TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – அரசியலமைப்பு உருவாக்கப் பின்னணி

← திரும்பச் செல்ல

TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – அரசியலமைப்பு உருவாக்கப் பின்னணி – 22 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
அரசியலமைப்பு நிர்ணய சபை என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர் யார்?

Correct Answer: B [எம்.என். ராய்]

விளக்கம்:

விடை: எம்.என். ராய் – 1934-இல் எம்.என். ராய் இக்கருத்தை முன்வைத்தார்; காங்கிரஸ் 1935-இல் அதிகாரப்பூர்வமாக ஏற்றது.

2.  
அரசியலமைப்பு நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது?

Correct Answer: C [கேபினட் தூதுக்குழுத் திட்டம்]

விளக்கம்:

விடை: கேபினட் தூதுக்குழுத் திட்டம் – 1946 கேபினட் தூதுக்குழுத் திட்டப்படி 389 இடங்களுடன் அமைக்கப்பட்டது.

3.  
நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடந்த நாள்:

Correct Answer: A [9 டிசம்பர் 1946]

விளக்கம்:

விடை: 9 டிசம்பர் 1946 – 11.12.1946 – பிரசாத் தேர்வு; 13.12.1946 – குறிக்கோள் தீர்மானம்.

4.  
நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவர் யார்?

Correct Answer: C [சச்சிதானந்த சின்ஹா]

விளக்கம்:

விடை: சச்சிதானந்த சின்ஹா – மூத்த உறுப்பினர் என்ற முறையில் டாக்டர் சச்சிதானந்த சின்ஹா தற்காலிகத் தலைவரானார்.

5.  
குறிக்கோள் தீர்மானத்தை முன்மொழிந்தவர்:

Correct Answer: B [ஜவஹர்லால் நேரு]

விளக்கம்:

விடை: ஜவஹர்லால் நேரு – 13.12.1946 அன்று நேரு முன்மொழிந்தார்; 22.01.1947 அன்று ஏற்கப்பட்டது.

6.  
பின்வருவோரில் வரைவுக் குழுவின் உறுப்பினர் அல்லாதவர் யார்?

Correct Answer: C [பி.என். ராவ்]

விளக்கம்:

விடை: பி.என். ராவ் – பி.என். ராவ் அரசியலமைப்பு ஆலோசகர்; வரைவுக் குழு உறுப்பினர் அல்லர்.

7.  
டி.பி. கைதான் மறைவுக்குப் பின் வரைவுக் குழுவில் சேர்க்கப்பட்டவர்:

Correct Answer: B [டி.டி. கிருஷ்ணமாச்சாரி]

விளக்கம்:

விடை: டி.டி. கிருஷ்ணமாச்சாரி – மித்தருக்குப் பதில் மாதவ ராவ்; கைதானுக்குப் பதில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி.

8.  
அடிப்படை உரிமைகள் துணைக் குழுவின் தலைவர்:

Correct Answer: A [ஜே.பி. கிருபளானி]

விளக்கம்:

விடை: ஜே.பி. கிருபளானி – படேல் தலைமையிலான ஆலோசனைக் குழுவின் துணைக் குழு; அதன் தலைவர் ஜே.பி. கிருபளானி.

9.  
மாகாண அரசியலமைப்புக் குழுவின் தலைவர்:

Correct Answer: B [சர்தார் வல்லபாய் படேல்]

விளக்கம்:

விடை: சர்தார் வல்லபாய் படேல் – ஒன்றியம் சார்ந்த குழுக்கள் நேருவிடம்; மாகாணக் குழு படேலிடம்.

10.  
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள்:

Correct Answer: D [26 ஜனவரி 1950]

விளக்கம்:

விடை: 26 ஜனவரி 1950 – 26.11.1949 ஏற்பு நாள்; 26.01.1950 நடைமுறை நாள் (குடியரசு நாள்).

11.  
மாகாணங்களில் இரட்டையாட்சியை அறிமுகப்படுத்திய சட்டம்:

Correct Answer: B [இந்திய அரசுச் சட்டம் 1919]

விளக்கம்:

விடை: இந்திய அரசுச் சட்டம் 1919 – 1919 – மாகாணங்களில் இரட்டையாட்சி; 1935 – அது ஒழிக்கப்பட்டு மாகாண சுயாட்சி.

12.  
முஸ்லிம்களுக்குத் தனித் தொகுதி வழங்கிய சட்டம்:

Correct Answer: B [1909]

விளக்கம்:

விடை: 1909 – மிண்டோ–மார்லி சீர்திருத்தங்கள் எனப்படும் இந்திய கவுன்சில் சட்டம் 1909.

