TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – ஒன்றிய நிர்வாகம்
← திரும்பச் செல்ல
விடை: சரண் சிங் – 1979 – 80; நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே பதவி விலகினார்.
₹499 →
TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – ஒன்றிய நிர்வாகம் – 25 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்காதவர்கள்:
Correct Answer: C [மாநிலச் சட்டமேலவை உறுப்பினர்கள்]
விளக்கம்:
விடை: மாநிலச் சட்டமேலவை உறுப்பினர்கள் – மேலவை உறுப்பினர்களும் நியமன உறுப்பினர்களும் வாக்களிப்பதில்லை.
2.
தில்லி, புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் வாக்காளர் குழுவில் சேர்த்த திருத்தம்:
Correct Answer: C [70-வது]
விளக்கம்:
விடை: 70-வது – 70-வது திருத்தம் (1992).
3.
குடியரசுத் தலைவர் பதவி நீக்கத்துக்கான ஒரே காரணம்:
Correct Answer: C [அரசியலமைப்பு மீறல்]
விளக்கம்:
விடை: அரசியலமைப்பு மீறல் – பிரிவு 61 – "Violation of the Constitution".
4.
குடியரசுத் தலைவர் தமது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் அளிப்பார்?
Correct Answer: D [துணைக் குடியரசுத் தலைவர்]
விளக்கம்:
விடை: துணைக் குடியரசுத் தலைவர் – பிரிவு 56(1)(அ) – குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தைத் துணைக் குடியரசுத் தலைவரிடம் அளிப்பார்; துணைக் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவரிடம் அளிப்பார் (பிரிவு 67(அ)).
5.
குடியரசுத் தலைவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர்:
Correct Answer: B [இந்தியத் தலைமை நீதிபதி]
விளக்கம்:
விடை: இந்தியத் தலைமை நீதிபதி – பிரிவு 60.
6.
குடியரசுத் தலைவர் மரண தண்டனையை மன்னிக்கும் அதிகாரத்தைக் கூறும் பிரிவு:
Correct Answer: A [பிரிவு 72]
விளக்கம்:
விடை: பிரிவு 72 – பிரிவு 72(1)(c). பிரிவு 161 ஆளுநருக்குரியது; பாடநூல் நிலைப்பாட்டின்படி ஆளுநர் மரண தண்டனையை முழுமையாக மன்னிக்க முடியாது.
7.
தண்டனையின் வகையை மாற்றாமல் அதன் காலத்தைக் குறைப்பது:
Correct Answer: B [Remission]
விளக்கம்:
விடை: Remission – Commutation – வகை மாற்றம்; Reprieve – தற்காலிக நிறுத்தம்.
8.
இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இல்லாத தடுப்பாணை:
Correct Answer: D [தகுதித் தடுப்பாணை]
விளக்கம்:
விடை: தகுதித் தடுப்பாணை – தகுதித் தடுப்பாணை அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு உண்டு.
9.
பைத் தடுப்பாணையைப் பயன்படுத்திய குடியரசுத் தலைவர் (1986):
Correct Answer: B [ஜெயில் சிங்]
விளக்கம்:
விடை: ஜெயில் சிங் – இந்திய அஞ்சலகத் (திருத்த) மசோதா.
10.
அவசரச் சட்டத்தின் அதிகபட்ச ஆயுள்:
Correct Answer: C [6 மாதம் + 6 வாரங்கள்]
விளக்கம்:
விடை: 6 மாதம் + 6 வாரங்கள் – நாடாளுமன்றம் மீண்டும் கூடிய 6 வாரங்களுக்குள் ஒப்புதல் தேவை.
11.
அமைச்சரவை ஆலோசனையை ஒருமுறை மறுபரிசீலனைக்குத் திருப்பும் அதிகாரத்தைக் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய திருத்தம்:
Correct Answer: C [44-வது]
விளக்கம்:
விடை: 44-வது – 42-வது திருத்தம் ஆலோசனையைக் கட்டாயமாக்கியது; 44-வது மறுபரிசீலனை வாய்ப்பைச் சேர்த்தது.
12.
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பவர்கள்:
Correct Answer: B [நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும்]
விளக்கம்:
விடை: நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் – நியமன உறுப்பினர்களும் வாக்களிப்பர்; சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதில்லை.
13.
துணைக் குடியரசுத் தலைவரை நீக்கும் தீர்மானத்தைத் தொடங்க வேண்டிய அவை:
Correct Answer: B [மாநிலங்களவை]
விளக்கம்:
விடை: மாநிலங்களவை – மாநிலங்களவை பெரும்பான்மையுடன் நிறைவேற்றி, மக்களவை ஒப்புதல் அளிக்க வேண்டும்.
