TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – ஒன்றியம், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள்

← திரும்பச் செல்ல

TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – ஒன்றியம், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் – 22 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
"இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று கூறும் பிரிவு:

Correct Answer: A [பிரிவு 1]

விளக்கம்:

விடை: பிரிவு 1

2.  
புதிய மாநிலம் அமைக்கும் மசோதா தொடர்பான சரியான கூற்று:

Correct Answer: B [குடியரசுத் தலைவரின் முன் பரிந்துரை தேவை]

விளக்கம்:

விடை: குடியரசுத் தலைவரின் முன் பரிந்துரை தேவை – மாநிலக் கருத்து கேட்கப்படும்; ஆனால் அது கட்டுப்படுத்தாது; சாதாரணப் பெரும்பான்மை போதும்.

3.  
பிரிவு 2, 3-இன் கீழான சட்டங்கள் பிரிவு 368-இன் திருத்தங்கள் அல்ல எனக் கூறும் பிரிவு:

Correct Answer: B [பிரிவு 4]

விளக்கம்:

விடை: பிரிவு 4 – எனவே சாதாரணப் பெரும்பான்மை போதும்.

4.  
இந்தியப் பகுதியை வெளிநாட்டுக்கு வழங்க அரசியலமைப்புத் திருத்தம் தேவை எனத் தீர்ப்பளித்த வழக்கு:

Correct Answer: B [பெருபாரி]

விளக்கம்:

விடை: பெருபாரி – பெருபாரி வழக்கு (1960); அதன்படி 9-வது திருத்தம்.

5.  
இந்தியா – வங்காளதேச நில எல்லை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்திய திருத்தம்:

Correct Answer: C [100-வது]

விளக்கம்:

விடை: 100-வது – 100-வது திருத்தம் (2015).

6.  
இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலம்:

Correct Answer: B [ஆந்திரா]

விளக்கம்:

விடை: ஆந்திரா – 1953 அக்டோபர் 1 – பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர்த் தியாகத்துக்குப் பின்.

7.  
மாநிலச் சீரமைப்பு ஆணையத்தின் (1953) உறுப்பினர் அல்லாதவர்:

Correct Answer: D [பட்டாபி சீதாராமையா]

விளக்கம்:

விடை: பட்டாபி சீதாராமையா – பட்டாபி சீதாராமையா JVP குழு உறுப்பினர்.

8.  
JVP குழுவில் "P" யாரைக் குறிக்கிறது?

Correct Answer: B [பட்டாபி சீதாராமையா]

விளக்கம்:

விடை: பட்டாபி சீதாராமையா – ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா.

9.  
சிக்கிமை இந்தியாவின் முழு மாநிலமாக்கிய திருத்தம்:

Correct Answer: B [36-வது]

விளக்கம்:

விடை: 36-வது – 35-வது (1974) – இணை மாநிலம்; 36-வது (1975) – முழு மாநிலம்.

10.  
இந்தியாவின் 29-வது மாநிலமாக உருவானது:

Correct Answer: C [தெலங்கானா]

விளக்கம்:

விடை: தெலங்கானா – 2014 ஜூன் 2.

11.  
"தமிழ்நாடு" என்ற பெயர் நடைமுறைக்கு வந்த நாள்:

Correct Answer: C [14 ஜனவரி 1969]

விளக்கம்:

விடை: 14 ஜனவரி 1969 – 1967 ஜூலை 18 – சட்டப்பேரவைத் தீர்மானம்; 1969 ஜனவரி 14 – நடைமுறை.

12.  
தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர்:

Correct Answer: B [சங்கரலிங்கனார்]

விளக்கம்:

விடை: சங்கரலிங்கனார் – 1956 அக்டோபர் 13 அன்று மறைந்தார்.

13.  
தற்போது இந்தியாவில் உள்ள ஒன்றியப் பிரதேசங்களின் எண்ணிக்கை:

Correct Answer: B [8]

விளக்கம்:

விடை: 8 – 2020 ஜனவரி 26 முதல் 8 (தாத்ரா–நகர் ஹவேலி மற்றும் டாமன்–டையூ இணைப்பு).

