வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் விருப்பத்தில், கருத்தில், ஒழுக்க நெறிகளில் அறிவில் ஆங்கிலேயராகவும் இருக்கும் ஒரு மக்கள் பிரிவினரை இந்தியாவிற்குள் உருவாக்க விரும்பியவர் யார்?

Correct Answer: B [டி பி மெக்காலே]

2.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. டி பி மெக்காலே 1834 முதல் 1838 வரை கவர்னர் ஜெனரலின் ஆலோசனை குழுவில் முதல் கல்வி உறுப்பினராக அங்கம் வகித்தார்
2. 1823 ஆம் ஆண்டு பொதுக் கல்விக்கான பொது குழு உருவாக்கப்பட்டது

Correct Answer: B [2 மட்டும் சரி]

3.  
இந்திய கல்வி குறித்த குறிப்புகள் எனும் குறிப்புகளை மெக்காலே எந்த ஆண்டு வெளியிட்டார்?

Correct Answer: C [1835]

4.  
பொருத்துக:
காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டுகள் - இடங்கள்
a) 1922 — 1) நாக்பூர்
b) 1905 — 2) பெல்காம்
c) 1924 — 3) பனாரஸ்
d) 1920 — 4) கயா

Correct Answer: B [4 3 2 1]

5.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. சுதேசி எனும் கருத்தாக்கம் சதீஷ் சந்திர முகர்ஜியால் 1902ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது
2. இவர் 1902 ஆம் ஆண்டு விடிவெள்ளி கழகம் என்னும் அமைப்பை நிறுவினார்

Correct Answer: B [2 மட்டும் சரி]

6.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. தன்னாட்சி இயக்கம் இந்திய காமன்வெல்த் லீக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது
2. தன்னாட்சி தகுதியைப் பெற்ற கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் இணைந்து பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பதற்காக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டது

Correct Answer: A [1 மட்டும் சரி]

7.  
இந்திய காமன்வெல்த் லீக் என்பதை யார் இந்திய லீக் என்று பெயர் மாற்றம் செய்தார்?

Correct Answer: C [விகே கிருஷ்ண மேனன்]

8.  
பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு யாரை தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டது?

Correct Answer: B [சோஹன் சிங் பக்னா]

9.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. பசுபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு 1913 இல் நிறுவப்பட்டது
2. இதனை சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வந்த லாலா ஹர்தயாள் நிறுவினார்

Correct Answer: C [இரண்டும் சரி]

10.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு கதார் கட்சி என்றும் அழைக்கப்பட்டது
2. உருது மொழியில் கதார் என்றால் விடுதலை என்று பொருள்

Correct Answer: A [1 மட்டும் சரி]

11.  
கதார் கட்சியில் அதிக அளவு இடம் பெற்றிருந்தவர்கள் யார்?

Correct Answer: A [சீக்கியர்கள்]

12.  
எந்த போராட்டத்தின்போது காந்தி தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமான பணிகளுக்காக பெற்ற பதக்கங்களை திரும்ப ஒப்படைத்தார்?

Correct Answer: B [ஒத்துழையாமை இயக்கம்]

13.  
இந்திய பணியாளர் சங்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

Correct Answer: C [கோபால கிருஷ்ண கோகலே]

14.  
கோபால கிருஷ்ண கோகலே இந்திய பணியாளர் சங்கத்தை எந்த ஆண்டு நிறுவினார்?

Correct Answer: B [1905]

15.  
ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பிறகு யார் தனது அரச பட்டத்தை உடனடியாக துறந்தார்?

Correct Answer: C [ரவீந்திரநாத் தாகூர்]

16.  
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக மைக்கேல் ஓ டயரை படுகொலை செய்தவர் யார்?

Correct Answer: B [உதம் சிங்]

17.  
கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1. A. சம்பரான் – 1. அவுரி விவசாயிகள் இயக்கம்
2. B. கேதா – 2. விவசாயிகள் சத்தியாகிரகம்
3. C. அகமதாபாத் – 3. பருத்தி ஆலை தொழிலாளர்கள் சத்தியாகிரகம்

Correct Answer: A [1 2 3]

18.  
ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட காரணமாக அமைந்த நிகழ்வு எது?