14.
குடியரசுத் தலைவராகச் செயல்பட்ட ஒரே இந்தியத் தலைமை நீதிபதி:
Correct Answer: A [எம். ஹிதாயத்துல்லா]
விளக்கம்:
விடை: எம். ஹிதாயத்துல்லா – 1969 ஜூலை – ஆகஸ்ட்.
15.
இந்தியாவின் முதல் பழங்குடியினக் குடியரசுத் தலைவர்:
Correct Answer: C [திரௌபதி முர்மு]
விளக்கம்:
விடை: திரௌபதி முர்மு – 15-வது குடியரசுத் தலைவர்; 2022 ஜூலை 25 பதவியேற்பு.
16.
2025-இல் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்:
Correct Answer: A [சி.பி. இராதாகிருஷ்ணன்]
விளக்கம்:
விடை: சி.பி. இராதாகிருஷ்ணன் – 2025 செப்டம்பர் 9 தேர்தல் – 15-வது துணைக் குடியரசுத் தலைவர்.
17.
அமைச்சரவையின் அளவை மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையில் 15% ஆகக் கட்டுப்படுத்திய திருத்தம்:
Correct Answer: C [91-வது]
விளக்கம்:
விடை: 91-வது – 2003 – பிரிவு 75(1A).
18.
அமைச்சரவை மக்களவைக்குக் கூட்டாகப் பொறுப்பு எனக் கூறும் பிரிவு:
Correct Answer: C [பிரிவு 75(3)]
விளக்கம்:
விடை: பிரிவு 75(3) – 75(2) – தனிப் பொறுப்பு (குடியரசுத் தலைவரின் விருப்பம்).
19.
"கேபினட்" என்ற சொல்லை அரசியலமைப்பில் சேர்த்த திருத்தம்:
Correct Answer: B [44-வது]
விளக்கம்:
விடை: 44-வது – பிரிவு 352-இல் – தேசிய நெருக்கடிக்குக் கேபினட்டின் எழுத்துப்பூர்வ ஆலோசனை.
20.
இந்தியத் தலைமை வழக்கறிஞர் தொடர்பான தவறான கூற்று:
Correct Answer: C [நாடாளுமன்றத்தில் வாக்களிக்கலாம்]
விளக்கம்:
விடை: நாடாளுமன்றத்தில் வாக்களிக்கலாம் – பிரிவு 88 – பேசலாம், வாக்களிக்க முடியாது.
21.
பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்களில் இல்லாதவர்:
Correct Answer: D [பி.வி. நரசிம்ம ராவ்]
விளக்கம்:
விடை: பி.வி. நரசிம்ம ராவ் – நரசிம்ம ராவ் பதவியேற்றபின் (1991) நந்தியால் மக்களவை இடைத்தேர்தலில் வென்றார்; தேவே கவுடா பதவியேற்றபின் மாநிலங்களவை உறுப்பினரானார்.
22.
குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை:
Correct Answer: C [12]
விளக்கம்:
விடை: 12 – இலக்கியம், அறிவியல், கலை, சமூகசேவை – பிரிவு 80.
23.
பதவிக்காலத்தில் குடியரசுத் தலைவர் மீது குற்றவியல் வழக்குத் தொடர முடியாது எனக் கூறும் பிரிவு:
Correct Answer: D [பிரிவு 361]
விளக்கம்:
விடை: பிரிவு 361 – ஆளுநருக்கும் இதே பாதுகாப்பு; உரிமையியல் வழக்குக்கு 2 மாத முன்னறிவிப்பு தேவை.
24.
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான சர்ச்சைகளை விசாரித்து முடிவெடுப்பது:
Correct Answer: D [உச்ச நீதிமன்றம்]
விளக்கம்:
விடை: உச்ச நீதிமன்றம் – பிரிவு 71 – துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கும் பொருந்தும்.
25.
பிரதமராக இருந்தபோது ஒருமுறைகூட மக்களவையை எதிர்கொள்ளாதவர்:
Correct Answer: A [சரண் சிங்]
விளக்கம்:
விடை: சரண் சிங் – 1979 – 80; நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே பதவி விலகினார்.
➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு IV – இந்திய ஆட்சியியல் பாடநூல் (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-4-indian-polity
📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 3
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 2
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 1
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – அரசியல் கட்சிகளும் நல்லாட்சியும்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – மனித உரிமைகள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நுகர்வோர் பாதுகாப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
