வினாடி வினா
← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
[APP GROUP II-2025] 'ஊன்றுகோல்'-நாடகத்தை எழுதியவர் யார்?
Correct Answer: A [முடியரசன்]
Notes:
'ஊன்றுகோல்' கவிஞர் முடியரசன் இயற்றிய படைப்பு.
2.
[SPECIAL COMPETITIVE-2025] "மதிபெற்ற மைனர்" நாவலாசிரியர்
Correct Answer: A [ராமாமிர்தம்]
Notes:
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறையை எதிர்த்து 'தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்' என்ற நாவலை எழுதினார்.
3.
[GROUP 1&1A-2025] 'பகைவர் புல் ஆர்க' எனும் தொடர் இடம்பெற்றுள்ள நூல்.
Correct Answer: C [ஐங்குறுநூறு]
Notes:
'பகைவர் புல் ஆர்க' என்ற தொடர் ஐங்குறுநூற்றின் மருதத் திணை முதல் பகுதியான வேட்கைப் பத்தில் இடம்பெறுகிறது.
4.
[GROUP 4-2025] கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
(a) காரைக்கால் அம்மையார்
(b) ஆண்டாள்
(c) அரங்கநாத முதலியார்
(d) சேரமான் பெருமாள் நாயனார்
1. திருவந்தாதி
2. கச்சிக்கலம்பகம்
3. பாவைப்பாட்டு
4. மூத்ததிருப்பதிகங்கள்
(a) காரைக்கால் அம்மையார்
(b) ஆண்டாள்
(c) அரங்கநாத முதலியார்
(d) சேரமான் பெருமாள் நாயனார்
1. திருவந்தாதி
2. கச்சிக்கலம்பகம்
3. பாவைப்பாட்டு
4. மூத்ததிருப்பதிகங்கள்
Correct Answer: C [4 3 2 1]
Notes:
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் – காரைக்கால் அம்மையார்; திருப்பாவை – ஆண்டாள்; கச்சிக் கலம்பகம் – அரங்கநாத முதலியார்; பொன்வண்ணத்து அந்தாதி (திருவந்தாதி) – சேரமான் பெருமாள் நாயனார்.
5.
[GROUP4-2025] கீழ்க்கண்ட நூல்களை ஆசிரியர்களோடு பொருத்தவும்.
(a) வெற்றிவேற்கை - 1. ஔவையார்
(b) நன்னெறி - 2. குமரகுருபரர்
(c) நீதிநெறி விளக்கம் - 3. அதிவீரராம பாண்டியர்
(d) நல்வழி - 4. துறைமங்கலம் சிவப்பிரகாசர்
(a) வெற்றிவேற்கை - 1. ஔவையார்
(b) நன்னெறி - 2. குமரகுருபரர்
(c) நீதிநெறி விளக்கம் - 3. அதிவீரராம பாண்டியர்
(d) நல்வழி - 4. துறைமங்கலம் சிவப்பிரகாசர்
Correct Answer: C [3 4 2 1]
Notes:
வெற்றிவேற்கையை அதிவீரராம பாண்டியரும், நன்னெறியைத் துறைமங்கலம் சிவப்பிரகாசரும், நீதிநெறி விளக்கத்தைக் குமரகுருபரரும், நல்வழியை ஔவையாரும் இயற்றினர்.
6.
[CTS-IV-POST-2025] கிரேக்க இலக்கியங்களில் நீதி நூல்களின் தோற்றத்தை எவரின் வழி அறிய முடிகிறது?
Correct Answer: C [ஹீசியட்]
Notes:
கிரேக்க இலக்கியத்தில் நீதி நூல்களின் தோற்றம் ஹீசியடின் 'Works and Days' நூலிலிருந்து அறியப்படுகிறது; அதுவே முதல் கிரேக்க அறநூலாகக் கருதப்படுகிறது. (தேர்வாணைய விடைக்குறிப்பில் 'ஹோமர்' எனக் குறிக்கப்பட்டிருந்தது.)
7.
[CTS-IV-POST-2025] 'இதழகலந்தாதி' என்று கூறப்படும் அந்தாதி இலக்கிய வகை
Correct Answer: B [நீரோட்ட யமக அந்தாதி]
Notes:
நீரோட்ட யமக அந்தாதியைப் படிக்கும்போது இதழ்கள் (உதடுகள்) ஒன்றோடொன்று ஒட்டாது; எனவே அது இதழகலந்தாதி எனப்படும்.