14.  
சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பிரதேசம்:

Correct Answer: D [லடாக்]

விளக்கம்:

விடை: லடாக் – லடாக்கில் சட்டமன்றம் இல்லை.

15.  
புதுச்சேரி எந்த உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் உள்ளது?

Correct Answer: B [சென்னை உயர் நீதிமன்றம்]

விளக்கம்:

விடை: சென்னை உயர் நீதிமன்றம் – லட்சத்தீவு – கேரள உயர் நீதிமன்றம்.

16.  
தில்லிக்குத் தேசியத் தலைநகரப் பகுதி அந்தஸ்து வழங்கிய திருத்தம்:

Correct Answer: A [69-வது]

விளக்கம்:

விடை: 69-வது – 69-வது திருத்தம் (1991) – பிரிவு 239AA, 239AB.

17.  
ஒன்றியப் பிரதேசங்களின் நிர்வாகம் பற்றிக் கூறும் பிரிவு:

Correct Answer: A [பிரிவு 239]

விளக்கம்:

விடை: பிரிவு 239 – பகுதி VIII, பிரிவு 239 – குடியரசுத் தலைவர் நிர்வாகி மூலம்.

18.  
கர்நாடகாவின் ஹைதராபாத்–கர்நாடகப் பகுதிக்கான சிறப்பு விதி:

Correct Answer: D [பிரிவு 371J]

விளக்கம்:

விடை: பிரிவு 371J – 98-வது திருத்தம் (2012); 371F – சிக்கிம்; 371I – கோவா.

19.  
2000-ஆம் ஆண்டு உருவான மாநிலங்களின் சரியான கால வரிசை:

Correct Answer: B [சத்தீஸ்கர், உத்தராஞ்சல், ஜார்க்கண்ட்]

விளக்கம்:

விடை: சத்தீஸ்கர், உத்தராஞ்சல், ஜார்க்கண்ட் – நவம்பர் 1 – சத்தீஸ்கர்; நவம்பர் 9 – உத்தராஞ்சல்; நவம்பர் 15 – ஜார்க்கண்ட்.

20.  
ஜம்மு–காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-இன்படி இரண்டு ஒன்றியப் பிரதேசங்கள் உருவான நாள்:

Correct Answer: B [31 அக்டோபர் 2019]

விளக்கம்:

விடை: 31 அக்டோபர் 2019 – 5.8.2019 – பிரிவு 370 செயலிழப்பு; 31.10.2019 – ஒ.பி.-கள் உருவாக்கம்; 11.12.2023 – உச்ச நீதிமன்றம் உறுதி.

21.  
கேரளா மாநிலத்தின் பெயர் 2026-இல் "கேரளம்" என மாற்றப்பட்டது எதன் மூலம்?

Correct Answer: A [பிரிவு 3-இன் கீழ் நாடாளுமன்றம் சாதாரணப் பெரும்பான்மையால் இயற்றிய சட்டம்]

விளக்கம்:

விடை: பிரிவு 3-இன் கீழ் நாடாளுமன்றம் சாதாரணப் பெரும்பான்மையால் இயற்றிய சட்டம் – கேரளா (பெயர் மாற்றம்) சட்டம், 2026 – பிரிவு 3(e); பிரிவு 4-இன்படி இது 368 திருத்தம் அல்ல; 25.08.2026 முதல் நடைமுறை. மாநிலத் தீர்மானம் (2024) கோரிக்கை மட்டுமே.

22.  
திருத்தணி தமிழகத்துடன் (அப்போதைய சென்னை மாநிலம்) இணைந்த ஆண்டு:

Correct Answer: A [1960]

விளக்கம்:

விடை: 1960 – ஆந்திரப் பிரதேசம் – சென்னை (எல்லை மாற்றம்) சட்டம் 1959-இன்படி 1960 ஏப்ரல் 1 முதல்.

➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு IV – இந்திய ஆட்சியியல் பாடநூல் (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-4-indian-polity

📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 ₹499 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 3 › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 2 › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 1 › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – அரசியல் கட்சிகளும் நல்லாட்சியும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – மனித உரிமைகள் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நுகர்வோர் பாதுகாப்பு
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0