Correct Answer: C [சௌரி சௌரா நிகழ்வு]

19.  
கான்பூர் சதி வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக மாறியவர் யார்?

Correct Answer: B [குலாம் ஹுசைன்]

20.  
நவீன தொழிலகங்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

Correct Answer: C [ஜே என் டாடா]

21.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. 1868 ஆம் ஆண்டு டாடா குழுமம் என்ற வர்த்தக நிறுவனம் நிறுவப்பட்டது
2. ரத்தன் டாடா அவரது தந்தையின் நீண்டகால கனவான இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தை 1907 ஆம் ஆண்டில் நிறுவினார்

Correct Answer: A [1 மட்டும் சரி]

22.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. 1910-ஆம் ஆண்டு டாடா நீர் மின்சக்தி நிறுவனம் நிறுவப்பட்டது
2. இந்திய அறிவியல் கழகம் ஒன்று மும்பையில் டாடா குழுமத்தால் நிறுவப்பட்டுள்ளது

Correct Answer: A [1 மட்டும் சரி]

23.  
எங்கு உருவாக்கிய தனது நிறுவனத்திற்கு சுதேசி என ஜே என் டாடா பெயரிட்டார்?

Correct Answer: A [குர்லா]

24.  
Chittagong Armoury Raiders’ Reminiscences என்பது யாருடைய சுயசரிதை நூல்?

Correct Answer: B [கல்பனா தத்]

25.  
நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?

Correct Answer: A [பகத்சிங்]

26.  
முதலாளித்துவ, ஏகாதிபத்திய அரசை தூக்கி எறிந்து புரட்சி ஒன்றின் மூலமாக ஒரு சோசலிச சமூகத்தை நிலைநாட்டுவதை குறிக்கோளாகக் கொண்ட அமைப்பு எது?

Correct Answer: B [ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேசன்]

27.  
'தனி மனிதர்களின் எண்ணிக்கையை போலவே பல மதங்கள் உள்ளன; ஆனால் தேசியத்தின் ஆன்மா குறித்த விழிப்புணர்வு உள்ளவர்கள் மற்றவர்களின் மதங்களில் தலையிட மாட்டார்கள்' என்று கூறியவர் யார்?

Correct Answer: C [காந்தியடிகள்]

28.  
ஒருங்கிணைக்கப்பட்ட வடமேற்கு இந்திய முஸ்லிம் அரசை தான் காண விரும்புவதாக கூறியவர் யார்?

Correct Answer: A [முகமது இக்பால்]

29.  
எந்த ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் வங்காள காங்கிரஸ் கமிட்டி தலைவர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்?

Correct Answer: B [1939]

30.  
ராம் மோகன் ராய் என்பவருக்கு ராஜா என்ற பட்டத்தை அளித்தவர் யார்?

Correct Answer: B [இரண்டாம் அக்பர் ஷா]

31.  
1892 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் மதுரையில் யாரை சந்தித்தார்?

Correct Answer: D [பாஸ்கர சேதுபதி]

32.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. விதவைகள் மறுமணச் சட்டம் 1856இல் கொண்டுவரப்பட்டது
2. இது டல்ஹௌசி பிரபு வால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கர்சன் பிரபு ஆட்சிகாலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது

Correct Answer: A [1 மட்டும் சரி]

33.  
காத்தவராயன் என்பது யாருடைய இயற்பெயர்?

Correct Answer: B [அயோத்திதாச பண்டிதர்]

34.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளின் மாநாடு 1955ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் நடைபெற்றது
2. இம்மாநாட்டில் பஞ்சசீலக் கொள்கை உருவாக்கப்பட்டது

Correct Answer: A [1 மட்டும் சரி]

35.  
கீழ்க்கண்டவற்றில் தவறாகப் பொருத்தப்பட்டுள்ள இணை எது?
அணிசேரா இயக்கத் தலைவர்கள்

Correct Answer: D [சூ என் லாய் -ஜப்பான்]

36.  
இந்திய வளங்களை ஆங்கிலேயர் சுரண்டுவதை இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்று முதன் முதலில் ஏற்றுக் கொண்டவர் யார்?