8.
[CTS-NON-IV-POST-2025] "அன்பளிப்பு" என்ற சிறுகதை நூலின் ஆசிரியர்
Correct Answer: D [கு. அழகிரிசாமி]
Notes:
'அன்பளிப்பு' சிறுகதைத் தொகுப்பை எழுதியவர் கு. அழகிரிசாமி; இந்நூலுக்கு 1970-இல் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
9.
[CTS-NON-IV-POST-2025] பொருத்துக (தொல்காப்பியர் காலம் குறித்த கருத்துகள்):
(a) க. வெள்ளைவாரணர் - 1. கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை
(b) கே. கனகசபாபதிப் பிள்ளை - 2. கி.மு. 5320
(c) என். சுப்பிரமணியன் - 3. கி.பி. 4 ஆம் நூற்றாண்டு
(d) எஸ். வையாபுரிப் பிள்ளை - 4. கி.மு. 2 ஆம் நூற்றாண்டு
(a) க. வெள்ளைவாரணர் - 1. கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை
(b) கே. கனகசபாபதிப் பிள்ளை - 2. கி.மு. 5320
(c) என். சுப்பிரமணியன் - 3. கி.பி. 4 ஆம் நூற்றாண்டு
(d) எஸ். வையாபுரிப் பிள்ளை - 4. கி.மு. 2 ஆம் நூற்றாண்டு
Correct Answer: A [2 4 1 3]
Notes:
தொல்காப்பியர் காலத்தை க. வெள்ளைவாரணர் கி.மு. 5320 எனவும், கனகசபாபதிப் பிள்ளை கி.மு. 2 ஆம் நூற்றாண்டு எனவும், என். சுப்பிரமணியன் கி.மு. 4–3 ஆம் நூற்றாண்டு எனவும், வையாபுரிப் பிள்ளை கி.பி. 4 ஆம் நூற்றாண்டு எனவும் கணித்தனர்.
10.
[CTS-ITI-POST-2025] கொடுக்கப்பட்டனவற்றுள் சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
(1) சங்கரதாஸ் சுவாமிகள் - ஞானக் கோயில்
(2) கால்டுவெல் - ஞானக் கண்ணாடி
(3) படிக்காசுப் புலவர் - தொண்டைமண்டல சதகம்
(4) வேதநாயகம் பிள்ளை - பெண்மதி மாலை
(1) சங்கரதாஸ் சுவாமிகள் - ஞானக் கோயில்
(2) கால்டுவெல் - ஞானக் கண்ணாடி
(3) படிக்காசுப் புலவர் - தொண்டைமண்டல சதகம்
(4) வேதநாயகம் பிள்ளை - பெண்மதி மாலை
Correct Answer: D [(3) மற்றும் (4) சரியானவை]
Notes:
தொண்டைமண்டல சதகத்தை இயற்றியவர் படிக்காசுப் புலவர்; பெண்மதி மாலையை இயற்றியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
11.
[GROUP2-2A-2025] பொருத்துக:
(a) பாரதியார் - 1. பாண்டியன் பரிசு
(b) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - 2. தமிழன் இதயம்
(c) பாரதிதாசன் - 3. கண்ணன் பாட்டு
(d) இராமலிங்கம் பிள்ளை - 4. ஆசிய ஜோதி
(a) பாரதியார் - 1. பாண்டியன் பரிசு
(b) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - 2. தமிழன் இதயம்
(c) பாரதிதாசன் - 3. கண்ணன் பாட்டு
(d) இராமலிங்கம் பிள்ளை - 4. ஆசிய ஜோதி
Correct Answer: C [3 4 1 2]
Notes:
கண்ணன் பாட்டு – பாரதியார்; ஆசிய ஜோதி – கவிமணி; பாண்டியன் பரிசு – பாரதிதாசன்; தமிழன் இதயம் – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை.
12.
[CTS-ITI-LEVEL-II-2025] சரியான இணையைக் கண்டறிக.
