இந்திய ஆட்சியியல் PYQ – மாநிலச் சட்டமன்றம்

← திரும்பச் செல்ல

இந்திய ஆட்சியியல் PYQ – மாநிலச் சட்டமன்றம் – 22 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
AGGS – 2021
மாநிலச் சட்டமன்ற அவை கூடுவதற்கான குறைவெண் (குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை)

Correct Answer: B [10 உறுப்பினர்கள் அல்லது மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு – இவற்றுள் எது அதிகமோ அது]

விளக்கம்:

பிரிவு 189(3) : மாநிலச் சட்டமன்றத்தின் ஓர் அவையின் குறைவெண் – 10 உறுப்பினர்கள் அல்லது அவையின் மொத்த உறுப்பினர்களில் 1/10 – இவற்றுள் எது அதிகமோ அது .

2.  
GROUP 1 – 2021
மாநிலச் சட்டமன்ற மேலவையின் அமைப்பை (உறுப்பினர் அமைப்பை) இறுதியாக முடிவு செய்யும் அதிகாரம் உடைய நிறுவனம் எது?

Correct Answer: A [நாடாளுமன்றம்]

விளக்கம்:

பிரிவு 171(2) : " நாடாளுமன்றம் சட்டத்தால் வேறுவிதமாக வகுக்கும் வரை " மேலவையின் அமைப்பு 171(3)-இல் உள்ளபடி இருக்கும். அதாவது, அரசியலமைப்பு வரம்புகளுக்குள் (பேரவையின் 1/3-க்கு மிகாமல், குறைந்தது 40) மேலவையின் அமைப்பை இறுதியாக முடிவு செய்வது நாடாளுமன்றம் .

3.  
TNPSC – 2022
சட்ட மேலவையை உருவாக்கவும் ஒழிக்கவுமான அதிகாரம் யாரிடம் உள்ளது?

Correct Answer: D [நாடாளுமன்றம்]

விளக்கம்:

பிரிவு 169(1) : சம்பந்தப்பட்ட மாநிலச் சட்டப்பேரவை சிறப்புப் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றினால், நாடாளுமன்றம் சட்டத்தால் மேலவையை உருவாக்கலாம் / ஒழிக்கலாம். சட்டப்பேரவை கோரிக்கை வைக்கிறது; அதிகாரம் நாடாளுமன்றத்துடையது .

4.  
CESGS – 2023
கூற்று [A]: மாநிலச் சட்டப்பேரவையே மாநிலத்தின் உண்மையான அதிகார மையம்.
காரணம் [R]: அது முக்கியமான துறைத் தலைவர்களை நியமிக்கிறது.
கீழ்க்காணும் குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

Correct Answer: A [[A] சரி, ஆனால் [R] தவறு]

விளக்கம்:

[A] சரி : நாடாளுமன்ற ஆட்சிமுறையில் சட்டப்பேரவை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அவை; அமைச்சரவை அதற்குக் கூட்டுப் பொறுப்பு (164(2)); சட்டமியற்றல், நிதி (வரி, செலவு ஒப்புதல்), அரசைப் பதவியில் வைத்திருத்தல் / அகற்றுதல் ஆகிய அதிகாரங்கள் அதனிடமே.

5.  
GROUP 3A – 2023 · AHGS – 2021
எந்த ஆண்டு தமிழ்நாடு சட்ட மேலவை ஒழிக்கப்பட்டது?

Correct Answer: B [1986]

விளக்கம்:

?️ தமிழ்நாடு சட்ட மேலவை (ஒழிப்பு) சட்டம், 1986 – 1986 நவம்பர் 1 முதல் மேலவை இல்லை. 1985 – ஆந்திரப் பிரதேச மேலவை ஒழிக்கப்பட்ட ஆண்டு; அதனுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

6.  
COMBINED RESEARCH ASSISTANT – 2023
எந்த அரசியலமைப்புத் திருத்தம் டெல்லிக்குச் சட்டப்பேரவையைப் பெற்றுத் தந்தது?

Correct Answer: B [69-வது]

விளக்கம்:

69-வது அரசியலமைப்புத் திருத்தம், 1991 – பிரிவுகள் 239AA, 239AB சேர்க்கப்பட்டன; டெல்லி " தேசியத் தலைநகரப் பகுதி " (NCT) ஆனது; 70 உறுப்பினர் சட்டப்பேரவை , முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை (பேரவையின் 10%), துணைநிலை ஆளுநர்.

