TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நுகர்வோர் பாதுகாப்பு

← திரும்பச் செல்ல

TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நுகர்வோர் பாதுகாப்பு – 22 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
உலக நுகர்வோர் உரிமை தினம்:

Correct Answer: A [மார்ச் 15]

விளக்கம்:

விடை: மார்ச் 15 – ஜான் எஃப். கென்னடி, 1962.

2.  
இந்தியாவில் தேசிய நுகர்வோர் தினம்:

Correct Answer: D [டிசம்பர் 24]

விளக்கம்:

விடை: டிசம்பர் 24 – 1986 சட்டம் இயற்றப்பட்ட நாள்.

3.  
நுகர்வோரின் நான்கு உரிமைகளை முதன்முதலில் அறிவித்தவர்:

Correct Answer: B [ஜான் எஃப். கென்னடி]

விளக்கம்:

விடை: ஜான் எஃப். கென்னடி – 1962 மார்ச் 15 (உலக நுகர்வோர் உரிமை நாள்).

4.  
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 நடைமுறைக்கு வந்த ஆண்டு:

Correct Answer: B [2020]

விளக்கம்:

விடை: 2020 – 2020 ஜூலை 20.

5.  
2019 சட்டப்படி நுகர்வோர் உரிமைகளின் எண்ணிக்கை:

Correct Answer: C [6]

விளக்கம்:

விடை: 6 – பிரிவு 2(9) – ஆறு உரிமைகள்.

6.  
பின்வருவனவற்றில் 2019 சட்டம் வழங்கும் நுகர்வோர் உரிமை அல்லாதது:

Correct Answer: C [இலவசப் பொருள் பெறும் உரிமை]

விளக்கம்:

விடை: இலவசப் பொருள் பெறும் உரிமை – இது 2(9)-இன் ஆறு உரிமைகள் பட்டியலில் இல்லை.

7.  
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) அமைக்கப்பட்ட ஆண்டு:

Correct Answer: C [2020]

விளக்கம்:

விடை: 2020 – 2020 ஜூலை 24.

8.  
தற்போதைய விதிகளின்படி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தின் பண வரம்பு:

Correct Answer: B [₹50 லட்சம் வரை]

விளக்கம்:

விடை: ₹50 லட்சம் வரை – 2021 விதிகள் (முன்பு ₹1 கோடி).

9.  
₹2 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள நுகர்வோர் புகாரை விசாரிப்பது:

Correct Answer: C [தேசிய ஆணையம்]

விளக்கம்:

விடை: தேசிய ஆணையம் – 2021 விதிகள் – ₹2 கோடிக்கு மேல்: தேசிய ஆணையம்.

10.  
மாவட்ட ஆணைய உத்தரவை எதிர்த்து மாநில ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டிய காலம்:

Correct Answer: B [45 நாள்]

விளக்கம்:

விடை: 45 நாள் – பிரிவு 41 – 45 நாளுக்குள் மாநில ஆணையத்தில் மேல்முறையீடு.

11.  
நுகர்வோர் புகார் தாக்கல் செய்ய வேண்டிய காலவரம்பு:

Correct Answer: C [2 ஆண்டு]

விளக்கம்:

விடை: 2 ஆண்டு – காரணம் எழுந்த நாளிலிருந்து.

12.  
தவறான விளம்பரத்துக்காக உற்பத்தியாளருக்கு CCPA முதல் முறை விதிக்கக்கூடிய அதிகபட்ச அபராதம்:

Correct Answer: B [₹10 லட்சம்]

விளக்கம்:

விடை: ₹10 லட்சம் – மீண்டும் செய்தால் ₹50 லட்சம்.

13.  
வேளாண் பொருள்களுக்கான தர முத்திரை:

Correct Answer: B [அக்மார்க்]

விளக்கம்:

விடை: அக்மார்க் – 1937 சட்டம்.

14.  
தங்க நகைகளின் தூய்மையைக் குறிக்கும் முத்திரை:

Correct Answer: C [ஹால்மார்க்]

விளக்கம்:

விடை: ஹால்மார்க் – BIS வழங்குகிறது.

15.  
ISI முத்திரையை வழங்கும் அமைப்பு:

Correct Answer: B [இந்தியத் தர நிர்ணய அமைவனம் (BIS)]

விளக்கம்:

விடை: இந்தியத் தர நிர்ணய அமைவனம் (BIS) – BIS சட்டம், 2016.

16.  
மருத்துவ சேவைகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட வரம்பில் வரும் எனத் தீர்ப்பளித்த வழக்கு:

Correct Answer: B [இந்திய மருத்துவச் சங்கம் vs வி.பி. சாந்தா]

விளக்கம்:

விடை: இந்திய மருத்துவச் சங்கம் vs வி.பி. சாந்தா – 1995.

17.  
தேசிய நுகர்வோர் உதவி எண்:

Correct Answer: B [1915]

விளக்கம்:

விடை: 1915 – 1098 – குழந்தைகள்; 181 – பெண்கள்; 1930 – இணையக் குற்றம்.

18.  
கூற்றுகளைக் கவனி:
1. 2019 சட்டப்படி நுகர்வோர் தாம் வசிக்கும் இடத்திலேயே புகார் செய்யலாம்.
2. புகார் செய்ய வழக்கறிஞர் கட்டாயம்.
3. மின்வணிகப் பரிவர்த்தனைகளும் சட்ட வரம்பில் உள்ளன.
சரியானவை:

Correct Answer: B [1, 3 மட்டும்]

விளக்கம்:

விடை: 1, 3 மட்டும் – வழக்கறிஞர் தேவையில்லை.

19.  
பொருத்துக:
(a) FSSAI – 1. ஆற்றல் திறன்
(b) BEE – 2. உணவுப் பாதுகாப்பு
(c) ஈகோமார்க் – 3. எடைகள், அளவைகள்
(d) சட்டமுறை எடையளவுச் சட்டம் – 4. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள்

Correct Answer: A [a-2, b-1, c-4, d-3]

விளக்கம்:

விடை: a-2, b-1, c-4, d-3 – FSSAI – உணவு; BEE – ஆற்றல்; ஈகோமார்க் – சுற்றுச்சூழல்; சட்டமுறை எடையளவு – எடை, அளவை.

20.  
"வாங்குபவர் எச்சரிக்கை" என்பதன் இலத்தீன் தொடர்:

Correct Answer: B [Caveat Emptor]

விளக்கம்:

விடை: Caveat Emptor – Caveat Venditor – விற்பவர் எச்சரிக்கை.

21.  
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழுவின் (District Consumer Protection Council) தலைவர்:

Correct Answer: D [மாவட்ட ஆட்சியர்]

விளக்கம்:

விடை: மாவட்ட ஆட்சியர் – பிரிவு 8; மத்தியக் குழுவுக்கு ஒன்றிய அமைச்சர் தலைவர்.

22.  
நியாயமற்ற ஒப்பந்தங்களைச் செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் உடையவை:

Correct Answer: A [மாநில, தேசிய ஆணையங்கள் மட்டும்]

விளக்கம்:

விடை: மாநில, தேசிய ஆணையங்கள் மட்டும் – மாவட்ட ஆணையத்துக்கு இவ்வதிகாரம் இல்லை.

➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு IV – இந்திய ஆட்சியியல் பாடநூல் (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-4-indian-polity

📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 ₹499 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 3 › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 2 › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 1 › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – அரசியல் கட்சிகளும் நல்லாட்சியும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – மனித உரிமைகள் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – பெண்கள் அதிகாரமளித்தல்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0