இந்திய ஆட்சியியல் PYQ – கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்; ஒன்றிய – மாநில உறவுகள்
← திரும்பச் செல்ல
இந்திய அரசுச் சட்டம், 1935, பிரிவு 163(3) : ஒரு மாகாணம் கூட்டாட்சி அரசின் (Federation) ஒப்புதலுடன் மட்டுமே இந்தியாவுக்கு வெளியே கடன் வாங்கலாம்; 163(4) – அந்த ஒப்புதலை நியாயமற்ற முறையில் மறுக்கக் கூடாது.
₹499 →
இந்திய ஆட்சியியல் PYQ – கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்; ஒன்றிய – மாநில உறவுகள் – 47 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
GSASO – 2020
இந்திய வனப்பணி மூன்றாவது அகில இந்தியப் பணியாக நிறுவப்பட்ட ஆண்டு
Correct Answer: B [1966]
விளக்கம்:
இந்திய வனப் பணி (IFoS) – 1966 -இல் பிரிவு 312, அகில இந்தியப் பணிகள் சட்டம், 1951 ஆகியவற்றின் கீழ் உருவாக்கப்பட்ட மூன்றாவது அகில இந்தியப் பணி.
2.
GSCE – 2021
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 338A-இன்படி எவ்வாணையம் தோற்றுவிக்கப்பட்டு பிப்ரவரி 19, 2004 முதல் நடைமுறையில் உள்ளது?
Correct Answer: C [தேசிய பழங்குடியினர் ஆணையம்]
விளக்கம்:
89-வது திருத்தம் (2003) பழைய SC/ST ஆணையத்தை இரண்டாகப் பிரித்து, பிரிவு 338A -இன் கீழ் தேசியப் பட்டியல் பழங்குடியினர் ஆணையத்தை உருவாக்கியது; அது 2004 பிப்ரவரி 19 முதல் செயல்படுகிறது.
3.
PTGS – 2021
மத்திய மற்றும் மாநில உறவுகளைச் சீர்திருத்த, முக்கியமான பரிந்துரைகளை வழங்கியவை
(i) சர்க்காரியா ஆணையம்
(ii) பூஞ்சி ஆணையம்
(iii) ராஜமன்னார் குழு
(iv) ராயல் ஆணையம்
குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Correct Answer: D [(i), (ii) மற்றும் (iii)]
விளக்கம்:
சர்க்காரியா (1983), பூஞ்சி (2007), ராஜமன்னார் (1969) – மூன்றும் ஒன்றிய – மாநில உறவுகளைச் சீர்திருத்தப் பரிந்துரைகள் வழங்கியவை. "ராயல் ஆணையம்" என்பது ஆங்கிலேயர் ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையங்களின் பொதுப் பெயர் (எ.கா.
4.
GROUP 1 – 2021
கீழ்க்காணும் வாக்கியங்களில் எது / எவை தவறானது / தவறானவை?
(a) மத்திய – மாநில உறவுகளை ஆய்வு செய்ய 1969-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ராஜமன்னார் குழு என்ற இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்தது.
(b) அது அகில இந்தியப் பணிகளை ஒழிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
(c) நிதி ஆணையம் நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
Correct Answer: A [(a) தவறானது]
விளக்கம்:
ராஜமன்னார் குழு 1969 -இல் தமிழ்நாடு அரசு அமைத்தது உண்மை; ஆனால் அது மூவர் குழு – இருவர் குழு அல்ல. எனவே (a) மட்டும் தவறு. ராஜமன்னார் குழு விவரம் தலைவர் டாக்டர் பி.வி. ராஜமன்னார் உறுப்பினர்கள் ஏ. லட்சுமணசாமி முதலியார், பி.
5.
CEGS – 2022
மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை (CISF) எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?
Correct Answer: D [1969]
விளக்கம்:
மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை (CISF) – நாடாளுமன்றம் இயற்றிய CISF சட்டம், 1968 -இன் கீழ் 1969 -இல் அமைக்கப்பட்டது.
6.
EO G3 – 2022
மத்தியப் பட்டியல் உள்ளடக்கியது
Correct Answer: A [97 இனங்கள்]
விளக்கம்:
ஏழாவது அட்டவணையின் ஒன்றியப் பட்டியலில் தொடக்கத்தில் 97 பொருள்கள் இருந்தன; மாநிலப் பட்டியல் 66 ; பொதுப் பட்டியல் 47 . விருப்பம் (B) 61 என்பது மாநிலப் பட்டியலின் இன்றைய எண்ணிக்கையாகப் பல நூல்கள் குறிப்பிடுவது; 66 – மாநிலப் பட்டியலின் தொடக்க எண்ணிக்கை.
7.
GROUP 2 – 2022
கண்டோன்மென்ட் வாரியத்தைப் பற்றிக் கீழ்க்கண்டவற்றுள் எது / எவை சரி?