7.  
MASS INTERVIEWER – 2023
கீழ்வருவனவற்றுள் சட்ட மேலவையைக் கொண்டுள்ள மாநிலங்களைத் தேர்ந்தெடுக்க.

Correct Answer: A [பிகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு–காஷ்மீர், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா]

விளக்கம்:

B, C, D-இல் உள்ள எந்த மாநிலத்துக்கும் மேலவை இல்லை; A-வில் உள்ள ஆறு மாநிலங்களுக்கே மேலவை உண்டு. ஆனால் கவனிக்க: ஜம்மு–காஷ்மீர் மேலவை 2019 மறுசீரமைப்புச் சட்டத்தால் ஒழிக்கப்பட்டது ; ஜம்மு–காஷ்மீர் இப்போது ஒன்றியப் பிரதேசம்.

8.  
CEGS – 2024
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கான தனித் தொகுதிகளின் எண்ணிக்கை

Correct Answer: A [44, 2]

விளக்கம்:

?️ 2008 தொகுதி மறுவரையறை ஆணைப்படி தமிழ்நாடு சட்டப்பேரவையின் 234 தொகுதிகளில் பட்டியல் சாதியினருக்கு 44 , பழங்குடியினருக்கு 2 (சேந்தமங்கலம், ஏற்காடு) தனித் தொகுதிகள் (பிரிவு 332 – மக்கள்தொகை விகிதப்படி ஒதுக்கீடு). மீதமுள்ள 188 பொதுத் தொகுதிகள்.

9.  
GROUP 1 – 2024
மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியிழப்பு தொடர்பான தவறான பிரிவு(களை)க் கண்டறிக.
(i) பிரிவு 189
(ii) பிரிவு 190
(iii) பிரிவு 191
(iv) பிரிவு 192

Correct Answer: C [(i) மட்டும்]

விளக்கம்:

அரசியலமைப்பில் " உறுப்பினர்களின் தகுதியிழப்புகள் " (Disqualifications of Members) என்ற தலைப்பின் கீழ் வரும் பிரிவுகள் 190 – 193 . பிரிவு 189 "அவைகளில் வாக்களிப்பு, காலியிடம் இருந்தாலும் செயல்படும் அதிகாரம், குறைவெண்" பற்றியது – தகுதியிழப்புடன் தொடர்பில்லை.

10.  
மாநிலச் சட்டமன்றம் தொடர்பான கீழ்க்கண்ட இணைகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடு.
(1) மாநிலங்களில் மேலவைகளை ஒழித்தல் அல்லது உருவாக்குதல் – பிரிவு 169
(2) மாநிலச் சட்டமன்றங்களின் பதவிக்காலம் – பிரிவு 172
(3) ஆளுநரின் சிறப்புரை – பிரிவு 174
(4) மசோதாக்களுக்கு ஒப்புதல் – பிரிவு 176

Correct Answer: A [(1), (2) மட்டும்]

விளக்கம்:

இணை நிலை சரியான பிரிவு (1) மேலவை ஒழிப்பு / உருவாக்கம் – 169 சரி 169 (2) சட்டமன்றப் பதவிக்காலம் – 172 சரி 172 (3) ஆளுநர் சிறப்புரை – 174 தவறு 176 (174 – கூட்டுதல், கூட்டத்தொடர் முடித்தல், கலைத்தல்) (4) மசோதா ஒப்புதல் – 176 தவறு 200

11.  
CTS (NON-INTERVIEW POST) – 2024
ஈரவைச் சட்டமன்றம் கொண்ட மாநிலங்களைக் கண்டறிக.
(i) தெலங்கானா
(ii) தமிழ்நாடு
(iii) பிகார்
(iv) கர்நாடகா

Correct Answer: C [(i), (iii), (iv) மட்டும்]

விளக்கம்:

தெலங்கானா, பிகார், கர்நாடகா – மேலவை உண்டு. ?️ தமிழ்நாடு – 1986 முதல் ஓரவை (2010 சட்டம் இயற்றப்பட்டும் மேலவை அமைக்கப்படவில்லை). (வினா 7 விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.)

12.  
GROUP 1 & 1A – 2025
மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் தகுதிகள் குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எவை உண்மை?
(i) சட்டப்பேரவைக்கு 25 வயது நிரம்பியிருக்க வேண்டும்
(ii) சட்ட மேலவைக்கு 30 வயது நிரம்பியிருக்க வேண்டும்
(iii) நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தால் குறிப்பிடப்படாத பிற தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்

Correct Answer: B [(i), (ii) மட்டும்]

விளக்கம்:

பிரிவு 173 : (a) இந்தியக் குடிமகன், பிரமாணம்; (b) பேரவைக்கு 25 , மேலவைக்கு 30 வயது; (c) நாடாளுமன்றச் சட்டம் வகுக்கும் ("as may be prescribed") பிற தகுதிகள். கூற்று (iii) "வகுக்கப்படாத" (may not be prescribed) என்று கூறுவதால் தவறு.