Correct Answer: A [தாதாபாய் நவுரோஜி]

37.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. கம்பெனி படைகளுக்கு எதிரான கான்பூர் முற்றுகை தாந்தியா தோப் தலைமையிலான படைகளால் நடத்தப்பட்டது
2. இதில் கான்பூரின் தளபதி மேஜர் ஜெனரல் ஹக் வீலர் உட்பட பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர்

Correct Answer: B [2 மட்டும் சரி]

38.  
"தன்னாட்சி மூலம் இந்த நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகளை கொண்ட அரசை கொள்ளலாம் என்று நான் கருதுகிறேன்" என்று கூறியவர் யார்?

Correct Answer: B [அன்னி பெசண்ட்]

39.  
மதுரை ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக இருந்தவர் யார்?

Correct Answer: D [வைத்தியநாதர்]

40.  
பொருத்துக:
a) கோவில் நுழைவு, அங்கீகார இழப்பீட்டு சட்டம் — 1) 1919
b) முதலாவது வனசட்டம் — 2) 1939
c) இரட்டை ஆட்சி அறிமுகம் — 3) 1935
d) மாகாண சுயாட்சி அறிமுகம் — 4) 1865

Correct Answer: C [2 4 1 3]

41.  
1927ஆம் ஆண்டு யாருடைய தலைமையில் நீல் சிலை அகற்றும் போராட்டம் நடைபெற்றது?

Correct Answer: C [சோமையாஜுலு]

42.  
எந்த ஆண்டு சென்னை மவுண்ட் ரோடில் இருந்த நீல் சிலை சென்னை அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது?

Correct Answer: A [1937]

43.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மாகாண அரசின் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட துறைகள் என 1935ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் மூலமாக பிரிக்கப்பட்டது
2. மாற்றப்பட்ட துறைகள் இந்திய அமைச்சர்களிடமும் ஒதுக்கப்பட்ட துறைகள் ஆங்கிலேயர் வசமும் இருந்தன

Correct Answer: B [2 மட்டும் சரி]

44.  
கோதாவரி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆதிவாசிகளுக்காக போராடியவர் யார்?

Correct Answer: D [அல்லூரி சீதாராம ராஜு]

45.  
மதுரை தொழிலாளர் சங்கம் எனும் அமைப்பை ஏற்படுத்த ஹார்வி மில் தொழிலாளர்களுக்கு உதவி செய்தவர் யார்?

Correct Answer: A [ஜார்ஜ் ஜோசப்]

46.  
ரோசாப்பூ துரை என்று மக்களால் அழைக்கப்பட்டவர் யார்?

Correct Answer: D [ஜார்ஜ் ஜோசப்]

47.  
பின்வருபவர்களில் யார் தமிழ்நாட்டை சேர்ந்த மிதவாத தலைவர் அல்லாதவர்?

Correct Answer: C [டி எஸ் எஸ் ராஜன்]

48.  
நாங்கள் ஆங்கிலேய அரசை ஆழமாக நேசிக்கிறோம் விசுவாசத்துடன் பற்றுக் கொண்டுள்ளோம் என்று அறிவித்த அமைப்பு எது?

Correct Answer: B [தென்னிந்திய நல உரிமை சங்கம்]

49.  
'பேரரசிற்கான ஒரு சாமானியனின் வழிகாட்டி' என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது?

Correct Answer: A [அருந்ததி ராய்]

50.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்திய தேசியக் கொடி ஆந்திராவை சேர்ந்த பிங்காலி வெங்கையா என்பவரால் வடிவமைக்கப்பட்டது
2. சுதந்திர இந்தியாவின் முதல் தேசியக் கொடி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்யப்பட்டது
3. இந்தக் கொடி தற்போது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

Correct Answer: C [1, 2 மட்டும் சரி]

51.  
1911ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் மாநாடு எங்கு நடைபெற்றது?

Correct Answer: B [கொல்கத்தா]

52.  
1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் போது பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷா பந்தன் விழாவை தொடங்கியவர் யார்?

Correct Answer: B [ரவீந்திரநாத் தாகூர்]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரி வினாக்கள் – இந்திய தேசிய இயக்கம் – தொகுப்பு 2 › TNPSC மாதிரி வினாக்கள் – இந்திய தேசிய இயக்கம் – தொகுப்பு 1 › விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1) › விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 3) › விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 2) › விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0