(i) வரையறுக்கப்பட்ட இவ்விடத்தில் இராணுவம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும்
(ii) பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இது செயல்புரிவதில்லை
(iii) இவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன
Correct Answer: A [(i) மட்டும் சரியானது]
விளக்கம்:
கூற்று நிலை காரணம் (i) இராணுவம் நிரந்தரமாக நிலைகொண்ட வரையறுக்கப்பட்ட பகுதி சரி கண்டோன்மென்டின் வரையறையே இது (ii) பாதுகாப்பு அமைச்சகக் கட்டுப்பாட்டில் இல்லை தவறு ஒன்றியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது (iii) மூன்று வகைகள்…
8.
REPORTER – 2022
மத்திய அரசாங்கத்தின் கீழ் வரக்கூடிய துறை எது?
Correct Answer: A [வங்கித்துறை]
விளக்கம்:
பொருள் பட்டியல் வங்கி (Banking) ஒன்றியப் பட்டியல் (பதிவு 45) வேளாண்மை மாநிலப் பட்டியல் (பதிவு 14) சிறைச்சாலைகள் மாநிலப் பட்டியல் (பதிவு 4) பொதுச் சுகாதாரம் மாநிலப் பட்டியல் (பதிவு 6) வங்கி, நாணயம், ரிசர்வ் வங்கி போன்ற நிதி அமைப்புகள் நாடு முழுவதும் ஒரே சீராக…
9.
JAILOR – 2022
சர்க்காரியா ஆணையம் எதைக் குறித்துப் பரிந்துரைக்க அமைக்கப்பட்டது?
Correct Answer: B [ஒன்றிய – மாநில உறவுகள்]
விளக்கம்:
சர்க்காரியா ஆணையம் – ஒன்றிய – மாநில உறவுகளை ஆராய 1983 -இல் ஒன்றிய அரசு அமைத்தது; தலைவர் நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியா ; உறுப்பினர்கள் பி. சிவராமன், எஸ்.ஆர். சென். அறிக்கை 1988 – 247 பரிந்துரைகள் .
10.
SURVEYOR DRAUGHTSMAN – 2022
கூற்று [A] : இந்திய அரசமைப்புப் பிரிவு 312 அகில இந்தியப் பணிகள் தொடர்பானதாகும்.
காரணம் [R] : ஒரே சீரான தன்மையுடைய அதிகாரவர்க்கம் இருக்க வேண்டும் என மாநிலங்கள் விரும்பின.
Correct Answer: A [கூற்று [A] உண்மையாகும். காரணம் [R] தவறாகும்.]
விளக்கம்:
[A] சரி – பிரிவு 312 அகில இந்தியப் பணிகளுக்கு வழிவகுக்கிறது.
11.
TNPSC – 2022
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உருவாக்கப்பட்ட ஆண்டு
Correct Answer: B [1985]
விளக்கம்:
படி விவரம் அரசியலமைப்பு அடிப்படை பிரிவு 323A – 42-வது திருத்தம் (1976) சேர்த்தது சட்டம் நிர்வாகத் தீர்ப்பாயங்கள் சட்டம், 1985 CAT அமைப்பு 1985 நவம்பர் 1 பணி ஒன்றிய அரசு ஊழியர்களின் ஆட்சேர்ப்பு, பணி நிபந்தனைகள் தொடர்பான தகராறுகள் (பிரிவு 323B – வரி, நிலச்…
12.
VAGS – 2022
"இந்தியா கூட்டாட்சி அமைப்பே அல்ல" எனக் கூறியவர் யார்?
Correct Answer: A [கே.பி. முகர்ஜி]
விளக்கம்:
இந்தியக் கூட்டாட்சியின் தன்மை குறித்த அறிஞர் கருத்துகளில், "இந்தியா கூட்டாட்சியே அல்ல" என்ற கடுமையான கருத்து கே.பி. முகர்ஜியுடையதாகக் குறிப்பிடப்படுகிறது.
13.
GROUP 1 – 2022
சூழ்நிலை கருதி மாநில அரசுகளை மத்திய அரசு கட்டுப்படுத்தும் அதிகாரங்களைக் கூறும் பிரிவுகள் எவை?
Correct Answer: C [பிரிவுகள் 365, 256, 257]
விளக்கம்:
பிரிவு ஒன்றியக் கட்டுப்பாடு 256 நாடாளுமன்றச் சட்டங்களை நிறைவேற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுதல் 257 ஒன்றிய நிர்வாகத்துக்கு இடையூறு இல்லாமல் மாநிலம் செயல்பட வழிகாட்டுதல் 365 வழிகாட்டுதலைப் பின்பற்றாவிட்டால் 356-ஐப் பயன்படுத்தலாம் பிற விருப்பங்கள்: 368 –…
14.
கூற்று [A] : கூட்டாட்சி என்பது பகிரப்பட்ட ஆட்சி, சுய ஆட்சி எனும் கொள்கையின் அடிப்படையில் அரசின் பல நிலைகளுக்கிடையே அதிகாரத்தைப் பகிரும் ஒரு நிறுவன ஏற்பாடு மட்டுமே.