13.  
சென்னை மாகாணச் சட்ட மேலவை ———— சட்டப்படி உருவாக்கப்பட்டது.

Correct Answer: C [இந்திய கவுன்சில்கள் சட்டம், 1861]

விளக்கம்:

?️ இந்தியக் கவுன்சில்கள் சட்டம், 1861 – சென்னை, பம்பாய் மாகாணங்களுக்குச் சட்டமியற்றும் அதிகாரத்தை மீண்டும் வழங்கி, ஆளுநரின் நிர்வாகக் குழுவுடன் கூடுதல் உறுப்பினர்களைச் சேர்த்து சென்னைச் சட்ட மேலவையை உருவாக்கியது. அதுவே தமிழ்நாடு சட்டமன்றத்தின் தொடக்கம்.

14.  
GROUP 4 – 2025
கீழ்க்கண்ட தமிழ்நாடு நிதியமைச்சர்களை அவர்களின் பட்ஜெட் ஆண்டின் அடிப்படையில் காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
1. திரு. பன்னீர்செல்வம்
2. டாக்டர் நெடுஞ்செழியன்
3. திரு. பழனிவேல் தியாகராஜன்
4. திரு. தங்கம் தென்னரசு

Correct Answer: C [2 1 3 4]

விளக்கம்:

?️ காலவரிசை: இரா. நெடுஞ்செழியன் (எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அமைச்சரவைகளில் – 20-ஆம் நூற்றாண்டு) → ஓ.

15.  
GROUP 2A MAINS – 2025
பின்வருவனவற்றில் எது / எவை சரியாக இணைக்கப்பட்டுள்ளன?
(1) சி. ராஜகோபாலாச்சாரி – சட்டப்பேரவை
(2) பி.பி. மண்டல் – சட்ட மேலவை
(3) மொரார்ஜி தேசாய் – சட்ட மேலவை
(4) சி.என். அண்ணாதுரை – சட்ட மேலவை

Correct Answer: C [(2), (3) சரி]

விளக்கம்:

வினா – இவர்கள் முதலமைச்சரான காலத்தில் எந்த அவையின் உறுப்பினர் என்பது. (1) தவறு – ?️ ராஜாஜி 1952-இல் சென்னை மாநில முதலமைச்சரானபோது சட்டப்பேரவைக்குப் போட்டியிடவில்லை; சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்டார் . (2) சரி – பி.பி.

16.  
GROUP 2A MAINS (REVOKED) – 2026
கீழ்க்கண்ட அரசியலமைப்புப் பிரிவுகளை அவற்றுடன் தொடர்புடைய அம்சங்களுடன் பொருத்துக.
(a) பிரிவு 178 – 1. அவைத் தலைவரின் பணிகளைச் செய்வதற்கான துணைத் தலைவரின் அதிகாரம்
(b) பிரிவு 180 – 2. சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர்
(c) பிரிவு 182 – 3. மேலவைத் தலைவரின் பணிகளைச் செய்வதற்கான துணைத் தலைவரின் அதிகாரம்
(d) பிரிவு 184 – 4. சட்ட மேலவைத் தலைவர், துணைத் தலைவர்

Correct Answer: C [2 1 4 3]

விளக்கம்:

178 – பேரவைத் தலைவர், துணைத் தலைவர் (2); 180 – துணைத் தலைவரின் அதிகாரம் (1); 182 – மேலவைத் தலைவர், துணைத் தலைவர் (4); 184 – மேலவைத் துணைத் தலைவரின் அதிகாரம் (3) → 2 1 4 3 .

17.  
அமைச்சர் ஒருவர் தமிழக அமைச்சரவையிலிருந்து பதவி விலக முடிவெடுத்தால் யாரிடம் தனது பதவி விலகல் கடிதத்தைக் கொடுக்க வேண்டும்?

Correct Answer: A [முதலமைச்சரிடம்]

விளக்கம்:

மரபுப்படி அமைச்சர் தமது பதவி விலகல் கடிதத்தை முதலமைச்சரிடம் அளிக்கிறார்; முதலமைச்சர் அதைத் தமது பரிந்துரையுடன் ஆளுநருக்கு அனுப்ப, ஆளுநர் ஏற்று அறிவிக்கிறார்.

18.  
இந்தியாவில் ஈரவைச் சட்டமன்றம் முதன்முதலில் நிறுவப்பட்ட ஆண்டு

Correct Answer: A [1919]

விளக்கம்:

இந்திய அரசுச் சட்டம், 1919 (மாண்டேகு–செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள்) மைய அளவில் முதன்முதலில் ஈரவைச் சட்டமன்றத்தை உருவாக்கியது – மேலவை: அரசவை (Council of State) , கீழவை: மையச் சட்டப்பேரவை (Central Legislative Assembly) ; இவை 1921-இல் செயல்படத் தொடங்கின.