13.  
இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் (Governor-General of India) யார்?

Correct Answer: C [வில்லியம் பெண்டிங்]

விளக்கம்:

விடை: வில்லியம் பெண்டிங் – 1833 பட்டயச் சட்டப்படி வில்லியம் பெண்டிங்; வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர்.

14.  
"அடிப்படைக் கடமைகள்" எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டன?

Correct Answer: C [முன்னாள் சோவியத் ஒன்றியம்]

விளக்கம்:

விடை: முன்னாள் சோவியத் ஒன்றியம் – அடிப்படை உரிமைகள் – அமெரிக்கா; நெறிமுறைக் கோட்பாடுகள் – அயர்லாந்து.

15.  
"பொதுப் பட்டியல்" (Concurrent List) என்ற கருத்து பெறப்பட்ட நாடு:

Correct Answer: B [ஆஸ்திரேலியா]

விளக்கம்:

விடை: ஆஸ்திரேலியா – பொதுப் பட்டியல் – ஆஸ்திரேலியா; கனடாவிலிருந்து பெற்றவை – வலுவான மையம், எஞ்சிய அதிகாரம் மையத்திடம்.

16.  
அரசியலமைப்புத் திருத்த முறை பெறப்பட்ட நாடு:

Correct Answer: A [தென்னாப்பிரிக்கா]

விளக்கம்:

விடை: தென்னாப்பிரிக்கா – மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் முறையும் தென்னாப்பிரிக்காவிலிருந்தே.

17.  
மூல அரசியலமைப்பில் (1950) இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை:

Correct Answer: A [8]

விளக்கம்:

விடை: 8 – மூலத்தில் 395 பிரிவுகள், 22 பகுதிகள், 8 அட்டவணைகள்; தற்போது 12 அட்டவணைகள்.

18.  
நிர்ணய சபை சட்டமியற்றும் அமைப்பாகக் கூடியபோது தலைமை வகித்தவர்:

Correct Answer: B [ஜி.வி. மாவ்லங்கர்]

விளக்கம்:

விடை: ஜி.வி. மாவ்லங்கர் – அரசியலமைப்பு உருவாக்கும்போது பிரசாத்; சட்டமியற்றும்போது மாவ்லங்கர்.

19.  
கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக:
(a) நெறிமுறைக் கோட்பாடுகள் – 1. கனடா
(b) எஞ்சிய அதிகாரம் மையத்திடம் – 2. அயர்லாந்து
(c) நெருக்கடியில் உரிமைகள் நிறுத்தம் – 3. ஜப்பான்
(d) சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறை – 4. ஜெர்மனி

Correct Answer: A [a-2, b-1, c-4, d-3]

விளக்கம்:

விடை: a-2, b-1, c-4, d-3 – நெறிமுறை–அயர்லாந்து; எஞ்சிய அதிகாரம்–கனடா; நிறுத்தம்–வெய்மார் ஜெர்மனி; நடைமுறை–ஜப்பான்.

20.  
கூட்டாட்சி நீதிமன்றம் (Federal Court) அமைக்க வழிவகுத்த சட்டம்:

Correct Answer: B [இந்திய அரசுச் சட்டம் 1935]

விளக்கம்:

விடை: இந்திய அரசுச் சட்டம் 1935 – 1935 சட்டப்படி 1937-இல் கூட்டாட்சி நீதிமன்றம் அமைந்தது; 1773 சட்டப்படி கல்கத்தா உச்ச நீதிமன்றம் (1774).

21.  
அரசியலமைப்பு நிர்ணய சபையின் முத்திரைச் சின்னம்:

Correct Answer: B [யானை]

விளக்கம்:

விடை: யானை – நிர்ணய சபையின் முத்திரையில் யானை இடம்பெற்றது.

22.  
நவம்பர் 26 "அரசியலமைப்பு நாள்" ஆகக் கொண்டாடப்படுவது எந்த ஆண்டு முதல்?

Correct Answer: D [2015]

விளக்கம்:

விடை: 2015 – 2015 முதல் அரசியலமைப்பு நாள் (சம்விதான் திவஸ்); அதற்கு முன் "சட்ட நாள்".

➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு IV – இந்திய ஆட்சியியல் பாடநூல் (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-4-indian-polity

📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 ₹499 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 3 › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 2 › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 1 › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – அரசியல் கட்சிகளும் நல்லாட்சியும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – மனித உரிமைகள் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நுகர்வோர் பாதுகாப்பு
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0