காரணம் [R] : கூட்டாட்சிகள் அரசியல், சமூக, பொருளாதாரச் சூழலுக்கேற்பத் தம்மைத் தொடர்ச்சியாகச் சரிசெய்து தகவமைத்துக் கொள்கின்றன.
Correct Answer: D [[A], [R] இரண்டும் சரி; ஆனால் [R], [A]-இன் சரியான விளக்கம் அல்ல]
விளக்கம்:
[A] சரி – கூட்டாட்சி " பகிர்ந்த ஆட்சி + சுய ஆட்சி " (shared rule + self rule) அடிப்படையில் பல நிலை அரசுகளுக்கிடையே அதிகாரத்தைப் பகிரும் நிறுவன ஏற்பாடு என்பது அதன் வரையறை. [R] சரி – கூட்டாட்சிகள் நிலையானவை அல்ல; சூழலுக்கேற்ப மாறுகின்றன (எ.கா.
15.
ROAD INSPECTOR – 2023
எவ்வகையான உறவு மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே இல்லை?
Correct Answer: D [பொதுவகை உறவுகள்]
விளக்கம்:
அரசியலமைப்பு ஒன்றிய – மாநில உறவுகளை மூன்று வகையாகப் பிரிக்கிறது; "மக்கள் தொடர்பு உறவு" (Public relations) என்ற வகை இல்லை.
16.
LIBRARY SCIENCE – 2023
ஒன்றிய அரசின் நிதித்திறத்தையும் மாநிலங்களின் நிதித் தேவைகளையும் சமன்படுத்தும் நிறுவன வழிமுறைகள்
(i) நாடாளுமன்ற நிதி நிலைக்குழு
(ii) நிதி ஆயோக்
(iii) இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்
(iv) நிதி ஆணையம்
Correct Answer: C [(ii) மற்றும் (iv) ஆகியன மட்டும்]
விளக்கம்:
அமைப்பு பணி சமன்செய்யும் அமைப்பா?
17.
BURSAR – 2023
கீழ்வருவனவற்றுள் எது மத்தியப் பட்டியலில் இடம்பெறவில்லை?
Correct Answer: C [தலைவரி (Capitation Tax)]
விளக்கம்:
வரி பட்டியல் (பதிவு) நிறுவன வரி ஒன்றியப் பட்டியல் (85) வருமான வரி – வேளாண் வருமானம் தவிர ஒன்றியப் பட்டியல் (82) சுங்க வரி ஒன்றியப் பட்டியல் (83) தலைவரி (Capitation Tax – நபர் ஒன்றுக்கு விதிக்கப்படும் வரி) மாநிலப் பட்டியல் (61) "Corporation Tax" என்பது…
18.
CESGS – 2023
சரியான குறிப்புகளைக் குறிப்பிடுக :
(I) தமிழ்நாடு அரசு 1983-ஆம் ஆண்டு ராஜமன்னார் தலைமையில் மத்திய – மாநில உறவுகளை ஆய்வு செய்யக் குழு அமைத்தது.
(II) அரசமைப்பின் ஏழாவது அட்டவணை மூன்று பட்டியல்களை உருவாக்கி அதிகாரப் பகிர்வை மத்திய – மாநில அரசாங்கங்களுக்கு வழங்குகிறது.
(III) அதிகாரப் பகிர்வு மத்திய – மாநில உறவுகளின் அச்சாணியாக உள்ளது.
(IV) மத்திய – மாநில அரசுகளுக்கிடையே அதிகாரங்கள் பிரதேச அடிப்படையில் பகிரப்பட்டுள்ளன.
Correct Answer: C [(II), (III) மற்றும் (IV)]
விளக்கம்:
(I) தவறு – ராஜமன்னார் குழு 1969 -இல் அமைக்கப்பட்டது (1983 – ஒன்றிய அரசின் சர்க்காரியா ஆணையம்). (II) சரி – ஏழாவது அட்டவணை: ஒன்றிய, மாநில, பொதுப் பட்டியல்கள். (III) சரி – அதிகாரப் பகிர்வே ஒன்றிய – மாநில உறவுகளின் அச்சாணி.
19.
HEALTH OFFICER – 2023
இந்திய அரசியலமைப்பின் பகுதி XI-இல் ________ மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான நிர்வாக உறவுகளைப் பற்றியது.
Correct Answer: C [பிரிவு 256 முதல் 263 வரை]
விளக்கம்:
நிர்வாக உறவுகள் = பகுதி XI, அத்தியாயம் II – பிரிவுகள் 256 – 263. 245 – 255 – சட்டமியற்றல் உறவுகள் (பகுதி XI, அத்தியாயம் I); 264 – 293 – நிதி உறவுகள் (பகுதி XII); 294 – 300 – சொத்து, ஒப்பந்தங்கள், உரிமைகள், வழக்குகள் (பகுதி XII, அத்தியாயம் III).
20.
ACF – 2023
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவுகளின் கீழ் மத்திய – மாநில அரசுகளுக்கிடையே நிதி அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டிருக்கிறது?