1. குன்றக்குரவை - முல்லை நில பெண்கள் திருமாலுக்காக ஆடல்
2. ஆய்ச்சியர் குரவை - குறிஞ்சி நில பெண்கள் முருகனுக்காக ஆடல்
3. மரக்கால் - கொற்றவை அசுரரை கொல்வதற்காக ஆடிய ஆடல்
4. பாவை - அசுரரை வெல்ல திருமகள் ஆடிய ஆடல்
1. குன்றக்குரவை - முல்லை நில பெண்கள் திருமாலுக்காக ஆடல்
2. ஆய்ச்சியர் குரவை - குறிஞ்சி நில பெண்கள் முருகனுக்காக ஆடல்
3. மரக்கால் - கொற்றவை அசுரரை கொல்வதற்காக ஆடிய ஆடல்
4. பாவை - அசுரரை வெல்ல திருமகள் ஆடிய ஆடல்
Correct Answer: D [[3] மற்றும் [4] சரி]
Notes:
குன்றக்குரவை குறிஞ்சி நிலப் பெண்கள் முருகனுக்கும், ஆய்ச்சியர் குரவை முல்லை நிலப் பெண்கள் திருமாலுக்கும் ஆடியவை; எனவே 1, 2 தவறு. மரக்கால் ஆடல் கொற்றவையும், பாவைக்கூத்து திருமகளும் அசுரரை வெல்ல ஆடியவை.
13.
[APP-GR-II-2026] பின்வருவனவற்றைப் பொருத்துக:
நூலின் பெயர் - ஆசிரியர்
(a) தென்னாட்டுப் போர்க்களங்கள் - 1. செ. திவான்
(b) விடுதலை வேள்வியில் தமிழகம் - 2. த. ஸ்டாலின் குணசேகரன்
(c) விடுதலைப் போரில் தமிழக முஸ்லீம்கள் - 3. கா. அப்பாத்துரை
(d) விடுதலைப் போரில் தமிழகம் - 4. மா.பொ. சிவஞானம்
நூலின் பெயர் - ஆசிரியர்
(a) தென்னாட்டுப் போர்க்களங்கள் - 1. செ. திவான்
(b) விடுதலை வேள்வியில் தமிழகம் - 2. த. ஸ்டாலின் குணசேகரன்
(c) விடுதலைப் போரில் தமிழக முஸ்லீம்கள் - 3. கா. அப்பாத்துரை
(d) விடுதலைப் போரில் தமிழகம் - 4. மா.பொ. சிவஞானம்
Correct Answer: B [3 2 1 4]
Notes:
தென்னாட்டுப் போர்க்களங்கள் – கா. அப்பாத்துரை; விடுதலை வேள்வியில் தமிழகம் – த. ஸ்டாலின் குணசேகரன்; விடுதலைப் போரில் தமிழக முஸ்லீம்கள் – செ. திவான்; விடுதலைப் போரில் தமிழகம் – ம.பொ. சிவஞானம்.
14.
[CTS-IV-POST-2026] சரியாகப் பொருந்துமாற்றைத் தேர்வு செய்க:
(1) காய் நெல் லறுத்துக் கவளம் கொளினே - கோவூர்கிழார்
(2) யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்
(3) வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற்போகி - பிசிராந்தையார்
(4) ஈயென இரத்தல் இழிந்தன்று - கழைதின் யானையார்
(1) காய் நெல் லறுத்துக் கவளம் கொளினே - கோவூர்கிழார்
(2) யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்
(3) வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற்போகி - பிசிராந்தையார்
(4) ஈயென இரத்தல் இழிந்தன்று - கழைதின் யானையார்
Correct Answer: B [(2) மற்றும் (4) சரியானவை]
Notes:
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' – கணியன் பூங்குன்றனார் (புறம் 192); 'ஈயென இரத்தல் இழிந்தன்று' – கழைதின் யானையார் (புறம் 204). 'காய் நெல் அறுத்து' பிசிராந்தையார் பாடல்; 'வள்ளியோர்ப் படர்ந்து' கோவூர் கிழார் பாடல்.
15.
[CTS-IV-POST-2026] தவறான இணையைக் கண்டறிக.
