இந்திய ஆட்சியியல் PYQ – நெருக்கடிநிலை விதிகள்

← திரும்பச் செல்ல

இந்திய ஆட்சியியல் PYQ – நெருக்கடிநிலை விதிகள் – 10 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
ADGS – 2021
தேசிய நெருக்கடிநிலையைப் பிரகடனப்படுத்தும் பிரிவு

Correct Answer: A [பிரிவு 352]

விளக்கம்:

நெருக்கடிநிலை பிரிவு அறிவிக்கப்பட்ட முறைகள் தேசிய நெருக்கடி 352 1962, 1971, 1975 மாநில நெருக்கடி (குடியரசுத் தலைவர் ஆட்சி) 356 100-க்கும் மேல் நிதி நெருக்கடி 360 ஒருமுறைகூட இல்லை தேசிய நெருக்கடிக்கான காரணங்கள் – போர், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, ஆயுதக் கிளர்ச்சி .

2.  
GSCE – 2021
கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருந்தியுள்ளவற்றைக் கண்டறிக
I. தேசிய நெருக்கடிநிலை – பிரிவு 352
II. போர் நெருக்கடிநிலை – பிரிவு 343
III. மாநில நெருக்கடிநிலை – பிரிவு 356
IV. நிதி நெருக்கடிநிலை – பிரிவு 360

Correct Answer: D [I, III மற்றும் IV]

விளக்கம்:

I, III, IV சரி. II தவறு – "போர் நெருக்கடி" எனத் தனி வகை இல்லை; போர் என்பது பிரிவு 352 -இன் காரணங்களில் ஒன்று. பிரிவு 343 – ஒன்றியத்தின் அலுவல் மொழி (இந்தி, தேவநாகரி; பகுதி XVII). வினா 1 விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.

3.  
VAGS – 2022
குடியரசுத் தலைவர் செய்யும் ஒவ்வொரு நெருக்கடிநிலைப் பிரகடனமும் ———— முன்பாக வைக்கப்பட வேண்டும்.

Correct Answer: D [நாடாளுமன்றம்]

விளக்கம்:

ஒவ்வொரு நெருக்கடிநிலைப் பிரகடனமும் நாடாளுமன்ற இரு அவைகளின் முன்பும் வைக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் பெற வேண்டும்; இல்லையேல் அது செயலிழக்கும்.

4.  
MASS INTERVIEWER – 2023
நெருக்கடிநிலையில் மக்களின் அடிப்படை உரிமைகள்

Correct Answer: A [நிறுத்திவைக்கப்படலாம்]

விளக்கம்:

நெருக்கடியின்போது அடிப்படை உரிமைகள் அனைத்தும் தானாகவே நின்றுவிடுவதில்லை : பிரிவு 358 – பிரிவு 19 மட்டுமே தானாக நிறுத்தப்படும்; அதுவும் போர் / வெளிநாட்டு ஆக்கிரமிப்பு காரணமான நெருக்கடியில் மட்டும் (ஆயுதக் கிளர்ச்சிக்கு அல்ல).

5.  
HINDU RELIGIOUS EO G1 – 2024
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 360 எதனைப் பற்றிக் குறிப்பிடுகிறது?

Correct Answer: C [நிதி நெருக்கடிநிலை]

விளக்கம்:

பிரிவு 360 – நிதி நெருக்கடிநிலை : இந்தியாவின் அல்லது அதன் பகுதியின் நிதி நிலைத்தன்மை / கடன் மதிப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும்போது.

6.  
AAO & AHO – 2024
கீழ்க்காணும் எந்தப் பிரிவின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மாநில நெருக்கடிநிலையைப் (மாநில அரசைக் கலைக்கும்) பிரகடனம் செய்யும் அதிகாரம் பெற்றுள்ளார்?