Correct Answer: C [பிரிவு 264 மற்றும் 293]
விளக்கம்:
நிதி உறவுகள் – பகுதி XII, பிரிவுகள் 264 முதல் 293 வரை (வரிப் பகிர்வு 268 – 272, மானியங்கள் 275 – 282, நிதி ஆணையம் 280, கடன் 292 – 293).
21.
RESEARCH ASSISTANT (ANIMAL HUSBANDRY) – 2023
சட்டமியற்றும் அதிகார ஒப்படைப்பு என்பது, இதன் ஆட்சிப்பரப்பிற்கு உட்பட்டதாகும்
Correct Answer: A [நிர்வாகச் சட்டம்]
விளக்கம்:
சட்டமன்றம் ஒரு சட்டத்தின் அடிப்படைக் கொள்கையை மட்டும் வகுத்து, விதிகள், ஒழுங்குமுறைகள், அறிவிக்கைகள் வகுக்கும் அதிகாரத்தை நிர்வாகத்துக்கு ஒப்படைப்பதே ஒப்படைப்புச் சட்டமியற்றல் (Delegated / Subordinate Legislation).
22.
MASS INTERVIEWER – 2023
மத்திய – மாநில உறவுகளுக்கான இரண்டாவது ஆணையத்தின் தலைவர் யார்?
Correct Answer: A [மதன் மோகன் பூஞ்சி]
விளக்கம்:
ஒன்றிய அரசு அமைத்த ஒன்றிய – மாநில உறவுகளுக்கான முதல் ஆணையம் – சர்க்காரியா (1983) ; இரண்டாவது – பூஞ்சி ஆணையம் (2007) , தலைவர் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி மதன் மோகன் பூஞ்சி ; அறிக்கை 2010. மொரார்ஜி தேசாய் – முதல் நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (1966); பி.வி.
23.
CEGS – 2024
I. பொதுப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் மீது மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே சட்டம் இயற்றலாம்.
II. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படும்பொழுது மாநில அரசின் அதிகாரமே மேலோங்கும்.
மேலே காணப்படும் கூற்றுகளில் சரியானது எது?
Correct Answer: A [I மட்டும்]
விளக்கம்:
I சரி – பொதுப் பட்டியல் பொருள்களில் நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றம் இரண்டும் சட்டம் இயற்றலாம் (பிரிவு 246(2)). II தவறு – பிரிவு 254(1) : முரண்பாடு வந்தால் ஒன்றியச் சட்டமே மேலோங்கும் ; மாநிலச் சட்டம் முரண்படும் அளவுக்குச் செல்லாது.
24.
HOSTEL SUPERINTENDENT CUM PTO – 2024
பின்வருவனவற்றுள் எந்தக் குழு / ஆணையம் மத்திய – மாநில உறவுகள் பற்றிப் பரிந்துரை செய்தன?
1. எம்.என். வெங்கடாசலய்யா ஆணையம்
2. சர்க்காரியா ஆணையம்
3. பூஞ்சி ஆணையம்
4. ராஜமன்னார் குழு
Correct Answer: C [2, 3 மற்றும் 4]
விளக்கம்:
ஒன்றிய – மாநில உறவுகளை ஆராயவென்றே அமைக்கப்பட்டவை – ராஜமன்னார் (1969), சர்க்காரியா (1983), பூஞ்சி (2007) .
25.
GROUP 4 – 2024
கூற்று [A] : அரசமைப்பின் பிரிவு 249-இன்படி ஒரு அதிகாரத்தை மாநிலப் பட்டியலிலிருந்து மத்தியப் பட்டியலுக்கு நாடாளுமன்றத்தால் மாற்ற முடியும்.
காரணம் [R] : தேசிய நலன் கருதி நாடாளுமன்றம் இம்மாற்றத்தைச் செய்யலாம்.
Correct Answer: B [[A], [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A]-க்குச் சரியான விளக்கமாகும்]
விளக்கம்:
பிரிவு 249 : தேசிய நலன் கருதி, மாநிலப் பட்டியலிலுள்ள ஒரு பொருள் மீது நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவது அவசியம் என மாநிலங்களவை வந்திருந்து வாக்களித்தோரில் 2/3 பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றினால், அந்தப் பொருள் மீது நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம் –…
26.
GROUP 2 & 2A – 2024
சர்க்காரியா ஆணையம் பற்றிய தவறான கூற்றுகளைக் கண்டறிக :
(i) சர்க்காரியா ஆணையம் 1983-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது
(ii) இந்த ஆணையம் 247 பரிந்துரைகளை அளித்தது
(iii) பிரிவு 356-ஐ நீக்குவதற்கு இந்த ஆணையம் பரிந்துரைத்தது
(iv) வரிவிதிப்பில் உள்ள எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைத்தது.