(1) கந்தபுராணம் - சங்கர சங்கிதையின் முதற்காண்டத் தழுவல்
(2) யசோதர காவியம் - வடமொழி யசோதர சரிதத்தின் தழுவல்
(3) பெரிய புராணம் - வடமொழி உத்தர மாபுராணத்தின் தழுவல்
(4) ஸ்ரீபுராணம் - நாக பஞ்சமிக் கதையின் தழுவல்
(1) கந்தபுராணம் - சங்கர சங்கிதையின் முதற்காண்டத் தழுவல்
(2) யசோதர காவியம் - வடமொழி யசோதர சரிதத்தின் தழுவல்
(3) பெரிய புராணம் - வடமொழி உத்தர மாபுராணத்தின் தழுவல்
(4) ஸ்ரீபுராணம் - நாக பஞ்சமிக் கதையின் தழுவல்
Correct Answer: C [(3) மற்றும் (4)]
Notes:
பெரியபுராணம் சேக்கிழார் இயற்றிய தமிழ்ச் சைவ நூல், உத்தர மாபுராணத் தழுவல் அல்ல; ஸ்ரீபுராணம் சமண மாபுராணத்தின் தழுவல், நாக பஞ்சமிக் கதையின் தழுவல் நாககுமார காவியமே. எனவே (3), (4) தவறான இணைகள்.
16.
[GROUP2A-MAINS-2025] பின்வரும் தமிழறிஞர்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
(1) மாயூரம் வேதநாயகம் பிள்ளை
(2) வேதநாயக சாஸ்திரியார்
(3) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
(4) எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
(1) மாயூரம் வேதநாயகம் பிள்ளை
(2) வேதநாயக சாஸ்திரியார்
(3) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
(4) எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
Correct Answer: C [(2), (1), (4), (3)]
Notes:
வேதநாயக சாஸ்திரியார் (1774), மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826), எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை (1827), ஆபிரகாம் பண்டிதர் (1859) என்பது பிறப்பு அடிப்படையிலான கால வரிசை.
17.
[GROUP2A-MAINS-RE-2026] உ.வே.சா. பதிப்பித்த சங்க நூல்களை அதன் ஆண்டுகளோடு பொருத்துக.
(a) பத்துப்பாட்டு - 1. 1903
(b) புறநானூறு - 2. 1889
(c) ஐங்குறுநூறு - 3. 1904
(d) பதிற்றுப்பத்து - 4. 1894
(a) பத்துப்பாட்டு - 1. 1903
(b) புறநானூறு - 2. 1889
(c) ஐங்குறுநூறு - 3. 1904
(d) பதிற்றுப்பத்து - 4. 1894
Correct Answer: B [2 4 1 3]
Notes:
உ.வே.சா. பத்துப்பாட்டை 1889-இலும், புறநானூற்றை 1894-இலும், ஐங்குறுநூற்றை 1903-இலும், பதிற்றுப்பத்தை 1904-இலும் பதிப்பித்தார்.
18.
[GROUP2A-MAINS-REVOKED-2026] பின்வருவனவற்றில் எது சுப்ரமண்ய பாரதியைப் பற்றிய சரியான கூற்று அல்ல?
(i) அவர் ஒரு தேசியவாத தேசபக்தியை வெளிப்படுத்தியவர்
(ii) அவர் எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்டின் உமர்கய்யாமை மொழிபெயர்த்தார்
(iii) அவர் ஆசிய ஜோதி என்றும் அழைக்கப்பட்டார்
(iv) அவரது படைப்புகள் அழகின் சிரிப்பு மற்றும் பாண்டியன் பரிசு ஆகும்
(i) அவர் ஒரு தேசியவாத தேசபக்தியை வெளிப்படுத்தியவர்
(ii) அவர் எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்டின் உமர்கய்யாமை மொழிபெயர்த்தார்
(iii) அவர் ஆசிய ஜோதி என்றும் அழைக்கப்பட்டார்
(iv) அவரது படைப்புகள் அழகின் சிரிப்பு மற்றும் பாண்டியன் பரிசு ஆகும்
Correct Answer: D [(ii), (iii) மற்றும் (iv) மட்டும்]
Notes:
பாரதியார் தேசபக்திப் பாடல்கள் பாடியவர் என்பது மட்டுமே சரி. உமர் கய்யாம் மொழிபெயர்ப்பும் 'ஆசிய ஜோதி'யும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையுடையவை; அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு பாரதிதாசனின் படைப்புகள். எனவே (ii), (iii), (iv) தவறு. (தேர்வாணைய விடைக்குறிப்பில் (ii), (iii) மட்டும் எனக் குறிக்கப்பட்டிருந்தது.)
19.
[GROUP2A-MAINS-REVOKED-2026] அதிக எண்ணிக்கையில் சங்கப் பாடல்களைப் பாடிய புலவர்களை வரிசைப்படுத்துக.