Correct Answer: D [பிரிவு 356]

விளக்கம்:

பிரிவு 356 – மாநிலத்தில் அரசியலமைப்புப்படி அரசு நடைபெற முடியாத நிலை ஏற்பட்டால், ஆளுநர் அறிக்கை அல்லது வேறு தகவல் அடிப்படையில் குடியரசுத் தலைவர் ஆட்சி ("மாநில நெருக்கடிநிலை").

7.  
CTS (ITI) – 2024
ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு ஆட்சி முறை முற்றிலும் சீர்குலைந்தால் மட்டுமே பிரிவு 356-ஐ மிக அரிதாகவும், கடைசி ஆயுதமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய ஆணையம் எது?

Correct Answer: D [சர்க்காரியா ஆணையம்]

விளக்கம்:

சர்க்காரியா ஆணையம் (1983 – 88): பிரிவு 356-ஐ மிக அரிதாக , மிகக் கடுமையான சூழலில் , பிற வழிகள் அனைத்தும் தோல்வியடைந்த பின் கடைசி வழியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அதற்கு முன் மாநிலத்துக்கு எச்சரிக்கை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதே கருத்தை எஸ்.ஆர்.

8.  
GROUP 1B & 1C – 2024
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானவற்றைத் தேர்ந்தெடு :
(1) பிரிவு 352 – தேசிய நெருக்கடிநிலை
(2) பிரிவு 356 – மாநில நெருக்கடிநிலை
(3) பிரிவு 362 – நிதி நெருக்கடிநிலை
(4) பிரிவு 366 – மத்திய அரசின் ஆணைக்கு இணங்கத் தவறுதல்

Correct Answer: D [3 மற்றும் 4 மட்டும்]

விளக்கம்:

இணை நிலை சரியான பிரிவு (1) 352 – தேசிய நெருக்கடி சரி 352 (2) 356 – மாநில நெருக்கடி சரி 356 (3) 362 – நிதி நெருக்கடி தவறு நிதி நெருக்கடி – 360 ; பிரிவு 362 (சமஸ்தான மன்னர்களின் உரிமைகள்) 26-வது திருத்தத்தால் (1971) நீக்கப்பட்டது (4) 366 – வழிகாட்டுதல் மீறல்…

9.  
SPECIAL COMPETITIVE – 2025
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவின்படி தேசிய நெருக்கடிநிலை அறிவிக்கப்படுகிறது?

Correct Answer: A [பிரிவு 352]

விளக்கம்:

பிரிவு 352 – தேசிய நெருக்கடிநிலை. பிரிவு 368 – அரசியலமைப்புத் திருத்தம் (பகுதி XX). வினா 1 விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.

10.  
GROUP 1 – 2026
கூற்று [A] : நெருக்கடிநிலைப் பிரகடனம் நடைமுறையில் உள்ளபோது, மாநிலப் பட்டியலில் உள்ள எந்தப் பொருள்கள் குறித்தும் சட்டமியற்ற நாடாளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.
காரணம் [R] : இந்திய அரசமைப்பின் பிரிவு 1, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என விவரிக்கின்றது.

Correct Answer: D [கூற்று [A], காரணம் [R] இரண்டும் சரி]

விளக்கம்:

[A] சரி – பிரிவு 250 : தேசிய நெருக்கடிப் பிரகடனம் நடைமுறையில் இருக்கும்போது, மாநிலப் பட்டியலிலுள்ள எந்தப் பொருள் மீதும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம்; நெருக்கடி முடிந்து 6 மாதம் வரை அச்சட்டங்கள் செல்லும்.

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய ஆட்சியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-polity-pyq

📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 ₹499 →
மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய ஆட்சியியல் PYQ – குழுக்களும் ஆணையங்களும் › இந்திய ஆட்சியியல் PYQ – முக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் › இந்திய ஆட்சியியல் PYQ – முக்கியச் சட்டங்களும் பிரிவுகளும் › இந்திய ஆட்சியியல் PYQ – அரசியல் கட்சிகள் › இந்திய ஆட்சியியல் PYQ – பெண்களுக்கு அதிகாரமளித்தல் › இந்திய ஆட்சியியல் PYQ – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0