Correct Answer: A [(iii) மற்றும் (iv) மட்டும்]
விளக்கம்:
கூற்று நிலை உண்மை (i) 1983-இல் அமைப்பு சரி 1983 ஜூன்; அறிக்கை 1988 (ii) 247 பரிந்துரைகள் சரி 247 (iii) 356-ஐ நீக்கப் பரிந்துரை தவறு நீக்கக் கூடாது; மிக அரிதாக, பிற வழிகள் அனைத்தும் தோல்வியடைந்த பின் கடைசி வழியாக மட்டும் பயன்படுத்த வேண்டும் (iv) எஞ்சிய…
27.
GROUP 1 – 2024
பின்வரும் அமைப்புகளை அவை அமைக்கப்பட்ட கால வரிசைப்படி ஒழுங்கமைக்கவும்.
Correct Answer: B [முதல் நிர்வாகச் சீர்திருத்த ஆணையம், ராஜமன்னார் குழு, சர்க்காரியா ஆணையம், பூஞ்சி ஆணையம்]
விளக்கம்:
வரிசை அமைப்பு ஆண்டு 1 முதல் நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (மொரார்ஜி தேசாய்) 1966 2 ராஜமன்னார் குழு (தமிழ்நாடு) 1969 3 சர்க்காரியா ஆணையம் 1983 4 பூஞ்சி ஆணையம் 2007
28.
SPECIAL COMPETITIVE – 2025
சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடு :
(1) சர்க்காரியா ஆணையம் – 1983
(2) ராஜமன்னார் குழு – 1973
(3) பூஞ்சி ஆணையம் – 2007
(4) வெங்கடாசலய்யா ஆணையம் – 2002
Correct Answer: A [(1) மற்றும் (3) சரியானவை]
விளக்கம்:
அமைப்பு அமைக்கப்பட்ட ஆண்டு அறிக்கை பொருத்தம் சர்க்காரியா 1983 1988 (1) சரி ராஜமன்னார் 1969 (1973 அல்ல) 1971 (2) தவறு பூஞ்சி 2007 2010 (3) சரி வெங்கடாசலய்யா 2000 2002 (4) தவறு – 2002 அறிக்கை ஆண்டு
29.
GROUP 4 – 2025
மத்திய – மாநில உறவுகள் குறித்த குழுக்களைக் காலவரிசைப்படி ஒழுங்குபடுத்தவும்.
(1) பூஞ்சி ஆணையம்
(2) ராஜமன்னார் குழு
(3) சர்க்காரியா ஆணையம்
(4) வெங்கடாசலய்யா ஆணையம்
Correct Answer: D [(2), (3), (4), (1)]
விளக்கம்:
ராஜமன்னார் ( 1969 ) → சர்க்காரியா ( 1983 ) → வெங்கடாசலய்யா ( 2000 ) → பூஞ்சி ( 2007 ). வினா 28 விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும். (சர்க்காரியா ஆணையப் பரிந்துரையின் விளைவாகவே 1990-இல் மாநிலங்களுக்கு இடையிலான குழு அமைந்தது.)
30.
GROUP 1 & 1A – 2025
கூற்று [A] : மண்டலக் குழுக்கள் தங்கள் தோற்றத்துக்கு அரசியலமைப்புக்குக் கடமைப்பட்டுள்ளன.
காரணம் [R] : மண்டலக் குழுக்கள், மொழி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைத்ததன் தர்க்கரீதியான விளைவாகும்.
Correct Answer: D [[A] தவறு; ஆனால் [R] சரி]
விளக்கம்:
[A] தவறு – மண்டலக் குழுக்கள் அரசியலமைப்பு அமைப்புகள் அல்ல ; மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956 மூலம் உருவான சட்டப்பூர்வ அமைப்புகள் .
31.
CTS (INTERVIEW POST) – 2025
இந்தியக் கூட்டாட்சி தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கொண்டு சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் நீதித்துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது
(ii) மாநிலங்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் சமத்துவம் இல்லை
(iii) சாதாரணச் செயல்பாட்டில்கூட, கூட்டாட்சி அமைப்புக்குக் கூட்டாட்சித் தனிச்சிறப்புகளின் வலிமை வழங்கப்படுகிறது
Correct Answer: C [(ii) மட்டும் சரி]
விளக்கம்:
கூற்று நிலை காரணம் (i) நீதித்துறை இரண்டாகப் பிரிப்பு தவறு இந்தியாவில் ஒருங்கிணைந்த நீதித்துறை – உச்ச நீதிமன்றம் → உயர் நீதிமன்றம் → கீழமை நீதிமன்றங்கள்; ஒன்றிய, மாநிலச் சட்டங்கள் இரண்டையும் ஒரே நீதிமன்றங்களே செயல்படுத்துகின்றன (அமெரிக்காவில் இரட்டை…
32.
எந்தப் பிரிவைச் சேர்த்ததன் மூலம், 42-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 1976 எந்த மாநிலத்திலும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தனது படைகளை நிலைநிறுத்த ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளித்தது?