19.  
CTS (NON-INTERVIEW POST) – 2026
கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைக் கூறுக.
மாநிலச் சட்ட மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கை
(i) அந்த மாநிலச் சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் இருக்கக்கூடாது; 40-க்குக் குறைவாகவும் இருக்கக்கூடாது.
(ii) அந்த மாநிலச் சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் இருக்கக்கூடாது; 40-க்குக் குறைவாகவும் இருக்கக்கூடாது.
(iii) அந்த மாநிலச் சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கையில் நான்கில் மூன்று பங்குக்கு மேல் இருக்கக்கூடாது; 50-க்குக் குறைவாகவும் இருக்கக்கூடாது.
(iv) அந்த மாநிலச் சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே இருக்க வேண்டும்; 40-க்குக் குறைவாக இருக்கக்கூடாது.

Correct Answer: C [(ii) மட்டும் சரி]

விளக்கம்:

பிரிவு 171(1) : சட்ட மேலவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை, அம்மாநிலச் சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கையின் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் இருக்கக் கூடாது ; எந்நிலையிலும் 40-க்குக் குறையக் கூடாது .

20.  
GROUP 1 – 2026
கீழ்க்காணும் கூற்றுகளைக் கருதிச் சரியான விடையைத் தேர்வு செய்க.
கூற்று [A]: இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் சட்டப்பேரவை, சட்ட மேலவை என்ற ஈரவைகளைக் கொண்டுள்ளன.
காரணம் [R]: சட்ட மேலவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Correct Answer: B [[A], [R] இரண்டும் தவறு]

விளக்கம்:

[A] தவறு – ஆறு மாநிலங்களில் மட்டுமே மேலவை (பிரிவு 168; ?️ தமிழ்நாடு ஓரவை).

21.  
"பண மசோதா" குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றைக் கண்டறிக.
(i) பண மசோதா மாநிலக் கீழவையான சட்டப்பேரவையில்தான் முதலில் கொண்டுவரப்பட வேண்டும்.
(ii) பண மசோதா சட்ட மேலவையில்தான் முதலில் கொண்டுவரப்பட வேண்டும்.
(iii) சட்ட மேலவை மசோதாவை நிராகரிக்கவோ திருத்தவோ முடியாது.

Correct Answer: B [(i), (iii) மட்டும்]

விளக்கம்:

(i) சரி – பிரிவு 198(1): பண மசோதா சட்டப்பேரவையில் மட்டுமே அறிமுகம். (ii) தவறு. (iii) சரி – மேலவை 14 நாளுக்குள் பரிந்துரை மட்டுமே செய்யலாம்; திருத்தவோ நிராகரிக்கவோ முடியாது (198(2)–(5)). பண மசோதா வரையறை – பிரிவு 199; சான்றளிப்பவர் – அவைத் தலைவர்.

22.  
'பண மசோதா' குறித்துப் பின்வருவனவற்றுள் எது/எவை சரியானவை?
(i) சட்ட மேலவையில் பண மசோதாவை அறிமுகம் செய்ய இயலாது.
(ii) சட்ட மேலவை பண மசோதாவைத் திருத்தவோ நிராகரிக்கவோ இயலாது.
(iii) பண மசோதா குறித்து இரு அவைகளுக்கும் முட்டுக்கட்டை ஏற்படும்போது தீர்வு காண அரசியலமைப்பில் வழிவகை உள்ளது.

Correct Answer: C [(i), (ii) மட்டும்]

விளக்கம்:

(i) சரி – பண மசோதா சட்டப்பேரவையில் மட்டுமே அறிமுகம் (பிரிவு 198(1)); ஆளுநரின் முன் பரிந்துரை தேவை (207). (ii) சரி – மேலவை 14 நாளுக்குள் பரிந்துரைகளை மட்டுமே அனுப்பலாம்; அவற்றை ஏற்பதா என்பது பேரவையின் விருப்பம். திருத்தவோ நிராகரிக்கவோ முடியாது.

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய ஆட்சியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-polity-pyq

📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 ₹499 →
மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய ஆட்சியியல் PYQ – குழுக்களும் ஆணையங்களும் › இந்திய ஆட்சியியல் PYQ – முக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் › இந்திய ஆட்சியியல் PYQ – முக்கியச் சட்டங்களும் பிரிவுகளும் › இந்திய ஆட்சியியல் PYQ – அரசியல் கட்சிகள் › இந்திய ஆட்சியியல் PYQ – பெண்களுக்கு அதிகாரமளித்தல் › இந்திய ஆட்சியியல் PYQ – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0