TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – மாநில நிர்வாகம்

← திரும்பச் செல்ல

TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – மாநில நிர்வாகம் – 24 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
ஆளுநரை நியமிப்பவர்:

Correct Answer: B [குடியரசுத் தலைவர்]

விளக்கம்:

விடை: குடியரசுத் தலைவர் – பிரிவு 155 – கையொப்பம், முத்திரையிட்ட ஆணை மூலம்.

2.  
ஒருவரே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்க வழி செய்த அரசியலமைப்புத் திருத்தம்:

Correct Answer: B [7-வது]

விளக்கம்:

விடை: 7-வது – 1956 – மாநில மறுசீரமைப்புடன் இணைந்த திருத்தம்.

3.  
ஆளுநருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர்:

Correct Answer: C [மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி]

விளக்கம்:

விடை: மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி – பிரிவு 159; அவர் இல்லையெனில் மூத்த நீதிபதி.

4.  
ஆளுநர் தமது பதவி விலகல் கடிதத்தை அனுப்ப வேண்டியது:

Correct Answer: B [குடியரசுத் தலைவருக்கு]

விளக்கம்:

விடை: குடியரசுத் தலைவருக்கு – பிரிவு 156(2).

5.  
ஆளுநர் நியமன முறை எந்நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?

Correct Answer: C [கனடா]

விளக்கம்:

விடை: கனடா – கனடாவில் மாகாண ஆளுநர்களை (Lieutenant Governors) மத்திய அரசு நியமிக்கிறது.

6.  
ஆளுநரின் மன்னிப்பு அதிகாரம் குறித்த பிரிவு:

Correct Answer: B [பிரிவு 161]

விளக்கம்:

விடை: பிரிவு 161 – பிரிவு 72 – குடியரசுத் தலைவர்; 213 – ஆளுநர் அவசரச் சட்டம்.

7.  
பின்வருவனவற்றில் ஆளுநருக்கு இல்லாத அதிகாரம்:

Correct Answer: C [இராணுவ நீதிமன்றத் தண்டனைக்கு மன்னிப்பு]

விளக்கம்:

விடை: இராணுவ நீதிமன்றத் தண்டனைக்கு மன்னிப்பு – இராணுவ நீதிமன்றத் தண்டனைகளுக்குக் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம்.

8.  
கூற்று (A): ஆளுநருக்கு அரசியலமைப்பு வழங்கிய விருப்புரிமை அதிகாரம் உண்டு.
காரணம் (R): ஒரு விஷயம் தமது விருப்புரிமைக்கு உட்பட்டதா என்பதில் ஆளுநரின் முடிவே இறுதியானது என்று பிரிவு 163(2) கூறுகிறது.

Correct Answer: A [A, R இரண்டும் சரி; R, A-க்குச் சரியான விளக்கம்]

விளக்கம்:

விடை: A, R இரண்டும் சரி; R, A-க்குச் சரியான விளக்கம் – பிரிவு 163(1) விருப்புரிமையை அங்கீகரிக்கிறது; 163(2) அதன் இறுதித்தன்மையை உறுதி செய்கிறது.

9.  
சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் கட்டாயமாகக் குடியரசுத் தலைவருக்கு ஒதுக்க வேண்டிய சூழல்:

Correct Answer: B [உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா]

விளக்கம்:

விடை: உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா – பிரிவு 200-இன் இரண்டாம் வரம்புரை.

10.  
மாநில அமைச்சரவையின் அதிகபட்ச அளவு (முதலமைச்சர் உட்பட):

Correct Answer: B [சட்டப்பேரவை உறுப்பினர்களில் 15%; குறைந்தது 12]

விளக்கம்:

விடை: சட்டப்பேரவை உறுப்பினர்களில் 15%; குறைந்தது 12 – 91-வது திருத்தம் (2003), பிரிவு 164(1A).

11.  
பழங்குடியினர் நலத் துறைக்குத் தனி அமைச்சர் கட்டாயமாக இருக்க வேண்டிய மாநிலங்களில் இல்லாதது:

Correct Answer: C [பிகார்]

விளக்கம்:

விடை: பிகார் – 94-வது திருத்தம் (2006) பிகாரை நீக்கி சத்தீஸ்கர், ஜார்க்கண்டைச் சேர்த்தது; நான்காவது மத்தியப் பிரதேசம்.

12.  
மாநில அமைச்சரவை கூட்டாகப் பொறுப்புடையது:

Correct Answer: B [சட்டப்பேரவைக்கு]

விளக்கம்:

விடை: சட்டப்பேரவைக்கு – பிரிவு 164(2).

13.  
முதலமைச்சரின் கடமைகளைக் குறிப்பிடும் பிரிவு:

Correct Answer: D [பிரிவு 167]

விளக்கம்:

விடை: பிரிவு 167 – "+89 விதி": பிரதமர் கடமைகள் 78 + 89 = 167.