Correct Answer: B [பிரிவு 257A]
விளக்கம்:
பிரிவு பொருள் நிலை 257A கடுமையான சட்ட ஒழுங்குச் சூழலில் எந்த மாநிலத்திலும் ஒன்றிய ஆயுதப் படைகளை நிலைநிறுத்தும் அதிகாரம் 42-வது திருத்தம் (1976) சேர்த்தது; 44-வது திருத்தம் (1978) நீக்கியது 258A மாநிலப் பணிகளை ஆளுநர் ஒன்றியத்திடம் ஒப்படைத்தல் 7-வது திருத்தம்…
33.
CTS (NON-INTERVIEW POST) – 2025
மானிய உதவிகள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை உண்மை?
(1) மானிய உதவிகள் மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகின்றன.
(2) பிரிவு 275-இன் கீழ் மானிய உதவிகள் உதவி தேவைப்படும் மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றன; அவற்றின் அளவு நிதி ஆணையத்தால் தீர்மானிக்கப்படுகிறது.
(3) பிரிவு 275-இன் கீழ் மானியங்களைப் பகிர இரண்டாம் நிதி ஆணையம் பல கொள்கைகளை வகுத்தது.
Correct Answer: A [(2) மட்டும்]
விளக்கம்:
(2) சரி – பிரிவு 275: உதவி தேவைப்படும் மாநிலங்களுக்கு சட்டப்பூர்வ மானியங்கள்; அளவு நிதி ஆணையப் பரிந்துரைப்படி (நாடாளுமன்றச் சட்டம் வழியாக) நிர்ணயிக்கப்படுகிறது. (3) தவறு – பிரிவு 275 மானியங்களுக்குக் கொள்கைகளை வகுத்தது முதல் நிதி ஆணையம் (கே.சி.
34.
"மக்களாட்சியின் மீதான அனைத்துக் கட்டுப்பாட்டு முறைகளிலும், கூட்டாட்சி மிகவும் பயனுள்ளதாகவும் இணக்கமாகவும் இருந்து வருகிறது. கூட்டாட்சி முறை இறையாண்மை அதிகாரத்தைப் பிரிப்பதன் மூலம் அதனைக் கட்டுப்படுத்தி வரையறுப்பதுடன், அரசாங்கத்துக்குச் சில வரையறுக்கப்பட்ட உரிமைகளை மட்டுமே வழங்குகிறது" எனக் கூறியவர்
Correct Answer: B [ஆக்டன் பிரபு]
விளக்கம்:
இது பிரிட்டிஷ் வரலாற்றறிஞர் லார்டு ஆக்டன் (Lord Acton) கூறியது – அதிகாரப் பிரிவினை சுதந்திரத்தைக் காக்கும் என்ற அவரது கருத்தின் வெளிப்பாடு.
35.
GROUP 2 & 2A – 2025
பட்டியல் I-ஐப் பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :
பட்டியல் I (பிரிவுகள்) – (a) பிரிவு 280, (b) பிரிவு 263, (c) பிரிவு 262, (d) பிரிவு 279A
பட்டியல் II (அமைப்புகள்) – 1. மாநிலங்களுக்கு இடையிலான குழு, 2. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்த் தகராறு தீர்ப்பாயம், 3. சரக்கு மற்றும் சேவை வரி மன்றம், 4. நிதி ஆணையம்
குறியீடுகள்: (a) (b) (c) (d)
Correct Answer: B [4 1 2 3]
விளக்கம்:
பிரிவு அமைப்பு குறிப்பு (a) 280 4. நிதி ஆணையம் குடியரசுத் தலைவர் 5 ஆண்டுக்கு ஒருமுறை அமைப்பார் (b) 263 1. மாநிலங்களுக்கு இடையிலான குழு 1990; தலைவர் பிரதமர் (c) 262 2. நதிநீர்த் தகராறுகள் 1956 சட்டம் – நடுவர் மன்றங்கள் (d) 279A 3.
36.
CTS (ITI LEVEL II) – 2025
காலவரிசைப்படி ஒழுங்குபடுத்துக (மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்த் தகராறு தீர்ப்பாயங்கள்):
1. காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம்
2. கிருஷ்ணா நதிநீர்த் தீர்ப்பாயம்
3. ரவி – பியாஸ் நதிநீர்த் தீர்ப்பாயம்
4. வம்சதாரா நதிநீர்த் தீர்ப்பாயம்
Correct Answer: A [2, 3, 1, 4]
விளக்கம்:
வரிசை தீர்ப்பாயம் ஆண்டு மாநிலங்கள் 1 கிருஷ்ணா (முதல்) 1969 மகாராஷ்டிரம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் 2 ரவி – பியாஸ் 1986 பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் 3 காவிரி 1990 கர்நாடகா, தமிழ்நாடு , கேரளம், புதுச்சேரி 4 வம்சதாரா 2010 ஆந்திரப் பிரதேசம், ஒடிசா அடிப்படை –…
37.