(1) ஓரம்போகியார்
(2) அம்மூவனார்
(3) பேயனார்
(4) கபிலர்
(1) ஓரம்போகியார்
(2) அம்மூவனார்
(3) பேயனார்
(4) கபிலர்
Correct Answer: D [(4), (2), (1), (3)]
Notes:
சங்கப் பாடல்கள் எண்ணிக்கையில் கபிலர் (235) முதலிடம்; அடுத்து அம்மூவனார் (127), ஓரம்போகியார் (110), பேயனார் (105).
20.
[GROUP2A-MAINS-REVOKED-2026] பின்வரும் ஐங்குறுநூற்றுப் பத்துகளைப் பாடிய புலவர்களைப் பொருத்துக:
(a) கிழத்திக் கூற்றுப்பத்து - 1. ஓதலாந்தை
(b) கிழவர் உரைத்த பத்து - 2. ஓரம்போகியார்
(c) அன்னைப் பத்து - 3. அம்மூவனார்
(d) இளவேனிற் பத்து - 4. கபிலர்
(a) கிழத்திக் கூற்றுப்பத்து - 1. ஓதலாந்தை
(b) கிழவர் உரைத்த பத்து - 2. ஓரம்போகியார்
(c) அன்னைப் பத்து - 3. அம்மூவனார்
(d) இளவேனிற் பத்து - 4. கபிலர்
Correct Answer: A [2 3 4 1]
Notes:
ஐங்குறுநூற்றில் கிழத்தி கூற்றுப் பத்து மருதம் (ஓரம்போகியார்), கிழவற்கு உரைத்த பத்து நெய்தல் (அம்மூவனார்), அன்னாய் பத்து குறிஞ்சி (கபிலர்), இளவேனிற் பத்து பாலை (ஓதலாந்தையார்) பகுதிகளைச் சேர்ந்தவை.
21.
[GSASO-2020] முதலில் பகவத் கீதையை சமஸ்கிருத மொழியில் இருந்து ஆங்கில மொழிக்கு மாற்றி கொடுத்தவர் யார்?
Correct Answer: A [சார்லஸ் வில்கின்ஸ்]
Notes:
சார்லஸ் வில்கின்ஸ் 1785-இல் பகவத் கீதையை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
22.
[ARGS-2020] "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" இந்த வரிகள் எந்த தமிழ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன?
Correct Answer: B [தொல்காப்பியம்]
Notes:
இவ்வரிகள் பனம்பாரனார் இயற்றிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் இடம்பெறுகின்றன.
23.
[PTGS-2021] 'செல்வம் சகடக் கால்போல வரும்' – என்று கூறும் நூல்?
Correct Answer: B [நாலடியார்]
Notes:
'செல்வம் சகடக்கால் போல வரும்' என்ற தொடர் நாலடியாரின் செல்வம் நிலையாமை அதிகாரத்தில் உள்ளது; செல்வம் வண்டிச் சக்கரம் போல மேலும் கீழுமாக மாறி வரும் என்பது பொருள்.
24.
[GSCE-2021] கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
கூற்று (A): பெரியபுராணம் சேக்கிழாரால் எழுதப்பட்டது. மேலும் சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவை சோழர் காலத்தில் படைக்கப்பட்டன.
காரணம் (R): சோழர் காலம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு புத்துணர்வு தந்தது.
கூற்று (A): பெரியபுராணம் சேக்கிழாரால் எழுதப்பட்டது. மேலும் சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவை சோழர் காலத்தில் படைக்கப்பட்டன.
காரணம் (R): சோழர் காலம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு புத்துணர்வு தந்தது.
Correct Answer: C [(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்]
Notes:
பெரியபுராணம் (இரண்டாம் குலோத்துங்கன் காலம்), சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவை சோழர் காலத்தில் தோன்றியவை. சோழர் ஆட்சியில் தமிழ் இலக்கியம் செழித்ததே இதற்குக் காரணம்.
25.
[AHGS-2021] தன்நாட்டைக் காத்துக் கொள்ளப் போரிடும் புறத்திணை எது?
Correct Answer: D [காஞ்சி]
Notes:
பகைவர் படையெடுத்து வரும்போது தன் நாட்டைக் காக்க எதிர்த்து நின்று போரிடுவது காஞ்சித் திணை. வஞ்சி என்பது பகை நாட்டின்மீது படையெடுத்துச் செல்வது.
26.
