாரணமும் — 3. பிரிவு 39A
(d) வேளாண், தொழில் தொழிலாளர்களுக்கு வேலை, வாழ்க்கை ஊதியம், கண்ணியமான வாழ்க்கைத் தரம் தரும் பணிச் சூழல் — 4. பிரிவு 40
Correct Answer: C [3 4 1 2]
விளக்கம்:
கூறு பிரிவு (a) பொருளாதாரக் குறைபாட்டால் நீதி மறுக்கப்படக் கூடாது 39A → 3 (b) கிராமப் பஞ்சாயத்துகள் 40 → 4 (c) மனிதாபிமான வேலைச் சூழல், மகப்பேறு நிவாரணம் 42 → 1 (d) வேலை, வாழ்க்கை ஊதியம் 43 → 2 குறியீடு 3 4 1 2 .
16.
GROUP 4 – 2025
தவறாகப் பொருத்தப்பட்டவற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
(1) MFAL – குறு விவசாயிகள், வேளாண் தொழிலாளர் மேம்பாட்டு முகமை
(2) DPAP – வறட்சிப் பகுதித் திட்டம்
(3) DDP – மாவட்ட வளர்ச்சித் திட்டம்
(4) HDA – மலைப் பகுதி மேம்பாட்டு முகமைகள்
Correct Answer: C [(3), (4)]
விளக்கம்:
(1), (2) சரியான விரிவாக்கங்கள். DDP = Desert Development Programme (பாலைவன மேம்பாட்டுத் திட்டம்) – "மாவட்ட வளர்ச்சித் திட்டம்" அல்ல; எனவே (3) உறுதியாகத் தவறு.
17.
CTS (NON-INTERVIEW POST) – 2025
பின்வருவனவற்றில் அரசின் நெறிமுறைக் கோட்பாடுகளைக் கூறும் பிரிவுகள் எவை?
Correct Answer: D [பிரிவுகள் 36 முதல் 51]
விளக்கம்:
பிரிவுகள் 36 – 51 . (52 – 55: குடியரசுத் தலைவர், அவரது தேர்தல்; 76: இந்தியத் தலைமை வழக்குரைஞர் (Attorney General).) வினா 40 விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.
18.
CTS (ITI) – 2025
பொருத்துக:
பிரிவு — உள்ளடக்கம்
(a) பிரிவு 38 — 1. சட்டத்தின் முன் சமம்
(b) பிரிவு 39 — 2. குழந்தைத் தொழிலாளர்
(c) பிரிவு 40 — 3. கிராமப் பஞ்சாயத்து நிர்வாகம்
(d) பிரிவு 43 — 4. தற்காலிகத் (அன்றாடக் கூலித்) தொழிலாளர்
Correct Answer: A [1 2 3 4]
விளக்கம்:
(c) பிரிவு 40 → 3 (கிராமப் பஞ்சாயத்து) என்பது உறுதி; இதைக் கொண்ட ஒரே விருப்பம் A (1 2 3 4) . (b) 39(e), (f) – குழந்தைகள் துன்புறுத்தப்படாமை → 2 என்பதும் பொருந்துகிறது.
19.
CTS (ITI LEVEL II) – 2025
இந்திய அரசியலமைப்பின் நெறிமுறைக் கோட்பாடுகள் எந்தப் பகுதியில் அடங்கியுள்ளன?
Correct Answer: B [பகுதி IV]
விளக்கம்:
பகுதி IV . (பகுதி II – குடியுரிமை, பிரிவுகள் 5 – 11; பகுதி III – அடிப்படை உரிமைகள்; பகுதி V – ஒன்றியம்.) வினா 1 விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.
20.
ASSISTANT PUBLIC PROSECUTOR GRADE II – 2026
பின்வருவனவற்றுள் "அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்" பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Correct Answer: D [இவை அரசுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல் ஆவணங்களின் தன்மை உடையவை.]
விளக்கம்:
விருப்பம் நிலை A தவறு – பகுதி IV = பிரிவுகள் 36 – 51 (30 அல்ல; பிரிவு 30 – சிறுபான்மையினர் கல்வி நிறுவன உரிமை) B தவறு – பிரிவு 37: நீதிமன்றத்தில் செயல்படுத்த முடியாதவை C தவறு – இவை நலன்புரி அரசின் சாசனம்; காவல் அரசின் அல்ல D சரி – 1935 சட்டத்தின்…
21.
CTS (INTERVIEW POST) – 2026
கீழ்க்கண்ட சட்டங்களை அவை இயற்றப்பட்ட ஆண்டின் அடிப்படையில் காலவரிசைப்படுத்துக.
(1) மகப்பேறு நலச் சட்டம்
(2) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்
(3) கல்வி உரிமைச் சட்டம்
(4) சட்டப் பணிகள் ஆணையங்கள் சட்டம்
Correct Answer: B [(1), (4), (2), (3)]
விளக்கம்:
வரிசை சட்டம் ஆண்டு செயல்படுத்தும் நெறிமுறை / உரிமை 1 மகப்பேறு நலச் சட்டம் 1961 பிரிவு 42 2 சட்டப் பணிகள் ஆணையங்கள் சட்டம் 1987 பிரிவு 39A 3 MGNREGA 2005 பிரிவு 41 4 குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 21A (முன்பு 45) வரிசை (1),…
22.
