இந்திய ஆட்சியியல் PYQ – இந்தியத் தலைமை வழக்குரைஞர்

← திரும்பச் செல்ல

இந்திய ஆட்சியியல் PYQ – இந்தியத் தலைமை வழக்குரைஞர் – 5 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
GSASO – 2020
இந்திய அரசின் தலைமைச் சட்ட ஆலோசகர் யார்?

Correct Answer: B [இந்தியத் தலைமை வழக்கறிஞர்]

விளக்கம்:

பிரிவு 76(2) : குடியரசுத் தலைவர் அனுப்பும் சட்ட விஷயங்களில் இந்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவது தலைமை வழக்குரைஞரின் கடமை. எனவே அவரே இந்திய அரசின் தலைமைச் சட்ட ஆலோசகர் ; நாட்டின் முதன்மைச் சட்ட அலுவலர்.

2.  
GROUP 1 – 2021
கீழ்க்கண்ட கூற்றுகளைக் கருதுக:
1. இந்தியத் தலைமை வழக்கறிஞரின் பதவிக்காலம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை
2. இந்தியத் தலைமை வழக்கறிஞரின் ஊதியம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை
மேற்கண்ட கூற்றுகளில் எது / எவை சரியானவை?

Correct Answer: C [1, 2 இரண்டும்]

விளக்கம்:

பிரிவு 76(4) : தலைமை வழக்குரைஞர் " குடியரசுத் தலைவரின் விருப்பம் உள்ளவரை " பதவியில் இருப்பார்; " குடியரசுத் தலைவர் நிர்ணயிக்கும் ஊதியத்தைப் " பெறுவார். எனவே பதவிக்காலம், ஊதியம் இரண்டையும் அரசியலமைப்பு நிர்ணயிக்கவில்லை. பதவி பதவிக்காலம் அரசியலமைப்பில்?

3.  
LIBRARY SCIENCE – 2023
இந்தியத் தலைமை வழக்கறிஞரைப் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க.
1. இவர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
2. உச்ச நீதிமன்ற நீதிபதிக்குத் தேவைப்படும் அதே தகுதிகள் இவருக்கும் உரியவை.
3. இவர் நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
4. நாடாளுமன்றம் பதவி நீக்கத் தீர்மானம் மூலம் இவரை நீக்கலாம்.
மேற்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?

Correct Answer: A [1, 2 மட்டும்]

விளக்கம்:

கூற்று நிலை காரணம் 1 சரி பிரிவு 76(1) – குடியரசுத் தலைவர் நியமனம் 2 சரி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படத் தகுதியுள்ளவர் 3 தவறு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லர் ; பிரிவு 88-இன் கீழ் பேசும் உரிமை மட்டும் உண்டு 4 தவறு பதவி நீக்கத் தீர்மானம் இல்லை ; குடியரசுத்…

4.  
GROUP 1 – 2024
கூற்று [A] : நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றும் சிறப்புரிமை இந்தியத் தலைமை வழக்கறிஞருக்கு உண்டு.
காரணம் [R] : நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போன்றே இந்தியத் தலைமை வழக்கறிஞரும் சிறப்புரிமைகளையும் விலக்குகளையும் பெற்றுள்ளார்.

Correct Answer: D [[A], [R] இரண்டும் சரி; ஆனால் [R], [A]-க்குச் சரியான விளக்கம் அல்ல]

விளக்கம்:

இரண்டும் சரி; ஆனால் இரண்டும் வெவ்வேறு பிரிவுகளிலிருந்து வருகின்றன. உரிமை எந்தப் பிரிவு?

5.  
GROUP 1 – 2026
கீழ்க்கண்ட இந்திய அரசியலமைப்புப் பிரிவுகளில் எது சரியாகப் பொருந்தவில்லை? பிரிவு – பொருள்
(i) பிரிவு 74 – அமைச்சரவை
(ii) பிரிவு 76 – இந்தியாவின் தலைமை வழக்கறிஞர்
(iii) பிரிவு 85 – நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள்
(iv) பிரிவு 75 – அமைச்சர்களின் பதவிக்காலம்

Correct Answer: B [(ii) மட்டும்]

விளக்கம்:

பிரிவு 76 – இந்தியத் தலைமை வழக்குரைஞர் (Attorney General for India) . " Advocate General " என்பது மாநிலத் தலைமை வழக்குரைஞர் (பிரிவு 165). "Advocate General of India" என்ற பதவி இல்லை. எனவே (ii) தவறான இணை.

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய ஆட்சியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-polity-pyq

📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 ₹499 →
மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய ஆட்சியியல் PYQ – குழுக்களும் ஆணையங்களும் › இந்திய ஆட்சியியல் PYQ – முக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் › இந்திய ஆட்சியியல் PYQ – முக்கியச் சட்டங்களும் பிரிவுகளும் › இந்திய ஆட்சியியல் PYQ – அரசியல் கட்சிகள் › இந்திய ஆட்சியியல் PYQ – பெண்களுக்கு அதிகாரமளித்தல் › இந்திய ஆட்சியியல் PYQ – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0