[AHGS-2021] பாணன் என்பவர் யார்?
Correct Answer: A [பாட்டுப்பாடுபவர்]
Notes:
சங்க இலக்கியத்தில் பாணர் என்போர் யாழ் இசைத்துப் பாடல் பாடும் இசைக் கலைஞர்கள்; பாணாற்றுப்படை நூல்கள் இவர்களை ஆற்றுப்படுத்துகின்றன.
27.
[AHGS-2021] வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது ________ ஆகும்.
Correct Answer: D [முதல்நூல்]
Notes:
தொல்காப்பியம் மரபியலில் "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்" என்று முதல்நூலுக்கு இலக்கணம் கூறப்படுகிறது.
28.
[AGGS-2021] "நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே"
— நுவ்வை என்பது
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே"
— நுவ்வை என்பது
Correct Answer: A [தங்கை]
Notes:
நற்றிணை 172-இல், தலைவி சிறுமியாக இருந்தபோது விதைத்து வளர்த்த புன்னை மரத்தை 'நுவ்வை' (உன் தங்கை) எனத் தாய் கூறினாள் என்பதே உரையாசிரியர்களின் பொருள். (தேர்வாணைய விடைக்குறிப்பில் 'தமக்கை' எனக் குறிக்கப்பட்டிருந்தது.)
29.
[ADGS-2021] கிறிஸ்துவ காலத்திற்கு முன் எழுதப்பட்ட கவிதை மற்றும் இலக்கண நூல்
Correct Answer: A [தொல்காப்பியம்]
Notes:
தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியமே இன்று கிடைக்கும் மிகப் பழமையான தமிழ் இலக்கண நூல்; இது கி.மு. காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
30.
[ADGS-2021] சோழர்களின் சமூக-அரசியல் நிலை பற்றி கூறும் நூல் எது?
Correct Answer: C [கலிங்கத்துப்பரணி]
Notes:
செயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணி, முதலாம் குலோத்துங்கனின் கலிங்கப் போர் வெற்றியையும் சோழர் கால அரசியல், சமூக நிலைகளையும் விவரிக்கிறது.
31.
[EO-G3-2022] கீழ்க்கண்ட இணைகளில் எது தவறானது?
(i) பட்டினப்பாலை — கடியலூர் உருத்திரங் கண்ணனார்
(ii) பதிற்றுப்பத்து — எட்டு சேர மன்னர்கள் குறித்து பேசுகிறது
(iii) மதுரைக் காஞ்சி — முதுகுடுமி பெருவழுதி பற்றி குறிப்பிடுகிறது
(iv) திருவஞ்சைக்களம் — கரிகால சோழனை பற்றி கூறுகிறது
(i) பட்டினப்பாலை — கடியலூர் உருத்திரங் கண்ணனார்
(ii) பதிற்றுப்பத்து — எட்டு சேர மன்னர்கள் குறித்து பேசுகிறது
(iii) மதுரைக் காஞ்சி — முதுகுடுமி பெருவழுதி பற்றி குறிப்பிடுகிறது
(iv) திருவஞ்சைக்களம் — கரிகால சோழனை பற்றி கூறுகிறது
Correct Answer: D [(iv) மட்டும்]
Notes:
திருவஞ்சைக்களம் சேரநாட்டுத் தலம் (சுந்தரர், சேரமான் பெருமாள் தொடர்புடையது); கரிகால் சோழனுக்கும் அதற்கும் தொடர்பில்லை. மற்ற இணைகள் சரியானவை.
32.
[PSY-2022] (63) அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையை விவரிக்கும் நூல்
Correct Answer: C [பெரிய புராணம்]
Notes:
சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்) 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறது; இது பன்னிரண்டாம் திருமுறை.
மேலும் வினாடி வினாக்கள்
› செய்தித்தாள்கள், இதழ்கள் & ஆசிரியர்கள் – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
› நீதிக்கட்சி – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
› தமிழகத்தில் சமூக-அரசியல் இயக்கங்கள் (19, 20ஆம் நூற்றாண்டு) – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 3)
› தமிழகத்தில் சமூக-அரசியல் இயக்கங்கள் (19, 20ஆம் நூற்றாண்டு) – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 2)
› தமிழகத்தில் சமூக-அரசியல் இயக்கங்கள் (19, 20ஆம் நூற்றாண்டு) – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
› அறிஞர் அண்ணா – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