GROUP 2A MAINS – 2026
பட்டியல் I-ஐப் பட்டியல் II-உடன் பொருத்துக:
(a) பிரிவு 39A — 1. பொதுச் சிவில் சட்டம்
(b) பிரிவு 40 — 2. சம நீதி, இலவசச் சட்ட உதவி
(c) பிரிவு 44 — 3. கிராமப் பஞ்சாயத்துகள்
(d) பிரிவு 51 — 4. பன்னாட்டு அமைதி, பாதுகாப்பு மேம்பாடு
Correct Answer: A [2 3 1 4]
விளக்கம்:
39A → 2 (சட்ட உதவி); 40 → 3 (பஞ்சாயத்து); 44 → 1 (பொதுச் சிவில் சட்டம்); 51 → 4 (உலக அமைதி). குறியீடு 2 3 1 4 .
23.
CTS (NON-INTERVIEW POST) – 2026
பொருத்துக:
(a) பிரிவு 39A — 1. சம நீதி, இலவசச் சட்ட உதவி
(b) பிரிவு 43A — 2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேம்பாடு; காடுகள் பாதுகாப்பு
(c) பிரிவு 43B — 3. கூட்டுறவுச் சங்கங்களை ஊக்குவித்தல்
(d) பிரிவு 48A — 4. தொழில் மேலாண்மையில் தொழிலாளர் பங்கேற்பு
Correct Answer: D [1 4 3 2]
விளக்கம்:
பிரிவு உள்ளடக்கம் சேர்த்த திருத்தம் 39A சம நீதி, இலவசச் சட்ட உதவி → 1 42-வது (1976) 43A தொழிலாளர் பங்கேற்பு → 4 42-வது (1976) 43B கூட்டுறவுச் சங்கங்கள் → 3 97-வது (2011) 48A சுற்றுச்சூழல், காடு, வனவிலங்கு → 2 42-வது (1976) குறியீடு 1 4 3 2 .
24.
பொருளாதார நீதி என்ற பொருளில் சமதர்மத்தை முன்னெடுக்கும் நேர்மறையான நடவடிக்கை எது?
Correct Answer: B [தொழில் மேலாண்மையில் தொழிலாளர் பங்கேற்பு]
விளக்கம்:
பிரிவு 43A – தொழில் மேலாண்மையில் தொழிலாளர் பங்கேற்பு – "சமதர்ம" முகவுரைச் சொல்லைச் சேர்த்த அதே 42-வது திருத்தத்தால் (1976) சேர்க்கப்பட்டது. தேசிய ஜவுளித் தொழிலாளர் சங்கம் எதிர் பி.ஆர்.
25.
GROUP 1 – 2026
1976-ஆம் ஆண்டின் 42-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நெறிமுறைக் கோட்பாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது எது?
Correct Answer: A [சம நீதியும் இலவசச் சட்ட உதவியும் (பிரிவு 39A)]
விளக்கம்:
39A – 42-வது திருத்தம். பிரிவுகள் 40, 44, 45 மூல அரசியலமைப்பிலேயே இருந்தவை (45 பின்னர் 86-வது திருத்தத்தால் மாற்றப்பட்டது). வினா 14 விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.
26.
அரசியலமைப்புப் பிரிவுகளை அவற்றின் உள்ளடக்கத்துடன் பொருத்துக:
(a) பிரிவு 40 — 1. தொழிலாளர்களுக்கு வாழ்க்கை ஊதியம்
(b) பிரிவு 42 — 2. நியாயமான, மனிதாபிமான வேலைச் சூழல்
(c) பிரிவு 43 — 3. பொதுச் சிவில் சட்டம்
(d) பிரிவு 44 — 4. கிராமப் பஞ்சாயத்துகளை அமைத்தல்
Correct Answer: C [4 2 1 3]
விளக்கம்:
40 → 4 (பஞ்சாயத்து); 42 → 2 (வேலைச் சூழல், மகப்பேறு); 43 → 1 (வாழ்க்கை ஊதியம்); 44 → 3 (பொதுச் சிவில் சட்டம்). குறியீடு 4 2 1 3 .
27.
கீழ்க்கண்ட இணைகளில் எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
(1) கேசவானந்த பாரதி வழக்கு – 1973
(2) இந்திரா காந்தி எதிர் ராஜ் நாராயண் வழக்கு – 1970
(3) மினர்வா மில்ஸ் வழக்கு – 1980
(4) பச்சன் சிங் வழக்கு – 1984
Correct Answer: A [(1), (3) சரி]
விளக்கம்:
வழக்கு சரியான ஆண்டு முக்கியத்துவம் கேசவானந்த பாரதி 1973 ✔ அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடு இந்திரா காந்தி எதிர் ராஜ் நாராயண் 1975 (1970 அல்ல) 39-வது திருத்தத்தின் 329A(4) செல்லாது; சுதந்திரமான, நியாயமான தேர்தல் அடிப்படைக் கட்டமைப்பின் பகுதி மினர்வா மில்ஸ்…
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய ஆட்சியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-polity-pyq
📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய ஆட்சியியல் PYQ – குழுக்களும் ஆணையங்களும்
› இந்திய ஆட்சியியல் PYQ – முக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்
› இந்திய ஆட்சியியல் PYQ – முக்கியச் சட்டங்களும் பிரிவுகளும்
› இந்திய ஆட்சியியல் PYQ – அரசியல் கட்சிகள்
› இந்திய ஆட்சியியல் PYQ – பெண்களுக்கு அதிகாரமளித்தல்
› இந்திய ஆட்சியியல் PYQ – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