ASSISTANT PUBLIC PROSECUTOR GRADE II – 2026
கூற்று [A] : பிரிவு 355, ஒன்றிய அரசு ஒவ்வொரு மாநிலத்தையும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் குழப்பம் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதை உறுதிசெய்கிறது.
காரணம் [R] : ஒவ்வொரு மாநில அரசும் அரசியலமைப்பின்படி நடைபெறுவதை உறுதிசெய்ய அதிகாரம் அளிக்கிறது.
Correct Answer: D [[A], [R] சரியானவை; [R], [A]-இன் சரியான விளக்கமல்ல]
விளக்கம்:
பிரிவு 355 : "வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் குழப்பம் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு மாநிலத்தையும் பாதுகாப்பதும், ஒவ்வொரு மாநில அரசும் அரசியலமைப்பின் விதிகளின்படி நடைபெறுவதை உறுதிசெய்வதும் ஒன்றியத்தின் கடமை." [A], [R] இரண்டும் இதே பிரிவின் இரண்டு தனித்தனிக்…
38.
"மாநிலங்கள் தங்கள் சொந்தக் குடிமைப் பணிகளை உருவாக்கும் உரிமையைப் பாதிக்காத வகையில், அகில இந்திய அளவில் பொதுவான தகுதி, ஒரே மாதிரியான ஊதிய விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் அகில இந்தியப் பணி இருக்கும்; அதன் உறுப்பினர்கள் மட்டுமே இத்தகைய முக்கியப் பதவிகளுக்கு ஒன்றியம் முழுவதும் நியமிக்கப்படுவர்."
மேற்கண்ட கூற்றைக் கூறியவர்
Correct Answer: A [டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்]
விளக்கம்:
அரசியலமைப்பு வரைவின் சிறப்புகளை விளக்கும்போது (1948 நவம்பர் 4), டாக்டர் அம்பேத்கர் இந்தியக் கூட்டாட்சியில் இரட்டை அரசு இருந்தாலும் இரட்டைக் குடிமைப் பணி முறை அமெரிக்காவைப் போல முழுமையாக இல்லை என்பதை விளக்கி இவ்வாறு கூறினார். இதுவே பிரிவு 312 -இன் அடிப்படை.
39.
CTS (INTERVIEW POST) – 2026
பின்வருவனவற்றுள் எது கூட்டாட்சியின் அம்சம் அல்ல?
Correct Answer: D [மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிடலாம்]
விளக்கம்:
கூட்டாட்சியில் ஒவ்வொரு நிலை அரசுக்கும் அரசியலமைப்பு வழங்கிய தனித்த அதிகார எல்லை உண்டு; ஒன்று மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதல்ல. எனவே "மைய அரசு மாநில அரசுக்கு ஆணையிடலாம்" என்பது கூட்டாட்சியின் அம்சம் அல்ல – அது ஒற்றையாட்சிச் சாய்வு .
40.
கீழ்க்கண்டவற்றில் "கூட்டாட்சி அமைப்பு" பற்றிக் கூறிய சட்டம் எது?
Correct Answer: B [இந்திய அரசாங்கச் சட்டம், 1935]
விளக்கம்:
சட்டம் முக்கிய அம்சம் இந்தியக் கவுன்சில்கள் சட்டம், 1892 சட்டமன்றங்களில் மறைமுகத் தேர்தல் முறை தொடக்கம் இந்திய அரசுச் சட்டம், 1919 மாகாணங்களில் இரட்டையாட்சி ; மையத்தில் ஈரவை இந்திய அரசுச் சட்டம், 1935 மாகாணங்கள், சமஸ்தானங்களை இணைத்த அகில இந்தியக் கூட்டாட்சி…
41.
GROUP 2A MAINS (RE-EXAM) – 2026
சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்க.
(1) அரைக் கூட்டாட்சி – கே.சி. வேர்
(2) பேரம் பேசும் கூட்டாட்சி – சி.ஆர். தாஸ்
(3) கூட்டுறவுக் கூட்டாட்சி – கிரான்வில் ஆஸ்டின்
(4) மையப்படுத்தும் போக்குடைய கூட்டாட்சி – ஜவஹர்லால் நேரு
Correct Answer: A [(1) மற்றும் (3) மட்டும்]
விளக்கம்:
கருத்து சரியான அறிஞர் அச்சிட்ட பொருத்தம் அரைக் கூட்டாட்சி கே.சி. வேர் (1) சரி பேரம் பேசும் கூட்டாட்சி மாரிஸ்–ஜோன்ஸ் (2) தவறு – சி.ஆர்.
42.
பின்வருவனவற்றுள் இந்திய அரசுச் சட்டம், 1935-இன்படி கூட்டாட்சிச் சட்டமன்றத்தின் ஒரு பகுதியாக இல்லாதது எது?
Correct Answer: D [பொறுப்புள்ள அரசாங்கம்]
விளக்கம்:
1935 சட்டத்தின் பிரிவு 18 : கூட்டாட்சிச் சட்டமன்றம் = மன்னர் (தலைமை ஆளுநர் மூலம்) + மாநிலங்கள் அவை (Council of State – மேலவை) + கூட்டாட்சிப் பேரவை (House of Assembly / Federal Assembly – கீழவை).