14.  
பொருத்துக:
(a) பிரிவு 165 – 1. அவசரச் சட்டம்
(b) பிரிவு 213 – 2. மாநிலத் தலைமை வழக்கறிஞர்
(c) பிரிவு 361 – 3. மசோதா ஒப்புதல்
(d) பிரிவு 200 – 4. ஆளுநருக்குச் சட்டப் பாதுகாப்பு

Correct Answer: A [a-2, b-1, c-4, d-3]

விளக்கம்:

விடை: a-2, b-1, c-4, d-3 – 165 – மாநிலத் தலைமை வழக்கறிஞர்; 213 – அவசரச் சட்டம்; 361 – ஆளுநருக்குச் சட்டப் பாதுகாப்பு; 200 – மசோதா ஒப்புதல்.

15.  
மாநிலத் தலைமை வழக்கறிஞர் தொடர்பான கூற்றுகளில் சரியானது எது?
1. உயர் நீதிமன்ற நீதிபதியாகத் தகுதியுள்ளவர்.
2. சட்டமன்றத்தில் பேசலாம்; வாக்களிக்க முடியாது.
3. அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் என அரசியலமைப்பு கூறுகிறது.

Correct Answer: A [1, 2 மட்டும்]

விளக்கம்:

விடை: 1, 2 மட்டும் – பதவிக்காலம் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை – ஆளுநர் விருப்பம் உள்ளவரை.

16.  
"ஆளுநரைத் தன்னிச்சையாக நீக்கக் கூடாது; ஒன்றிய அரசின் கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை என்பது நீக்கத்துக்குக் காரணமாகாது" எனத் தீர்ப்பளித்த வழக்கு:

Correct Answer: B [பி.பி. சிங்கால் (2010)]

விளக்கம்:

விடை: பி.பி. சிங்கால் (2010) – பி.பி. சிங்கால் vs ஒன்றியம் (2010) – அரசியல் கருத்து வேறுபாடு நீக்கத்துக்குக் காரணமாகாது.

17.  
ஆளுநராக நியமிக்கப்படுபவர் அந்த மாநிலத்தைச் சாராத, சமீப காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபடாதவராக இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது:

Correct Answer: B [சர்க்காரியா ஆணையம்]

விளக்கம்:

விடை: சர்க்காரியா ஆணையம் – 1983-இல் அமைக்கப்பட்டு 1988-இல் அறிக்கை அளித்தது.

18.  
ஆளுநரின் "விருப்பக் கோட்பாட்டை" நீக்கி, மாநிலச் சட்டப்பேரவை பதவிநீக்கத் தீர்மானம் மூலம் மட்டுமே அவரை நீக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது:

Correct Answer: B [பூஞ்சி ஆணையம்]

விளக்கம்:

விடை: பூஞ்சி ஆணையம் – நீதிபதி எம்.எம். பூஞ்சி தலைமை; 2007-இல் அமைப்பு, 2010-இல் அறிக்கை.

19.  
தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர்:

Correct Answer: B [எம். பாத்திமா பீவி]

விளக்கம்:

விடை: எம். பாத்திமா பீவி – 1997 – 2001; உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும் இவரே.

20.  
பேரறிவாளன் வழக்கில் (2022) உச்ச நீதிமன்றம் விடுதலைக்குப் பயன்படுத்திய பிரிவு:

Correct Answer: C [பிரிவு 142]

விளக்கம்:

விடை: பிரிவு 142 – முழுமையான நீதி வழங்கும் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம்.

21.  
தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர்:

Correct Answer: B [ஜானகி ராமச்சந்திரன்]

விளக்கம்:

விடை: ஜானகி ராமச்சந்திரன் – 1988; சுசேதா கிருபளானி இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் (உ.பி.).

22.  
ஆளுநர் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் அதிகாரத்தைக் கூறும் பிரிவு:

Correct Answer: D [பிரிவு 213]

விளக்கம்:

விடை: பிரிவு 213 – பிரிவு 123 – குடியரசுத் தலைவர்; "+90" விதிவிலக்கு: 123 → 213.

23.  
ஆளுநர்களின் மசோதா ஒப்புதல் தொடர்பாகக் குடியரசுத் தலைவர் 2025 மே மாதம் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைக் கோரிய பிரிவு:

Correct Answer: D [பிரிவு 143]

விளக்கம்:

விடை: பிரிவு 143 – 14 வினாக்கள்; ஐந்து நீதிபதிகள் அமர்வு 2025 நவம்பர் 20 அன்று கருத்து வழங்கியது.

24.  
"மதராஸ் மாநிலம்" "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் பெற்றபோது முதலமைச்சராக இருந்தவர்:

Correct Answer: C [சி.என். அண்ணாதுரை]

விளக்கம்:

விடை: சி.என். அண்ணாதுரை – பெயர் மாற்றச் சட்டம் 1968; 1969 ஜனவரி 14 முதல் நடைமுறை.

➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு IV – இந்திய ஆட்சியியல் பாடநூல் (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-4-indian-polity

📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 ₹499 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 3 › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 2 › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 1 › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – அரசியல் கட்சிகளும் நல்லாட்சியும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – மனித உரிமைகள் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நுகர்வோர் பாதுகாப்பு
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0