43.
GROUP 1 – 2026
கூட்டாட்சி அமைப்பைக் கொண்டிராத அரசாங்கத்தையுடைய நாட்டைக் கண்டறிக.
Correct Answer: D [தென்னாப்பிரிக்கா]
விளக்கம்:
நாடு அமைப்பு ரஷ்யா கூட்டாட்சி – "ரஷ்யக் கூட்டமைப்பு" (Russian Federation) சுவிட்சர்லாந்து கூட்டாட்சி – கேண்டன்களின் கூட்டமைப்பு ஆஸ்திரேலியா கூட்டாட்சி – காமன்வெல்த் ஆஃப் ஆஸ்திரேலியா (1901) தென்னாப்பிரிக்கா அரசியலமைப்பு (1996) பிரிவு 1 – " ஒரே,…
44.
அரசமைப்புச் சட்டத்திலுள்ள எஞ்சிய அதிகாரங்கள் குறித்துப் பின்வருவனவற்றுள் எது / எவை சரி?
(i) இவை கனடா நாட்டின் முன்மாதிரியைப் பின்பற்றுகின்றன.
(ii) இவை அரசியலமைப்பால் ஒன்றியச் சட்டமன்றத்துக்கு (நாடாளுமன்றம்) வழங்கப்படுகின்றன.
(iii) இவை நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
Correct Answer: C [(i) மற்றும் (ii) மட்டும்]
விளக்கம்:
பிரிவு 248 (ஒன்றியப் பட்டியல் பதிவு 97): மூன்று பட்டியல்களிலும் இல்லாத பொருள்கள் மீது சட்டம் இயற்றும் அதிகாரம், வரி விதிக்கும் அதிகாரம் உட்பட, நாடாளுமன்றத்துக்கு – (ii) சரி. இது கனடா முன்மாதிரி – (i) சரி. நீதிமன்றங்களுக்கு எஞ்சிய அதிகாரம் இல்லை – (iii) தவறு.
45.
ஒன்றியப் பொதுப் பணியாளர் தேர்வாணையம் குறித்துப் பின்வருவனவற்றுள் சரியானது எது?
Correct Answer: D [ஒன்றியத் தேர்வாணைய உறுப்பினர், அதன் தலைவராக நியமிக்கப்படுவதற்குத் தகுதி உள்ளவர்]
விளக்கம்:
விருப்பம் நிலை அரசியலமைப்பு (A) மாநிலத் திரள் நிதியம் தவறு பிரிவு 322 – இந்தியத் திரள் நிதியத்தின் மீது செலுத்தப்படும் (B) நாடாளுமன்றத்துக்கு ஆண்டறிக்கை தவறு பிரிவு 323 – அறிக்கை குடியரசுத் தலைவரிடம் ; அவர் விளக்கக் குறிப்புடன் நாடாளுமன்றத்தில் வைப்பார் (C)…
46.
கூட்டாட்சி அமைப்பு குறித்த கீழ்க்காணும் எக்கூற்றுகள் சரியானவை?
(i) அதிகாரப் பகிர்வு
(ii) அதிகாரப் பிரிவினை
(iii) இரட்டை அரசாங்க முறை
(iv) மிக வலிமையான மத்திய அரசு
Correct Answer: B [(i) மற்றும் (iii) மட்டும்]
விளக்கம்:
அதிகாரப் பகிர்வு (மைய – மாநில அரசுகளுக்கு இடையே) மற்றும் இரட்டை அரசு – கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்.
47.
JUNIOR ANALYST (TN MEDICAL SERVICE) – 2023
பின்வரும் எந்தச் சட்டத்தின் மூலம் மாநில அரசுகள் மைய அரசின் ஒப்புதலோடு வெளிநாடுகளிடமிருந்து கடன் பெற முடியும்?
Correct Answer: C [இந்திய அரசுச் சட்டம், 1935]
விளக்கம்:
இந்திய அரசுச் சட்டம், 1935, பிரிவு 163(3) : ஒரு மாகாணம் கூட்டாட்சி அரசின் (Federation) ஒப்புதலுடன் மட்டுமே இந்தியாவுக்கு வெளியே கடன் வாங்கலாம்; 163(4) – அந்த ஒப்புதலை நியாயமற்ற முறையில் மறுக்கக் கூடாது.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய ஆட்சியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-polity-pyq
📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய ஆட்சியியல் PYQ – குழுக்களும் ஆணையங்களும்
› இந்திய ஆட்சியியல் PYQ – முக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்
› இந்திய ஆட்சியியல் PYQ – முக்கியச் சட்டங்களும் பிரிவுகளும்
› இந்திய ஆட்சியியல் PYQ – அரசியல் கட்சிகள்
› இந்திய ஆட்சியியல் PYQ – பெண்களுக்கு அதிகாரமளித்தல்
› இந்திய ஆட்சியியல் PYQ – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
